F

படிப்போர்

Thursday, 12 November 2015

274. எருவாய் கருவாய்

“

274
திருவீழிமிழலை

பூந்தோட்டத்திலிருந்து 6 கி.மீ தொலைவில்

அசுரசேனைகளை அழிக்க முருகப் பெருமானுக்கு பல்வேறு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே சிவபெருமான் முருகனை அழைத்து 12 ஆயுதங்களை உனக்கு தருகிறேன் என்று கூறி தனது உதவி அம்சமாக விளங்கும் மகாதேவன், அரன், ருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சவுமியன் என்ற ஏகாதச ருத்திரர்களையும் அருகில் அழைத்து அவர்களை தோமரம், த்வஜம், அஸி (வாள்) வஜ்ராயுதம், தனுசு பாணம், அங்குசம், கண்டாயுதம், கமலாயுதம், கோதண்டம், ஈட்டி, பரசு எனும் பதினோரு வகை ஆயுதங்களாக்கி முருகப் பெருமானுக்கு தந்தார்.

இவற்றோடு சக்தியின் அம்சமான சக்தி ஆயுதத்தையும் (வேலாயுதம்) தரச் செய்தார். இவ்வாறாக முருகப் பெருமானின் 12 கைகளுக்கும் 12 வகை விசேஷ ஆயுதங்கள் சிவசக்தியரால் தரப்பட்டன. முருகன் பூலோகத்திற்கு வந்து 12 தலங்களில் லிங்கம் அமைத்து, சிவசக்தியர்களை வணங்கி அந்த 12 ஆயுதங்களையும் பெற்றார்.

பிறகு சூரனையும் அவன் சகோதரர்களையும்  போரிட்டு வென்றார். இவற்றில் சிக்கலில் சக்தியை வணங்கி சக்தி வேலை முருகன் பெற்றார். மற்ற 11 தலங்கள் திருப்பரங்குன்றம், பெருவேளூர், புள்ளிருக்கு வேளூர், திருவீழிமிழலை, கீழ்வேளூர், திருசேய்ஞலூர், கூந்தலூர், திருச்செங்காடு, திருப்பந்துறை, திருமுருகன்பூண்டி, திருமயிலாடி எனும் தலங்களாகும். 

       தனனா தனனா தனனா தனனா
          தனனா தனனா                      தனதான

           எருவாய் கருவாய் தனிலே யுருவா
                      யிதுவே பயிராய்                 விளைவாகி
                 இவர்போ யவரா யவர்போ யிவரா
                      யிதுவே தொடர்பாய்           வெறிபோல
                 ஒருதா யிருதாய் பலகோ டியதா
                      யுடனே யவமா                      யழியாதே
                 ஒருகால் முருகா பரமா குமரா
                      உயிர்கா வெனவோ           தருள்தாராய்
                 முருகா வெனவோர் தரமோ தடியார்
                      முடிமே லிணைதா            னருள்வோனே
                 முநிவோ ரமரோர் முறையோ வெனவே
                      முதுசூ ருரமேல்                 விடும்வேலா
                 திருமால் பிரமா வறியா தவர்சீர்
                      சிறுவா திருமால்                     மருகனே
                 செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
                      திருவீ ழியில்வாழ்               பெருமாளே.

பதம் பிரித்து உரை
எருவாய் கருவாய் தனிலே உருவாய்
இதுவே பயிராய் விளைவாகி

எருவாய் - உற்பத்திக்கு வேண்டிய உரமாக. கருவாய் - கருப்பையிலுள்ள கருவாய்.  தனிலே - அதினில் நின்றும். உருவாய் - உருவம் ஏற்பட்டு. இதுவே - இவ்வுருவே. பயிராய் - பயிர் வளர்வது போல். விளைவாகி - விளை பொருளாகி.

இவர் போய் அவராய் அவர் போய் இவராய்
இதுவே தொடர்பாய் வெறி போல

இவர் போய் அவர் ஆய் - இவர் இவர் என்று இன்று இருப்பவராய் (பின்பு இறந்துபட்டு). அவர் போய் இவர் ஆய் - அவர் அவர் என்று சொல்லப்பட்டவர்கள் (பிறந்த பின்) இவர் இவர் என்று சொல்லும்படியாகி.  இதுவே தொடர்பாய் - இங்ஙனமே ஒரு தொடர்ச்சியாய்   வெறி போல - வெறி பிடித்தது போல

ஒரு தாய் இரு தாய் பல கொடிய
தாயுடனே அவமாய் அழியாதே

ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே - ஒரு தாயார், இரண்டு தாயார்கள், பல கோடிக்கணக்கான தாய்மார்களை அடைந்தவனாய்.   அவமே - வீணாக.  அழியாதே - (நான்) அழிந்து போகாமல்.

ஓரு கால் முருகா பரமா குமரா
உயிர் கா என ஓத அருள்வாய்

ஒரு கால் முருகா - ஒரு முறையேனும் முருகா. பரமா - பரமா. குமரா - குமரனே. உயிர் கா - எனது உயிரைக் காத்தருள் என. ஓத - ஓதுமாறு. அருள் தாராய் - அருளைத் தந்தருளுக. (ஏனெனில்).

முருகா என ஓர் தரம் ஓதும் அடியார்
முடி மேல் இணை தாள் அருள்வோனே

முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் - ஒரே ஒரு முறை முருகா என்று ஓதுகின்ற அடியார்க்கு. முடி மேல் - அவர்களது தலையில். இணை தாள் அருள்வோனே - உன் இரண்டு திருவடிகளை அருள்பவனே.

முநிவோர் அமரோர் முறையோ எனவே
முது சூர் உரம் மேல் விடும் வேலா

முநிவோர் அமரோர் - முனிவர்களும் தேவர்களும்.  முறையோ எனவே - முறையோ முறையோ என உன் முன் ஓலமிட. முது சூர் உரம் மேல் - பழைய சூரனது மார்பின் மேல். விடும் வேலா - வேலாயுதத்தைச் செலுதிய வேலனே.

திருமால் பிரமா அறியாதவர் சீர்
சிறுவா திருமால் மருகோனே

திருமால் பிரமா - திருமாலும் பிரமனும். அறியாதவர் - அறியாதவர்களாகிய சிவபெருமானுடைய. சீர் - மேன்மை பொருந்திய. சிறுவா - சிறுவனே. திருமால் மருகோனே - திருமாலின் மருகனே.

செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ்
திருவீழியில் வாழ் பெருமாளே.

செழு - செழிப்புள்ள. மா மதில் சேர் - அழகிய மதில் சூழ்ந்த. அழகு ஆர் - அழகு நிறைந்த. பொழில் சூழ் - சோலைகள் சூழ்ந்த. திருவீழியில் வாழ் பெருமாளே - திருவீழி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கருப்பத்தில் கருவாய்த் தோன்றி, உருவம் ஏற்பட்டு மாறி மாறித் தோன்றும், இவர் என்று சொல்லபட்டவர், இறந்த பின், அவர் என்றுசொல்லும்படியாக, பல கோடி தாய்மார்களை அடைந்தவனாய், வீணாகநான் அழியக் கூடாதவாறு அருளுக.

ஓரு முறை முருகா என்று ஓதுவார் தலைமேல் உன் திருவடிகள்
இரண்டையும் வைத்து அருள் பாலிப்பவனே. முனிவர்களும் அமரரும் முறையிட சூரன் மேல் வேல் எய்தியவனே. திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத சிவபெருமான் புதல்வனே. திருமால் மருகனே. முருகா, குமரா, என் உயிரைக் காப்பாயாக.

முருகா வெனவோர்... 
(முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்)--- கந்தர் அனுபூதி .

” tag:

Monday, 13 July 2015

273. மருக்குலாவிய

“
273

திருவிடைக்கழி

முருகப்பெருமானும், சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி.

தனத்த தானன தனதன    தனதானா

மருக்கு லாவிய மலரணை         கொதியாதே
   வளர்த்த தாய்தமர் வகையது    மொழியாதே
கருக்கு லாவிய அயலவர்             பழியாதே
   கடப்ப மாலையை யினிவர      விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை       மணவாளா
   சமர்த்த நேமணி மரகத            மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி         லுறைவோனே
   திருக்கை வேல்வடி வழகிய     பெருமாளே

பதம் பிரித்து உரை

மரு குலாவிய மலர் அணை கொதியாதே
வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே

மருக் குலாவிய = நறு மணம் கமழும்
மலர் அணை = மலர்ப் படுக்கை
கொதியாதே = கொதித்துச் சூடு ஆகாமலும்
வளர்த்த = வளர்த்த
தாய் தமர் = தாயும், சுற்றத்தார்களும்
வசை அது மொழியாதே = வசைகளைப் பேசாமலும்

கரு குலாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை இனி வர விடவேணும்

கரு = கருவைக் காரணமாகக் கொண்டு
குலாவிய = நட்பாடிய
அயலவர் = அயலார்கள் (வேற்று மனிதர்கள்)
பழியாதே = பழிச் சொல் கூறாமலும்
கடப்ப மாலையை = கடப்ப மலர் மாலையை
இனி வர விட வேணும் = இனி நீ அனுப்பி வைக்க
           வேண்டும்

தரு குலாவிய கொடி இடை மணவாளா
சமர்த்தனே மணி மரகத மயில் வீரா

தருக் குலாவிய = கற்பக மரத்தின்
கொடி இடை = கொடி போன்ற இடையை உடைய தேவசேனையின்
மணவாளா = கணவனே
சமர்த்தனே = திறமை கொண்டவனே
மணி = அழகிய
மரகத = பச்சை நிறம் கொண்ட
மயில் வீரா = மயில் வீரனே

திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே
திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே

திருக் குரா அடி நிழல் தனில் = திருக் குரா மரத்தின்
                அடிநிழலில்
உறைவோனே = வீற்றிருப்பவனே
திருக் கை = திருக்கையில்
வேல் = வேலை ஏந்திய
வடிவழகிய பெருமாளே = அழகிய திரு உருவம்  அழகுள்ள பெருமாளே
          
சுருக்க உரை

நறு மணம் கமழும் படுக்கை கொதித்துச் சூடி தராமலும், தாயும்சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், கருவை நோக்கம் வைத்துக் குலாவிய அயலார்கள்  பழி கூறாமலும் சுற்றாத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், நீ உன் கடப்ப மலர் மாலையைத் தர வேண்டும்

கற்பக மரத்தின் கீழ் விளங்கிய கொடி போன்ற தேவசேனையின் கணவனே அழகிய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே திருக்குரா மரத்தின் அடி நிழலில் வீற்றிருப்பவனே கையில் வேல் ஏந்திய அழகனே இந்தப் பெண்ணுக்குக் கடப்ப மாலையைத் தர வேணும்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது

 குராவடிக் குமரன்

 "கொந்துவார் குரவடியினும், அடியவர்
 சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
 கொண்ட, வேத நன் முடியினு மருவிய குருநாதா" என்று திருத்தணி திருப்புகழில் பாடிகிறார்

முருகனுக்கு உகந்த மூன்று இடங்கள், அதில் முதலாவதாக அவர் குறிப்பிடுவது குராமரத்தடியைத்தான்.

அருணகிரிநாதர் பல பாடல்களில் முருகனது குராப் புனையும் தண்டையந்தாளையும் தொழுகிறார்.

"திருக்குராவடி நிழல்தனிலுலவிய பெருமாளே"

"முக்தி வீட்டணுக முத்தராக்க, சுருதிக்
 குராக்கொள் இரு கழல் தாராய்"

"குராவின் நிழல் மேவும் குமாரனென நாளுங்
 குலாவி இனிதோது அன்பினர் வாழ்வே"

"செழுமலர்ப் பொழில் குரவம் உற்ற
 பொற்றிருவிடைக்கழி பெருமாளே"

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவண பொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் மரத்தடியில் இன்றும் இருக்கின்றது

இத்திருத்தலத்தில் தெய்வயானை தென் திசை நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார். அன்னை சுப்பிரமணிய ஸ்வாமியை  நோக்கி முகத்தை சற்றே வலப்புறம் திருப்பிய தவகோலத்தில்  இருக்கும் அழகை பார்த்ததுக்கொண்டே இருக்கலாம். 'முருகன் எப்போது சிவபூஜை முடித்து தன்னை கரம் பிடிப்பார்' என்று அவர் நினைக்கும் மனநிலையை இது தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சொல்வர்

இத்தலத்தில் பிரதோஷநாயகர், நடராஜர், சந்திரசேகர், சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்திகள் வலது திருக்கரத்தில் (சுட்டுவிரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவே) வஜ்ர வேலைக் கொண்டிருக்கின்றனர். பிற கோவில்களில் திரிசூலமே அஸ்திர தேவராக அமைந்திருக்கும் இத்தலத்தில் வஜ்ரவேல் தான் அஸ்திரதேவராக விளங்குகிறது.

நடராஜப்பெருமான் வலதுத் திருக்கரத்தில் வஜ்ரவேலும், இடது திருக்கரத்தில் வில்லும் ஏந்திக் கொண்டு இரண்யாசூரசம்ஹார மூர்த்தியாகவும், சபாநாயகராகவும் இருக்கிறார். இத்தலத்தில் மூலவர் முருகனுக்கு முன், யானை வாகனம் உள்ளது. மயில் வாகனம் அல்ல. ஸ்வாமிமலை போல்.

இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் கிடையாது. இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.