F

படிப்போர்

Showing posts with label கணபதி. Show all posts

Tuesday, 26 May 2015

271. படிபுனல்

271
திருவிடைக்கழி

             தனதனன தத்தனத் தனதனன தத்தனத் 
          தனதனன தத்தனத்               தனதான 

படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் 
   பவமுறைய வத்தைமுக்                     குணநீடு 
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் 
   பசிபடுநி ணச்சடக்                    குடில்பேணும் 
உடலது பொறுத்தறக் கடைபெறுபி றப்பினுக் 
  குணர்வுடைய சித்தமற்                  றடிநாயேன் 
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் 
  துனதுதம ரொக்கவைத்                   தருள்வாயே 
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் 
  கொடியபடர்பு யக்கரிக்                   கதிர்வேலா 
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் 
   குமரமகிழ் முத்தமிழ்ப்                   புலவோனே 
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் 
  தடலனுச வித்தகத்                     துறையோனே 
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் 
   தருதிருவி டைக்கழிப்                    பெருமாளே 

பதம் பிரித்து உரை 

படி புனல் நெருப்பு  அடல் பவனம் வெளி பொய் கரு 
பவம் உறை அவத்த முக்குண(ம்) நீடு 

படி = பூமி புனல் = நீர் நெருப்பு = தீ அடல் பவனம் = வலிமை கொண்ட வாயு வெளி = ஆகாயம் பொய் = பொய் கருப் பவம் உறை அவத்தை = கருவில் பிறப்பு கூடும் துன்பம் முக்குண(ம்) = சத்துவ, ராஜசம், தாமதம் ஆகிய முக்குணங்கள் நீடு = நெடியதாய்

பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் 
பசி படு நிண சட குடில் பேணும் 

பயில் பிணிகள் = கூடிவரும் நோய்கள் மச்சை = மூளை சுக்கிலம் = இந்திரியம் உதிரம் = இரத்தம் அத்தி = எலும்பு மெய்ப்பசி = உடலில் உண்டாகும் பசி நிண(ம்) = மாமிசம்  சடக் குடில் = (இவை கூடிய) அறிவில்லாத பொருளாகிய சிறு வீடாகப் போற்றப்படும்

உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு 
உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் 

உடல் அது = இந்த உடலை பொறுத்து = தாங்கி அறக் கடை பெறு = மிகக் கீழானதாய்ப் பெறப்பட்ட பிறப்பினுக்கு = இப்பிறப்பில் உணர்வுடைய = ஞானத்தோடு கூடிய சித்தம் அற்று = உள்ளம் இல்லாமல் போய் அடி நாயேன் = அடி நாயேனாகிய நான்

உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து 
உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே 

உழலும் அது = திரிகின்ற தன்மை கற்பு அல = நீதி அன்று கழல் இணை = (உனது) திருவடியிணையை எனக்கு அளித்து = எனக்குக் கொடுத்து உனது தமர் ஒக்க = உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்துடன் வைத்து = (என்னையும்) ஒரு சேர வைத்து அருள்வாயே = அருள் புரியவாயாக

கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன 
கொடி படர் புய கிரி கதிர் வேலா 

கொடிய ஒரு குக்குடக் கொடியவ = கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான கோழியைக் கொடியாக உடையவனே வடிவில் = அழகுள்ள புனக் கொடி படர் = தினைப் புனத்தில் (வள்ளியாகிய) கொடி படரும் புயக் கிரி = மலை போன்ற தோள்களை உடைய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே

குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் 
குமர மகிழ் முத்தமிழ் புலவோனே 

குமர = இளையோனே சமர சினக்கும் அரவு = போரில் மிகக் கோபிக்கும் பாம்பை அணி = தரித்த அத்தன் = ஐயன் சிவபெருமானுடைய மெய்க் குமர = மெய்ப் புதல்வனே மகிழ் = (யாவரும்) மகிழும் முத்தமிழ்ப் புலவோனே = முத்தமிழிலும் வல்ல  புலவனே

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த 
அடல் அனுச வித்தக துறையோனே 

தட விகட = விசேடமான அழகிய மத்தகத்து = மத்தகத்தோடு தட = பெரிய வரையர் = மலையை ஒத்தவரான கணபதியின் அத்தர் = தந்தைக்கு அத்த = குருவே அடல் அனுச = (கணபதியின்) வலிமை வாய்ந்த தம்பியே வித்தகத்து உறைவோனே = ஞான நிலையில் உறைபவனே

தரு மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியை 
தரு திருவிடைக்கழி பெருமாளே 

தரு மருவு = (பல) மரங்கள் பொருந்தி விளங்கும் திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக்கழி என்னும் பதியில் வீற்றிருப்பவனே எத்தலத்தரும் = எந்தப் பூமியில் உள்ளவர்களும் மருவ = தன்னிடம் அடைந்தால் முத்தியைத தரு = முத்தியைத் தருகின்ற (பெருமாளே)

சுருக்க உரை 

மண், நீர், தீ, வலிமையான காற்று, ஆகாயம் இவைகளைக் கூடியதாய், கருவில் பிறப்பைக் கூடும் துன்பமும்முக்குணங்களும் நெடிதாய்க்கூடி வரும் நோய்கள், மூளை, எலும்பு, இரத்தம், மாமிசம் இவைகள் கூடிய குடிலாகிய உடலைத் தாங்கி, மிகக் கீழானதான பிறப்பை அடைந்துஞானத்தோடு கூடிய அறிவில்லாமல் நான் திரிவது நீதி
அன்று என்னை உன் அடியாருடன் சேர்த்து அருள்
புரிய வேண்டுகிறேன் 
ஒப்பற்ற கோழிக் கொடியை உடையவனே அழகிய தினைப்  புனத்து வள்ளியாகிய கொடி படரும் புய மலைகளை  உடையவனே பெரிய மத்தகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவ பெருமானின் குருவே கணபதியின் தம்பியே ஞான நிலையில் உறைபவனே மரங்கள் நிறைந்த திருவிடைக் கழியில் வீற்றிருக்கும் பெருமாளே எந்தப் பூமியில் இருப்போரும் தன்னிடம் அடைக்கலம்  புகுந்தால்
முத்தி அளிப்பவனே உன் அடியார்களுடன் என்னைச் சேர்ப்பாயாக 
 
விளக்கக் குறிப்புகள் 

அனுசன் ~ அனுஜன் - தம்பி, இளையவன்

1 முத்தமிழ்ப் புலவோனே 

மதித்த முத்தமிழ்ப் பெரியோனே                      நினைத்ததெத்தனை 
தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே                       சமயபத்தி 
மாலை மார்ப நூலறி புலவ               நக்கீரர், திருமுறுகாற்றுப்படை
பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும                    கல்லாடம்   

2 கொடிய ஒரு குக்குடக் கொடி 
கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ, தருமருவு தருமருவ என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன
                                                வசுசெங்கல்வராய பிள்ளை

திருவிடைக்கழி ஸ்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் ஸ்தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.   குரா மரம் ஸ்தல்விருக்ஷ்சம் திருவிடைகழி. தேவயானை மட்டும் இருகிறார் தனிசன்னதில்.

” tag:

Friday, 2 August 2013

237. பரிவுறு

237
சேலம்
சுகவனேசுவர் திருக்கோயில் சுகவன சுப்பிரமணியரை தரிசித்து பாடிய பாடல்
      
       தனதன தானத் தனதன தானத்
        தனதன தானத்            தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
    சிலைபொரு காலுற்                  றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
    குழல்தனி யோசைத்                  தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
    தனிமிக வாடித்                      தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
    தருள்முரு காவுற்                 றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
   தொடுகும ராமுத்                  தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
    திருவளர் சேலத்                 தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
    தனிமயி லேறித்                 திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
    கிளையவி நோதப்                பெருமாளே

பதம் பிரித்தல்

பரிவு உறு நார் அற்று அழல் மதி வீச
சிலை பொரு கால் உற்று அதனாலே

பனி படு சோலை குயில் அது கூவ
குழல் தனி ஓசை தரலாலே

மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர
தனி மிக வாடி தளராதே

மனம் உற வாழ திரு மணி மார்பத்து
அருள் முருகா உற்று அணைவாயே

கிரி தனில் வேல் விட்டு இரு தொளை ஆக
தொடு குமரா முத்தமிழோனே

கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி
திரு வளர் சேலத்து அமர்வோனே

பொரு கிரி சூர கிளை அது மாள
தனி மயில் ஏறி திரிவோனே

புகர் முக வேழ கணபதியாருக்கு
இளைய விநோத பெருமாளே

பரிவு உறு = இரக்கம் கொண்ட நார் = அன்பு அற்று = சற்றும் இல்லாமல் அழல் மதி = நெருப்பை நிலவு வீச = வீசுவதாலும் சிலை = (பொதிய) மலையினின்றும் பொரு = பொருந்தி வரும் கால் = தென்றல் காற்று உற்றனாலே = மேலே படுவதாலும்

பனிபடு = குளிர்ச்சியுள்ள சோலைக் குயில் அது = சோலையில் குயில் கூவுவதாலும் குழல் = புல்லாங்குழலின் தனி ஓசை = ஒப்பற்ற இன்னிசையை தரலாலே = தருவதாலும்

மருவு இயல் மாதுக்கு = பொருந்திய தன்மையில் உள்ள இந்தப் பெண்ணின் இரு கயல் = இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் சோர = சோர்வு அடையும்படி தனி = தனியே கிடந்து மிக வாடி = மிகவும் வாட்டமுற்று தளராதே = தளர்ச்சி உறாமல்

மனம் உற = மனம் ஒருமைப்பட்டு வாழ = வாழும் பொருட்டு திரு மணி மார்பத்து = (உனது) அழகிய இரத்தின மாலை அணிந்த மார்பில் அருள் முருகா = அருள் மூர்த்தியாகிய முருகனே உற்று = நீ வந்து அணைவாயே = அணைந்து அருள்வாயாக

கிரிதனில் = கிரவுஞ்ச மலை மீது வேல் விட்டு = வேலயுதத்தைச் செலுத்தி இரு = பெரிய தொளையாக = தொளைபடும்படி தொடு குமரா = செலுத்திய குமரனே முத்தமிழோனே = முத்தமிழ்ப் பெருமானே

கிளர் ஒளி = பேரொளிச் சொருபனாகிய நாதர்க்கு = தேவனாகிய சிவ பெருமானுக்கு ஒரு = ஒப்பற்ற மகனாகி = பிள்ளையாகி திரு வளர் = செல்வம் பெருகி ஓங்கும் சேலத்து அமர்வோனே = சேலத்தில் வீற்றிருப்பவனே

பொரு கிரி = போருக்கு எழுந்த எழு கிரியும் சூரக் கிளை அது = சூரனும் அவனுடைய சுற்றத்தாரும் மாள = இறக்க தனி மயில் ஏறி = ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி திரிவோனே = (உலகை) வலம் வந்தவனே

புகர் முக = புள்ளியை உடைய் முகத்தைக் கொண்ட கணபதியாருக்கு = விநாயகப் பெருமானுக்கு இளைய பெருமாளே = தம்பியே விநோதப் பெருமாளே = அற்புதப் பெருமாளே

சுருக்க உரை

அன்பு சற்றும் இல்லாமல் நிலவு நெருப்பை வீசுவதாலும், தென்றல் காற்று மேலே படுவதாலும், சோலையில் குயில்கள் கூவுதலாலும், குழல் இன்னிசையைத் தருவதாலும், தனிமையில் இருக்கும் இந்தப் பெண்ணின் கயல் மீன் போன்ற கண்கள் சோர்ந்து வாட்டம் உறாமல், அவள் நிம்மதியாக வாழும் பொருட்டு, முருகா, நீ வந்து, அவளை அணைந்தருள்வாயாக

கிரெளஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அதைத் தொளை பட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழ்ப் பெருமாளே, பேரொளி வடிவான சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, செல்வம் பெருகி ஓங்கும் சேலத்தில் வீற்றிருப்பவனே, ஏழு கிரியும், சூரனும் அவன் சுற்றமும் இறக்க, மயில் மேல் ஏறி உலகை வலம் வந்தவனே, கணபதிக்குத் தம்பியே அற்புதப் பெருமாளே, காம நோயால் வாடும் இந்தப்  பெண்ணை அணைந்தருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்

நிலவு, தென்றல், குயில், குழல், இவை விரத தாபம் கொண்டவர்களுக்கு வேதனை தருவன.  தெரிவினில் நடவார் என்ற திருப்புகழைப் பார்க்கவும்

ஒப்புக:
தனி மயில் ஏறித் திரிவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
............... திருப்புகழ், தொடத்து