F

படிப்போர்

Friday, 20 June 2014

265.ஊனாரு

265
திருவாடானை

தேவகோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவில்
மானாமதுரை- சிவகங்கை வழி

தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன                   தனதான

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
       ஊதாரி பட்டொழிய                           வுயிர்போனால்
ஊரார்கு வித்துவர ஆவாவெ னக்குறுகி
     ஓயாமு ழக்கமெழ                                       அழுதோய
நானாவி தச்சிவிகை மேலேகி டத்தியது
     நாறாதெ டுத்தடவி                                     யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
     நாடாதெ னக்குனருள்                                  புரிவாயே
மானாக துத்திமுடி மீதேநி ருத்தமிடு
     மாயோனு மட்டொழுகு                                மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
     வானோரு மட்டகுல                                    கிரியாவும்
ஆனாவ ரக்கருடன் வானார்பி ழைக்கவரு
     மாலால முற்றவமு                             தயில்வோன்முன்
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
     ஆடானை நித்தமுறை                                பெருமாளே.

பதம் பிரித்தல்

ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா(து) கவித்த உடல்
ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால்

ஊன் = மாமிசமும் ஆரும் உள் பிணியும் = நிறைந்து உள்ளே இருக்கும் நோய்களும் ஆனா(து) = நீங்காமல் கவத்த = வளைய மூடப்பட்ட உடல் = (இந்த) உடல். ஊதாரி பட்டு ஒழிய = கேடுற்று நீங்கும்படி உயிர் போனால் = உயிர் போன பின்பு.

ஊரார் குவித்து ஆவா என குறுகி
ஓயா முழக்கம் எழ அழுது ஓய

ஊரார் = ஊரில் உள்ளவர்கள் குவித்து வர = கும்புகூடி வர ஆவா என = ஐயோ என்று கூறி குறுகி = (அவர்கள்) அணுகி ஓயா முழக்கம் எழ = ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது ஓய = அழுது, பின்னர் அழுகை அடங்க
நானா வித சிவிகை மேலை கிடத்தி அது
நாறாது எடுத்து அடவி எரி ஊடே

நானா விதச் சிவிகை மேலே = பல விதமான பல்லக்கின்மேல் கிடத்தி = (பிணத்தைக்) கிடத்தி அது நாறாது = அந்த உடல் துர்நாற்றம் வீசுமுன் எடுத்து = எடுத்துக் கொண்டு போய் அடவி = சுடு காட்டில்எரி ஊடே = நெருப்பின் மத்தியில்.

நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இப் பிறவி
நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே

நாணாமல் = கூசாமல் வைத்து விட = வைத்து விட நீறு ஆம் என் = சாம்பலாகும் என்ற விதி உள்ள இப்பிறவி = இந்தப் பிறவியை நாடாது = (நான்) விரும்பாதபடி. எனக்கு உன் அருள் புரிவாயே = உன்னுடய திருவருளைப் புரிவாயாக.

மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு
மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே

மால் நாகம் = காளிங்கன் என்ற பெரிய பாம்பின் துத்தி = புள்ளிகள் உள்ள முடி மீதே = படத்தின் மேல் நிருத்தம் இடு = நடனம் செய்யும். மாயோனும் = மாயோனாகிய திருமாலும். மட்டு ஒழுகும் = தேன் சொரியும். மலர் மீதே = மலர் மேல்.

வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டு திசையும்
வானோரும் அட்ட குல கிரி யாவும்

வாழ்வாய் இருக்கும் = வாழ்வு கொண்டிருக்கும்ஒரு வேதாவும் = ஒப்பற்ற பிரமனும் எண் திசையும் = எட்டுத் திசையில் உள்ளவர்களும் வானோரும் = தேவர்களும் அட்ட குல கிரி யாவும் = சிறந்த எட்டு மலைகளில் உள்ளவர்களும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும்
ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன்

ஆனா அரக்கர்கருடன் = (கடல் கடைந்த போது அங்கு) நீங்காது நின்ற அரக்கர்களுடன் வானார் பிழைக்க = வானகத்துள்ள கணங்கள் பிழைக்கும்படி வரும் = எழுந்த ஆலாலம் முற்ற = ஆலகால விடத்தை முழுவதும். அமுது அயில்வோன் முன் = அமுதமாக உண்ட சிவபெருமான் முன்பு

ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்
ஆடானை நித்தம் உறை பெருமாளே.

ஆசார பத்தியுடன் = ஆசாரத்துடனும் பக்தியுடனும் ஞான ஆகமத்தை = வேதாகமங்களின் ஞானப் பொருளை. அருள் = உபதேசித்து அருளிய பெருமாளே ஆடானை நித்தம் உறை = திருவாடானை என்னும் ஊரில் நாள் தோறும் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

நோய்கள் வாய்ப்பட்டு இறந்த பின், ஊரார் கதறி அழ, இந்த உடல் துர் நாற்றம் வீசுமுன், சுடு காட்fடில் வெந்து சாம்பலாகும் என்ற விதி உள்ள இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி திருவருளைத் தருக. 

காளிங்கன் என்னும் பாம்பின் மேல் நடனம் செய்யும் திருமாலும், பிரமனும், எட்டு திசையில் உள்ளவர்களும், பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விடத்தை அமுதாக உண்ட சிவபெருமான் முன்னிலையில், பத்தியுடன் கேட்க, அவர்களுக்கு வேதாகமங்களின் பொருளை உபதேசித்து அருளிய பெருமாளே, எனக்கு உன் அருள் புரிவாயே.

விளக்கக் குறிப்புகள்

இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆகமங்களை உப்தேசம் பண்ணிக் கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை. அதனால்தான் அருணகிருநாதர் ஞான ஆகமதை (ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்) அருள ஆண்டவனை வேண்டுகிறார். -

மானாக துத்திமுடி மீதே...

திருமால் காளிங்கன் மீது நிர்த்தம் ஆடியதைக் கீழ்க்கண்ட திருப்புகழ்ப்
பாடல்களில் காணலாம்.

நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை         மணிமார்பன்------- நெச்சுப்பிச்சி.

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாள்செகண சேசெ             எனவோசை
பாங்குபெறு தாள மேங்க மாடு
பாண்டவர்ச காயன்            மருகோனே-------மாந்தளிர்கள்.

கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழ்ச்   சுதனீண------------தும்பிமுகத்.   

” tag:

Saturday, 14 June 2014

264. இபமாந்தர்

264
திருவாஞ்சியம்

இத்தலத்தில் மயிலின் முகம் பெருமானின் இடப்பகம் உள்ளதால்
அசுரமயில் எனப்படுகிறது

                    தனதாந்த தத்த தனதன
                    தனதாந்த தத்த தனதன
                    தனதாந்த தத்த தனதன            தனதான
 
      இபமாந்தர் சக்ர பதிசெறி
         படையாண்டு சக்ர வரிசைக
         ளிடவாழ்ந்து திக்கு விசயம             ணரசாகி
      இறுமாந்து வட்ட வணைமிசை
         விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
         யெழிலார்ந்த பட்டி வகைபரி         மளலேபந்
      தபனாங்க ரத்த வணிகல
         னிவைசேர்ந்த விச்சு வடிவது
         தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு          வியபோது
      தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
         பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
         தனவாஞ்சை மிக்கு னடிதொழ      நினையாரே                 
      உபசாந்த சித்த குருகுல
         பவபாண்ட வர்க்கு வரதன்மை
         யுருவோன்ப்ர சித்த நெடியவன்       ரிஷிகேசன்
      உலகீன்ற பச்சை யுமையணன்
         வடவேங்க டத்தி லுறைபவ
         னுயர்சார்ங்க சக்ர கரதலன்          மருகோனே
      த்ரிபுராந்த கற்கு வரசுத
         ரதிகாந்தன் மைத்து னமுருக
         திறல்பூண்ட சுப்ர மணியஷண்        முகவேலா
      திரைபாய்ந்த பத்ம தடவய
         லியில்வேந்த முத்தி யருள்தரு
      திருவாஞ்சி யத்தி லமரர்கள்             பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
இப மாந்தர் சக்ரபதி செறி
படை ஆண்டு சக்ர வரிசைகள்
இட வாழ்ந்து திக்கு விசய மண் அரசாகி

இபம் = யானைப்படை மாந்தர் = காலாட்படை செறி படையாண்டு = முதலியவை நிறைந்துள்ள நால் வகைப் படைகளை உடைய சக்ரபதி = பேரரசனாக அரசு புரிந்து. சக்ர வரிசைகள் இட = தனது ஆணைப்படி வேலை முறைகளை நடத்த வாழ்ந்து = அங்ஙனம் வாழ்ந்து திக்கு விசயம் மண் அரசாகி = திக்கு விசயம் செய்து உலகுக்கு அரசனாகி.

இறுமாந்து வட்ட அணை மிசை
விரி சார்ந்து வெற்றி மலர் தொடை
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம்

இறுமாந்து = பெருமை மிக அடைந்து வட்ட அணை மிசை = வட்ட வடிவமான சாய்வு மெத்தை அணையின் மேல் உள்ள விரி சார்ந்து = விரிப்பில் சாய்ந்து அமர்ந்து வெற்றி மலர் தொடை = வெற்றியைக் குறிக்கும் வாகை மலர் என்ன எழில் ஆர்ந்த = அழகு நிரம்பிய பட்டி வகை = பட்டு ஆடை வகைகள் என்ன பரிமள = நறு மண லேபம் = கலவைப் பூச்சு என்ன.

தபனம் அங்க ரத்ந அணிகலன்
இவை சேர்ந்த விச்சு வடிவு அது
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது

தபனம் அங்க = சூரிய ஒளியைத் தன்னகத்தே கொண்ட ரத்ந அணிகலன் = ரத்ன மணியாலாகிய நகைகள் என்ன இவை சேர்ந்த விச்சு வடிவு அது = இவை எல்லாம் சேர்ந்த ஒரு மனித வித்தின் உருவம் அது மிக்க உயிர் நழுவிய போது = அத்தகைய உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் தமர் சூழ்ந்து = சுற்றத்தார் சூழ்ந்திருக்க.

தழல் தாம் கொளுத்தி இட ஒரு
பிடி சாம்பல பட்டது அறிகிலர்
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே

தழல் தாம் கொளுத்தியிட = அந்த நெருப்பு கொளுத்திவிட. ஒரு பிடி சாம்பல் பட்டது = (அவ்வுடல்) ஒரு பிடி சாம்பலான ஒரு பிடி சாம்பலான நிலையை அடைவதை அறிகிலர் = உணர்வதில்லை தன வாஞ்சை மிக்கு = பொருளாசை மிகுந்து உன் அடி தொழ நினையாரே = உனது திருவடியைத் தொழ நினைப்பதில்லையே

உபசாந்த சித்த குரு குல
பவ பாண்டவர்க்கு வரதன் மை
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்

உபசாந்த = மன அமைதி கொண்டசித்தம் = உள்ளம் உடைய குருகுல பவ = குருகுலத்தில் தோன்றிய பாண்டவர்க்கு = தருமன் முதலாய பாண்டவர்களுக்கு வரதன் = வேண்டிய வரங்களைத் தருபவன் மை உருவோன் = கரு மேக நிறத்தவன் ப்ரசித்த நெடியவன் = புகழ் பெற்ற விசுவரூபம் கொண்டவன் ரிஷிகேசன் = ரிஷிகேசன்

உலகு ஈன்ற பச்சை உமை அ(ண்)ணன்
வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே

உலகு ஈன்ற = உலகங்களைத் தந்த பச்சை உமை அணன் = பச்சை நிறத்தவளான் உமா தேவியின் அண்ணனும் வட வேங்கடத்தில் உறைபவ = திருப்பதியில் வீற்றிருப்பவனும் உயர் சாரங்க = மேலான சாரங்கம் என்ற வில் சக்ர = சுதரிசனம் ஆகிய சக்கரம் கரதலன் = (இவற்றைக்) கையில் ஏந்தியவனுமாகிய திருமாலின் மருகோனே = மருமகனே.

த்ரிபுர அந்தகற்கு வர சுத
ரதி காந்தன் மைத்துன முருக
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா

த்ரி புர அந்தகற்கு = முப்புரங்களை யமனாக இருந்து அழித்த சிவபொருமானுக்கு வர சுத = மேலான பிள்ளையே ரதி காந்தன் = ரதியின் கணவனான மன்மதனின் மைத்துன = மைத்துனர் முறையாக உள்ளவனே முருக = முருகனே திறல் பூண்ட சுப்ரமணிய = பராக்ரமம் வாய்ந்த சுப்ரமணியனே!. ஷண்முக வேலா = ஷண்முகனே!, வேலனே!.

திரை பாய்ந்த பத்ம தட
வயலியில் வேந்த முத்தி அருள் தரு
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே.

திரை பாய்ந்த = அலைகள் பாயும் பத்ம தட = தாமரைத் தடாகங்கள் உள்ள வயலியில் வேந்த = வயலூர் அரசே முத்தி அருள் தரு = முத்தியைத் தருவதான திருவாஞ்சியத்தில் = திருவாஞ்சியம் என்னும் தலத்தில். அமரர்கள் பெருமாளே = (உறையும்) தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை
 
யானை, காலாட்படை முதலியவற்றை உடைய பேரரசராக ஆட்சி
புரிந்து, திக்குவிசயம் செய்து, மண் உலகிற்கு அரசராகி, கலவைப் பூச்சும் ரத்ன அணிகலன்களையும் தன்னகத்தே கொண்ட மனித வடிவம்உடைய அது, உயிர் பிரிந்த பின், சுற்றத்தார் நெருப்பில் இட்ட பிறகு, ஒரு படி சாம்பலாகி விடுவர் என்பதை அறியாது பொருள் ஆசை மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைக்க மாட்டார்கள்.

பாண்டவர்களுக்கு வரம் கொடுத்தவனும், உமா தேவிக்கு அண்ணனும்,  வட வேங்கடத்தில் உறைபவனும், சங்கு சக்ரத்தைக் கரத்தில் தாங்கியவனும் ஆகிய திருமாலின் மருகனே. திரி புரம் எரித்த சிவனுக்குப் புதல்வனே, ஷண்முகனே, வயலூர் அரசே, திருவாஞ்சியில் உறையும் தேவர்கள் பெருமாளே. நிலையாமையை உணர்ந்து உன் திருவடிகளைத் தொழ நினையாரே.

விளக்கக் குறிப்புகள்

1. அரசாகி இறுமாந்து.....

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோருமுடிவிலொரு
பிடி சாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னி னம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே
பட்டினத்தார்

இறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே
- கந்தர் அலங்காரம்.

2. திருவாஞ்சியத்தில்....

நன்னிலம் அருகே உள்ள தலம். முத்தி அளிக்கும் தலங்களில் ஒன்று.

தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனங் கூடல் முதுகுன்றம் - நெல்லைகளர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணைக் காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.  

கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே
---சம்பந்தர் தேவாரம்

திருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று சொல்லுகிறாறோ?