F

படிப்போர்

Showing posts with label வேல். Show all posts
Showing posts with label வேல். Show all posts

Friday, 30 December 2016

300.அரி அயன் அறியா

“
300
வடுகூர்

மனமகிழ் குமரா எனவுள திருதாள்
மலரடி தொழுமா றருள்வாயே

தனதன தனனா தனதன தனனா
                         தனதன தனனா                    தனதான
 
அரியய னறியா தவரெரி புரமூ
    ணதுபுக நகையே                        வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
    றழலையு மழுநேர்                       பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
    கமும்விழ விழியே                       வியநாதர்
மனமகிழ் குமரா எனவுள திருதாள்
    மலரடி தொழுமா                     றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
      அவனியை வலமாய்               வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
    அயில்தனை விசையாய்           விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
    மருவியொர் குறமா                தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
    வருதவ முநிவோர்                    பெருமாளே

பதம் பிரித்தல்

அரி அயன் அறியாதவர் எரி புர
மூணு அது புக நகை ஏவிய நாதர்

அரி - திருமாலாலும் அயன் - பிரமனாலும் அறியாதவர் - காண முடியாதவர் எரி புரம் மூண் அது புக - நெருப்பு மூன்று புரங்களிலும் புகும்படி நகை ஏவிய - புன்முறுவல் புரிந்த    நாதர் - தலைவர்

அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி
சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்

அவிர் சடை மிசை - விளங்கும் சடையின் மீது ஓர் வனிதையர் - ஒரு மாது கங்கையைக் கொண்டவர் பதி - தலைவர் சீறும் அழலையும் - காய்ந்த வந்த நெருப்பையும் மழு - மழுவாயுதத்தையும் நேர் பிடி நாதர் - நேராகக் கையில் ஏந்தியுள்ள தலைவர்

வரை மகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும்
விழ விழி ஏவிய நாதர்

வரை மகள் - மலைமகள் (பார்வதியை) ஒரு கூறு உடையவர் - ஒரு பாகத்தில் உடையவர் மதன் ஆகமும் - மன்மதனுடைய உடலும் விழ - எரி பட்டு விழ விழி ஏவிய - கண்ணினின்றும் தீயைச் செலுத்திய நாதர் - தலைவர்

மனம் மகிழ் குமரா என உனது இரு தாள்
மலரடி தொழுமாறு அருள்வாயே

மனம் மகிழ் குமரா என - மனம் மகிழும் குமரனே என்று உனது இரு தாள் மலரடி - உன்னுடைய இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை தொழுமாறு அருள்வாயே - வணங்கும்படி அருள் புரிவாயாக

அருவரை இரு கூறிட ஒரு மயில் மேல்
அவனியை வலமாய் வருவோனே

அரு வரை - அருமையான மலை (கிரௌவஞ்சம்) இரு கூறிட - இரண்டு பாகமாகப் பிளக்க ஒரு - ஒப்பற்ற மயில் மேல் - மயில் மேல் ஏறி அவனியை - பூமியை வலமாய் வருவோனே - வலமாக வந்தவனே

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல்
அயில் தனை விசையாய் விடுவோனே

அமரர்கள் - தேவர்கள் இகல் நீடு அசுரர்கள் - நீண்ட கால பகைமை கொண்ட அசுரர்களின் சிரம் மேல் - தலைகளின் மீது அயில் தனை - வேலாயுதத்தை விசையாய் விடுவோனே - வேகத்தோடு செலுத்தியவனே

வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே
மருவி ஒர் குற மாது அணை வேடா

வரிசையொடு - நல்ல முறையில் ஒரு - ஒப்பற்ற மா தினை தரு வனமே - சிறந்த தினை வளரும் காட்டுக்கு மருவி - சென்று ஓர் -  ஒப்பற்ற குற மாது  - குறப் பெண்ணாகிய வள்ளியை அணை வேடா - அணைக்கும் வேடனே

மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர்
வரு தவ முநிவோர் பெருமாளே

மலைகளில் மகிழ்வாய் - மலையிடங்களில் விருப்பம் கொண்டவனே மருவி - மனம் பொருந்தி நல் - நல்ல வடுகூர் வரு - வடுகூர் இன்னும் தலத்தில் வருகின்ற தவ முநிவர் பெருமாளே - தவ முனிவர்களின் பெருமாளே

சுருக்க உரை

திருமாலும், பிரமனும் காண முடியாதவர் விளங்கும் சடை மீது கங்கையைக் கொண்டவர், முப்புரங்களும் வெந்து அழியும் படியாக புன்முறுவல் புரிந்த தலைவர்,
 மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர் மன்மதனின் உடலைக் கண்களினின்றும் நெருப்பைச் செலுத்தி அழித்தவர் இத்தகைய தலைவராகிய சிவபெருமான் மனம் மகிழும் குமரனே இவ்வாறு கூறி உன் மலர்ப் பதங்களைத் தொழும்படி அருள் புரிவாயாக

அருமையான கிரௌவஞ்ச கிரியைப் பிளவுபடும்படி செய்து மயிலின் மேல் உலகை வலம் வந்தவனே அசுரர்கள் தலைகள் மீது வேலாயுதத்தை எய்தியவனே சிறந்த தினை வளரும் காட்டுக்குச் சென்று வள்ளியை அணைந்த வேடனே மலை இடங்களை விரும்புவோனே வடுகூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே உன் மலரடி தொழுமாறு அருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்

1 சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்
புரத்தைவிழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்துகிலைப் பரமாகத் ----                        திருப்புகழ், குலைத்துமயிர்

2 வரைமகள் ஒரு கூறு
வெற்ப ளித்fத தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா ---                        திருப்புகழ், பொற்பதத்தி

3 மதனாகமும்விழ விழியேவிய நாதர்
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் குருநாதா ----                             திருப்புகழ், கூர்வேல்பழித்த

4 அவனியை வலமாய் வருவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா
                                                     —        திருப்புகழ்,  தொடத்துளக்கிகள்  

” tag:

Thursday, 29 December 2016

294.ஆனைமுகவற்கு

“
294
மதுரை

                 தானதன தத்த தானதன தத்த
                    தானதன தத்த                  தனதான
 
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
       ஆறுமுக வித்த                      கமரேசா
 ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
     ஆரணமு ரைத்த                     குருநாதா
 தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த
     சால்சதுர்மி குத்த                  திறல்வீரா
 தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
     வாழ்வொடுநி றக்க              அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
     யாவரொரு வர்க்கு                   மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
     மாமயில்ந டத்து                 முருகோனே
 தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
     சேரமரு வுற்ற                   திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
     வேல்கொடுத ணித்த            பெருமாளே
 
பதம் பிரித்தல்

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த
ஆறு முக வித்தக அமரேசா
ஆனை முகவற்கு - யானை முகம் கொண்ட விநாகருக்கு நேர் இளைய - நேராகப் பின் தோன்றிய இளையவரான பத்த - அன்பனே வித்தக - ஞானியே அமரேசா - தேவர்களுக்கு அரசாம் தலைவனே

ஆதி அயனுக்கும் வேத முதல்வற்கும்
ஆரணம் உரைத்த குரு நாதா
ஆதி அரனுக்கும் - முதல்வராகிய சிவபெருமானுக்கும் வேத முதல்வர் - வேதத் தலைவனான பிரமனுக்கும் ஆரணம் - வேதப் பொருளை உரைத்த- உபதேசித்தருளிய குரு நாதா - குரு நாதரே

தானவர் குலத்தை வாள் கொடு துணித்த
சால் சதுர் மிகுத்த திறல் வீரா
தானவர் குலத்தை - அசுரர்கள் குலத்தை வாள் கொடு துணித்த - வாள் கொண்டு வெட்டி அழித்த சதுர்சால் மிகுத்த - சாமர்த்தியம் நிறைந்த திறல் வீரா - வல்லமை வாய்ந்த வீரனே
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில்
வாழ்வொடு சிறக்க அருள்வாயே
தாள் இணைகள் உற்று - உனது இரண்டு திருவடிகளையும் தியானித்து மேவிய பதத்தில் - பொருந்துதலைக் கொண்ட பதவியில் வாழ்வொடு சிறக்க - நல்ல வாழ்வுடன் நான் விளங்கும்படி அருள்வாயே - அருள் புரிவாயாக

வான் எழு புவிக்கு(ம்) மால் அயனுக்கும்
யாவர் ஒருவர்க்கும் அறியாத

வான் எழு புவிக்கும் - விண்ணுலகம் முதலான எழு வகைப் பட்ட உலகத்தினர்க்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத - வேறு எவர்க்கும் அறிய முடியாத
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க
மா மயில் நடத்தும் முருகோனே

மா மதுரை சொக்கர் - சிறந்த மதுரை நகரில் வாழும் சொக்கேசரும் மாது உமை களிக்க - மாதாகிய பார்வதியும் மகிழ்வுறும்படி மா மயில் நடத்தும் முருகேனே - அழகிய மயிலைச் செலுத்தி நடத்தும் முருகனே
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி
சேர மருவு உற்ற திரள் தோளா

தேன் எழு புனத்தில் - தேன் உண்டாகும் வள்ளி மலைக் காட்டில் மான் விழிக் குறத்தி - மான் போன்ற கண்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியை சேர மருவு உற்ற - உன்னைச் சேரும்படி அவளிடம் அணுகிய திரள் தோளா - திரண்ட தோளை உடையவனே 
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல் கொடு தணித்த பெருமாளே
தேவர்கள் கருத்தில் - தேவர்களுடைய மனதில் மேவிய பயத்தை - (சூரனால் ஏற்பட்ட) பயத்தை வேல் கொடு தனித்த பெருமாளே - வேலாயுதத்தால் நீக்கிய பெருமாளே

சுருக்க உரை

விநாயகருக்கு இளையவரே, சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் வேதப் பொருளை உபதேசித்த குரு நாதா, அசுரர் குலத்தை அழித்த வீரா, உன் திருவடிகளைத் தியானித்து, நான் நல் வாழ்வுடன் விளங்க அருள் புரிவாய்.

எவராலும் அறிய ஒண்ணாத மதுரை வாழ் சொக்கரும், உமையும் மகிழும்படி அழகிய மயிலைச் செலுத்தும் முருகனே வள்ளியைத் தழுவும் வலிய தோள்களை உடையவனே தேவர்கள் பயத்தை வேல் கொண்டு நீக்கிய பொருமாளே

விளக்கக் குறிப்புகள்

1 வான் எழு புவிக்கு
மேலுலகம் ஏழு கீழுலகம் ஏழு
2 ஆதியரனுக்கும் வேத முதல்வற்கும்
ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த முனிநாண
ஓரெத்தி லாறெழுத்தை யோது வித்த பெருமாளே --- திருப்புகழ்,. வேதவெற்பி
ஆதி கற்பகவிநாய கற்குபிற
கானபொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய றிந்தகோவே 
                                                            —திருப்புகழ்,வாதபித்தமொடு