F

படிப்போர்

Showing posts with label பாண்டியன் கூண். Show all posts

Wednesday, 16 January 2013

187. பாட்டில் உருகிலை

“

          தாத்த தனதன தாத்த தனதன
          தாத்த தனதன தாத்த தனதன
          தாத்த தனதன தாத்த தனதன    தனதான

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
   கூற்று வருவழி பார்த்து முருகிலை
   பாட்டை யநுதின மேற்று மறிகிலை          தினமானம்
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
   நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
   பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல்             வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
   யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
   பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ  னிதுகேளாய்
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
   பூட்டி திரிபுர மூட்டி மறலியி
   னாட்ட மறசர ணீட்டி மதனுடல்               திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
   யாட்டின் முகமதை நாட்டி மறைமக
   ளார்க்கும் வடுவுறு வாட்டு முமையவ       னருள்பாலா
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
   ஈட்டி யழல்பசை காட்டி சமணரை
   சீற்ற மொடுகழு வேற்ற அருளிய                குருநாதா
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
   ஏத்த அருளுட னோக்கி அருளுதி
   தீர்த்த மலைநகர் காத்த சசிமகள்            பெருமாளே
-187 தீர்த்த மலை
(தருமபுரி மாவட்டம் அரூர் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில்)

பதம் பிரித்தல்

பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை
கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்

பாட்டில் உருகிலை = (மனமே நீ) பாட்டின் பொருள் அறிந்து உருகுதல் இல்லை கேட்டும் உருகிலை = பாட்டின் பொருளையும் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை கூற்று வரு வழி பார்த்தும் = யமன் வரும் வழியைக் கண்டும். உருகிலை = (பக்தியால்) உருகுதல் இல்லை. பாட்டை = (என்) கட்டங்களை அநுதினம் ஏற்றும் = தினந்தோறும் அநுபவித்தும் அறிகிலை = (உண்மைப் பொருளை) அறிகின்றாய் இல்லை. தினமானம் = நாள் தோறும்

பா(ம்)பு அணியன் அருள் வீட்டை விழைகிலை
நாக்கின் நுனி கொ(ண்)டு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக

பாம்பு அணியன் = பாம்பை அணிந்துள்ள சிவபெருமான். அருள் = அருளும் வீட்டை விழைகிலை = வீட்டின்பத்தை விரும்புகின்றா யில்லை. நாக்கின் நுனி கொண்டு = நாவின் நுனியால். ஏத்த = (பிரானைப்) போற்ற அறிகிலை = அறிகின்றாயில்லை பாழ்த்த = பாழ்படும் பிறவியில் = (இந்தப்) பிறப்புக்களி லேயே ஏற்ற = ஈடுபடுகின்ற மனது நல் வழி போக = (என் மனமே) நீ நல்ல வழியே போக.

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை
ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்

மாட்டம் எனுகிறை = மாட்டேன் என்கின்றாய் கூட்டை = (உடல் சிறையகிய) இந்தக் கூட்டினை விடுகிலை = விடுகின்றாயில்லை ஏட்டின் விதி வழி ஓட்டம் = ஏட்டில் எழுதியுள்ள என் தலை விதி எந்த வழியாக ஓடுகின்றது என்பதை அறிகிலை = அறிகின்றிலை பார்த்தும் = (இங்ஙனம் நீ இருக்கும் வகையைப்) பார்த்தும் இனி ஒரு வார்த்தை = (சும்மா இருக்க முடியாமல் நான்) இனி ஒரு வார்த்தை சொல்லுகின்றேன் இது கேளாய் = இதைக் கேட்பாயக.

வாக்கும் உனது உள்ள(ம்) நோக்கும் அருளுவன்
ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
வாழ்த்த இரு வினை நீக்கு முருகனை மருவாயோ

ஏத்த புகழ = உன் புகழை ஓதிப் புகழ வாக்கும் = நல்ல வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் =  உனது உள்ளத்தில் நல்ல கருத்தையும் அருள் புரிவான் அடியார்க்கும் எளியனை = (ஆதலால்) அடியவர்களுக்கு எளியவனை வாழ்த்த = வாழ்த்தவும் இரு வினை நீக்கும் = கொடிய வினைகள் நீங்கவும் முருகனை மருவாயோ = முருகனை நீ சிந்திப்பாயக.

ஆட்டி வட வரை வாட்டி அரவொடு
பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்
நாட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திரு நீறாய்

ஆட்டி = உலகையே ஆட்டி வைப்பவராகிய கூத்தப்பிரான். வட வரை = வடக்கில் உள்ள மேரு மலையை வாட்டி = வருத்திச் (சிலையாக வளைத்து) அரவொடு பூட்டி = (அதில்) வாசுகி என்னும் பாம்பை (நாணாகக்) கட்டி. திரிபுரம் மூட்டி = திரிபுரத்தைத் தீயில் வேகச் செய்து. மறலியின் நாட்டம் அற = யமனுடைய கருத்து அழியும்படி. சரண் நீட்டி = காலை நீட்டி (அவனை உதைத்துத் தள்ளி). மதன் உடல் திரு நீறாய் = மன்மதனுடைய உடல் சாம்பலாகும்படி.

ஆக்கி மகம் அதை வீட்டி ஒருவனை
ஆட்டின் முகம் அதை நட்டி மறை மகள்
ஆர்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா

ஆக்கி = செய்து மகம் அதை = (தக்கனுடைய) யாகத்தை வீட்டி = குலைத்து ஒருவனை = (அந்த) யாகம் நடத்திய தக்கனுக்கு ஆட்டின் முகம் அதை நாட்டி = ஆட்டின் முகத்தைப் பொருந்த வைத்து. மறை மகளார்க்கும் = மறை மகளாகிய சரசுவதிக்கு.  வடு உற வாட்டு = காயம் உண்டாகும்படி வாட்டிய உமையவன் = உமா தேவியின் கணவனாகிய சிவபெருமான் அருள் பாலா = அருளிய குழந்தையே.

சீட்டை எழுதி இவை ஆற்றில் எதிர் உற
ஓட்டி அழல்  பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழு ஏற்ற அருளிய குருநாதா

சீட்டை எழுதி = (வாழ்க அந்தணர் என்னும் பதிகத்தை) எழுதிய சீட்டை. வை(கை) ஆற்றில் எதிர் உற ஓட்டி = வைகையாற்று வெள்ளத்தில் எதிர் ஏற ஓட்டியும் அழல் பசை காட்டி = நெருப்பில் இட்ட ஏடு பச்சை நிறத்துடன் விளங்கும்படி. சமணரை = சமணர்களை சீற்றமொடு = கோபித்து. கழு ஏற்ற அருளிய = கழுவிலேற வைத்தருளிய. குரு நாதா = குரு நாதரே.

தீர்த்த எனது அக மேட்டை உடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே.

தீர்த்த = பரிசுத்தனே எனது அகம் மேட்டையுடன் = என் மனது விருப்பத்துடன் நினை = உன்னை ஏத்த = துதிக்க அருளுடன் நோக்கி = நீ அருள் பாலித்துக் கண் பார்த்தருளி தீர்த்தமலை நகர் காத்த = தீர்த்த மலை என்னும் ஊரில் உறையும் (பெருமாளே) சசி மகள் பெருமாளே= இந்திராணியின் மகள் தேவசேனைக்குப் பெருமாளே.

சுருக்க உரை

மனமே, நீ துதிப் பாடல்களின் பொருளை அறிந்து உருகவில்லை. அப் பொருளைக் கேட்டும் உருகுதல் இல்லை. யமன் வருவதைக் கண்டும் இறைவனிடம் பக்தியாய் உருகவில்லை. முயற்சித்து உண்மைப் பொருளை அறியவில்லை. பாம்பு அணிந்த சிவபெருமான் அருளும் வீட்டின்பத்தை விரும்பவில்லை. நாவால் அவனைப் போற்றவில்லை. பாழான இந்தப் பிறப்புக்களிலேயே ஈடுபட்டு நன் வழியில் செல்ல மாட்டேன் என்று சொல்லி உடலாகிய சிறையிலேயே கிடக்கின்றாய். விதி வழியாக எல்லாம் நிகழ்கின்றது என்றும் நீ உணரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் சொல்ல நீ கேட்பாயாக. உனக்கு வாக்கும், நல்ல உள்ளமும் இறைவன் அருள்வார். அவனுடைய திருப்புகழை ஓதி அவனையே சிந்திப்பாயாக.

உலகை ஆட்டி வைக்கும் கூத்தன், மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கி, திருபுரத்தை எரித்து, யமனை உதைத்து, மதனைச் சாம்பலாக்கி, தக்கன் வேள்வியைக் குலைத்து, அவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி, சரசுவதிக்குக் காயம் உண்டாகும்படி வாட்டிய உமா தேவியின் கணவனான சிவபெருமான் அருளிய குழந்தையே. சம்பந்தராக அவதரித்துப் பதிகம் பாடி, ஏடுகளை வைகையில் எதிர் ஏறச் செய்து, சமணர்களைக் கழு ஏற்றிய குரு நாதனே. உன்னை நான் ஏத்தும்படி, அருள்புரிந்து, கண் பார்த்தருளி, தீர்த்த மலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. தேவசேனையின் பெருமாளே. என்னைக் கண் பார்த்து அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்

இது மனதுக்குப் புத்தி கூறும் பாட்டு. அந்தோமனமே எனத் தொடங்கும் பாடலும்
இது போன்றது.

1. திரிபுரம் மூட்டி...
அரிய திரிபுரம் எரிய விழித்தவன்).......................திருப்புகழ், குருவியெனப்பல.

2. மறலியின் நாட்டம் அற....

மார்க்கண்டருக்கு விதித்திருந்த பதினாறு ஆண்டு முடிந்த பிறகு, காலன் அவரைக் கவர வந்த போது, அவர் சிவ பூசையில் இருந்தார். காலன் பாசத்தை வீச,
மார்க்கண்டர் சிவனைத் தியானிக்க, சிவன் எழுந்தருளிக் காலனைக் காலால்
உதைத்துத் தள்ளினார்.

பதிமூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி
உதைத்தான் கூற்றம் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான்........கந்த புராணம்

3. ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி...

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி யுந்தீபற...திருவாசகம்,  திருவுந்தியார்

தன் மருமகனான சிவபெருமான் தன்னை மதிக்க வில்லை என்று கோபம் கொண்ட தட்சன் சிவனை ஒதுக்கி வைத்து யாகத்தைச் செய்யத் தொடங்கினான். இதைக் கண்ட உமை, யாகத்தை அழிக்குமாறு கணவனை வேண்ட, அவருடைய கோபத் தீயினால் வீரபத்திரரும் காளியும் தோன்றினர். இவர்கள் தக்கனை வெட்டி வீழ்த்தி, பலருக்கும் தண்டனை அளித்தார்கள். பிறகு தேவி வேண்டிக்கொண்டதன்பேரில் தட்சனுடலுக்குஆட்டின் தலையை பொருத்தி உயிர் கொடுத்தார்.

4. மறை மகளார்க்கும் வடுவுற வாட்டு...

வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
மூக்கொடு குயமும் கொய்தான்.......................................கந்த புராணம்

5. சீட்டை எழுதி வைகையாற்றில்....

திகுதிகென மண்ட விட்ட தீ ஒரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர் திகையின் மண் வந்து
...திருப்புகழ், நிகமெனிலொன்று

திருஞான சம்பந்தர் வரலாற்றைக் குறிக்கும். முருகனே சம்பந்தராக அவதரித்தார்
என்பது அருணகிரி நாதர் கருத்து. அதனால் (மகிதலம் அணைந்த அத்தனே)
இப்பூமியில் அவதரித்த குருவே என நிகமெனிலொன்று திருப்புகழில் கூறுகிறார்

சம்பந்தர் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி
சீட்டை எழுதி வைகையாற்றில்

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சி செய்தபோது திருஞான சம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்'' என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம், வெப்பு நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. அரசனின் வெப்பு நோயைத் தீர்க்க அரசி ஞானசம்பந்தர்ரை வேண்ட, அவரும் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அரசனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. மன்னன் மீண்டும் சைவமதற்கு மாற எண்ணினான். இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய் விடுவதாகவும் அறிவித்தனர். அதன்படி  இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர்.

முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் திசையிலே ஓடிற்று.  ஞான சம்பந்தர், `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தைப்பாடி, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச்சென்றது.

அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் பாடி பாண்டியன் கூன் நிமிரச்செய்த்தால்  நின்றசீர் நெடு மாறன் ஆயினான்

அழல் பசை காட்டி

இதற்கு முன் சமணர்கள் 'இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை நூல் போட்டு விரித்ததில். `போகமார்த்த பூண் முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் வந்தது. ஞானசம்பந்தர் திரு நள்ளாறு இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் பாடி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் அஸ்தி நாஸ்தி` என்ற தங்கள் சமய வசனத்தை  எழுதி ஏட்டினைத் தீயில் இட்டனர்.  அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று.  ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று. அருணகிரி நாதர் திருநள்ளார் திருப்புகழை பச்சையொண்கிரி என ஆரம்பிப்பது நோக்கத்தக்கது

6.சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து
   
  சேனைச்சம ணோர்கழு வின்கண்   மிசையேறத்
  தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
  தீமைப்பிணி தீரவு வந்த    குருநாதா ---------- திருப்புகழ், ஊனத்தசை

” tag:

Monday, 26 November 2012

164.வஞ்சக லோப மூடர்

“

           தந்தன தான தான தந்தன தான தான
             தந்தன தான தான           தனதான

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
   மஞ்சரி கோவை தூது                  பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
   வந்தியர் போல வீணி                   லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
   திண்டிறல் வேல்ம யூர                 முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
   செங்கனி வாயி லோர் சொல           ருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
   பஞ்சற வாது கூறு                     சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
   பண்டித ஞான நீறு                    தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
   குன்றவர் சாதி கூடி                   வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
   குன்றுதொ றாடல் மேவு              பெருமாளே
-164 குன்றுதோறாடல்

பதம் பிரித்து உரை

வஞ்சக லோப மூடர் தம் பொருள் ஊர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பல பாவின்

வஞ்சக = வஞ்சகமும் லோப(ம்) = ஈயாத குணமும் கொண்ட மூடர்தம் = மூடர்களுடைய பொருள் = பொருளையும். ஊர் = ஊர்களையும். தேடி = தேடி மஞ்சரி, கோவை, தூது = மஞ்சரி, கோவை, தூது என்று கூறப்படும் பல பாவின் = பல வகைப் பா இனங்களால்.

வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி
வந்தியர் போல வீணில் அழியாதே

வண் = ஈதல் குணம் நிறைந்த. புகழ் = புகழ் வாய்ந்த, பாரி காரி என்று = பாரி வள்ளலே, காரியே நீங்கள் என்று. (ஆதாரமே இல்லாத அயர்வுற்ற பூங்கொடிக்கு தன் தேரைக் கொடுத்தவன் பாரி. புலவர்களுக்கு எல்லை இல்லாமல் வாரிக் கொடுத்தவன் காரி ) இசை = புகழ். வாது கூறி = சபதப் பேச்சுக்களைப் பேசி. வந்தியர் போல = (அரசச் சபையில் புகழ் கூறுவார் போல). வீணில் அழியாதே = வீணாகக் காலத்தை நான் அழிவு செய்யாமல்.

செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை
திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்

செம் சரண் = செம்மை வாய்ந்த திருவடியையும். நாத கீத = ஒலி இசை செய்யும் கிண்கிணி = கிண்கிணியும் நீப மாலை = கடப்ப மாலையையும். திண் திறல் = வலிய திறமை வாய்ந்த வேல் = வேலையும் மயூரம் = மயிலையும் முகம் ஆறும் = ஆறு திருமுகங்களையும்.

செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு
செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே

செம் தமிழ் நாளும் ஓதி = செந் தமிழால்  நாள் தோறும் ஓதி உய்ந்திட = நான் உய்யுமாறு ஞானம் ஊறு = உனது ஞானம் ஊறுகின்ற செம் கனி வாயில் = செம்மை சேர்ந்த கனி போன்ற வாயினால் ஓர் = ஒப்பற்ற சொல் = உபதேசச் சொல்லை அருள்வாயே = போதித்து அருள்வாயாக.

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்

பஞ்சவன் = பாண்டியனுடைய நீடு கூனும் = நெடு நாளாக இருந்த கூனும் ஒன்றிடு = வந்து சேர்ந்த தாபமோடு = சுரமும் பஞ்சு அற = பஞ்சாய்ப் பறந்தோடும்படி வாது கூறு = தர்க்க வாதங்களைப் பேசி சமண் மூகர் = சமண ஊமைகள்.  ( மூகர்  - சமணர்கள் ஓதும் மந்திரங்களில்ஞ, ஞா, ஞை, ஞொ, ஞோ எனும் சப்தங்கள் மிகுத்து விளங்குவதால் மற்றவர்கள் அவர்களை ஊமை எனும் பொருளில் மூகர் என அழைத்தனர். )

பண்பு அறு பீலியோடு வெம் கழு ஏற ஓது
பண்டித ஞான நீறு தருவோனே

பண்பு அறு = மேன்மை அழிந்து பீலியோடு = (அவர்களுடைய) மயில் இறகோடு வெம் கழு ஏற = கொடிய கழுவில் ஏறும் வகைக்கு ஓது = (தேவாரத் திருப்பதிகங்களைச் சம்பந்தராக வந்து) ஓதிய. பண்டித = பண்டித மூர்த்தியே ஞான நீறு தருவோனே = ஞானத் திருநீற்றைப் (பாண்டியனுக்குத்) தந்தவனே.

குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு
குன்றவர் சாதி கூடி வெறி ஆடி

குஞ்சரம் = யானை யாளி = யாளி ஆகியவை. மேவும் = இருந்த பைம்புனம் மீது = பசுமை வாய்ந்த தினைப் புனத்தில் உலாவும் = உலவிய குன்றவர் = மலை வேட்டுவர்களுடைய சாதி கூடி = சாதி மக்கள் ஒன்று கூடி வெறி ஆடி = வெறியாட்டம் ஆடி (உன்னை).

கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு
குன்று தொறாடல் மேவு பெருமாளே.

கும்பிட நாடி = கும்பிட்டதின் பயனாக வாழ்வு தந்து = (அவர்களுக்கு) நல் வாழ்வைத் தந்து அவரோடு வீறு = அவர்களுடன் விளங்குகின்ற குன்று தோறாடல் மேவு பெருமாளே = மலைகள் தோறும் திருவிளையாடல் செய்யும் பெருமாளே.

சுருக்க உரை

வஞ்சகர், பிறருக்கு ஈயாதார், மூடர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று, பல வகையான தமிழ்ப்பா இனங்களால் அவர்களைப் பாரியே என்றும் காரியே என்றும் புகழ்ந்து பாடி, என் வாழ் நாளை வீணாக்கி அழியாமல், உன் செவ்விய திருவடியையும், ஒலி இசை செய்யும் கிண்கிணியையும், கடப்ப மலையையும், வலிய வேலையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செந்தமிழப் பாக்களால் நாள் தோறும் ஓதி உய்ந்திட, நீ உனது கனி வாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்குப் போதித்து அருளுக.

பாண்டியனுடைய கூனும், சுரமும் பஞ்சாகப் பறந்தோடும்படியும், சமண ஊமைகள் அவர்களுடைய மயில் இறகோடு கொடிய கழுவில் ஏறும்படியும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதிய சம்பந்தராகிய அவதரித்த பண்டிதனே. திருநீற்றைப் பாண்டியனுக்குத் தந்தவனே. யானை, யாளி ஆகியவை இருந்த தினைப் புனக் காட்டில் வேடர்கள் ஒன்று கூடி வெறியாட்டம் ஆட, அவர்களுடைய பெண்ணாகிய வள்ளியை மணந்து, அவர்களுக்கு நல் வாழ்வை அளித்து, மலைகள் தோறும் விளையாடல் செய்யும் பெருமாளே. உலோபிகளிடம் சென்று யாசகம் செய்யாமல், உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு உபதேசச் சொல்லை அருள்வாயாக.

ரசபதி உரை

எண்ணிலாத சமயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அறிவின் தரத்திற்குத் தக்கவாறு அமைந்தவை. மூலப் பரம் பொருளை அறிய முயல்பவை. பரத்தை அனுபவிக்க அவைகள் மேற்கொண்ட அனுஷ்டானங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாய் இருக்கும்.  ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்குள் என்று அவைகளைத் தொகுத்துக் கூறினார் திருமூலர். எந்த சமயத்தவரும் தமக்கென அமைந்த முதன்மை அனுஷ்டானத்தை முறைப்படி நடத்தி அனுபவம் விளங்கி இறவா பிறவா இன்பம் எய்தினர். இது பழைய கால நிலை.

வர வர சோம்பல் வளர்ந்தது. சமய அனுஷ்டானங்கள் சரிந்தன. சின்னத்து அளவாகி சிரித்தனர். எதையும் முறையாகக் கற்க வேண்டும் எனும் ஆர்வம் இல்லை. ச்ரவணம் என்கிற பெயரில்f பொழுதை விருதாவே போக்கினர். கல்லாதார் கேள்வியை மட்டுமே காமித்தால் அனுபவ ஞானம் அமையாது. அமைதி மனதில் பிறவாது. ஆத்ம சாந்தி வராது. கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த பெற்றம் ஊர்த்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே என்று திருஞான சம்பந்தர் உய்யும் வழியை உணர்த்தியுள்ளார்.

கற்றவர் கேள்வி ஞானத்தால் கலந்தனரேல் ஓதிய கல்வி உரம் பெறும்.இது தான் இயற்கை தந்த இனிய வழி. இந்த தர்மத்தை மறந்து தூய தமது அனுஷ்டானத்தைத் துறந்து வெறும் கேள்வி அளவில் விளங்கி, அவலை நினைத்து உரலை இடிப்பவர் போல், எம் சமயம் ஏற்றம், மற்றவர் சமயம் மட்டம் என்று வாய் வாதத்தையே, பிற் காலத்தவர் வளர்த்தனர். தம் கொள்கைளைத் தழுவாதவர்க்கு தலை வேதனை பல தந்தனர்., வாலறுத்த நரித் தந்திரங்கள் வளர்ந்தன.

அறிவு பெருகிய ஆதி சமணம், வளர்ந்து, ஒரு காலத்தில் வாழ்ந்தது. மற்றவரையும் வாழ வைத்தது. இது ஒரு காலம். அச்சமய சார்பு கொண்ட பிற்கால மக்கள், மா பெரும் தம் தர்மத்தை மறந்தனர். எம் சமயமே ஏற்றது என்று கொள்ளித் தேள் போலக் குதித்தனர். எவரையும் தம் சமயத்திற்குள் ஈர்க்க சூழ்ச்சி யந்திரத்தைச் சுழற்றினர். விஞ்ஞானத்தை விருத்தி செய்தனர்.

பல இடங்களைப் பழுது படுத்தினர். பாண்டி நாட்டில் புகுந்தனர். மந்திர தந்திர மரபுகளால் அறிவில் இருளைப் பரப்பினர். தரம் குறைந்தோர் பலர் அவர் சமயத்தைத் தழுவினர். நீறிட்டார் கெட்டார், வீபூதி இடார் வாழ்ந்தார் என்பது அவர்கள் உபதேசம். சைவரைக்  கண்டால் பாவம், அவர்கள் குரலைக் கேட்டது தோஷம், இதற்கு கண்டு முட்டு கேட்டு முட்டு என்று பெயர். இப்படி எல்லாம் ஏய்த்து நாளும் சாகஸ நாடகம் ஆடினர். அரசர் பாண்டியரும் அவர்கள் வலையில் அகப்பட்டார்.

மகாராணி மங்கையர்க்கரசியார் இந்நிலை கண்டு மனம் வருந்தார். அமைச்சரோடு ஆலோசித்து ஆளுடை பிள்ளையாரை மதுரைக்கு அழைத்தார். பிள்ளையார் மதுரைக்கு வந்தார். பழைய சமயப் பொலிவு பாண்டியில் இல்லை. நீறற்ற நெற்றி, கோவணம் இல்லாதார் சிலர். தம்மையும் தம்மைச் சார்ந்தாரையும் கண்டு, கண்டு முட்டு கேட்டு முட்டு என்று படபடத்து ஓடுகின்றனர் பலர். ஏன் இங்கு வந்தாய் என்று எதிர்ப்பை எழுப்பினர்.

மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளர்க் கை மடமாணி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருளும் அருளி
அங்கயர்க் கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் ஆயதும் இதுவே   - என்று வருந்திப் பாடினார். அதன் பின் அமணர்கள் அவர் தங்கி இருந்த மடத்தை எரிக என்று நெருப்பை இட்டனர். அது கண்டு,
செய்யனே, திரு ஆலவாய் மேவிய ஐயனே
அஞ்சல் என்று அருள் செய் எனை
பொய்யராம் அவுணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்க்காகவே - என்று பதிகம் பாடினார் பிள்ளையார்.                                                                                                                     அத்தீயின் வெம்மை பாண்டியரைச் சுரநோயாகப் பற்றியது.அந்தச் சுரத்தை தீர்க்க முயன்று அமணர்கள் தோற்றனர்.
மங்கயர்க்கரசியார் விரைந்தார் பிள்ளையாரைப் பணிந்தார். சுவாமீ,
மன் காதலில் உய்வது இவ்வையம் எல்லாம்
மலையாள் முலையால் அமுதுண்டவனே
எம் காதலன் எம்பெருமான் அவனுக்கு இதுவோ தகவு என்று வேந்தர் சுரநோயைத் தணிக்க விண்ணப்பித்தார்.

அஞ்ச வேண்டா, நிமலன் கரத்தில் நெருப்புண்டு அதை அணைக்க நீரையும் திருமுடியில் தாங்கியுள்ளான்.
கனல் எங்கள் கனல்,  புனல் எங்கள் புனல் என்று பின் நிகழ்வுள நிகழ்வையும் பிள்ளையார் குறிப்பாக முன்னே கூறினார்.
அதன் பின் அரசரை அணுகினார். நோக்கினார்.
நீறிட்டு ஆர் கெட்டார் ? விபூதியிடாது ஆர் வாழ்ந்தார்? என்றார்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயன் திருநீறே - என்று பதிகம் பாடி நீறு பூசி அரசருக்கிருந்த சுரத்தை அகற்றினார். அதனுடன் உடன் பிறப்பான கூனும் ஒழிந்தது. நின்ற சீர் நெடுமாறர் எனும் அரியதோரு பெயரையும் அரசருக்கு பிள்ளையார் அளித்தார்.

மனம் பொறாத அமணர்கள் வாதத் தீயை வளர்த்தனர்.

போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே - என்று பாடியிருந்த பழைய ஏட்டை எடுத்தார்.

தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலை மகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணையவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி  மருவு நள்ளாறர் தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுதிலை மெய்ம்மையே

( இதன் பொருள் - இளந்தளிர் போன்று பெருகி வரும் அருளில்  எழில் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற நள்ளாற்று நாதரின் திருநாமம் தாங்கிய போகமார்த்த எனத் துவங்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஓலையை எரியில் இட்டால் பழுது இல்லாது காக்கும் என்பது மெய்ம்மையே )
என்று பாடி எரியும் நெருப்பில் ஏட்டை இட்டார். அஸ்தி நாஸ்தி என்ற மந்திரம் எழுதிய ஏட்டை அமணர் தீயில் இட்டனர். பிர்ளையார் ஏடு பசுமை மிகுந்து பளபளத்தது. அமணர்கள் ஏடு எரிந்து கரிந்தது.

அதன் பின் வாத வெள்ளம் வளர்ந்தது

வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே
என்று அருளி திருஞான சம்பந்தர் இட்ட ஏடு வைகை வெள்ளத்தில் எதிரேறிச் சென்று திருஏடகப்பதியில் கரை ஏறியது. அமணர்கள் இட்ட ஏடு வெள்ளத்தின் வழியே விரைந்து மா பெரும் கடலுள் புகுந்து மறைந்தது.

அது கண்ட சமணர்கள் மண் மேல் விழுந்து எழுந்தனர். மானம் போனது என்றனர். ஏராளமான கழு மரங்களை நட்டனர். என்ன வேதனையான வரலாறு. இவர் சொற் பேச்சு கேட்டிலர்.சுய அறிவை இழந்தனர். இத்தகையர் வரலாறு என்றும் இப்படித்தான் ஆகுமோ என்னவோ

ஆளுடைய பிள்ளையாரில் அமர்ந்திருந்து, பெரும, முருகா, இவ்வற்புதங்களை ஒரு காலத்தில் நிகழ்த்தினை.இவைகளை எண்ணி  எண்ணி இதயம் உருகி, பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடுபஞ்சற வாது கூறு சமண் மூகர் ... கழு ஏற ... ஓது பண்டித என்று பாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள். அமணர்கள் ஓது மந்திரங்கள் ஞஞண, ஞாஞண, ஞொஞண, ஞோஞண என ஒலித்தலின்  ஊமையர் எனும் குறிப்பில் அவர்களை மூகர் என்று ஓதினர் முன்னோர். அறிவு மிகுந்தவர்கள் பொறாமையும் போட்டியும் வளர்த்தனரேல் அவர்கள் அடியோடு கெடுவர் என்பதை அறிவித்த வரலாறிது.

கொடிய விலங்குகள் வசிக்கும் கானகத்தில் குறவர் கூடுவர். வைதீக அறிவு இல்லாவர். தர்மாதர்மம் தெரியாதார். அவர்கட்கென வகுத்துக் கொண்ட அனுஷ்டானப்படி ஆராதிப்பர். அவர்கள் தலைவனான பூசாரி வேலன் என்ற பெயரில் விளங்குவன். என்றும் அவன் கையில் வேல் இருக்கும். அவன் மேல் ஆவேசிப்பை. வேலா குறிஞ்சி அரசே என்று கூவிக் குறவர் கும்பிடுவர். அறிவிலா அவர்கள் அனுஷ்டானங்களைக்            கண்டு வாழுமாறு  அருள் வழங்கி, மலை நிலம்தோறும் புனிதமான அருள் ஆடல் புரியும் உம்மை பெருமாளே என்று  ( சிறியவர்கட்கு அருளும் பெரிய பொருளே எனும் பொருளில் ) எடுத்த குரல் கொண்டு ஏத்துவம்.

நெஞ்சில் வஞ்சங்கள் நிறைந்தன. உலோப குணங்கள் உயர்ந்தன. மூடம் பாசிகள் அறிவில் படர்ந்தன. பாதக சாகசம் பல செய்து பணமுடையார் ஆயினர் பலர். வறுமை புலவர்களிடம் வளர்ந்தது. வயிறு காய்ந்தது. குடும்பம் குமைந்தது. அவைகளால் மயங்கி விடுகிறது மதிநிலை. பசி தவிர்க்க எண்ணிய பாவலர் சிலர், மேற்சொன்ன செல்வர்கள் வாயிலைச் சேர்கின்றனர்.

ஆதாரமில்லாமல் அங்கலாய்த்த முல்லைக் கொடியை, இதனிற் படர்ந்து சுகமாய் இரு  என்று ஏறியிருந்த பொன் தேரை உதவிய பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவனே, வாரி புலவர்க்கு வழங்கிய காரி வள்ளல் கால் வழியில் உதித்தவனே உன்னை நாடினம். உதவி செய் என்று போற்றி செல்வர்களைப் புகழ்கின்றனர்.

ராஜ சபையில் அவர்கள் புகழ் பாட வந்தியர் என்றுஒருவர் இருப்பர் ( வந்தித்தல் செய்பவர் வந்தியர் ) அவர்களைப் போல் தம்மைப் பாடும் பாவலர்களில் பாடல் கேட்டு பல்லிளிக்கும்  சில செல்வர்கள் ஏதோ ஒரு சிறு தொகையை உதவ மகிழ்கிறது அவ்வேழைகள் மனம்.இல்லாத  புகழை இருப்பதாகக் கூறும் இதுவும் ஒரு பாவந் தான்.
மிடுக்கில்லாதானை வீமனே,விறல் விஜயனே வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை

பொய்ம்மையாளரைப் பாடாதீர் எந்தை புகலூர் பாடுமின் புலவீர்கள்
இம்மையை தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே  -  என்று இச்சூழ்நிலை அறிந்த சுந்தர மூர்த்திகள் ஒரு சமயம் உள்ளம் நொந்து பாடியுளர்.

அப்படி அடியேன் அதோ கதி ஆகாதபடி உன் அடி பாடினால் பிறவி தொலையும்அடியில் அணிந்த கிண்கிணியைப் பாடினால் நாத அனுபவ நலம் விளையும். புனித கடப்ப மாலையைப் பாடினால் சிவ போக அனுபவம் சித்திக்கும். வேலைப் பாடினால் ஆறுதல் விளையும். இப்படியே அடியேன் தமிழில் பாடி இன்புறுமாறு உனது அருள் ஞான திருவாக்கால் ஒரு மொழி உபதேசம் செய்தருள். ஞான நீறு தருவோனே, பெருமாளே ஒர் சொல் அருள்வாயே என்று வீழ்ந்து வணங்கி விண்ணப்பித்த படி

விளக்கக் குறிப்புகள்

1. வண் புகழ் பாரி, காரி என்றிசை வாது கூறி....
பாரி, காரி இருவரும் கடை ஏழு வள்ளல்களில் இருவர் ஆவர்.
கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினுங் கொடுப்பார் இலை
    ...சுந்தரரர் தேவாரம்

2. மஞ்சரி = பாக்களின் கொத்து , மஞ்சரிப்பா.

3. பஞ்சவன் = பாண்டியன்.
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்டபோதினும் அமையாதே...
-----திருப்புகழ், திடமிலிசற்

4. வந்தியர் = அரச சபையில் அரசனுடைய புகழ் கூறுவோர்.