F

படிப்போர்

Sunday, 30 September 2012

113. திருஎழுகூற்றிருக்கை முன்னுரை

“

திருஎழுகூற்றிருக்கை
முன்னுரை

எழு கூற்றிருக்கை என்பது பிரபந்த வகைகளில் ஒன்றாகும்.  இவ்வகை கவிகள் அநேகமாக இறைவனையும், இறை அருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப் படுவதால் ‘திரு’ என்ற அடை மொழி சேர்த்து திருஎழு கூற்றிருக்கை என்று சொல்வது மரபாயிற்று. கூற்று என்றால் ( பொருளை) கூறும் சொற்கள் என்பதாகும்.

இந்த இலக்கண வகையில் பாடுவது மிகக் கடினம். இதற்கு சொல்வளத்துடன், புலமைத்திறமையும் அதற்க்கும் மேலாக இறைவனின் பரிபூர்ண கடாக்ஷ்மும் இருந்தால்தான் இப்படிபட்ட கவிதை அமைக்கமுடியும். அவ்வகையில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிலரே திருஎழு கூற்றிருக்கை பாடியிருக்கிறார்கள். தமிழில் மட்டுமன்றி சம்ஸ்கிருத்த்திலும் இவ்வகை இலக்கியங்கள் இருக்கின்றன. அஷ்ட நாக பந்தம், ரத பந்தம், முரச பந்தம், பதும பந்தம் போன்றவை பிரபலம். தமிழில் இருக்கும் திருஎழு கூற்றிருக்கை கவிதைகள் ரத பந்தப்படுத்தி எழுதுவதுதான் மராபியிருக்கிறது. இப்படி அருணகிரிநாதர், திருஞான சம்மந்தர், திருமங்கை ஆழ்வார், நக்கீரர், வண்ணசரபம் தண்டபாணி ஸ்வாமிகலள் அமைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதன் கடினம் நமக்கு புரியும். பந்தம் என்றால் அடைத்தல், பொருத்துதல், கட்டுதல் என பொருள். ரத பந்தம் என்றால் அமைக்கும் கவிதை ஒரு ரத அமைப்பில் இருக்க வேண்டும். ஒரு ரதம் அல்லது தேர் எப்படி மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் பின்னர் அடியில் குறுகியும் இருக்கிறதோ அதே வடிவில் கவிதையும் ஆரம்பத்தில் குறுகியும் பின்னர் விரிந்து மறுபடியும் குறுகியும் அமையும். எழு கூற்றிருக்கை பிரபந்தத்தில் ஒன்று முதல் ஏழு வரை எண்களைக் கூட்டியும், குறைந்தும் வருமாரு  வைத்துப் பாட வேண்டும். தேருக்கு மேற்பாகம், கீழ்ப்பாகம் இருப்பது போல் இந்த கவிதையிலும் ஒவ்வொரு பாகத்திலும் ஏழு அடுக்குகள் அமைய வேண்டும். இதனில் வரும் சொற்கள் தமது சப்த ஆற்றாலாலும், பொருள் ஆற்றலாலும் மேற்சொன்ன எண்களை குறிக்குமாறு தொகுக்கப் படவேண்டும். அப்படி தொகுக்கப்படும் போது அதனின் பொருளும் சிறக்க வேண்டும். இதில்தான் கவியின் சாமர்த்தியம் தெரிய வருகிறது. தமிழ் இலக்கணத்தில் இருக்கும் ஆசுகவி, மதுர கவி, வித்தார கவி சித்திர கவி வகைகளில் இது சித்ர கவி வகைச் சேர்ந்ததாகும். இவ்வகை கவிகள் தமிழ் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அணிகலங்கள் ஆகும். சமீப காலத்தில் வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமிகள் 8, 9, 10 கூற்றிருக்கை என ஆதித்தன், விநாயகன், சிவன், அம்பிகை, விஷ்ணு, கந்தன் என அறுவகைச் சமயத்திருக்கும் அமைத்திருக்கிறார் என்பது  வியப்பதற்குறியதாகும்.

திருஞான சம்ப்ந்த மூர்த்தி நாயனார் பாடிவந்த தேவாரங்கள் அனைத்தையும் அவ்வப்போது பாராயணம் செய்து வந்த அவரது தந்தையார் சிவபாதஹ்ருதயர், அவை நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டு வர நித்ய பாராயணம் செய்வது கடினமாகிக் கொண்டு வந்தன. சம்பந்தரிடம் அவரது தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்படியும் ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நூலாகவும் இருக்கும்படியும் மிகமிகச் சக்தியுள்ளதான ஒரு சிவஸ்தோத்திரத்தை அருளிச் செய்யும் படி வேண்டினார். அதன்படி சம்பந்தரும் திருவெழுக் கூற்றிருக்கையை இயற்றி அருளினார். அதைப் போலவே அருணகிரிநாதர் அருளிய இந்நூலும் அவரது இதர நூல்கள் அனைத்தையும் பாராயணம் செய்த பலனைக் கொடுக்கும் என்பர்.

திருஎழுகூற்றிருக்கையில் எண்கள் வரும் அமைப்பு இப்படி இருக்கும். மேற்பாகத்தில் முதல் கூற்றில் ஒன்று, பிறகு அடுத்த கூற்றில் ஒன்று இரண்டு, ஒன்று என்ற வகையில் கீழே கொடுத்துள்ளவாறு அமையும்.

1
121
12321
1234321
123454321
12345654321
1234567654321

கீழ் பாகம் இதேமாதிரி மாறி அமையும்.

ஒவ்வொரு கூறுக்கும் இரண்டிரண்டு அறைகள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தேர் போன்ற அமைப்பு. மேலும் கீழுமாய் அமைகின்றன. உச்சியிலிருந்து நடுவுக்கு இறங்குமுகம் அடியிலிருந்து நடுவுக்கு ஏறுமுகம். ( கூறு - பகுதி, அறைகள் - சதுரகட்டங்கள் )

மேற்பகுதியை  நோக்கினால் அதில் வரும் எண்கள் ரதத்தைச் சுற்றி சுழந்து நின்று தொங்கும் சுரங்களைப் போலத் தொய்ந்து காட்சியளிக்கின்றது அல்லவா!

கணிதம் தெரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள், இது 1, 112,  1112, 11112, 111112, 1111112, 11111112 என்றல்லவா இருக்கிறது என்று. அதற்கும் மேலாக ஒவ்வொரு கூற்றின் கூட்டுத்தொகை எண்களான 1, 4, 9, 16, 25, 36, 49  என்பது 12, 22, 32, 42, 52, 62, 72 ஆக அமைந்திருப்பது ஏதோ ஒரு வர்ணஜாலம் மாதிரி இருக்கிறது அல்லவா!

மேற்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. அதேபோல் கீழ்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. இவை இரண்டையும் கூட்டினால் 280. இந்த எண்ணை ஒற்றை எண்ணாக கொணர்ந்தால் வருவது 1. இதனால் திருஎழுகூற்றிருக்கைப் பாடல் ‘ஒன்று’ என்ற முழுமையையும், ‘ஏகத்’துக்கு பெருமைக்கொண்டது.

அருணகிரிநாதர் ஸ்வாமிமலை முருகன் மீது இத் திருஎழு கூற்றிருக்கை
அமைத்திருக்கிறார். இதனை சலவைக்கல்லில் எழுதி ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் முருகன் திருவருட் சங்கத்தினர் பதித்துள்ளார்கள். தேர்வடிவில் இருக்கும்  இதனை அனைவரும் பார்த்து வரவேண்டும். அதனின் படத்தை இங்கு இட்டுள்ளோம்.

ஸ்ரீ அருணகிரி ஸ்வாமிகள் காலத்துக்கு முந்தி அருளப்பெற்ற திருஎழுகூற்றிருக்கைகளில் எல்லாம் மேற்கட்டமாகிய முதற் கட்டத்தில் ஒன்று என்ற எண் அமையப் பாட பெற்ற அமைப்பு இல்லை. ஆனால் இவரோ மேற்பகுதி எண் கட்டங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் ஒன்று எண் அமய வைத்து பாடி இருப்பதுதான் அருணகிரிநாதரின் புலமைத்திறன், அவரை முருகன் ஆட்கொண்டு கவிதைப்பாட வைத்ததின் வெளிப்பாடு.

பாடலில் ஸப்த ஜாலத்தால் எண்களை குறிப்பிடும் சொற்கள்:

ஒன்று –           ஒர் உருவு, ஒருவகை, ஒன்றாய், ஒன்றி, ஒருவன், ஓரா, ஒருசிறை, ஒருநொடி, ஒருகை,  ஒருநொடி, ஒருகுரு, ஒருநாள், ஒருவேல்
இரண்டு-         இருமரபு, இருவரில், இருபிறப்பாளர், இருமையின், இருதாள், இருசிறை, இருசெவி, இருவகை, இருவினை, இருமுலை, இருபிளவு
மூன்று-           மூவாது, முன்நாள், மூவர், முந்நீர், மும்மதம், மும்மதன், முக்கண், முத்தமிழ், முத்தலை,
நான்ங்கு –       நான்முகன், நானிலம், நால்வகை, நால்வாய், நன்மறை, நாற்கவி, நான்மறை
ஐந்து–             அஞ்ச, ஐந்துகை, ஐந்தெழுத்து, ஐம்புலன், ஐந்தரு,
ஆறு –             அறுகுசூடி, அறுமுகன், அறுமீன்
ஏழு–                எழுதரும்

அருணகிரிநாதரின் பாடலின் பொருளை பாடலுடன் படித்து இன்புறவும். அடுத்த இடுக்கையில் இதன் பொருள் இடப்படும்.

” tag:

112.மகரகேதனத்தன

“

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
      மதுர நாணி யிட்டு                           நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
      வலிய சாய கக்கண்                                மடமாதர்
இகழ வாச முற்ற தகையெ லாம்வெ ளுத்து
       இளமை போயொ ளித்து                     விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
      னினிய தாள ளிப்ப                            தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
      அதிர வேந டத்து                                  மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
      அடைய வாழ்வ ளிக்கு                  மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
      விழைசு வாமி வெற்பி                   லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
      வினவ வோது வித்த                           பெருமாளே
-       112 திருவேரகம்

பதம் பிரித்து உரை

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து
மதுர நாண் இட்டு நெறி சேர்வார்

மகர கேதனத்தன் = மீன் கொடியை உடையவனும் உருவு இலான் = உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் எடுத்து = கையில் எடுத்து. மதுர = இனிமை தரும் (கரும்பு வில்லில்). நாண் இட்டு = நாணை இட்டு. நெறி சேர்வார் = நல்ல நெறியில் இருப்பவர்களும்.

மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
வலிய சாயக கண் மட மாதர்

மலையவே = மயங்கித் திகைக்கும்படி வளைத்த சிலையின் ஊடு = வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த = மறைத்து வைத்த வலிய = வலிய. சாயகக் கண் = அம்பாகிய கண்ணை உடைய மட மாதர் = அழகிய (விலை) மாதர்கள்.

இகழ வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
இளமை போய் ஒளித்து விடு மாறு

இகழ = இகழும்படி. வாசம் உற்ற = (ஒரு காலத்தில்) மணம் இருந்த. தலை எலாம் வெளுத்து = தலை முழுமையும் வெளுத்து. இளமை போய் = இளமை என்பது கடந்து போய். ஒளித்து விடுமாறு = ஒளித்து விடும்படி.

இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே

இடை விடாதே = இடை விடாமல். எடுத்த பிறவி = நான் எடுத்த பிறவி என்பதின் வேர் அறுத்து = வேரை அறுத்து இனிய தாள் = உனது இனிமையான திருவடுடியை அளிப்பது ஒரு நாளே = நீ தந்து அருளுவதும் ஒரு நாள் கிட்டுமோ?

அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட
அதிரவே நடத்தும் மயில் வீரா

அகிலம் ஏழும் = ஏழு உலகங்கள் மீதும். எட்டு வரையின் மீது = அட்ட கிரிகளின் மீதும். முட்ட = முட்டும்படியாக. அதிரவே = அதிரும்படியாக. நடத்தும் மயில் வீரா = செலுத்துகின்ற மயில் வீரனே.

அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு
அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே

அசுரர் சேனை கெட்டு முறிய = அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய. வானவர்க்கு = தேவர்களுக்கு. அடைய வாழ்வு அளிக்கும் = முழு வாழ்வை அளித்த. இளையோனே = இளையவனே.

மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் உறைவோனே

மிக நிலா எறித்த = மிகவும் நிலவொளியை வீசுகின்ற. அமுத வேணி = அமுத சடையராகிய சிவபெருமான். நிற்க = நின்று கேட்க விழை = விரும்புகின்ற சுவாமி வெற்பில் உறைவோனே = சுவாமி மலையில் வீற்றிருந்து (உபதேசித்தவனே).

விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க
வினவ ஓதுவித்த பெருமாளே.

விரைய = விரைவில் ஞான வித்தை = ஞான மூலப் பொருளை அருள் செய் = (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தாதை = தந்தையாகிய சிவபெருமான் கற்க = அறிய வேண்டிக் கற்க வினவ = கேட்க. ஓதுவித்த = அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் தன் கரும்பு வில்லில் நாண் இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி, வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த அம்பு போன்ற கண்களை உடைய மாதர்கள் இகழும்படி, தலை முழுதும் வெளுத்து, இளமை கடந்து போய் மறைந்து விடும்படி, முடிவில்லாமல் நான் எடுத்த பிறவியின் வேரை அறுத்து, உனது, இனிய திருவடியைத் தருவதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?

ஏழு உலகங்களின் மீதும், எட்டு கிரிகளின் மீதும் முட்டும்படி அதிர, செலுத்துகின்ற மயில் வீரனே. அசுரர்களின் சேனைகள் கெட்டு அழியவும், தேவர்கள் வாழவும் அருளிய இளையோனே. சடைப் பிரானாகிய சிவபெருமான் நின்று கேட்க, சுவாமி மலையில் வீற்றிருந்து உபதேசம் செய்தவனே. பிரணவப் பொருளை அடியார்களுக்கு அருள் செய்கின்ற சிவபெருமான் அறிய வேண்டிக் கேட்க அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே. உன் திருவடியை எனக்கு அளிப்பது ஒரு நாள் ஆகுமோ?
ஒப்புக
1.    அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட...
 மேரு அடியிட எண்டிசை தூள்பட்ட அத்தூளின் வாரி
  திடர்ப்பட்டதே                      ...                                                                 கந்தர் அலங்காரம்

2. மிக நிலா எறிந்த அமுத வேணி...
     வெண் நிலா மிகுவிரி சடை அரவொடும்.                              ..                  சம்பந்தர் தேவாரம்.

விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க...
சிவபெருமான் ஒரு க்ஷணநேரம் தியானத்தில் இருக்க, முருகவேள் அவருக்கு பிரணவப் பொருளைத் தணிகையில் உபதேசித்தார் என்றும், அதனால் தணிகைக்கு க்ஷணிகாசலம் எனப் பெயர் வந்தது.                                                                                         தணிகைப் புராணம்

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன    ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்  ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்

விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

பூர்ணேந்து வாந்தாம்ருதை- பூர்ண சந்திர அம்ருத தரை வர்ஷிப்பவன் சிவன்

ஏழு உலகங்கள்
ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம் என்பன.

எட்டு மலை
இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்

Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,    
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan    

111.பாதிமதி

“

பாதி மதிநதி போது மணிசடை
           நாத ரருளிய                            குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
          பாதம் வருடிய                      மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
           மாய னரிதிரு                      மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
          காலில் வழிபட                  அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
          காளும் வகையுறு                 சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
         சூழ வரவரு                     மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
           வாமி மலைதனி            லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட                              
          வேலை விடவல                பெருமாளே.
-      111 திருவேரகம்

பதம் பிரித்தல்

பாதி மதி நதி போதும் அணி சடை
நாதர் அருளிய குமரேசா

பாதி மதி = பிறைச் சந்திரனையும். நதி = கங்கை யையும். போதும் = மலர்களையும். அணி சடை நாதர் = அணிந்துள்ள சடையை உடைய சிவ பெருமான். அருளிய குமரேசா = அருளிய குமரோனே.

பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா
பாகு = சர்க்கரையையும் கனி=பழத்தையும் போன்ற மொழி = மொழிகளை உடைய மாது குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதம் வருடிய மணவாளா = பாதங்களைப் பிடித்துத் தடவும் மணவாளா = கணவனே.

காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே

காதும் = பிரிவு செய்யப்பட்ட. ஓரு விழி = ஒரு விழியை. காகம் உற அருள் = (காகாசுரன் என்னும்) காகம் அடையும் படி அருளிய. மாயன் = திருமால் (இராமன்). அரி திரு மருகோனே = அரி, இலக்குமி இவர்களுடைய மருகனே

காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழி பட அருள்வாயே

காலன் = யமன். எனை அணுகாமல் = என்னை அணுகாதபடி உனது இரு காலில் = உனது இரண்டு திருவடிகளில். வழி பட அருள்வாயே = வழி படும் புத்தியைத் தந்து அருள்வாயாக.

ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகை உறு சிறை மீளா

ஆதி அயனொடு = ஆதிப் பிரமனோடு. தேவர் சுரர் உலகு = தேவர் தேவலோகத்தை ஆளும் வகை உறு = ஆளும்படி. சிறை மீளா = (அவர்களைச்) சிறையினின்றும் மீட்டு.

ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே

ஆடும் மயினில் ஏறி = ஆடுகின்ற மயில் மீது ஏறி அமரர்கள் சூழ = தேவர்கள் சூழ்ந்து வர வரும் இளையோனே = வந்த இளையவனே

சூதம் மிக வளர் சோலை மருவு
சுவாமி மலை தனில் உறைவோனே

சூதம் மிக வளர் = மா மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ள சோலை மருவு = சோலைகள் பொருந்தியுள்ள சுவாமி மலை தனில் உறைவோனே = திருவேரகத்தில் வீற்றிருப்பவனே.

சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வ(ல்)ல பெருமாளே.

சூரன் உடல் அற = சூரனுடைய உடல் துணி பட. வாரி = கடல். சுவறிட = வற்றிப் போக வேலை விட வல்ல பெருமாளே = வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

சுருக்க உரை

பிறை, கங்கை, பூக்கள் இவைகளை அணியும் சிவபெருமான் அருளிய குமரனே. சர்க்கரை, கனி ஆகியவற்றைப் போல் இனிக்கும் மொழியை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளனே. பிரிவு செய்யப் பட்ட ஒரு கண்ணைக் காகாசுரன் அடையும்படி அருளிய இராமனின் மருகனே. யமன் என்னை அணுகாமல்

இருக்கும்படி உன் இரண்டு திருவடிகளில் நான் வழிபடும் புத்தியைத் தருவாயாக.

பிரமனும் தேவர்களும் விண்ணுலகத்தை ஆளும் படி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவனே. மா மரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருப்பவனே. சூரனுடைய உடல் துணி படவும், கடல் வற்றிப் போகவும் வேலைச் செலுத்திய பெருமாளே. யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலில் வழிபடும்படி அருள் புரிவாயாக.

காதும் ஒரு விழி காகம் உற அருள்...

சீதையின் உடலைத் தன் உகிரினால் கொத்திய காகத்தின் மீது புல்லையே படை ஆக்கி இராமர் செலுத்தினார். அப்படைக்கு அஞ்சி காகம் சரண் அடைய, அவர் அதற்கு உயிர்ப் பிச்சை அளித்து, இரு கண்ணிற்கும் ஒரு கண்மணியே பொருந்த அருளினார். காகாசுரனாக வந்தவன் இந்திர குமாரன் சயந்தன் என்பார்.

ஒப்புக
பாகு கனி மொழி மாது குற மகள் –  தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி

யமன் என்னை அணுகாமல் அருள்வாயே