F

படிப்போர்

Showing posts with label திருவேட்களம். Show all posts

Wednesday, 17 February 2016

277. மாத்திரை

“
277
திருவேட்களம்
(சிதம்பரம் பல்கலை வளாகத்தில்)

        தாத்தன தானன தாத்தன தானன
        தாத்தன தானன            தனதான

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
  வாழ்க்கையை நீடென            மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
   மாப்பரி வேயெய்தி               அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
   பாற்படு ஆடக                     மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
   பாற்கட லானென             வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
   சாத்தியர் மேவிய                  பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
   தாட்பர னார்தரு                    குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
   மீக்கமு தாமயில்                 மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
   வேட்கள மேவிய                பெருமாளே

பதம் பிரித்தல்

மாத்திரை ஆகிலும் நா தவறாள் உடன்
வாழ்க்கையை நீடு என மதியாமல்

மாத்திரை ஆகிலும் - ஒரு சிறிய அளவுகூட நா தவறாளுடன் - வாக்குத் தவறாத மனைவியுடன் வாழ்க்கையை - நடத்தும் இல்லற வாழ்க்கையை நீடு என மதியாமல் - பெரிதென மதிக்காமல்

மாக்களை யாரையும் ஏற்றிடு(ம்) சீலிகள்
மா பரிவு எய்தி அனுபோக

மாக்களை - (அறிவு கெட்ட) மனிதர்கள் யாரையும் - யாராயிருந்தாலும் ஏற்று - அவர்களை எல்லாம் ஏற்று அனுபவிக்கும் சீலிகள் - ஒழுக்கத்தை உடைய (பொது மகளிரின் மீது) மா - மிக்க பரிவே எய்தி - அன்பைப் பூண்டு அனுபவிக்கும்

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்
பால் படு ஆடகம் அது தேட

பாத்திரம் ஈது என - பாத்திரம் இவன் என்று (பிறர் கூற) மூட்டிடும் - மூண்டு எழுகின்ற ஆசைகள் பாற்படு -
ஆசைகளில் ஈடுபட்டு ஆடகம் அது தேட - பொன்னைத் தேட

பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி
பாற்கடலான் என உழல்வேனோ

பார்க் களம் மீதினில் - பூமியில் உள்ள மூர்க்கரையே - உலோபிகளையே கவி - (எனது) பாடலில் பாற்கடலான் என - பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் இவன் என்று புகழ்ந்து உழல்வேனோ - திரிவேனோ?

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய
சாத்தியர் மேவிய பத வேளே

சாத்திரம் ஆறையும் - ஆறு சமய சாத்திரங்களையும்
நீத்த - கடந்த மனோலய - மன வேகம் ஒடுங்கும்படி வைத்த சாத்தியர் - சாமர்த்தியம் உள்ள பெரியோர்கள் மேவிய - விரும்பிப் போற்றும்
பத வேளே - திருவடியை உடைய வேளே

தாத்தரிகிட சேக் எனும் நட
தாள் பரனார் தரு குமரேசா

தாத்தரிஎனும் - இவ்வாறான தாளங்களைக் கொண்ட மா - சிறந்த நட - நடனம் செய்கின்ற தாள் - திருவடிகளை உடைய பரமனார் - சிவபெருமான்
தரு - அருளிய குமரேசா - குமரேசனே
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர்
மிக்க அமுது ஆம் மயில் மணவாளா

வேத்திர சாலம் அது - அம்புக் கூட்டங்களை ஏற்றிடும் - கொண்டு திரியும் வேடுவர் - வேடர்களின் மிக்க அமுதாம் மயில் - மிக்க அமுதம் போன்ற மயிலின் இயல் வள்ளியின் மணவாளா - கணவனே

வேத்த(ய)மதாம் மறை ஆர்த்திடு சீர் திரு
வேட்களம் மேவிய பெருமாளே
வேத்தயமதாம் - அறியப்படுவதான மறை - வேதங்கள் ஆர்த்திடு - ஒலி செய்யும் சீர் - அழகான திருவேட்களம் மேவிய பெருமாளே - திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதிக்காமல், அறிவு இல்லாத மக்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஏற்று அனுபவிக்கும் விலைமாதர்களின் அன்பைப் பூண்டு, அதற்கான பொருள் தேட, உலோபிகளைத் திருமால்( உத்தமமானவன்) என புகழ்ந்து பாடித் திரிவேனோ?
ஆறு சாத்திரங்களையும் கடந்து மன வேகம் ஒடுங்கும்படியான வல்லமை பெற்ற பெரியோர்கள் விரும்பிப் போற்றும் திருவடியை உடைய வேளே, தாள சுத்தமாக நடனம் செய்யும் சிவபெருமான் அருளிய குமரனே, வேடர்களின் மகளான மயிலின் சாயலைக் கொண்ட வள்ளியின் கணவனே, வேத ஒலி முழங்கும் திருவேட்களத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, பெண்ணாசை ஒழிந்து உன் திருவடியைத் தொழ அருள் புரிவாயாக

 சாத்திரம் ஆறையும் நீத்தமனோலய
ஆறு சாத்திரங்கள் -- 1 வேதாந்தம் 2 வைசேடிகம் 3 பாட்டம்   4 பிரபாகரம் 5 பூர்வ மீமாஞ்சை 6 உத்தர மீமாஞ்சை

தலைப்புச் சொற்கள்

” tag:

Monday, 16 November 2015

276.சதுரத்தரை

“
276
திருவேட்களம்
(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது)

             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன    தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
  கதிரொத்திட ஆக்கிய கோளகை
  தழையச்சிவ பாக்கிய நாடக             அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
  மலமற்றிட வாட்டிய ஆறிரு
  சயிலக்குயில் மீட்டிய தோளொடு    முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
  மயிலின்புற நோக்கிய னாமென
  கருணைக்கடல் காட்டிய கோலமும் டியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
  யவர்முத்தமி ழாற்புக வேபர
  கதிபெற்றிட நோக்கிய பார்வையு   மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
  நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
  சிதறக்கட லார்ப்புற வேயயில்   விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
  பதசத்தினி மூத்தவி நாயகி
  செகமிப்படி தோற்றிய பார்வதி   யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
  விகடத்துற வாக்கிய மாதவன்
  விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
  கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
  விறல்மெய்த்திரு வேட்கள மேவிய   பெருமாளே

பதம் பிரித்து உரை

சதுர தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி

சதுர = நான்கு இதழ் கொண்டதாய் தரை நோக்கிய = தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவொடு = (மூலாதாரக்) கமலம் (முதல்) கதிர் ஒத்திட ஆக்கிய = முச்சுடர்களால் ஆன கோளகை = மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) தழைய = குளிர்ந்து தழைய சிவ பாக்கிய = சிவப் பேற்றைத் தருவதான நாடக அநுபூதி = நாடக பெரும்பேறு ஆகிய

சரண கழல் காட்டியே என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்

சரணக் கழல் காட்டி = திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி என் ஆணவ மலம் = என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மலங்கள் அற்றிட = தொலைந்து போய் வாட்டிய = கெடுத்து ஒழித்த ஆறிரு = (உனது) பன்னிரண்டு சயிலக் குலம் ஈட்டிய = சிறந்த மலைகள் போன்ற தோளொடு = தோள்களையும் முகம் ஆறும் = ஆறு முகங்களையும்

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை

கதிர் சுற்று = ஒளி சுற்றிலும் பரவி உக நோக்கிய பதமும் = (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும் மயிலின் புறம் நோக்கியனாம் என = மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய = கருணைக் கடலைக் காட்டி அருளிய கோலமும் = திருக்கோலத்தையும் அடியேனை = அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே

கனகத்தினும் = பொன்னைக் காட்டிலும் இனிய நோக்கி இனிதாய் = பார்வையுடன் அடியவர் = அடியவர்கள் முத்தமிழால் புகவே = முத்தமிழ் கொண்டு பாடிப் புகவும் பர கதி பெற்றிட = (நான்) மேலான நற் கதியைப் பெறவும் நோக்கிய பார்வையும் மறவேனே = அருள் மிக்க பார்வையையும் (நான்) மறவேன்

சிதற தரை நால் திசை பூதர(ம்)
நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே

தரை சிதற = பூமி அதிர நால் திசை பூதரம் = நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிய = நெரிந்து பொடிபட பறை மூர்க்கர்கள் = பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் மா முடி = பெரிய முடிகள் சிதற = சிதறுண்டு விழ கடல் ஆர்ப்புறவே = கடல் ஒலி செய்து வாய்விட அயில்
விடுவோனே = வேலைச் செலுத்தியவனே

சிவ பத்தினி கூற்றினை மோதிய
பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா

சிவ பத்தினி = சிவனது பத்தினியும் கூற்றினை மோதிய = யமனை உதைத்த பத = பாதங்களைக் கொண்ட சத்தினி = சத்தி வாய்ந்தவளும் மூத்த = யாவர்க்கும் மூத்தவளும் விநாயகி = (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும் செகம் இப்படி தோற்றிய = அண்டங்களை இவ்வாறு படைத்தவளுமாகிய பார்வதி அருள் பாலா = உமா தேவி ஈன்ற பாலனே

விதுரற்கும் அரா கொடி யானையும்
விகட துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே

விதுரற்கும் = விதுரனுக்கும் அராக் கொடியானையும் = பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும் விகட = (மனம்) வேறுபடும்படியான துறவு = பிரிவினையை ஆக்கிய = உண்டு பண்ணிய மாதவன் = கண்ணபிரான் விசையற்கு = அருச்சுனனுடைய உயர் = பெரிய தேர்ப் பரி = தேர்க் குதிரைகளை ஊர்பவன் மருகோனே = (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகோனே = மருகனே

வெளி எண் திசை சூர் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே

வெளி எட்டு திசை = வெளியிலே எட்டுத் திக்குகளிலும் சூர்ப் பொருது ஆடிய = சூரனாய் நின்று போர் செய்து கொடி கைக்கொடு = கொடியைக் கையிலேந்தி கீர்த்தி உலாவிய = புகழ் விளங்க உலவிய (பெருமாளே) விறல் மெய்த்திரு= வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் மேவிய பெருமாளே = திருவேட்களம் என்னும் தலத்தில் வீfற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவோடு ஆக்கிய ஆறு ஆதார நிலைகளெல்லாம் தழைத்த சிவப் பேற்றைத் தரும் திருவடிக் கழலை எனக்குக் காட்டி, எனது ஆணவ மலம் தொலைய, உனது பன்னிரு தோள்களையும், ஆறு முகங்களையும், திருவடியையும் மயில் மீது வந்து அருளிய திருக் கோலத்தையும், முத்தமிழில் உன் புகழைப் பாடி, நான் நற்கதியைப் பெறவும் அருள் செய்ததை மறவேன்
மலைகள் பொடிபடவும், கடல் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சிவனுடைய பத்தினியும், நமனை உதைக்கும் சக்தி வாய்ந்தவளும், அடியார்கள் இடர்களை நீக்குபவளும் ஆகிய பார்வதியின் மகனே திருமாலின் மருகனே சூரனுடன் போர் செய்து கோழிக் கொடியைக் கையிலேந்தி விளங்கும் பெருமாளே திருவேட்களம் என்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே நீ காட்சி அளித்ததை என்றும் மறவேன்

விளக்கக் குறிப்புகள்

1 சிவபத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
கூற்றுவனைக் காய்ந்தஅபிராமி மனதாரஅருள் கந்தவேளே
                                                      திருப்புகழ் -வாட்டியெனை 
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்       திருப்புகழ் ஏட்டின்விதி
யமனை உதித்தது தேவியின் கால்களே என்பது அருணகிரிநாதரின் கூற்று
2 செகமிப்படி தோற்றிய பார்வதி
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்   -  திருப்புகழ் தொடத்துளக்கி

3 சூர்ப் பொருதாடிய கொடியைக் கொடு
சூரனுடைய இரு பிளவில் ஒன்று சேவலாகி வர, முருக வேள் அதனைக் கொடியாக நியமித்தார்