F

படிப்போர்

Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Friday, 30 December 2016

299.அணிசெவ்வியார்

299

வடதிருமுல்லைவாயில்
 
தனதைய தானன தானன
            தனதைய தானன தானன
            தனதைய தானன தானன           தனதான
 
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
     தனநிவ்வி யேகரை யேறிட
     அறிவில்லி யாமடி யேனிட            ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
     மருளில்லி லேயிடு மோவுன
     தருளில்லை யோஇன மானவை   யறியேனே
குணவில்ல தாமக மேரினை
     யணிசெல்வி யாயரு ணாசல
     குருவல்ல மாதவ மேபெறு             குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
     மொழிநல்ல யோகவ ரேபணி
     குணவல்ல வாசிவ னேசிவ           குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
     பரமெல்லி யார்பர மேசுரி          தருகோவே
படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமத னாரனை
     பரிசெல்வி யார்மரு காசுர            முருகேசா
மணமொல்லை யாகிந காகன
     தனவல்லி மோகன மோடமர்
     மகிழ்தில்லை மாநட மாடின       ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
     பொழில்மெல்லி காவன மாடமை
     வடமுல்லை வாயிலின் மேவிய   பெருமாளே
 
பதம் பிரித்து உரை
 
அணி செவ்வியார் திரை சூழ் புவி
தன(ம்) நிவ்வியே கரை ஏறிட
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர

அணி செவ்வியார் - அழகில் செம்மை வாய்ந்த மாதர்கள் திரை சூழ் - கடல் சூழ்ந்த புவி - பூமி தனம் - பொன் (பெண், மண்,பொன்) நிவ்வியே - (ஆகிய மூவாசைகளைக்) கடந்து கரை ஏறிட - கரை ஏறுவதற்கு அறிவில்லியாம் - அறிவில்லாவதவனாகிய அடியேன் - அடியேனுடைய இடர் அது தீர - துயர் தீருதற்கு வேண்டிய

அருள் வல்லையோ நெடு நாள் இனம்
மருள் இல்லிலே இடுமோ உனது
அருள் இல்லையோ இனமானவை அறியேனே

அருள் வல்லையோ - திருவருளை வலிய அருள்வாயோ நெடு நாள் - (அப்படி யன்றி) நெடுங் காலத்துக்கு இன - கூட்டமான மருள் இல்லில் - இருள் வீடாகிய பிறவிகளிலே இடுமோ - கொண்டு விடுமோ உனது அருள் இல்லையோ - உனது திருவருள் என் மீது இல்லையோ? இனமானவை - உன்னோடு சம்பந்தப் பட்ட அடியார் கூட்டத்தை அறியேனே - அறிந்தேன் இல்லையோ?

குண வில் அதா மக மேரினை
அணி செல்வி ஆய் அருணாசல
குரு வல்ல மாதவமே பெறு குண சாத

குண வில் அதா(க) - சீரான வில்லாக மக மேரினை - பெரிய மேரு மலையை அணி செல்வி - தரித்த செல்வி ஆய் - தாய் (பார்வதியுடன் கூடிய)அருணாசல குரு - அண்ணாமலையார்க்குக் குருவாக வந்தவனே வல்ல- திண்ணிய மாதவமே பெறும் குண சாத - பெரிய தவ நிலையைப் பெறும் படியான நற் குணத்தோடு கூடிய சாதிப் பிறப்பில் கிடைத்த
 
குண வல்லவா சிவனே சிவ குரு நாதா
குடில் இல்லமே தரு நாள் எது
மொழி நல்ல யோகவரே பணி

குடில் இல்லமே - உடலாகிய வீட்டைதரு நாள் எது - எனக்குத் தருகின்ற நாள் எது? மொழி - கூறுவாயாக நல்ல யோகவரே பணி - நல்ல யோகிகள் பணிகின்ற குண வல்லவா - நற்குணம் வாய்ந்தவனே சிவனே - சிவபெருமானே சிவ குரு நாதா - சிவனுக்குக் குரு மூர்த்தியே

பணி கொள்ளி மா கண பூதம் ஒடு
அமர் கள்ளி கானக நாடக
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே

பணி கொள்ளி - பாம்பை ஆபரணமாகக் கொண்டவள் மா கண பூதம் ஒடு - பெரிய கணங்களான பூதங்களோடு அமர் - அமர்ந்துள்ள கள்ளி - திருடி கானகம் - சுடுகாட்டில் நாடக - நடனம் செய்கின்ற பரம் மெல்லியார் - மேலான மென்மை வாய்ந்தவள் பரமேசுரி - பரமேசுரி தரு கோவே - பெற்ற தலைவனே

படர் அல்லி மா மலர் பாணமது
உடை வில்லி மா மதனார் அ(ன்)னை
பரி செல்வியார் மருகா சுர முருகேசா
 
படர் அல்லி மா மலர் - நீரில் படரும் அல்லி மலராகிய தாமரை, நீலோற்பவம் ஆகிய சிறந்த மலர் பாணம் அது உடை வில்லி- பாணங்களை உடைய வில்லை ஏந்தும் மன்மதனுடைய அ(ன்)னை - தாய் பரி செல்வியார் - பெருமை வாய்ந்த செல்வியாராகிய இலக்குமியின்மருகா- மருகனே சுர முருகேசா - தெய்வ முருகேசனே

மணம் ஒல்லையாகி நகா கன
தன வல்லி மோகனமோடு அமர்
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா

மணம் ஒல்லையாகி - விரைவில் திருமணம் செய்து கொண்டு நகா கன தன வல்லி - மலை போன்ற கொங்கைகள் உடைய பார்வதி மோகனமோடு அமர் - வசீகரிப்புடன் அமர்ந்து வாழும் தில்லை - சிதம்பரத்தில் மா நடம் ஆடினர் - பெரிய நடனத்தை ஆடிய சிவபெருமான் அருள் பாலா - அருளிய குழந்தையே

மரு மல்லி மா வனம் நீடிய
பொழில் மெல்லி கா வனம் மாடு அமை
வடமுல்லை வாயிலின் மேவிய பெருமாளே
 
மரு மல்லி - வாசனையுள்ள மல்லிகை மா வனம் நீடிய - பெருங்காடாக வளர்ந்துள்ள பொழில் - சோலையையும் மெல்லி - மென்மை வாய்ந்த கா - பூந்தோட்டங்களும் வனம் - நீர் நிலைகளும் மாடு அமை - பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள வட முல்லை வாயிலில் - வடமுல்லை வாயிலில் மேவிய பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே
 
சுருக்க உரை
 
பெண், பொன், மண் ஆகிய மூவாசைகளைக் கடந்து கரை ஏற அறிவில்லாதவனாகிய அடியேனுடைய துயர் தீர உன் திருவருளைத் தரமாட்டாயோ? இருள் வீடாகிய பிறவிகளில் என்னை இடுவையோ? அடியார் கூட்டத்தை அறிய மாட்டேனோ?
 
பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்குக் குருவே, பெரிய தவ நிலையோடு கூடிய நற் பிறப்பை எனக்குத் தருவதும் ஒரு நாளோ? கணங்களேடு ஆடிய பரமேசுரி பெற்றத் தலைவனே, மலர்ப் பாணங்களை உடைய மன்மதனின் தாய், லக்க்குச்ன்க்ஷ்மியின் மருகனே, மலை போன்ற கொங்கைகளை உடைய பார்வதியுடன் வனப்புடன் தில்லையில் அமர்ந்து பெரிய நடனத்தை ஆடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சோலைகளும், நீர் நிலைகளும் சூழ்ந்த வடமுல்லை வாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் கரை ஏறிட அருள் புரிய வேண்டும்
 
விளக்கக் குறிப்புகள்
 
1 இனமானவை யறியேனே
அடியாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரரருள்---                   திருப்புகழ்,கார்ச்சார்குழ  

2 குணவில்ல தாமக மேரினை
மேருவைத் தேவி தரித்தது
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி---                       திருப்புகழ், பரிமளமிக

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ர மயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும் ---              திருப்புகழ், கருகியறி

3 பணிகொள்ளி மாகண
கழலும் வண்சிலம்பும் ஒலி செய கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் ---                                       ஞானசம்பந்தர் தேவாரம்
படை ஆர் பூதம் சூழப் பாடல் ஆடலார் ---                      ஞானசம்பந்தர் தேவாரம்

4 அமர் கள்ளி கானக நாடக
உள்ளத் திதயத்துவள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே---                                      திருமந்திரம்
 
” tag:

Thursday, 29 December 2016

293.சயிலாங்கனைக்கு

293
மதுராந்தகம்

                    தனதாந்த தத்த தனதனத்தத்
                      தந்தனத் தனந்த                  தனதானா

சயிலாங்க னைக்கு ருகியிடப்பக்
      கங்கொடுத் தகம்பர்                     வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையிடத்துக்
      கங்கைவைத் தநம்பர்                 உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழநித்தத்
      த்வம்பெறப் பகர்ந்த                    வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
       றுங்குருத் துவங்கு                 றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததியிற்கொக்
      கன்றனைப் பிளந்து                       சுரர்வாழ
அகலாண்ட முற்று நொடியினிற்சுற்
      றுந்திறற்ப் ரசண்ட                         முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகுலப்பொற்
      குன்றிடித் தசங்க்ர                      மவிநோதா
மதுராந்த கத்து வடதிருச்சிற்
      றம்பலத் தமர்ந்த                       பெருமாளே

பதம் பிரித்து உரை

சயில அங்கனைக்கு உருகி இட பக்கம்
கொடுத்த கம்பர் வெகு சாரி
சயில அங்கனைக்கு மலை மகளாகிய பார்வதிக்கு உருகி - (அவள் பக்திக்கு) மனம் உருகி இடப் பக்கம் கொடுத்த தமது இடப் பாகத்தைத் தந்து அருளிய கம்பர் சிவபெருமான் வெகு பலவிதமான சாரி - வட்டமாய் ஓடுதல் முதலான கூத்துக்களையும்

சதி தாண்டவ அத்தர் சடை இடத்து
கங்கை வைத்த நம்பர் உரை மாள

சதி தாண்டவ அத்தர் தாள ஒத்துக்களையும் கொண்ட ஆடலை உடையவர் சடை இடத்து சடையில் கங்கை வைத்த நம்பர் - கங்கை வைத்துள்ள பெருமான் உரை மாள - (இத்தகைய சிவனுக்கு) வாக்கு அழியவும்
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த
த்வம் பெற பகர்ந்த உபதேசம்

செயல் மாண்டு செயல் அழியவும் சித்தம் அவிழ மனம் ஒடுங்கவும் நித்தத்வம் பெற நிலையான தன்மையைப் பெற பகர்ந்த உபதேசம் -  (நீ) செய்த உபதேசத்தை
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும்
குருத்துவம் குறையுமோ தான்

சிறியேன் தனக்கும் சிறியவனாகிய எனக்கும் 
உரை செயில் - நீ 
சொல்லிஅருளினால் சற்றும் கொஞ்சமேனும் 
குருத்வம் குறையுமோதான் - உனது குரு மூர்த்தியாகி பதவி குறைந்து விடுமோ?
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்
தனை பிளந்து சுரர் வாழ
அயில் வாங்கி வேலாயுதத்தை எடுத்து எற்றி - செலுத்தி உததியில் - கடலிலிருந்த கொக்கன் தனை மாமர வடிவமாக நின்ற சூரனை 
பிளந்து பிளந்து சுரர் வாழ தேவர்கள் வாழும்படி

அகில அண்டம் முற்றும் நொடியினில் சுற்றும்
திறல் ப்ரசண்ட முழு நீல

அகில அண்டம் முற்றும் - சகல அண்டங்களையும்  
நொடியினில் - ஒரு நொடிப் பொழுதில் சுற்றும் - சுற்றிய திறல் வலிமை வாய்ந்த ப்ரசண்ட - கடுமையான முழு நீல - முழுநீலம் கொண்ட
மயில் தாண்ட விட்டு குது குல பொன்
குன்று இடித்த சங்க்ரம விநோத

மயில் தாண்ட விட்டு - மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும் முது பழைய குல - சிறந்த பொன் குன்று - பொன் மயமான மேரு மலையை இடித்த - செண்டால் இடித்துத் தள்ளியவனுமாகிய சங்க்ரம - போர் விநோதா - விளையாடல் உடையவனே
மதுராந்தகத்து வட திரு
சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மதுராந்தகத்து வட - மதுராந்தகத்துக்கு வட திசையில் உள்ள திருச் சிற்றம்பலத்து - திருச் சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு மனம் உருகி, அவளுக்குத்
தன் இடப் பாகத்தைத் தந்து அருளிய சிவனார், பல கூத்துக்களையும், தாள ஒத்துக்களையும் ஆடலை உடையவர். சடையிலே கங்கையைத் தரித்தவர். அந்த அத்தருக்கு, வாக்கு, செயல் அழியவும், மனம் ஒடுங்கவும் நிலையான வழிகளை உபதேசித்த நீ, சிறியவனாகிய எனக்கும் கொஞ்சமேனும் அந்த உபதேசத்தைச் சொன்னால் உனது குருத்வம் குறைந்து போகுமோ?

கடலில் மாமரமாக நின்ற சூரனை வேலைச் செலுத்தி அழித்துய் தேவர்களை வாழச் செய்தவனே எல்லா உலகங்களையும் மயிலின் மேல் ஏறி ஒரு நொடிப் பொழுதில் சுற்றி வந்தவனே மேரு மலையை இடித்து அழித்துத் திருவிளையாடல் புரிந்தவனே மதுராந்தகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்கும் உபதேசம் செய்தால் நீ குறைந்து போவாயோ?
விளக்கக் குறிப்புகள்

செண்டு - பிரம்பு போன்ற ஒரு ஆயுதம்; ஆனால் இரண்டு வளைந்த நுனியிருக்கும் ஐயனார்க்கும் இந்த ஆயுதம் உண்டு இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது. { கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே திருப்புகழ் மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கையில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம் }

1இடப் பக்கம் கொடுத்த கம்பர்
   வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
   வித்த கத்தர் பெற்ற கொற்ற   மயில்வீரா               -திருப்புகழ்,பொற்பதத்தி
   இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா              -திருப்புகழ், கடல்பரவ

2குருத்வம் குறையுமோதான்
  இங்ஙனம் வினவுதல் முருகனோடு அசதியாடுதலாகும் (பரிகசித்தல்)

அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும்
    உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்
       நயமாகக் கேட்டது -
                நாதா குமரா நமஎன் றரனார்
                ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான்                    --- கந்தர் அனுபூதி 
              
               நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ  -                                                                                                    திருப்புகழ்,அகரமுதல்         
          
           ஏமாற்றும் வகையில் கேட்டது -
                வேண்டாமை யொன்றைய டைந்துள
                மீண்டாறி நின்சர ணங்களில்
                வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
                                                            --திருப்புகழ்,மாண்டாரெலும்               
          ஏசும் வகையில் கேட்டது -
                செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
                த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
                சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
                றையுமோதான்                                     - திருப்புகழ்,  இப்பாடல்

3அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றுந் திறல்
  முருகன் சூரனைச் அழித்த பின் மயில் மீது அகில அண்டங்களைச் சுற்றினார்
  திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
  கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
  திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா,
                                                                  திருப்புகழ், தொடத்துளக்கி