F

படிப்போர்

Showing posts with label திருப்பரங்குன்றம். Show all posts

Saturday, 25 August 2012

10.தடக்கை

“

தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
    டமிழ்க்குத் தஞ்சமென்                 றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
    தளர்ச்சிப் பம்பரந்                       தனையூசற்
கடத்தைத் துன்பமண்  சடத்தைத் துஞ்சிடுங்
   கலத்தைப் பஞ்சஇந்                    த்ரியவாழ்வைக்  
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் 
   கழற்குத் தொண்டுகொண்              டருள்வாயே 
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் 
   புரக்கக் கஞ்சைமன்                       பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
   பரத்தைக் கொண்டிடுந்                  தனிவேலா 
குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்    
   குலத்திற் கங்கைதன்                     சிறியோனே 
குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் 
   குவித்துக் கும்பிடும்                      பெருமாளே.
-    திருப்பரங்குன்றம்

பதம் பிரித்து பதவுரை
தடக்கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண்
தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை

தடக்கை = (உனது) பெரிய  கை. பங்கயம் = தாமரை போன்ற பதுமநிதியாகும். கொடைக்கு = கொடைச் சிறப்பில். கொண்டல் = மேகம் போல்வாய். தண் = இனிய. தமிழ்க்கு = தமிழ் மொழிக்கும் புலவர்களுக்கும். தஞ்சம் = (நீ) புகலிடமாவாய். என்று = என்று. உலகோரை = உலகத்தவரிடம். 

தவித்து சென்று இரந்து உளத்தில் புண் படும்
தளர்ச்சி பம்பரம் தனை ஊசல்

தவித்துச் சென்று = தவிப்புடன் சென்று. இரந்து = யாசித்து. உளத்தில் புண்படும் = மனது புண்பட்டு. தளர்ச்சி = தளர்ச்சியுறும். பம்பரம் தனை = (இந்தப்) பம்பரத்தை. ஊசல் = பதனிழிந்த (மன தடுமாற்றமடந்த).
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும்
கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை

கடத்தை = பாண்டத்தை. துன்ப = துன்பத்துக்கு ஈடான. மண் சடத்தை = மண் உடலை. துஞ்சிடும் = அழிந்து போகும். கலத்தை = பாண்டத்தை. பஞ்ச இந்த்ரிய வாழ்வை = ஐந்து பொறிகளின் வாயிலாக அனுபவிக்கும் வாழ்வை.
கணத்தில் சென்று இடம் திருத்தி  தண்டை அம்
கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே

கணத்தில் = நொடிப் பொழுதில். சென்று = வந்து. இடம் திருத்தி = (என் உள்ளமாகிய) இடத்தைத் திருத்தி. தண்டை அம் கழற்கு = தண்டைகள் அணிந்த (உன்) அழகிய திருவடிக்கு. தொண்டு கொண்டு அருள்வாய் = தொண்டு செய்யும்படி அருள் புரிவாயாக.
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன்
புரக்க கஞ்சை மன் பணியாக

படைக்கப் பங்கயன் = படைப்பதற்கு தாமரை மலரில் உறையும் பிரமன். துடைக்கச் சங்கரன் = அழிப்பதற்குச் சிவபெருமான். புரக்க = காப்பதற்கு. கஞ்சை மன் = இலக்குமி நாயகன். பணியாக = (என) அவரவர் பணி கொள்ளுமாறு. 
பணித்து தம் பயம் தணித்து சந்ததம்
பரத்தை கொண்டிடும் தனி வேலா

பணித்து = நியமித்து. தம் பயம் தணித்து = அவர்களுடைய பயங்களை நீக்கி. சந்ததம் = எப்போதும். பரத்தைக் கொண்டிடும் = மேலாம் நிலையைக் கொண்டிருக்கும். தனி வேல் = ஒப்பற்ற வேலனே.
குடக்கு தென் பரம் பொருப்பில் தங்கும் அம்  
குலத்தில் கங்கை தன் சிறியோனே

குடக்கு = (மதுரைக்கு) மேற்கே உள்ள. தென் பரம் பொருப்பில் = அழகிய திருப்பரங்குன்றத்தில் . தங்கும் = வீ ற்றிருக்கும். அம் = அழகிய. குலத்தில் = உயர் குலத்தைச் சேர்ந்த. கங்கை தன் சிறியோனே = கங்கையின் குழந்தையே

    குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம்
    குவித்து கும்பிடும் பெருமாளே.

குறப் பெண் கொம்பை = வேடுவர் பெண்ணாகிய பூங்கொம்பு போன்ற வள்ளியை. புனத்தில் = தினைப் புனத்தில்.  செம் கரம் குவித்து = செவ்விய கைகளைக் கூப்பி. கும்பிடும் பெருமாளே = வணங்கும் தனிப்பெரும் தலைவரே.
சுருக்க உரை

உமது கைகள் தாமரை போன்றவை.  கொடையில் நீ  மேகம் போன்றவன். தமிழ்ப் புலவர்களுக்கு நீ ஒரு புகலிடமாவாய், என்று உலகத்தாரிடம் சென்று, யாசித்து, உள்ளம் புண் பட்டு தளர்ச்சி உறும், இந்த ஊசிப் போகும் பாண்டத்தை, ஐந்து பொறிகளால் இன்பம் துய்த்து வாழும் இந்த மண் பாண்டத்தை, நொடிப் பொழுதில் வந்து, என் உள்ளத்தைத் திருத்தி, உனக்குத் தொண்டு செய்யும்படி அருள் புரிவாயாக.
படைக்கப் பிரமன், காக்க இலக்குமி நாயகன். அழிக்கச் சங்கரன் என்று பணிகளை நியமித்து, மேலாம் நிலையைப் பூண்டிருக்கும் வேலனே, திருப்பரங்குன்றத்தில் உறையும் கங்கையின் குழந்தையே, குறப்பெண்ணாகிய வள்ளியைக் கரம் கூப்பி வணங்கும் பெருமாளே, என் உள்ளத்தைத் திருத்தி அமைத்து நான் தொண்டு செய்ய அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
குடக்கு = மேற்கு.
    (மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
    இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வா
    யவிழ்ந்த)...திருமுருகாற்றுப்படை 71. 
” tag:

9.சந்ததம்

“

சந்ததம் பந்தத்                  தொடராலே
        சஞ்சலந் துஞ்சித்       திரியாதே
கந்தனென் றென்றுற்          றுனைநாளும்
        கண்டுகொண் டன்புற்  றிடுவேனோ
தந்தியின் கொம்பைப்          புணர்வோனே
        சங்கரன் பங்கிற்         சிவைபாலா
செந்திலங் கண்டிக்           கதிர்வேலா
        தென்பரங் குன்றிற்    பெருமாளே.
-    திருப்பரங்குன்றம்
பதம் பிரித்தல்

சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே

கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா

செந்தில் அம் கண்டி கதிர் வேலா
தென் பரங்குன்றில் பெருமாளே.

பத உரை

சந்ததம் = எப்போதும். பந்த = பாச. தொடராலே = தொடர்பினால். சஞ்சலம் = கவலையால். துஞ்சி = சோர்ந்து. திரியாதே = திரியாமல்.

கந்தன் என்று என்று உற்று = கந்தன் என்று அடிக்கடி கூறி. உனை நாளும் = உன்னை நாள்தோறும். கண்டு கொண்டு = மனக்கண்ணால் பார்த்து. அன்பு உற்றிடுவேனோ = அன்பு கொள்வேனோ?

தந்தியின் கொம்பை = யானையால் வளர்க்கப்பட்ட பூங்கொம்பு போன்ற தேவசேனையை. புணர்வோனே = சேர்பவனே. சங்கரன் = சிவபெருமான். பங்கில் = பக்கத்திலுள்ள. சிவை பாலா = பார்வதியின் குழந்தையே.

செந்தில் = திருச்செந்தூர். அம் = அழகிய. கண்டி = கண்டி என்னும் தலத்தில். கதிர் வேலா = (உறையும்) ஒளி வீசும் வேலாயுதனே. தென் பரங்குன்றில் பெருமாளே = தென்நாட்டில் இருக்கும் திருப்பங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமாளே   

சுருக்க உரை

எப்போதும் பாசத் தெடர்பினால் கவலை அடைந்து சோர்ந்து திரியாமல், கந்தன் என்று அடிக்கடி கூறி, உன்னை அகக்கண்ணால் பார்த்து அன்பு கொள்வேனோ?
ஐராவதம் வளர்த்த பூங்கொம்பு போன்ற தேவசேனையைச் சேர்பவனே. சிவபெருமான் பக்கத்திலுள்ள பார்வதியின் குழந்தையே. திருச்செந்தூர், கண்டி ஆகிய தலங்களில் உறையும் வேலாயுதனே. திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. உன் மீது அன்பு கொள்வேனோ?

விளக்கக் குறிப்புகள்
அ. பந்தத் தொடராலே...
    (மட்டுர்குழல் மங்கையர் மையல்வலைப்
    பட்டுசல் படும்பரிசென் றொழிவேன்)...கந்தர் அனுபூதி 9.
ஆ. கந்தன் என்று என்று உற்று உனை நாளும்....
   (இருள் இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
  எங்கு எழுந்தருளுவது இனியே).. மாணிக்கவாசகர் (திருவாசகம்) பிடித்த பத்து 4.
   
Friday, 24 August 2012

8. கனகந்திரள்

“

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு        கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு         முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
        கடல்முன்புக டைந்தப ரம்பரர்
        படரும்புயல் என்றவர் அன்புகொள்       மருகோனே
பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
        சிறியன்புலை யன்கொலை யன்புரி
        பவமின்றுக ழிந்திட வந்தருள்           புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
        புரமுந்திரி வென்றிட இன்புடன்
        அழலுந்தந குந்திறல் கொண்டவர்       புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
        டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
        அரிர்கின்றிட அண்டநெ ரிந்திட           வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
        உடலுங்குட லுங்கிழி கொண்டிட
        மயில்வென்றனில் வந்தரு ளுங்கள்     பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
        உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
        வளமொன்றுப ரங்கிரி வந்தருள்        பெருமாளே.

-திருப்பரங்குன்றம்

பதம் பிரித்தலும் பதவுரையும்

கனகம் திரள்கின்ற பெரும் கிரி
தனில் வந்து தகன் தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

கனகம் திரள்கின்ற = பொன் கொழிக்கின்ற. பெரும் கிரி தனில் = பெரிய மலையாகிய மேரு மலையை. வந்து = வந்தடைந்து. தகன் தகன் என்றிடு = தகன் தகன் என்று.(தக தக என மின்னி) கதிர் மிஞ்சிய = ஒளி அதிகமாக வீசிய. செண்டை = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியை. எறிந்திடு கதியோனே = எறிந்து (பொன் பெற்ற திருவிளையாடலைப் புரிந்த) சிறப்பு வாய்ந்தவனே.

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர்
கவளம் தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

கடம் மிஞ்சி = மதம் அதிகரித்து. அநந்த விதம் புணர் = பலவிதமாகப் புணர்ச்சியை மேற்கொண்டு. கவளம் தனை உண்டு = வாயளவு கொண்ட உணவை உண்டு. வளர்ந்திடு = வளர்ந்த. கரியின் துணை என்று = யானையாகிய விநாயகனின் துணைவன் என்று. பிறந்திடு = பிறந்திட்ட. முருகோனே = அழகு வாய்ந்தவனே.

பனகம் துயில்கின்ற திறம் புனை
கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே

பனகம் துயில்கின்ற = பாம்பாகிய ஆதி சேடன் மேல் அரிதுயில் கொள்ளும். திறம் புனை = தன்மையைக் கொண்ட. கடல் முன்பு கடைந்த = திருப்பாற் கடலை முன்பு கடைந்த. பரம்பரர் = கடவுளும். படரும் புயல் என்றவர் = விரிந்த மேக வண்ணனுமாகிய திருமால். அன்பு கொள் மருகோனே = அன்புகொண்ட மருகனே.

பல துன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே

பல துன்பம் உழன்று = பலவிதமான துன்பங்களால் அலைச்சல் உற்று. கலங்கிய = மனக் கலக்கம் அடைந்த. சிறியன் = சிறியேனும். புலையன் = புலைத் தொழிலைக் கொண்டவனும். கொலையன் = கொலைத் தொழிலைச் செய்பவனும் ஆகிய நான் செய்யும். பவம் இன்று கழிந்திட = பாவம் இன்று ஒழிந்திட. வந்து அருள் புரிவாயே = வந்து திருவருள் செய்வாயாக

அனகன் பெயர் நின்று உருளும் திரி
புரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே

அனகன் பெயர் = தூயவன் என்ற பெயர் வாய்ந்து. நின்று உருளும் = நின்று உருண்டு. திரி புரமும் திரி = முப்புரங்களையும் உலாவி. வென்றிட = வெல்லும்படி. இன்புடன் = இன்ப நிலையில். அழல் உந்த = தீ வெளிப்பட. நகும் = சிரித்த. திறல் கொண்டவர் = திறல் கொண்டவராகிய சிவபெருமானின். புதல்வோனே = மகனே.

அடல் வந்து முழங்கி இடும் பறை
டுடுடுண்டுடு.....................என 
    அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்

அடல் வந்து = வலிமையுடன். முழங்கிடும் பறை = முழங்குகின்ற பறை வாத்தியங்கள். டுடுடுண்டுடு.... என = இவ்வொலியுடன். அதிர்கின்றிட = அதிர்ந்த. அண்டம் நெரிந்திட = அண்டங்கள் நெரிந்து போகும்படி. வரு சூரர் = வருகின்ற அசுரர்களுடைய.

மனமும் தழல் சென்றிட அன்று அவர்
உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென் தனில் வந்து அருளும் கள் பெரியோனே

மனமும் தழல் சென்றிட = மனத்தில் எரி பாயவும். அன்று = அப்போது. அவர் = அவர்களுடைய. உடலும் குடலும் கிழி கொண்டிட = உடலும், குடலும் கிழியும்படி. மயில் = மயிலின். வென் தனில் = முதுகில். வந்தருளும் = வந்து அருளிய. கள் பெரியோனே = பெருமை வாய்ந்த பெரியோனே.

மதியும் கதிரும் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே.

மதியும் = சந்திரனும். கதிரும் = சூரியனும். தடவும்படி = தடவிச் செல்லும் அளவுக்கு. உயர்கின்ற = உயர்ந்துள்ள. வனங்கள் பொருந்திய = சோலைகள் பொருந்தியுள்ள. வளம் ஒன்று(ம்) = வளமை பொருந்திய. பரங்கிரி வந்து அருள் பெருமாளே = திருப்பரங்கிரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும், கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும், கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும், புலையனும், கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக. 
தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. செண்டை எறிந்திடு கதியோனே...
பாண்டிய நாட்டில் மழையில்லாமையால், சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன், மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

[செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில் செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்க்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
    பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
இ. மயில் வென் தனில்.....
    வென் = முதுகு. 