F

படிப்போர்

Monday, 18 March 2013

191.குடிவாழ்க்கை

191 குடிவாழ்க்கை

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
                      தனதாத்த தய்ய                       தனதான

வள்ளி நாயகனே மரணமடையுமுன்
உன் சரணமடைய அருள் புரிவாய்
        
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
             குயில்போற்ப்ர சன்ன                   மொழியார்கள்
      குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
             குருவார்த்தை தன்னை                        யுணராதே
      இடநாட்கல் வெய்ய நமனீட்டி தொய்ய
             இடர்கூட்ட இன்னல்                      கொடுபோகி
      இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
             னிருதாட்கள் தம்மை                     யுணர்வேனோ
      வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
             மயில்மேற்றி கழ்ந்த                            குமரேசா
      வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
             மலைகாத்த நல்ல                             மணவாளா
      அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
            யருள்போற்றும் வண்மை               தரும்வாழ்வே
      அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
            அடியார்க்கு நல்ல                            பெருமாளே

-    191வள்ளி மலை

பதம் பிரித்தல்

குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்

குடி வாழ்க்கை = இல்லற வாழக்கையில் ஏற்பட்ட அன்னை = தாய் மனையாட்டி = மனைவி பிள்ளை = பிள்ளை குயில் போல் = குயிலைப் போல ப்ரசன்ன மொழியார்கள் = பேசி எதிர்ப்படும் பெண்கள்.

குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன
குரு வார்த்தை தன்னை உணராதே

குலம் வாய்த்த = (மேன்மையான) குலம் கிடைத்துள்ள. நல்ல தனம் வாய்த்தது = நல்ல செல்வம் (இவை எல்லாம் நமக்குக் கிடைத்து உள்ளது) என்ன = என்று (ஆணவம் கொண்டு) குரு வார்த்தை தன்னை = குருவின் உபதேச மொழிகளை உணராதே = உணர்ந்து அறியாமல்.

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய
இடர் கூட்ட இன்னல் கொடு போகி

இட நாட்கள் = நாட்களைக் கழிக்க வெய்ய = கொடு மையான நமன் நீட்டி = நமன் நெருங்கி தொய்ய = சோர்ந்து போகும்படி இடர் கூட்ட = துன்பத்தைத் தர இன்னல் கொடு போகி = துயரத்துடன் கொண்டு போய்

இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன்
இரு தாட்கள் தம்மை உணர்வேனோ

இடு காட்டில் என்னை = சுடு காட்டில் என் உடலை எரி ஊட்டு முன் = எரிப்பதற்கு முன்னர் உன் இரு தாட்கள் தம்மை = உன்னுடைய இரண்டு திருவடிகளை உணர்வேனோ = உணர்ந்து அறிய மாட்டேனோ?

வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி
மயில் மேல் திகழ்ந்த குமரேசா

வட நாட்டில் = வடக்கே உள்ள வெள்ளி மலை காத்து = வெள்ளி மலையாகிய கயிலாயத்தைக் காத்து புள்ளி மயில் மேல் = புள்ளி மயிலின் மீது
திகழ் குமரேசா = விளங்கும் குமரேசனே.

வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா

வடிவாட்டி = அழகு நிறைந்த வள்ளி அடி போற்றி = வள்ளியின் திருவடியைத் துதித்து வள்ளி மலை காத்த = வள்ளி மலையில் வேளைக்காரனாகக் காத்து நின்ற நல்ல மணவாளா = நல்ல கணவனே.

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

அடி நாட்கள் = முன் நாட்களில் செய்த = (நான்) செய்த பிழை நீக்கி = பிழைகளைப் பொறுத்து என்னை அருள் போற்றும் = எனக்கு உனது திருவருளைப் போற்றும் வண்மை = வளப்பமான குணத்தை தரும் வாழ்வே =
தருகின்ற செல்வமே

அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.

அடி போற்றி = உனது திருவடியைப் போற்றி அல்லி = தாமரை மலரை முடி சூட்டி = உனது தலையில் சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே = அடியவர்களுக்கு நல்ல பெருமாளே.

சுருக்க உரை

இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாய், மனைவி, பிள்ளை, பெண்கள் முதலியவைகளும் பெருஞ் செல்வமும் தமக்கு உள்ளன என்று ஆணவம் கொண்டு, குருவின் உபதேசங்களை உணராமல், காலத்தைக் கழித்து, கடைசியாக நமன் நெருங்கித் துன்பம் தர, சுடுகாட்டில உடலைக் கொண்டு போய் எரிக்கும் போது, உன் இரு திருவடிகளை உணர மாட்டேனோ?

கயிலாய மலையைக் காத்து மயில் மேல் திகழும் குமரேசா,
வள்ளி மலையில் வள்ளி நாயகியைப் போற்றித் துதித்த நல்ல
மணவாளனே, முன் நான் செய்த பிழைகளைப் பொறுத்து, உனது
திருவடியைப் போற்றும் வண்மையை எனக்கு அருள் செய்த செல்வமே, உன் அடிகளில் மலர்களைச் சூட்ட வல்ல அடியார்களுக்கு நல்ல பெருமாளே, உன் தாள்களை நான் உணர்வேனோ?

ஒப்புக:

 அடியார்க்கு நல்ல பெருமாளே
கண் உளார் கருவூருள் ஆன்நிலை 
அண்ணலார் அடியார்க்கு நல்லரே .                                           .   . சம்பந்தர் தேவாரம்

அடியாரக்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்க..                             .கந்தர் அலங்காரம்

விளக்கக் குறிப்புகள்

வடநாட்டில் வெள்ளி மலை காத்து:-

வடநாட்டில் உள்ள வெள்ளி மலையான திருக்கயிலாயத்தில், கோபுர வாசலில் முருகன் இருந்து காத்தல் செய்கின்றார்.

” tag:

190. ககனமும்

190  ககனமும்

தனதன தனதன தனதன தனதன
                தய்யத் தனாத்த                    தனதான

          ககனமு மநிலமு மணல்புனல் நிலமமை
           கள்ளப் புலாற்கி                             ருமிவீடு
        கனலெழ மொழிதரு சினமென மதமிகு
            கள்வைத் ததோற்பை                     சுமவாதே
        யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
           உள்ளக்க ணோக்கு                         மறிவூறி
        ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
           லுள்ளத் தைநோக்க                   அருள்வாயே
        ம்ருகமத பரிமள விகசித நளினநள்
           வெள்ளைப் பிராட்டி                    இறைகாணா
        விடதர குடிலச டிலமிசை வெகுமுக
           வெள்ளத் தையேற்ற                   பதிவாழ்வே
        வகுளமு முகுளித வழைகளு மலிபுன
           வள்ளிக் குலாத்தி                         கிரிவாழும்
        வனசரர் மரபினில் வருமொரு மரகத
           வள்ளிக் குவாய்த்த                     பெருமாளே

-190 வள்ளி மலை

பதம் பிரித்து உரை

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை
கள்ள புலால் கிருமி வீடு

ககனமும் = ஆகாசமும் அநிலமும் = காற்றும் அனல் = தீயும் புனல் = நீரும் நிலம் அமை = மண்ணும் ஆகிய ஐந்து பூதங்களால் ஆனதும் கள்ள = கள்ளத்துக் இடமானதும் புலால் = மாமிசமும் கிருமி = புழுக்களும் உள்ள வீடு = வீடாகிய உடலை.

கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு
கள் வைத்த தோல் பை சுமவாதே

கனல் எழ = தீ எழுவது போல மொழி தரு = பேச்சுக்கள் பிறக்கின்ற சினம் என = கோபம் என்கின்ற மதம் மிகு = ஆணவம் மிகுந்த கள் வைத்த = களவுத் தனம் உள்ள தோல் பை = தோல் பையாகிய உடலை சுமவாதே = நான் சுமக்காமல் ( புலால் நாற்றமுடையது. அது அதில் மறைந்திருக்கிறது. அதனால் ‘கள்ளப்புலால்)

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள்
உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி

யுக இறுதிகளிலும் = யோகங்கள் அழிந்து போகும் பிரளய காலத்திலும் இறுதி இல் = முடிவில்லாத ஒரு பொருள் = ஒப்பற்ற அந்த பேரின்பத்தை உள்ளக் கண் நோக்கு = உள்ளத்தில் கண்டு அறியும் அறிவு ஊறி = ஞானம் பெருகி எழ.

ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில்
உள்ள அத்தை நோக்க அருள்வாயே

ஒளி திகழ் = ஒளி வீசுகின்றது என்றும் அரு உரு எனும் = அருவமானது, உருவமானது என்றும் மறை இறுதியில் = வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அத்தை = என்றும் அழியாமல் நிற்கும் அந்தப் பொருளை நோக்க அருள்வாயே = நான் காண அருள் புரிவாயாக.
    
ம்ருகமத பரிமள விகசித நளின நள்
வெள்ளை பிராட்டி இறை காணா

ம்ருகமத = கஸ்தூரியின் பரிமள = வாசனை வீசும் விகசித = மலர்ந்த நளின = தாமரையின் நள் = நடுவில் வீற்றீருக்கும் வெள்ளைப் பிராட்டி = வெள்ளை நிறமுடைய சரசுவதியின் இறை காணா = தலை வனான பிரமன் காண முடியாத.

விட தர குடில சடில மிசை வெகு முக
வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே

விடதர = நஞ்சைக் கண்டத்தில் தரித்தவரும் குடில = வளைந்த சடிலமிசை = சடா பாரத்தின் மீது வெகு முக = பல முகங்களை உடைய வெள்ளத்தை ஏற்ற = கங்கையை ஏற்ற பதி வாழ்வே = தலைவனான சிவபெருமானுடைய செல்வமே.

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன
வள்ளி குல திகிரி வாழும்

வகுளமும் = மகிழ மரமும் முகுளித = அரும்புகள் விடும். வழைகளும் = சுர புன்னைகளும் மலி = நிறைந்த புன = தினைப் புனம் உள்ள வள்ளிக் குலத் திகிரி = சிறந்த வள்ளி மலையில் வாழும்.

வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.

வனசரர் = வேடர் மரபினில் வரும் = மரபில் தோன்றி வளர்ந்த ஒரு மரகத = ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளிக்கு வாய்த்த பெருமாளே = வள்ளி நாயகியின் தலைவரே.

சுருக்க உரை

பஞ்ச பூதங்களால் ஆனதும், வஞ்சகமும், மாமிசமும், கிருமிகளும் நிறைந்த வீடு போல் அமைந்ததும், கோபம் மிக்க மொழிகளைப் பேசும் ஆணவம் நிறைந்ததும்ஆகிய தோல் பையான இந்த உடலை நான் இனிமேல் சுமக்காதபடி என் பிறப்பை ஒழித்து அருளுக. 

ஒளி விளங்குவது என்றும், அருவமானது என்றும், உருவமானது  என்றும், வேத முடிவில் நிற்பது என்றும் சொல்லப்படும் ஊழிக் காலத்திலும் அழியாத அந்தப் பொருளை நான் காண அருள்வாயாக. நறுமணம் வீசும் தாமரையின் நடுவில் உள்ள சரசுவதியின் கணவனான பிரமன் காண முடியாத சிவபெருமானின் செல்வமே, பல விதமான மலர்களும் தினைப்புனமும் நிறைந்த வள்ளி மலையில்வேடர் குலத்தில் தோன்றிய வள்ளியின் கணவரே, அருவாகவும் உருவாகவும், பிரளய முடிவில் நிற்கும் அழியாத பரம் பொருளை நன் காணும் வண்ணம் அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

1. இது சொல் வளம் நிறைந்த பாடல்.  ஒவ்வொரு அடியிலும் இறுதியில் உள்ள
     பாகத்தை எடுத்து அமைத்தால் பிறிதொரு பாடல் உண்டாவதை பார்க்கலாம்
   
2. வெகுமுக வெள்ளத்தை ஏற்ற....

கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும்
புனல்பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
                  --- திருநாவுக்கரசர் தேவாரம்

வள்ளி அவதாரம் செய்த ஸ்தலம் வள்ளிமலை. அவள் பொருட்டு முருகன் பாதங்கள் பல காலம் அங்கு உலாவியது.  “வள்ளிக்கணவன் றனையீன்ற வள்ளல் பவனி வரக்கண்டே” - திருஅருட்பா