F

படிப்போர்

Showing posts with label செண்டு. Show all posts

Tuesday, 4 September 2012

39.பஞ்ச பாதக

“

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி 
        குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக 
        பங்க வாண்முக முடுகிய நெடுகிய         திரிசூலம் 
பந்த பாசமு மருவிய கரதல 
        மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு 
        பண்பி லாதொறு பகடது முதுகினில்     யமராஜன் 
அஞ்ச வேவரு மவதர மதிலொரு 
        தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் 
        அன்பி னாலுன தடிபுக ழடிமையெ        னெதிரேநீ 
அண்ட கோளகை வெடிபட இடிபட 
        எண்டி சாமுக மடமட நடமிடும் 
        அந்தி மோகர மயிலினி லியலுடன்        வரவேணும் 
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய 
        ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென 
        வந்த தூயவெண் முறுவலு மிருகுழை    யளவோடும் 
மன்றல் வாரிச நயனமு மழகிய 
        குன்ற வாணர்த மடமகள் தடமுலை 
        மந்த ராசல மிசைதுயி லழகிய                மணவாளா 
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை 
        விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து 
        திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு 
செண்டு மோதின ரரசரு ளதிபதி 
        தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு 
        செநதில் மாநக ரினிதுறை யமரர்கள்     பெருமாளே.

- திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை 

பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு எரி 
குஞ்சி கூர் விட(ம்) மதர் விழி பிலவக 
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் 

பஞ்ச பாதகம் உறு = (கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை) எனப்படும் ஐந்து பாதகமும் குடி கொண்டது போல் பிறை எயிறு = பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்)உள்ள பற்கள் எரி குஞ்சி = நெருப்புப் போன்ற தலை மயிர் கூர்விட மதர் = கொடிய விஷம் ததும்பும்   விழி = கண் பிலவக = குரங்கு போன்ற. (குகையின் உட்புறம் போன்று) பங்க = பயங்கரமான வாள் முகம் = ஒளி வீசும் முகம் முடுகிய = விரைந்து செல்ல வல்ல நெடுகிய = நீண்ட திரி சூலம் = முத்தலைச் சூலம். 

பந்த பாசமும் மருவிய கர தலம் 
மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு 
பண்பி(ல்)லாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் 

பந்த பாசமும் = கட்டுதற்கு வைத்துள்ள பாசக் கயிற்றை மருவிய = கொண்டுள்ள கரதல = கையை உடையவன்  மிஞ்சி = மிகுத்து  நீடிய = நீண்ட கரு முகில் உருவொடு = கரிய மேகம் போன்ற உருவம்  பண்பிலாத ஒரு = அழகு இல்லாத ஒரு பகடு அது முதுகினில் = எருமையின் முதுகில் யமராஜன் = யமன். 

அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு 
தஞ்சம் ஆகிய வழிவழி அருள் பெறும் 
அன்பினால் உனது அடி  புகழ அடிமை என் எதிரே நீ 

அஞ்சவே = (நான்) பயப்படும்படி வரும் = வருகின்ற அவதரம் அதில் = அந்தச் சமயத்தில் ஒரு = ஒப்பற்ற தஞ்சமாகிய = உனக்கே அடைக்கலமாய் வழிவழி = தலைமுறை தலைமுறையாக அருள் பெறும் = உனது திருவருளைப் பெறவே விரும்பும் அன்பினால் = அன்பு கொண்டு உனது அடி புகழ = உன் திருவடியைப் புகழும் அடிமை என் எதிரே நீ = அடிமையாகிய என் எதிரே நீ. 

அண்ட கோளகை வெடிபட இடிபட 
எண் திசா முகம் மடமட நடம் இடும் 
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் 

அண்ட கோளகை = அண்ட முகடு வெடிபட இடிபட = வெடி படவும், இடி படவும் எண் திசை முகம் = எட்டுத் திக்குப் பக்கங்களும் மடமட நடமிடும் = மடமட என்று நடனம் செய்ய  அந்த மோகர = அந்த உக்கிரமான மயிலினில் = மயிலின் மேல்  இயலுடன் வருவேணும் = அன்புடன் வரவேண்டும். 

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய 
ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என 
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் 

மஞ்சு போல் = (கரிய) மேகம் போல் வளர் = வளர்ந்துள்ள அளகமும் = கூந்தலும் இளகிய = மெல்லிய ரஞ்சித =  இன்பகரமான அம்ருத = அமிர்தம் போன்ற வசனமும் = பேச்சும்.  நிலவு என வந்த = நிலவைப் போல் விளங்கும் தூய = பரிசுத்தமான வெண் முறுவலும் = வெண்மையான பற்களும் இரு குழை அளவோடும் = இரண்டு குழை (காது) அளவும் ஓடுகின்ற.

மன்றல் வாரிச நயனமும் அழகிய 
குன்ற வாழ் நர் தம் மடமகள் தட முலை 
மந்தர அசல மிசை துயில் அழகிய  மணவாளா 

மன்றல் = நறு மணம் உள்ள வாரிசத = தாமரை போன்ற நயனமும் = கண்களும் அழகிய = அழகுள்ள குன்ற வாழ்நர் தம் = குன்றில் வாழும் வேடர்களின் மட மகள் = மட மகளாகிய வள்ளியின் தட முலை = பருத்த கொங்கைகளாகிய மந்தர அசலம் மிசை = மந்தர மலை மீது துயில் = தூங்கும் அழகிய மணவாளா = அழகிய கணவனே

செம் சொல் மா திசை வட திசை குட திசை 
விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து 
திங்கள் வேணியர் பல தளி தொழுது  உயர் மக மேரு

செம்சொல் மாதிசை = தமிழ்த் திசை (தெற்கு) வட திசை = வடக்கு குட திசை = மேற்கு விஞ்சு = மேலான கீழ்த் திசை = கிழக்கு சகலமும் = முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் இகல் செய்து = போர் செய்து திங்கள் வேணியர் = நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல தளி = பல கோயில் களையும் தொழுது = தொழுது உயர் மக மேரு = உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது. 

செண்டு மோதினர் அரசருள் அதிபதி 
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு 
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. 

செண்டு மோதினர் = செண்டை எறிந்த அரசருள் அதிபதி = அரசர்களுக்கு அதிபதியே தொண்டர் ஆதியும் = தொண்டர் முதலானோர் வழிவழி = வழிவழி அடிமையாக இருந்து நெறி பெறு = முத்தி பெற (அருளிய) செந்தில் மா நகரில் = திருச்செந்தூரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே = இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 

சுருக்க உரை 

பஞ்ச மா பாதகமும் குடிகொண்ட மாதிரி பயங்கரமான பற்களும், நெருப்புப் போன்ற கண்களும், குரங்கு போன்ற முகமும், முத்தலைச் சூலமும், பாசக் கயிறும் கொண்டு, எருமையின் மீது வரும் யமன், நான் அஞ்சும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில், உன்னையே நான் புகலிடமாகக் கொண்டு, உனது திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரில், நீ,  அன்புடன் மயில் மீது ஏறி வரவேண்டும்.

மேகம் போன்ற கரிய கூந்தலும், இனிய பேச்சும், நிலவு போல் வெளுத்த பற்களும், இரண்டு குழைகளும், நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாய், வள்ளி மலைக்  குன்றில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த தனங்களின் மேல் உறையும் அழகிய  கணவனே. பல திசைகளிலும் போர் செய்து, சிவபெருமானுடைய கோயில்களையும் தொழுது, உயர்ந்த மேரு மலையின் மேல் செண்டை எறிந்த அரசருக்கு அரசே. தொண்டர்கள் வழி வழி அடிமையாக இருந்து, முத்தி பெற அருளிய திருச்செந்தூர் மாநகரில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. யமன் வரும் சமயத்தில் மயில் மீது வரவேண்டும்.

விளக்கக் குறிப்புகள் 

அ. செண்டு மோதின ரரசரு ளதிபதி.... 
செண்டு = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவி.
முருகன் உக்கிர குமாரனாய் அரசாண்ட போது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக்  குறிக்கும். 
       (கனகந்திரன் கின்றபெ ருங்கிரி 
      தனின்வந்துத கன்தகன் என்றிடு 
      கதிர் மிஞ்சிய செண்டைஎ றிந்திடு   கதியோனே)....திருப்புகழ் (கனகந்திரள்). 

” tag:

Friday, 24 August 2012

8. கனகந்திரள்

“

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு        கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு         முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
        கடல்முன்புக டைந்தப ரம்பரர்
        படரும்புயல் என்றவர் அன்புகொள்       மருகோனே
பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
        சிறியன்புலை யன்கொலை யன்புரி
        பவமின்றுக ழிந்திட வந்தருள்           புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
        புரமுந்திரி வென்றிட இன்புடன்
        அழலுந்தந குந்திறல் கொண்டவர்       புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
        டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
        அரிர்கின்றிட அண்டநெ ரிந்திட           வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
        உடலுங்குட லுங்கிழி கொண்டிட
        மயில்வென்றனில் வந்தரு ளுங்கள்     பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
        உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
        வளமொன்றுப ரங்கிரி வந்தருள்        பெருமாளே.

-திருப்பரங்குன்றம்

பதம் பிரித்தலும் பதவுரையும்

கனகம் திரள்கின்ற பெரும் கிரி
தனில் வந்து தகன் தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

கனகம் திரள்கின்ற = பொன் கொழிக்கின்ற. பெரும் கிரி தனில் = பெரிய மலையாகிய மேரு மலையை. வந்து = வந்தடைந்து. தகன் தகன் என்றிடு = தகன் தகன் என்று.(தக தக என மின்னி) கதிர் மிஞ்சிய = ஒளி அதிகமாக வீசிய. செண்டை = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியை. எறிந்திடு கதியோனே = எறிந்து (பொன் பெற்ற திருவிளையாடலைப் புரிந்த) சிறப்பு வாய்ந்தவனே.

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர்
கவளம் தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

கடம் மிஞ்சி = மதம் அதிகரித்து. அநந்த விதம் புணர் = பலவிதமாகப் புணர்ச்சியை மேற்கொண்டு. கவளம் தனை உண்டு = வாயளவு கொண்ட உணவை உண்டு. வளர்ந்திடு = வளர்ந்த. கரியின் துணை என்று = யானையாகிய விநாயகனின் துணைவன் என்று. பிறந்திடு = பிறந்திட்ட. முருகோனே = அழகு வாய்ந்தவனே.

பனகம் துயில்கின்ற திறம் புனை
கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே

பனகம் துயில்கின்ற = பாம்பாகிய ஆதி சேடன் மேல் அரிதுயில் கொள்ளும். திறம் புனை = தன்மையைக் கொண்ட. கடல் முன்பு கடைந்த = திருப்பாற் கடலை முன்பு கடைந்த. பரம்பரர் = கடவுளும். படரும் புயல் என்றவர் = விரிந்த மேக வண்ணனுமாகிய திருமால். அன்பு கொள் மருகோனே = அன்புகொண்ட மருகனே.

பல துன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே

பல துன்பம் உழன்று = பலவிதமான துன்பங்களால் அலைச்சல் உற்று. கலங்கிய = மனக் கலக்கம் அடைந்த. சிறியன் = சிறியேனும். புலையன் = புலைத் தொழிலைக் கொண்டவனும். கொலையன் = கொலைத் தொழிலைச் செய்பவனும் ஆகிய நான் செய்யும். பவம் இன்று கழிந்திட = பாவம் இன்று ஒழிந்திட. வந்து அருள் புரிவாயே = வந்து திருவருள் செய்வாயாக

அனகன் பெயர் நின்று உருளும் திரி
புரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே

அனகன் பெயர் = தூயவன் என்ற பெயர் வாய்ந்து. நின்று உருளும் = நின்று உருண்டு. திரி புரமும் திரி = முப்புரங்களையும் உலாவி. வென்றிட = வெல்லும்படி. இன்புடன் = இன்ப நிலையில். அழல் உந்த = தீ வெளிப்பட. நகும் = சிரித்த. திறல் கொண்டவர் = திறல் கொண்டவராகிய சிவபெருமானின். புதல்வோனே = மகனே.

அடல் வந்து முழங்கி இடும் பறை
டுடுடுண்டுடு.....................என 
    அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்

அடல் வந்து = வலிமையுடன். முழங்கிடும் பறை = முழங்குகின்ற பறை வாத்தியங்கள். டுடுடுண்டுடு.... என = இவ்வொலியுடன். அதிர்கின்றிட = அதிர்ந்த. அண்டம் நெரிந்திட = அண்டங்கள் நெரிந்து போகும்படி. வரு சூரர் = வருகின்ற அசுரர்களுடைய.

மனமும் தழல் சென்றிட அன்று அவர்
உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென் தனில் வந்து அருளும் கள் பெரியோனே

மனமும் தழல் சென்றிட = மனத்தில் எரி பாயவும். அன்று = அப்போது. அவர் = அவர்களுடைய. உடலும் குடலும் கிழி கொண்டிட = உடலும், குடலும் கிழியும்படி. மயில் = மயிலின். வென் தனில் = முதுகில். வந்தருளும் = வந்து அருளிய. கள் பெரியோனே = பெருமை வாய்ந்த பெரியோனே.

மதியும் கதிரும் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே.

மதியும் = சந்திரனும். கதிரும் = சூரியனும். தடவும்படி = தடவிச் செல்லும் அளவுக்கு. உயர்கின்ற = உயர்ந்துள்ள. வனங்கள் பொருந்திய = சோலைகள் பொருந்தியுள்ள. வளம் ஒன்று(ம்) = வளமை பொருந்திய. பரங்கிரி வந்து அருள் பெருமாளே = திருப்பரங்கிரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும், கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும், கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும், புலையனும், கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக. 
தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. செண்டை எறிந்திடு கதியோனே...
பாண்டிய நாட்டில் மழையில்லாமையால், சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன், மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

[செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில் செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்க்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
    பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
இ. மயில் வென் தனில்.....
    வென் = முதுகு. 