F

படிப்போர்

Showing posts with label தவம். Show all posts

Sunday, 8 June 2014

261.அவசியமுன்

“
261
திருமுருகன்பூண்டி

ஆயிரம் திருப்புகழிலும் இல்லாத ஒரு வேண்டுகோளை விடுக்கிறார் இந்த ஸ்தலத் திருப்புகழில்  “ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன் திருவடியைத் தொழுவதற்கு அருள் புரிவாயாக” என்று 
                 
தனதனனந் தாந்தத்    தனதான

     அவசியமுன் வேண்டிப்              பலகாலும்
           அறிவினுணர்ந்த தாண்டுக்    கொருநாளில்
      தபசெபமுந் தீண்டிக்                   கனிவாகிச்
           சரணமதும் பூண்டற்            கருள்வாயே
      சவதமொடுந் தாண்டித்             தகரூர்வாய்
           சடுசமயங் காண்டற்             கரியோனே
      சிவகுமரன் பீண்டிற்                பெயரோனே
              திருமுருகன் பூண்டிப்                    பெருமாளே
 
பதம் பிரித்து உரை

அவசியம் உன் பல காலும் வேண்டி
அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்

அவசியம் = (உன்னைப் பணிவது) இன்றியமையாதது என உணர்ந்து பல காலும் உன் வேண்டி = உன்னைப் பல முறையும் துதித்து அறிவின் உணர்ந்து = என்னுடைய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் = வருடத்துக்கு ஒரு நாளாவது

தவ செபமும் தீண்டி கனிவாகி
சரணம் அது பூண்டற்கு அருள்வாயே

தவ செபமும் தீண்டி = தவ ஒழிக்கத்தையும் செப ஒழுக்கத்தையும் மேற்கொண்டு. கனிவாகி= உள்ளம கனிந்து. சரணம் அது பூண்டற்கு = உனது திருவடியை (மனதில்) தரிப்பதற்கு. அருள்வாயே = அருள் செய்வாயாக.

சவதம் ஒடும் தாண்டி தகர் ஊர்வாய்
சடு சமயம் காண்டற்கு அரியோனே

சவதம் மொடு = இதை அடக்குவேன் என்னும் மன உறுதியுடன் (சபதம் கொண்டு) தாண்டி = குதித்து. தகர் ஊர்வாய் = ஆட்டின் மேல் ஏறிச் செலுத்துவாய் சடு சமயம் = ஆறு சமயத்தாராலும் காண்டற்கு அரியோனே = காணுதற்கு அரிதானவனே.

சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே
திரு முருகன் பூண்டி பெருமாளே.

சிவ குமர = சிவ பாலனே அன்பு ஈண்டில் = அன்பு கொண்டு நெருங்கில் பெயரோனே = (அங்ஙனம் நெருங்கியவர்களை) விட்டுப் பிரியாதவனே திருமுருகன் பூண்டிப் பெருமாளே = திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

உன்னைப் பணிவது அவசியம் என்று உணர்ந்து பல முறையும் துதித்து,என் அறிவில் உன்னை உணர்ந்து, ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன்
திருவடியைத் தரிப்பதற்கு அருள் புரிவாயாக. இதை அடக்குவேன் என்ற உறுதியுடன் ஆட்டின்மீது ஏறி அதைச் செலுத்துபவனே.

ஆறு சமயத்தாலும் காணுதற்கு அரியோனே, சிவ குமாரனே. அன்பு
கொண்டு நெருங்குபவரை விட்டுப் பிரியாதவனே, திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் உறைபவனே, உன் திருவடியைப் பூண்டற்கு அருள் செய்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

1. தகர் ஊர்வாய்....
தகரேறங் காராச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே  --- திருப்புகழ்,கனவாலங்
2. சடு சமயம் காண்டற்கு அரியோனே....
(சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத                        ---- திருப்புகழ், நிகரில்பஞ்ச. 3. அன்பு ஈண்டில் பெயரோனே.....
உண்மைப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார்.. –
                                                                     --சம்பந்தர் தேவாரம்.

4. தகர் ஊர்வாய்

முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார்.  அங்கு அமர்ந்த கோலத்தில் உள்ள  முருகனின் கிழே யானையும் ஆடும் வாகனமாக உல்ளது. சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு. சங்க இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’ எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது.

 “முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் இருப்பதற்கு  உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர். ஆமாம், ஆடு வாகனமானது எப்படி?

 விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன்  மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

 எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல்  தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.. ‘அசம் ( அஜம் – ஆடு) மேவிய பெருமாளே ( கனவாலங் – திருப்புகழ்) தகர் இவர் வல் (குன்றுங் குன்றுந் - திருப்புகழ்) என்று அருணகிரியார் குறிப்புடிகிறார்.

 இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, ‘இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார்.’. முருகன் சிரித்தான். ‘நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையின் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும்’, என்றார்.

 இன்னோரு வரலாறும் உண்டு. சிவபுராணத்தில் முருகனை பற்றிய கதை தான் அது. நாரதர் எங்கோயோ ஒடிப்போய்வீட்ட தன்னுடைய ஆட்டைப்பற்றிக் கேட்டார் ஒருமுறை.  அதைக்கண்டு பிடிக்குமாறு தன்படையை அனுப்பினான் முருகன்.  அந்த ஆட்டை விஷ்ணு இருந்த இடத்தில் கண்டு அதை எடுத்து வந்தனர். முருகன் அதன் மீது அமர்ந்து உலகை வலம் வந்து திரும்பினான். நாரதர் அந்த ஆட்டை திருப்பித்தர வேண்ட ‘இனி ஆடுகளை பலிதர வேண்டாம்’ என கூறிவிட்டு எதற்காக ஆட்டை பலி கொடுத்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாக சொல்லி முடித்தார்.  

அக்கினிக்கு வாகனம் ஆடு. அக்கினி சொருபமான முருகனுக்கு ஆடு வாகனம் பொருத்தம்தானே.

” tag:

Monday, 3 September 2012

35.தோலொடு

“

தோலொடு மூடிய கூரையை நம்பிப்
        பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
        சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப்          புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
        கோவையு லாமடல் கூறிய ழுந்திக்
        தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்      கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
        கோளனை மானமி லாவழி நெஞ்சக்
        காதக லோபவ்ரு தாவனை நிந்தைப்           புலையேனைக்
காரண காரிய வோகப்ர பஞ்சச்
        சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
        காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற்            றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற்
        பாலனை மோதப ராதன பண்டப்
        பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்        றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
        சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
        பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்   கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற்
        றீதவள் வாழ்புன மாமென முந்தித்
        தேமொழி பாளித கோமள இன்பக்              கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்
        தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
        சீரலை வாய்நகர் மேவிய கந்தப்                  பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை

தோலோடு மூடிய கூரையை நம்பி
பாவையர் தோதக லீலை நிரம்பி
சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான

தோலொடு மூடிய = தோலால் மூடப்பட்ட கூரையை நம்பி = கூரை போன்ற உடலை நம்பி பாவையர் = மாதர்களுடைய தோதக லீலை நிரம்பி = வஞ்சக விளையாட்டுகள் நிரம்புவதால்  சூழ் = (அவர்களுக்கு)  வேண்டிய பொருள் தேடிட = பொருளைத் தேடுவதற்காக ஓடி வருந்தி = ஓடியும் வருந்தியும் புதிதான = புது விதமான.

தூது ஒடு நான்மணிமாலை ப்ரபந்த
கோவை உலா மடல் கூறி அழுந்தி
தோம் உறு காளையர் வாசல் புக்கு அல(a)மரும்

தூதொடு = தூது மற்றும் நான் மணி மாலை ப்ரபந்த(ம்) கோவை உலா மடல் =  இவ்விதமான (நூல் வகைகளை) கூறி = பாடி அழுந்தி = (அதிலேயே) ஈடுபட்டு தோம் உறு = குற்றம் உள்ள காளையர் வாசல் தோறும் = மக்களுடைய வாசல் தோறும் புக்கு = புகுந்து அலமரும் = வருந்துகின்ற.

காலனை வீணனை நீதி கொடும் பொய்
கோளனை மானம் இலா வழி நெஞ்ச
காதக(ன்) லோப(ன்) வ்ருதாவனை நிந்தை புலையேனை

காலனை = கால்களை உடையவனான வீணனை = பயனற்றவனை நீதி கெடும் பொய்க் கோளனை = நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை மானம் இல்லா = மானம் இல்லாது அழிந்து வழி நெஞ்சக் கதக(னை) = ஒடுங்கும் நெஞ்சம் உடையவனை  லோப வ்ருதாவனை = (பேராசை) கொண்ட லோப குணம் படைத்த பயனற்றவனை நிந்தை = நிந்திக்கப்படும். புலையோனை = கீழ் மகனை

காரண காரியவோக ப்ரபஞ்ச
சோகம் எ(ல்)லாம் அற வாழ்வுற நம்பி
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ

காரண காரியவோக = காரணம், காரியம் இவை தொடர்புடன் வரும்   ப்ரபஞ்ச = இந்த உலக வாழ்வில்  சோகம் எல்லாம் அற = துன்பங்கள் எல்லாம் நீங்கவும்  வாழ்வுற =  நல் வாழ்வு சேரவும்  நம்பி = விரும்பி  காசு அறு = குற்றமற்ற  வாரி = செல்வமான. மெய்ஞ் ஞானதவம் = மெய்ஞ்ஞான தவ நிலையை  சற்று அருளாதோ = கொஞ்சம் எனக்கு அருளலாகாதோ?

பால் அ(ன்)னம் மீது மன் நான் முக செம் பொன்
பாலனை மோது அபராதன பண்டு அ
பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி

பால் அன்னம் மீது = பால் போல் வெள்ளை நிறமுள்ள அன்னத்தின் மீது மன் = வீற்றிருக்கும் நான் முக = நான்கு முகங்களைக் கொண்ட செம் பொன் =செம் பொன் நிறம் கொண்ட பாலனை = (படைத்தல் தொழில் செய்யும்) பாலகனாகிய பிரமனை மோது அபராதன = மோதித் தண்டனைவிதித்தவனே பண்டு அப் பாரிய = முன்பு அந்தப் பெரிய மாருதி = அனுமனின் தோள் மிசை = தோளின் மேல் கொண்டு உற்று அமராடி = வீற்றிருந்து போர் செய்து.

பாவி இராவணனார் தலை சிந்தி
சீரிய வீடணர் வாழ்வு உற மன்றல்
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே

பாவி இராவணனார் = பாவியாகிய இராவணனுடைய தலை சிந்தி = தலைகள் சிதறவும் சீரிய வீடணர் = உத்தமராகிய விபீடணன் வாழ்வுற =  நல் வாழ்வு வாழவும் (வைத்து) மன்றல் பாவையர் = மணந்த பாவையாகிய சீதையின்  தோள் புணர் = தோளைச் சேர்ந்த மாதுலர் = மாமனாகிய திருமாலின் சிந்தைக்கு இனியோனே = சிந்தைக்கு இனியவனே.

சீலம் உலாவிய நாரதர் வந்து உற்று
ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி 
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய்

சீலம் உலாவிய நாரதர் = நல்லுணர்வு உள்ள நாரத முனிவர். வந்து  உற்று = வந்து ஈது அவள் வாழ் புனமாம் என = இது அந்த வள்ளி வாழ்கின்ற தினைப் புனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முந்தி = (உடனே நீ) முடுகிச் சென்று தே மொழி = தேன் போலும் சொற்களை உடையவளும் பாளித = பச்சைக் கற்பூரக் கலவை அணிந்த கோமள = அழகிய இன்பக் கிரி = இன்பகரமான கொங்கைகளில் தோய்வாய் = தோய்ந்தவனே.

சேலொடு வாளை வரால்கள் கிளம்பி
தாறு கொள் பூகம் அளாவிய இன்ப
சீரலைவாய் நகர் மேவிய கந்த பெருமாளே.

சேலொடு = சேல் மீன்களுடன் வாளை வரால்கள் = வாளை, வரால் முதலிய மீன்களும் கிளம்பி = கிளம்பித் துள்ளிப் பாய்ந்து. தாறு கொள் = குலைவிட்டுள்ள பூகம் = கமுகு மரத்தில் அளாவிய இன்ப = கலக்கும் இன்பகரமான சீரலைவாய் நகர் = திருச் செந்தூரில் மேவிய கந்தப் பெருமாளே = வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

தோலால் மூடப்பட்ட இவ்வுடலை நம்பி, விலை மாதர்களின் வஞ்சக லீலைகளில் களிப்புற, அதற்கு வேண்டிய பொருள் தேடுவதற்கு, புது விதமான தூது, நான் மணிமாலை, கோவை, உலா, மடல் முதலிய கவி வகைகளைப் பாடி, குற்றம் உள்ள மக்களிடை சென்று வருந்தும் இயல்புடையவன் நான். வீணன். நீதி தவறி வாழ்பவன். மானம் அழிந்தவன். பேராசை கொண்ட உலோபி. நிந்திக்கப்படும் கீழ் மகன். துன்பம் நிறைந்த உலக வாழ்வில் வரும் என் துயரம் நீங்கி, நல் வாழ்வு பெற, மெயஞ்ஞான தவ நெறிகளை எனக்குச் சற்று அருளலாகாதோ?

அன்னவாகனனான பிரமனை மோதித் தண்டித்தவனே, அனுமன் தோள் மீது அமர்ந்து இராவணனுடைய தலைகள் சிதறவும், விபீடணன் நல் வாழ்வு வாழவும், சீதையை மணம் கொண்டவனுமாகிய இராமனின் மருகனே, நாரதர் சொற்படி வள்ளி இருக்கும் தினைப் புனம் இருக்கும் இடம் அறிந்து, அங்கு விரைந்து சென்று அவளை மணம் புரிந்தவனே, பல வகையான மீன்கள் துள்ளிப் பாயும் செழிப்புள்ள திருச் செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளோ, எனக்கு மெய்ஞ்ஞான தவ நிலையைத் தந்து அருள வேண்டும்.

Saturday, 25 August 2012

14. அவனிபெறுந்

“

அவனிபெ றுந்தோட் டம்பொற்
    குழையட ரம்பாற் புண்பட்
    டரிவையர் தம்பாற் கொங்கைக்            கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
    றுருகிய கொண்டாட் டம்பொற்
    றழிதரு திண்டாட் டஞ்சற்                   றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
    திலகுக டம்பார்த் தண்டைப்
    பதயுக ளம்போற் றுங்கொற்                றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
    தியுமறி வும்போய்ச் சங்கைப்
    படுதுயர் கண்பார்த் தன்புற்                றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
    றுறவின ருந்தோற் றஞ்சத்
    தனிமல ரஞ்சார்ப் புங்கத்                    தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
    றிரிதரு கஞ்சாக் கன்றைத்
    தழலெழ வென்றார்க் கன்றற்               புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
    குருபர தென்பாற் சங்கத்
    திரள்மணி சிந்தாச் சிந்துக்                   கரைமோதும்
தினகர திண்டோர்ச் சண்டப்
    பரியிட றுங்கோட் டிஞ்சித்  
    திருவளர் செந்தூர்க் கந்தப்                 பெருமாளே.
- திருச்செந்துர்

பதம் பிரித்தல்

     ******************
    பவம் அற நெஞ்சால் சிந்தித்து
    இலகு கடம்பு ஆர் தண்டை
    பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்

                    ******(சிற்றின்பத்தில் ஈடுபடாமல் இருக்க)
பவம் அற = பிறப்பு ஒழிய. செஞ்சால் சிந்தித்து = மனதால் தியானம் செய்து. இலகு = விளங்கும். கடம்பு ஆர் = கடப்ப மலர் நிறைந்த. தண்டை = தண்டை சூழ்ந்துள்ள. பத உகளம் = இரு திருவடிகள். போற்றும் கொற்றமும் = வணங்கும் உறுதியும். நாளும் = நாள்தோறும்.
 
  பதறிய அங்காப்பும் பத்தியும்
  அறிவும் போய் சங்கை
   படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ

பதறிய அங்காய்ப்பும் = பதறுகின்ற விருப்பமும். பத்தியும் = பக்தியும். அறிவும் = அறிவும். போய் = இல்லாது போய். சங்கைப் படு துயர் = அச்சமுறும் துயரில் (நான்) படுவதை. கண் பார்த்து = (நீ) பார்த்து. அன்பு உற்று அருளாயோ = அன்புற்று அருள மாட்டாயோ.
   
    தவ நெறி குன்றா பண்பில்
    துறவினரும் தோற்று அஞ்ச
    தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி

தவ நெறி பண்பில் குன்றா = தவ நெறி குன்றாத குணத்தினரான. துறவினரும் = தவசிகளும். தோற்று = தோற்று. அஞ்ச = பயப்படும்படி. தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி= ஒப்பற்ற ஐந்து மலர்கள் நிறைந்த குவியலைக் கொண்டு போர் புரிந்து.

    தமிழ் இனி தென் கால் கன்றில்
    திரிதரு கஞ்சா கன்றை
    தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக

தமிழ் இனி = தமிழ் மொழி போல இனிய. தென் கால் கன்றில் திரி  = இளந்தென்றல் காற்றில் உலவுகின்ற. கஞ்சா கன்றை = திரு மகள் மகனான மன்மதனை. தழல் எழ = நெருப்பை எழுப்பி. வென்றார்க்கு =. வென்ற சிவபெருமானுக்கு அன்று அற்புதமாக = அன்று அற்புதமான வழியில்.

    சிவ வடிவும் காட்டும் சற்
    குருபர தென் பால் சங்க
    திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்

சிவ வடிவம் காட்டும் = சிவ வடிவத்தைக் காட்டிய. சற் குருபர = சற்குருபரனே. தென் பால் = தென் திசையில். சங்கத் திரள் மணி சிந்தா = சங்குகளின் கூட்டங்கள் முத்துக்களைச் சிந்துகின்ற.  சிந்து கரை மோதும் = கடல் கரையில் மோதுகின்ற.

    தினகர திண் தேர் சண்ட
    பரி இடறும் கோட்டு இஞ்சி
    திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே.

தினகர திண் தேர் = சூரியனுடைய வலிமை வாய்ந்த தேரில் (பூட்டியுள்ள). சண்ட பரி = வேகமான குதிரைகள். இடரும் கோட்டு இஞ்சி = இடறுகின்ற சிகரங்களை உடைய மதில் சூழ்ந்த. திரு வளர் = செல்வம் வளர்கின்ற. செந்தூர்க் கந்தப் பெருமாளே = திருச்செந்தூர்க் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

*** சிந்தனை செய்து உன் திருவடிகளைப் போற்றுகின்ற திட வீரமும், உன்னைப் பற்ற ஆசையும், பக்தியும், அறிவும் இல்லாமல் போய், அச்சமுறும் என்னைக் கண் பார்த்து அருள்வாயாக.
தவநெறி குறையாத துறவிகள் கூட தோற்று அஞ்சும்படி ஐந்து வகையான மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் செய்து, தென்றல் காற்றில் உலவும் மன்மதனை நெருப்பிலிட்ட சிவபெருமானுக்குச் சற்குருபரனே. சங்குகளின் கூட்டங்கள் மணிகளைக் கடலில் சிந்த, மிக  உயர்ந்த மதில் சூழ்ந்த திருச் செந்தூரில் வாழும் பெருமாளே. என்னைக் கண் பார்த்து அன்புற்று அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்
அ. பத்தியும் அறிவும் போய்......
   பக்தி என்பது அன்பு. அறிவு = ஞானம்.
   (முருகன் குமரன் குகனென்று மொழிந்
   துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்)----கந்தர் அனுபூதி 