F

படிப்போர்

Showing posts with label கிரியை. Show all posts

Monday, 3 December 2012

175.புவனத் தொரு

           தனனத் தனனத் தனனத் தனனத்
           தனனத் தனனத் தனனத் தனனத்
           தனனத தனனத் தனனத் தனனத்   தனதான

புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
   கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
   புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித்         திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
   கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
   புரள்வித் துவருத் திமணற் சொரிவித்      தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
   தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
   தழுவப் பணிமுட் களில்கட் டியிசித்    திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
   தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
   தளையிட் டுவருத் தும்யமப் ரகரத்      துயர்தீராய் 
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
   ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
   படரிச் சையொழித் ததவச் சரியைக்   க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
   பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
   பரவப் படிசெய்ப் பதியிற் பரமக்           குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
   கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
   த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்      குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
   புதனொப் பிலியுற் பவபத் மதடத்                      
   த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்         பெருமாளே
-175 சிராப்பள்ளி

பதம் பிரித்து உரை

புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர
கருவில் பவம் உற்று விதி படியில்
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி

புவனத்து = இப்பூமியில் ஒரு பொன் தொடி = ஒரு அழகிய பெண்ணின் சிற்று உதர =
சிறிய வயிற்றில் கருவில் பவம் உற்று = கருவில் தோற்றம் உற்று விதிப் படியில் = விதியில் குறித்தபடி புணர் = கூடுகின்ற.
துக்க சுக = துக்கத்தையும், சுகத்தையும்.
பயில் உற்று = அனுபவித்து மரித்திடில் = இறந்த பின் ஆவி = உயிரை.

புரி அட்டகம் இட்டு அது  கட்டி இறுக்கி
அடி குத்து என அச்சம் விளைத்து அலற
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனல் ஊடே

புரி அட்டகம் இட்டு = சூக்கும சரீரத்தில் புகுத்தி அது கட்டி = அந்த உடலைக் கட்டி இறுக்கி = (மேலும்) அழுந்தக் கட்டி அடி குத்து என = அடி, குத்து என்றெல்லாம் அச்சம் விளைத்து = பயத்தை உண்டு செய்து அலறப் புரள்வித்து = அலறும்படி புரட்டி வருத்தி = துன்பப்படுத்தி மணல் சொரிவித்து = (வாயில்) மணலைச் சொரிவித்து  
அனலூடே = நெருப்பினுள்.

தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து
அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்

தவனப்பட விட்டு = சூடேறும்படியாக விட்டு.
உயிர் = அந்த உயிரை செக்கில் அரைத்து = செக்கில் இட்டு அரைத்து அணி= வரிசையாக  உள்ள பற்கள் உதிர்த்து = பற்களை உதிரும் படிச் செய்து எரி செப்பு உருவை = எரிகி ன்ற செம்பாலாகிய் உருவம் ஒன்றைத் தழுவும் படி செய்து முட்களில் கட்டி = முட்களில் கட்டி இசித்திட = இழுத்து வாய் கண் = வாயும் கண்ணும்.

சலனப் பட எற்றி இறைச்சி அறுத்து
அயில்வித்து முரித்து நெரித்து உளைய
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய்

சலனப் பட = கலங்கி அசையும்படி எற்றி = மோதி இறைச்சி அறுத்து = மாமிசத்தை அறுத்து அயில்வித்து = உண்ணும்படி செய்து முரித்து = (எலும்பை) ஒடித்து நெரித்து = நொறுக்கி  உளைய = வருந்தும்படி தளை இட்டு = விலங்கு பூட்டி வருத்தும் = துன்பப்படுத்தும் யம ப்ரகர = யம தண்டனை என்னும் துயர் தீராய் = துயரத்தை ஒழித்து அருளுக.

பவனத்தை ஒடுக்கும் மன கவலை
ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில்
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர்

பவனத்தை ஒடுக்கும் = பிராண வாயுவை ஒடுக்கும் மனக் கவலை = மனக் கவலை யாகிய ப்ரமை அற்று = மயக்கத்தை விலக்கி ஐ வகைப் புலனில் = ஐந்து வகையான புலன்களில் கடிதில் படர் = வேகமாகச் செல்லுகின்ற இச்சை ஒழித்த = ஆசையை ஒழித்த தவ = தவம் வாய்ந்த. சரியை,
க்ரியை யோகர் = சரியையாளர்கள், கிரியையாளர்கள், யோகிகள்.

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில்
பரிசுத்தவர் விரத்தர் கருத்து தனில்
பரவப்படு செய்ப்பதியில் பரம குரு நாதா

பரிபக்குவர் = மல பரிபாகம் பெற்றவர் நிட்டை = தியானம் நிவர்த்தியினில் பரிசுத்தர் = துறவு கொண்ட பரிசுத்தர்கள் விரத்தர் = உலகப் பற்று விட்டவர்கள் (ஆகிய பெரியோர்கள்). கருத்து தனில் = தத்தம் கருத்தினில் வைத்து பரவப்படு = போற்றப்படுகின்ற குருநாதரே செய்ப்பதியில் = வயலூரில் பரமக் குருநாதா = பரமனுக்கும் குரு நாதரே.

சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்
க(ண்)ணன் நக்கன் மழு கரன் உக்ர ரண
த்ரி புரத்தை எரித்து அருள் சிற் குணன் நிற் குணன் ஆதி

சிவன் உத்தமன் = சிவன், த்தமன் நித்த உருத்திரன் = அழிவில்லாத உருத்திரன் முக்
க(ண்)ணன் = முக்கண்ணன் நக்கன் = திகம்பரன் மழுக் கரன் = மழு ஏந்திய கையினன் உக்ர ரண = உக்கிரமான போர்க் களத்தில் த்ரி புரத்தை = மூன்று புரங்க ளையும் எரித்து அருள் = எரித்து அருளிய சிற் குணன் = ஞான குணத்தை உடையவன் நிற் குணன் = (முக்)குணங்கள் இல்லாதவன் ஆதி = மூலப் பொருள்.

செக வித்தன் நிச பொருள் சிற் பரன்
அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட
த்ரிசிர புர வெற்பு உறை சற் குமர பெருமாளே.

செக வித்தன் = உலகத்துக்கு மூலப் பொரு ளாக இருப்பவன் நிசப் பொருள் = உண்மைப் பொருளாக இருப்பவன் சிற் பரன்= அறிவுக்கு எட்டாதவன்  அற்புதன்= அற்புதன்  ஒப்பிலி = உவமை இல்லாதவன் உற்பவ = (ஆகிய சிவ பெருமானிடத்தே) தோன்றியவனே பத்ம தட = தாமரைத் தடாகங்கள் உள்ள த்ரிசிரப் புர = திரிசிராப் பள்ளி வெற்பு உறை = மலையில் வீற்றிருக்கும்  சற் குமரப் பெருமாளே = நல்ல குமரப் பெருமாளே.

சுருக்க உரை

உலகில் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாய்த் தோன்றி, விதியின் படி கூடும் துக்கங்களையும், சுகங்களையும் அனுபவித்து, இறந்த பின், உயிரை சூக்கும சரீரத்தில் புகுத்தி, இறுக்கக் கட்டி, பல துன்பங்களுக்கு உட்படுத்தி, வருத்தி, யம தண்டனை என்னும் துயரத்தை நான் அடையாமல் ஒழித்தருளுக.

பிராண வாயுவை ஒடுக்கும் மயக்கத்தை விலக்கி, புலன்கள் வேகமாகச் செல்லும் ஆசையை ஒழித்த தவம் வாய்ந்த சரியை, கிரியை, யோகம் செய்பவர், மல பரி பாகம் பெற்றவர், ஞானிகள், தியானம் செய்பவர், துறவிகள் ஆகிய பெரியோர்கள் தங்கள் மனத்தில் வைத்துப் போற்றும் குரு நாதரே. வயலூரில் வீற்றிருக்கும் மேலான குருவே. சிவன், உருத்திரன், மூலப் பொருள், மழு ஏந்திய கையன், ஞான சீலன், ஆதி மூர்த்தி, உண்மைப் பொருள், அறிவிக்கு எட்டாதவன், ஒப்பிலி என்றெல்லாம் போற்றப்படும்  சிவ பெருமானிடத்தே தோன்றியவனே, திரிசிராப் பள்ளி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே,  நான் யம தண்டனைகளை அனுபவிக்காமல் காத்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

1புரி அட்டகம் இட்டு....
    ஐந்து பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற
    மூலப் பொருள்களுடன், மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று
    கரணங்களும் கூடியது புரியட்டக உடம்பு (சூக்கும உடல்).
ஆசை சேர் மனாதி தன்மாத் திரைபுரியட்ட கந்தான்).                    ..சிவஞான சூத்திரம்.

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னின் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே                                                ...திருமந்திரம் .

2. சரியைக் க்ரியையோகர்....
சரியையு டன்க்ரியை போற்றிய
பரம தம்பெறு வார்க்கருள் தரு கணன்.........................             .திருப்புகழ், அரிவையர் 

சரியை - சாலோகம் தரும். கிரியை - சாமீபம் தரும். யோகம் =-- சாரூபம்
தரும். ஞானம் - அறிவு மாத்திரையானே செய்யும் வழிபாடு. ஞானம்
சாயுச்யம் தரும். 

” tag:

Tuesday, 20 November 2012

154. சரியையா ளர்க்கும்

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
  சகலயோ கர்கட்டுமெட்                  டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
  டருபரா சத்தியிற்                         பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
  சுடர்வியா பித்தநற்                       பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
  சுகசொரூ பத்தையுற்             றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
  புருஷவீ ரத்துவிக்                       ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
  புகழையோ தற்கெனக்         கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
  கனிகள்பீ றிப்புசித்                       தமராடி
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
  கதிரகா மக்கிரிப்                     பெருமாளே

-    154 கதிர்காமம்

பதம் பிரித்து உரை

சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல்
சகல யோகர்க்கும் எட்ட அரிதாய

சரியையாளர்க்கும் = சரியை மார்க்கத்தில் இருப்பவர் களுக்கும் அக் கிரியையாளர்க்கும் = அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும் நல் சகல யோகர்க்கும் =நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்ட அரிதாய = எட்டுதற்கு முடியாததும்                 

சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய் பொருள்
தரு பரா சத்தியின் பரமான

சமய பேதத்தினுக்கு = சமய வேறுபாடுகளால் அணுக ஒணா = நெருங்க முடியாததுமான மெயப் பொருள் தரு = உண்மைப் பொருளைத் தர வல்ல பரமான = பராசத்தியினும் மேலான தானதும்.

துரிய மேல் அற்புத பரம ஞான தனி
சுடர் வியாபித்த நல் பதி நீடு

துரியம் = யோகியர் தன் மயமாய் நிற்பதும் மேல் அற்புத = மேம்பட்டதானதும் (ஆகி) பரம ஞான = பரம ஞான. தனிச் சுடர் = தனி ஒளி வியாபித்த = பரந்துள்ளதாய் நல் பதி = சிறந்த இடமாய் நீடு= நீடியதாய்

துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல்
சுக சொரூபத்தை உற்று அடைவேனோ

துகள்இல் = குற்றமில்லாத சாயுச்சியக் கதியை = இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை
ஈறு அற்ற = முடிவில்லாததும் சொல் = புகழப் படுவதுமான சுக சொரூபத்தை = பேரின்ப நிலையை உற்று அடைவேனோ = பொருந்தி அடைவேனோ?

புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்
புருஷ வீரத்து விக்ரம சூரன்

புரிசை சூழ் = மதில் சூழ்ந்துள்ள செய்ப்பதிக்கு = வயலூருக்கு உரிய = உரிய சாமர்த்ய = வல்லவனே
சத் புருஷ = உத்தமனே வீரத்து = வீரமும் விக்ரம
சூரன் = வலிமையும் கொண்ட சூரன்.

புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு
புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே

புரள = புரண்டு விழ வேல் தொட்ட = வேலைச் செலுத்திய கைக்குமரனே = திருக்கரத்தை உடைய குமரனே மேன்மை = மேன்மை ருந்திய  திருப்புகழ் = திருப்புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே = ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே.

கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை
கனிகள் பீறி புசித்து அமர் ஆடி

கரிய = கரு நிறமான ஊகத் திரள் = குரங்குகளின் கூட்டங்கள் பலவின் மீதில் = பலா மரத்தின் மீது இருந்து சுளைக் கனிகள் = சுளைப் பழங்களை  பீறிப் புசித்து = கீறிக் கிழித்து உண்டு அமர் ஆடி = சண்டை இட்டு.

கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
கதிர் காம கிரி பெருமாளே.

கதலி சூதத்தினில் = வாழை மரங்களிலும், மாமரங் களிலும் பயிலும் =நெருங்கி விளையாடும் ஈழத்தினில் = ஈழ நாட்டில் உள்ள கதிர் காமக் கிரிப் பெருமாளே கதிர்காம மலையில் வீfற்றிருக்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்

சரியையுடன் அக்கிரியை பேற்றிய....

சரியை என்பது இறைவனை வழிபடுவோர்கள் இறைவனைத் தொழுவது மட்டுமல்லாமல் அவனைத் தன்னுடைய எஜமானாகப் பாவித்து தான் அவனுக்கு அடிமை என்று எண்ணி அவனுக்கு தொண்டு செய்து வழிபட்டு முக்திக்கு வழித் தேடுவார்கள். இதை தாச மார்கம் என்பார்கள்.

இறைவனைத் தன் தகப்பனாக பாவித்து அவன் தாள் பணிந்து வழிபடு
வோர்கள் கிரியை வழி சேர்ந்தவர்கள். அவர்கள் செல்லும் மார்க்கம் ஸத்புத்திர மார்கம்.

இப்படி இல்லாமல் இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து அவனை துதித்து பிரார்த்திப்பது சக மார்கம். இறைவன் தன் உடலில் உள்ளான் என வணங்கி வழிபடும் முறை. இம் முறை யோகம் எனப்படும்.

தன்னையயே இறைவனாகப் பாவித்து ‘நான்’ என்ற அகந்தையை அழித்து வழிபடும் முறை ஞானம் என்று அழைக்கப்படும்.

இதனால் அடையப்படும் முக்தி முறையே சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த வழி முறைகள் ஏதோ தனித்தனியானது என்று எண்ணக்கூடாது. எல்லாமே ஒன்றில் ஒன்று இணந்து சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் ஆகி  பதினாறு படிகளாய் விரிவடையும்.

சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது.
சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி வாழும் பேறு பெறுவது.
சாரூபம் - ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது.
சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவைத நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்.

சமயக்குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசர் முறையே இந்த நான்கு வித முக்தியை அடைந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

ஒப்புக:

உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய

ஓங்கார ரூபமாகி

ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்

உதிக்கின்ற தெய்வமாகிச்

சகல புவனங்களும் தானாகி நின்றவொரு

சச்சிதானந்த மயமாய்ச்

சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய

சகல சூட்சும தாரியாய்

விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்

வேதாந்த முத்தி முதலாய்

வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்

வேதனே பர நாதனே

சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே

சுயம்புரத மீதேறியே

துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர

சூரி நாராயண சுவாமியே ! -------– சூரிய நமஸ்கார பதிகம்

சுருதி வெகுமுகபு ராண கோடிகள்

  சரியை கிரியைமக யோக மோகிகள்

  துரித பரசமய பேத வாதிகள்  என்றுமோடித்

தொடர வுணரஅரி தாயதூரிய

பொருளை யணுகியநு போக மானவை

தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங்

கருதி        -------              திருப்புகழ், சுருதி வெகுமுக

நாடக ஆசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே- …………..திருப்புகழ், குருதி மூளை யூனாறு

சரியையில் கிரியையில் தவமும் அற்று  

                             - திருப்புகழ், ஒருவரைச் சிறுமனை

சரியைஉடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு கணன்……………… திருப்புகழ், அரிவையர்

சரியை கிரியை அண்டர் பூசை வந்தனை வழிபாடு துதியொடு நாடுந் தியான மொன்றையு முயலாத

                  ..….திருப்புகழ் குருதிபு லாலென்பு

செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது-                                                          திருப்புகழ், கமையற்ற

எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வே

         ……. திருப்புகழ், கருப்புச் சாப னனைய