F

படிப்போர்

Sunday, 21 July 2013

231. சீதளவாரிஜ

231
சிறுவை
சிறுவாபுரி தற்சமயம் சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது
வள்ளி மணவாளப்பெருமானை இங்கு தரிசிக்கலாம். வள்ளி மணவாட்டி முருகப்பெருமானின் கைத்தலம் பற்றும் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருமணத்தின் போது பெண்களுக்கே உரித்தாக இருக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.

          தானன தானன தானா தனாதன
           தானன தானன தானா தனாதன
           தானன தானன தானா தனாதன         தனதான

சீதள வாரிஜ பாதா நமோநம
      நாரத கீதவி நோதா நமோநம
      சேவல மாமயில் ப்ரீதா நமோநம               மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபா நமோநம
      ஆகம சாரசொ ரூபா நமோநம
      தேவர்கள் சேனைம கீபா நமோநம               கதிதோயப்
பாதக நீவுகு டாரா நமோநம
      மாவசு ரேசக டோரா நமோநம
       பாரினி லேஜய வீரா நமோநம                    மலைமாது
பார்வதி யாள்தரு பாலா நமோநம
      நாவல ஞானம னோலா நமோநம
      பாலகு மாரசு வாமீ நமோநம                   அருள்தாராய்
போதக மாமுக னேரா னசோதர
       நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
      பூமக ளார்மரு கேசா மகோததி                     யிகல்சூரா
போதக மாமறை ஞானா தயாகர                                      
      தேனவிழ் நீபந றாவா ருமார்பக
      பூரண மாமதி போலா றுமாமுக                      முருகேசா
மாதவர் தேவர்க ளோடே முராரியு
      மாமலர் மீதுறை வேதா வுமேபுகழ்
      மாநில மேழினு மேலா னநாயக                    வடிவேலா
வானவ ரூரினும் வீறா கிவீறள
      காபுரி வாழ்வினு மேலா கவேதிரு
      வாழ்சிறு வாபுரி வாழ்வே சுராதிபர்             பெருமாளே.

பதம் பிரித்து உரை

சீதள வாரிஜ பாதா நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல் மா மயில் ப்ரீதா நமோநம மறை தேடும்

சீதள =   குளிர்ந்த வாரிஜ  =    தாமரை மலர் போன்ற பாதா = திருவடியை உடையவரே நமோநம = உன்னை வணங்குகிறேன் நாரத கீத = நாரதருடைய இசையில். விநோதா = மகிழ்ச்சி கொள்பவனே நமோநம =....... சேவல் = கோழிக் (கொடியை) உடையவனே மா = சிறந்த மயில் ப்ரீதா = மயிலின் மீது விருப்பம் உடையவனே நமோநம =.. ........ மறை தேடும்  =    வேதங்கள் தேடுகின்ற.

சேகரமான ப்ரதாபா நமோநம
ஆகம சார சொரூபா நமோநம
தேவர்கள் சேனை மகீபா நமோநம கதி தோய

சேகரமான = அழகான ப்ரதாபா = கீர்த்தியை உடையவனே நமோநம =........ .. ஆகம சார சொரூபா = ஆகமங்களின் சாரமே வடிவாகக் கொண்டவனே நமோநம=......... தேவர்கள் சேனை மகீபா = தேவர்களின் சேனைக்கு அரசனே. நமோநம =........  கதி தோய = (அடியார்கள்) நற் கதியை அடையும் பொருட்டு (அவர்களுடைய)

பாதக நீவு குடாரா நமோநம
மா அசுரேச கடோரா நமோநம
பாரினிலே ஜய வீரா நமோநம மலை மாது

பாதக = தீவினைகளை நீவு = பிளந்து அழிக்கின்ற குடாரா =  கோடாலியே நமோநம =.......... ..   மா = பெரிய அசுரேச கடோரா = அசுரத் தலைவர்கள் அஞ்சும்படியான கொடுமை காட்ட வல்லவனே நமோநம =..........  .. பாரினிலே  =     இவ்வுலகில் ஜய வீரா = வெற்றி வீரனாய் விளங்குபவனே நமோநம =.......... மலை மாது   =      இமய மலைப் பெண்ணாகிய

பார்வதியாள் தரு பாலா நமோநம
நாவல ஞான மனோலா நமோநம
பால குமார சுவாமீ நமோநம அருள் தாராய்

பார்வதியாள் =  பார்வதி அம்மை தரு =  பெற்ற பாலா = குழந்தையே நமோநம =... நா வ(ல்)ல = வாக்கு வன்மை உடையவரே ஞான மன உலா = ஞானிகள் மனத்தில் உலவுகின்றவனே நமோநம =............. பால குமார சுவாமி = பால குமார சுவாமியே நமோநம =............... .. அருள் தாராய்  =   உனது திருவருளைத் தந்து அருளுக.

போதக மா முகன் நேரான சோதர
நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர
பூ மகளார் மருக ஈசா மகா உததி இகல் சூரா

போதகம் மா முகன் =   யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விநாயகருக்கு நேரான சோதர = இளைய சகோதரனே நீறு அணி = திரு நீறு அனிந்த வேணியர் = சடை தரித்த சிவ பெருமானுடைய நேயா = அன்புக்கு உரியவனே  ப்ரபாகரா =     (ஞான) சூரியனே பூ மகளார்  =  இலக்குமியின் மருக =   மருகனே ஈசா = ஈசனே   மகா உததி =        பெரிய கடலை இகல் சூரா = பகைத்து (அது சுவற வேல் விட்ட) சூரனே.

போதக மா மறை ஞான தயாகர
தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா

போதக மா மறை = சிறந்த வேதங்களை உபதேசிக்க வல்லவனே ஞானா = ஞானனே தயாகர = கிருபைக்கு (இருப்பிடமானவனே) தேன் அவிழ் = தேன் சொட்டும் நீப =  கடப்ப மாலையின் நறா =   நறு மணம் ஆரும் மார்பக = வீசும் மார்பிடத்தை உடையவனே பூரண மா மதி போல் = அழகிய முழு நிலவைப் போல விளங்கும்  ஆறு முக முருகேசா   =    ஆறு மா முகனே, முருகேசா.

மாதவர் தேவர்களோடே முராரியும்
மா மலர் மீது உறை வேதாவுமே புகழ்
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடிவேலா

மா தவர் = தவ முனிவோர்கள். தேவர்களோடே = தேவர்கள் முராரி = திருமால் மா மலர் மீது உறை வேதாவே = சிறந்த தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரமன் புகழ் நாயக = (இவர்கள் யாவரும்) புகழும் நாயகனே மா நிலம் ஏழினும் = பெரிய உலகங்கள் ஏழினும் மேலான = மேம்பட்ட தலைவனாக நாயக = (விளங்கும்) நாயகனே வடிவேலா  =  கூரிய வேலனே.

வானவர் ஊரினும் வீறாகி வீறு
அளகா புரி வாழ்வினும் மேலாகவே திரு
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.

வானவர் ஊரினும் = தேவர்கள் ஊரைக் காட்டிலும் வீறாகி = மேம்பட்டதாக வீறு = விளங்கி அளகா புரி = (குபேரனுடைய ஊராகிய) அளகாபுரியின் வாழ்வினும் மேலாகவே  =  மேம்பட்ட சிறப்பினதாக திரு வாழ் = இலக்குமி வாசம் செய்யும் சிறுவா புரி வாழ்வே  =  சிறுவாபுரி என்னும் தலத்தில் வாழும் செல்வமே சுராதிபர் பெருமாளே   = தேவர்கள் தலைவர்களுக்குப் பெருமாளே.

சுருக்க உரை

குளிர்ந்த தாமரை போன்ற திருவடியை உடையவனே, நாரத முனிவரின் இசையில் மகிழ்பவனே, கோழிக் கொடியை உடையவனே, மயில் மீது விருப்பம் உள்ளவனே, வேதங்கள் தேடும் புகழை உடையவனே, ஆகமங்களின் வடிவானவனே, தேவர்கள் சேனைக்குத் தலைவனே, அடியார்களின் தீவினைகளைப் போக்குபவனே, வெற்றி வீரனே, இமவான் பெண்ணாகிய உமையின் மைந்தனே, வாக்கு வல்லமை உடையவனே, ஞானிகள் மனத்தில் உறைபவனே, உன்னை வணங்குகிறேன். உமது திருவருளைத் தந்து அருளுக.

கணபதிக்கு இளையவனே, திரு நீறு அணிந்த சிவபெருமான் அன்புக்கு உரியவனே, ஞான சூரியனே, இலக்குமியின் மருகனே, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். வேதங்களை உபதேசிக்க வல்லவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, ஆறு முகனே, தவத்தினர், தேவர்கள், திருமால், பிரமன் யாவரும் புகழும் இறைவனே, கூரிய வேலனே, அளகாபுரிக்கும் மேல் சிறந்த இலக்குமி வாழும் சிறுவா புரியில் வாழும் செல்வமே, தேவர்கள் பெருமாளே எனக்கு அருள் தாராய்.

ஒப்புக:

1. நாரத கீத விநோதர்.....
  
   முருகவேள் இசைப் பிரியர்.
 
   திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
   செயித்தருளுமிசைப் பிரிய............திருப்புகழ், கருப்புவிலில்

2. தேவர்களோடே முராரியு...

திசைமுகன் முராரி மற்று மரிய பல தேவருற்ற
...திருப்புகழ்,முழுகிவடவா

விளக்கக் குறிப்புகள்

 பாரினிலே ஜய வீரா நமோநம....
  
இது சம்பந்தராய் சமணர்களை வென்ற வீரத்தைக் குறிக்கும்.

நமோ நம....

உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன்.

நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போதகந்தரு, அரிமருகோனே, போத நிர்க்குண, ஓது முத்தமிழ்  சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும்  பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன.

” tag:

Sunday, 7 July 2013

230. அண்டர்பதி

230
சிறுவை
சிறுவாபுரி தற்சமயம் சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது
சென்னை கும்மிடிப்பூண்டி வழியில் பொன்னேரிக்கு அருகில்
    
மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்

தந்ததன தனதான தந்ததன தனதான
      தந்ததன தனதான               தனதான
 
     அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
        அண்டர்மன மகிழ்மீற                   வருளாலே
     அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
        ஐங்கரனு முமையாளு                    மகிழ்வாக
     மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
       மஞ்சினனு மயனாரு                     மெதிர்காண
     மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
      மைந்துமயி லுடனாடி                    வரவேணும்
     புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
       புந்திநிறை யறிவாள                    வுயர்தோளா
    பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
        பொன்பரவு கதிர்வீசு                     வடிவேலா
     தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
        தண்டமிழின் மிகுநேய                    முருகேசா
     சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
        தண்சிறுவை தணில்மேவு             பெருமாளே.
 
பதம் பிரித்து உரை
 
      அண்டர் பதி குடி ஏற மண்டு அசுரர் உரு மாற
      அண்டர் மன(ம்) மகிழ் மீற அருளாலே

அண்டர் பதி = தேவர்களின் தலைவனான இந்திரன் குடி ஏற = தனது பொன்னு லகத்திற்குக் குடியேறவும் மண்டு = நெருங்கி வந்த அசுரர் உரு மாற = அசுரர்கள் உரு மாறி இறக்கவும் அண்டர் மனம் மகிழ் மீற = தேவர்கள் மனத்தில் மகிழ்ச்சி அதிகமாகக் கொள்ளவும் அருளாலே = அத்தகைய அருளோடு.
  
      அந்தரி ஒடு உடன் ஆடு சங்கரனும் மகிழ் கூர
      ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
    
அந்தரியொடு உடன் ஆடு = காளியுடன் ஆடிய சங்கரனும் மகிழ் கூர = சங்கரன் மகிழ்ச்சி மிகக் கொள்ளவும் ஐங்கரனும் = விநாயகனும் உமையாளும் மகிழ்வாக = விநாயகனும், உமா தேவியும் களிப்புற.

      மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும்
      மஞ்சினனும் அயனாரும் எதிர் காண
        
மண்டலமும் = பூமியில் உள்ளவர்களும். முநிவோரும் = முனிவர்களும் எண் திசையில் உள்ள பேரும் = எட்டு திசைகளில் உள்ளவர்களும். மஞ்சினனும் = இந்திரனும் அயனாரும் = பிரமனும் எதிர் காண = எதிர் நின்று பார்க்கவும்.

மங்கையுடன் = அலர் மேல் மங்கையோடு அரி தானும் = திருமாலும் இன்பம் உற = இன்பத்துடன் மகிழ் கூற = மகிழ்ச்சியை எடுத்து ஓதவும் மைந்து = வலிமையான மயிலுடன் ஆடி வர வேணும் = மயிலுடன் என் முன் ஆடி வர வேண்டும்.

      புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள
      புந்தி நிறை அறிவாள உயர் தோளா

புண்டரிக = தாமரை மலரை ஒத்த விழியாள = கண்களை உடையவனே அண்டர் மகள் = தேவர்கள் வளர்த்த மகளின் (தேவசேனையின்). மணவாள = கணவனே புந்தி நிறை = அறிவு நிறைந்த. அறிவாள = ஞானம் கொண்டவனே உயர் தோளா = உயர்ந்த புயங்களை உடையவனே.

     பொங்கு கடல் உடன் நாகம் விண்டு வரை இகல் சாடு
     பொன் பரவு கதிர் வீசு வடிவேலா

பொங்கு கடலுடன் = பொங்கின கடலுடன். நாகம் விண்டு = எழு கிரிகள் பிளவு பட. வரை = கிரௌஞ்ச கிரியின் இகல் = வலிமையை. சாடு = பாய்ந்தழித்த பொன் பரவு = பொன்னொளி பரப்பி கதிர் வீசும் வடிவேலா = ஒளிவீசும் கூரிய வேலனே.

     தண் தரளம் அணி மார்ப செம் பொன் எழில் செறி ரூப
     தண் தமிழின் மிகு நேய முருகேசா

தண் தரளம் = குளிர்ந்த முத்து மாலை. அணி மார்ப = அணிந்த மார்பை உடையவனே செம் பொன் எழில் செறி சொரூப = செம் பொன்னின் அழகு செறிந்த உருவத்தனே தண் தமிழின் மிகு நேய = நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்டுள்ளவனே முருகேசா = முருகேசனே.

     சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான
     தண் சிறுவை தனில் மேவு பெருமாளே.
 
சந்ததமும் = எப்போதும். அடியார்கள் = அடியார்களின். சிந்து அது குடியான = மனத்தையே இடமாகக் கொண்ட பெருமாளே= பெருமாளே. தண் = குளிர்ந்த. சிறுவை தனில் மேவும் பெருமாளே = சிறுவையில் வீற்றிருக்கும் பெருமாளே.
            
மரகத மயில்
          மரகத மயில்
சிறுவையில் வாழும் பெருமான்
 சுருக்க உரை

தேவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் , அசுரர்கள் அழியவும், காளியுடன் சங்கரன் மகிழவும், விநாயகனும், உமையாளும் மகிழவும், உலகில் உள்ளோரும், முனிவர்களும், இந்திரனும் நின்று காணவும் இலக்குமியும் திருமாலும், இன்பமுறவும் மயில் மீது ஏறி ஆடி என் முன்னே வரவேண்டும்.
 
தாமரை போன்ற கண்களை உடையவனே. தேவசேனையின் கணவனே. ஞானம் நிறைந்தவனே, வடிவேலா. ஏழு மலைகளும் பிளக்கவும், கிரௌஞ்சத்தின் வலிமையை அழித்தவனே,     அடியார்கள் மனத்தில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே, சிறுவையில் வாழும் பெருமாளே. மயிலுடன் ஆடி வரவேண்டும்.
 
விளக்கக் குறிப்பகள்
 
 மஞ்சினனும் அயனாரும் எதிர்காண...     மஞ்சிளனம் - இந்திரன்.

ஒப்புக

1. புண்டரிக விழியாள...
முண்டக மலர்ந்தன்ன  கண்ணனும்          -                             கந்த புராணம்.
 
2. தண்டரள மணிமார்ப செம்பொனெழில்......
     பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
      தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்               ---          திருப்புகழ், பரவியுது

3. எழில் செறிரூப....
  ..அந்தம் வெகு வான ரூபக்கார எழிலான                 --- திருப்புகழ், முந்துதமிழ்மாலை
  
   முத்தமிழ் வித்வதி நோதா கீதா
   மற்றவ ரொப்பில ரூபா தீபா.. ---                                  திருப்புகழ், மைக்குழலொத்த

4. தமிழின் நேய....
தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன் ---                         திருவாலவா, திருவிளை.