F

படிப்போர்

Showing posts with label பிறவி. Show all posts

Sunday, 29 December 2013

257. இகலவருதிரை

“
257
திருமயிலை
அடியவருடன் கலந்து நலம் பெற அருள்புரிவீர்
            
              தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன            தனதான

   இகல வருதிரை பெருகிய சலநிதி
         நிலவு முலகினி லிகமுறு பிறவியி
         னினிமை பெறவரு மிடருறு மிருவினை      யதுதீர
    இசையு முனதிரு பதமலர் தனைமன
         மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
         ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி        உமைபாகர்
    மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
         மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
         வசன மறவுறு மவுனமொ டுறைகிலி           மடமாதர்
    மயம தடரிட இடருறு மடியனு
         மினிமை தருமுன தடியவ ருடனுற
         மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ       தொருநாளே
    சிகர தனகிரி குறமக ளினிதுற
         சிலத நலமுறு சிலபல வசனமு
         திறைய அறைபயி லறுமுக நிறைதரு          மருணீத
    சிரண புரணவி தரணிவி சிரவண
         சரணு சரவண பவகுக சயனொளி        
         திரவ பரவதி சிரமறை முடிவுறு               பொருணீத
    அகர உகரதி மகரதி சிகரதி
         யகர அருளதி தெருளதி வலவல
         அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில்    விடுவோனே
    அழகு மிலகிய புலமையு மகிமையும்
         வளமு முறைதிரு மயிலையி லநுதின
            மமரு மரகர சிவசுத அடியவர்           பெருமாளே.
 
பதம் பிரித்தல்

இகல வரு திரை பெருகிய சல நிதி
நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இரு வினை அது தீர

இகல வரு திரை = ஒன்றோடொன்று மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகிய சல நிதி = பெருகியுள்ள கடல் நிலவும் = சூழ்ந்துள்ள உலகினில் = உலகத்தில் இகம் உறு பிறவியில் = இப்போது (இம்மை) உள்ள பிறப்பில் இனிமை பெற = இன்பத்தைப் பெறவும் வரும் = வருகின்ற இடர் உறும் இரு வினை அது தீர = துன்பத் தடைகளோடு கூடிய இரு வினைகள (நல் வினை, தீ வினை) ஒழியவும்

இசையும் உனது இரு திரு பத மலர் தனை மனம்
இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமை பாகர்

இசையும் = பொருந்தியுள்ள உனது இரு பத மலர்தனை = உன்னுடைய இரண்டு பாத மலர்களை மனம் இசைய நினைகிலை = மனம் பொருந்த நினைக்காதவன் இதம் உற = இன்பம் பெருக உனது அருள் இவர = உன்னுடைய அருள் கைகூடிக் கிடைக்க உருகிலி = உருகாதவன் அயர்கிலி = (பக்தியால்) தளர்ச்சி உறாதவன் (தன் வசம் அழியாதவன்) தொழுகிலி = (உன்னை) வணங்காதவன் உமை பாகர் = உமா தேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான்

மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மடமாதர்

மகிழும் மகவு என = மகிழ்கின்ற குழந்தையே என்று அறைகிலி = கூறாதவன் நிறைகிலி = மன நிறைவு இல்லாதவன் மடமை = பேதைமை குறைகிலி = குறையாதவன் மதி உணர்வு அறிவிலி = அறிவு தெளிவு பெறாதவன் வசனம் அற = பேச்சு அற உறு = பொருந்திய மவுனமொடு உறைகிலி = மவுன நிலையில் இல்லாதவன் மட மாதர் = அழகிய பெண்களின்

மயம் அது அடரிட இடர் உறும் அடியனும்
இனிமை தரும் உனது அடியவர் உடன் உற
மருவ அருள் தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே

மயம் அது = அழகு அடரிட = மனதில் செறிந்து இடம் கொள்ள இடர் உறும் அடியனும் = அதனால் துன்பம் அடைகின்றவனான அடியேனும் இனிமை தரும் உனது அடியவருடன் = இன்ப சுகம் தருகின்ற உன்னுடைய அடியார்களோடு உற மருவ = கூடியிருக்கும் அருள் தரு கிருபையின் = திருவருளைத் தருவதான உனது கிருபைக்கு மலிகுவது = பாத்திரனாகிருக்க ஒரு நாளே = ஒரு நாள் கிடைக்குமோ?

சிகர தன கிரி குற மகள் இனிது உற
சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறு முக நிறை தரும் அருள் நீத

சிகர = உயர்ந்த தன கிரி = மலை போன்ற கொங்கையை உடைய குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளி இனிது உற = இனிமை பெற சிலதன் நலம் உறு = தோழன் (ஏவல் செய்வோன்) போன்று சில பல வசன அமுது இறைய = பேச்சாகிய அமுதத்தை வீசிப் பரப்பி அறை பயில் உறு = (அவளுடன்) பேசப் பயின்ற அறு முக = ஆறு முகனே. நிறைதரு = நிறைந்து விளங்கும் அருள் நீத = அருள் கொண்ட நீதிமானே.

சிரண புரணம் விதரண விசிரவண
சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத

சிரண = (சீர்+அண) பெருமை பொறுந்திய புரண = நிறைவே, பழமையானபரே விதரண = இரக்க குணத்தனே விசிரவண = நிரம்ப கேள்வி உடையவனே. சரண் = அடைக்கலம் புரியத்தக்க உ = இறைவனே சரவண பவ குகனே = சரவண மடுவில் தோன்றியவனே, குகனே. சயன் = சிவபெருமானுடைய ஒளி திரவ = ஒளி பாய்ந்தவனே. பர = பரனே, மேலானவரே அதி சிரம் = மிகுந்த மேன்மை உடையவனே. மறை முடிவு உறு பொருள் நீத = வேதத்தின் முடிவான பொருளான நீதியனே.

அகர உகர தீ மகர தீ சிகர தீ
யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரண் உறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே

அகர = அகரம் போன்ற முதற் பொருளே உகர தீ = சிவ சக்தியாய் விளங்கும் நல் அறிவே மகர = ஆணவ மலத்தை தீ = தகிப்பவனே சிகர தீ = சிவமாகிய அறிவே யகர = ஜீவான்மாவில் விளங்குபவனே அருளதி = அதிக அருளே தெருளதி = அதிக ஞானமே வலவல = மிக்க வலிமை வாய்ந்த அரணம் = காவல் கோட்டை முரண் உறு = பகைமை பூண்ட. அசுரர்கள் = அசுரர்களும் கெட அயில் விடுவோனே = அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே.

அழகும் இலகிய புலமையும் மகிமையும்
வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே.

அழகும் = சிறப்பும் இலகிய புலமையும் = விளங்கும் கல்வி ஞானமும் மகிமையும் = பெருமையும் வளமும் = வளப்பமும் உறை = நிறைந்திருக்கும் திரு மயிலையில் = மயிலாப்பூரில் அநுதினம் = நாள் தோறும் அமரும் = வீற்றிருக்கும் அரகர = ஹர ஹர என்னும் ஒலிக்கு உரிய சிவ சுத = சிவனுடைய குமாரனே அடியவர் பெருமாளே = அடியவர் தம் பெருமாளே.

சுருக்க உரை

இரு வினைகள் ஒழிய உனது பாதங்களை நினையாதவனும், உன்னை
வணங்காதவனும், பேதையுமாகிய அடியேன் உன் அடியார்களுடன் கூடி இருக்கும் அருளுக்குப் பாத்திரமாவது என்று கிடைக்குமோ.

வள்ளியுடன் இனிய பேச்சுக்களை வீசிய அறுமுக வேளே. பெருமையும் தயாள குணமும் கேள்வியும் உடைவனே. உன்னை அடைக்கலம் புகுதற்கு உரியவனே. சிவபெருமான் குமாரனே. அகர, உகர, மகர, யகர சக்திகள் அடங்கிய சிவமாகிய அறிவே. அசுரர்கள் அழிய வேலைச்  செலுத்தினவனே. மயிலையில் நிலையாக வீற்றிருக்கும் பெருமாளே.  உனது கிருபை எனக்கு என்று கிடைக்கும்?

விளக்கக் குறிப்புகள்
  
1. உனது அருள் இவர உருகிலி....
இவர்தல் = பொருந்துதல்.
மாதிவர் பாகன் மறை பயின்ற..............மாணிக்கவாசகர் திருவாசகம்

2. சரணு சரவணபவ குக...
சரண்+உ = சரணு. உ = இறைவன்.
உண்ணா முலை உ மைந்து ஆசு அரண்      --- .........கந்தர் அந்தாதி

” tag:

Saturday, 3 November 2012

131.சினத்தவர்

“

முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
        செகுத்தவ ருயிர்க்குஞ்                        சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
        திருப்புகழ் நெருப்பென்             றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
        நிசிக்கரு வறுக்கும்                           பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
        நிறைப்புக ழுரைக்குஞ்                செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
        தகுத்தகு தகுத்தந்                                  தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
        தளத்துட னடக்குங்                          கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
        சிரித்தெரி கொளுத்துங்                    கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
        திருத்தணி யிருக்கும்                      பெருமாளே.
-131 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்

தனத்தன.......தன பேரி

தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா

தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை

சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும் பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும். செகுத்தவர் உயிர்க்கும் கொல்லுபவர்களுடைய உயிருக்கும். சினமாக = கோபத்துடன் (நோக்கி).

சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.

நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும். மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும். நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)

நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும் பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும் நிறைப் புகழ் = உனது நிறை புகழை உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.

தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும் தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன் தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த. கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.

சினத்தையும் = கோபத்தையும் (அழித்து) உடல் சங்கரித்து = உடலை அழித்து அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும் சிரித்து = (தனது) சிரிப்பினால் எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.

தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்). குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு எண் = யாவரும் மதிக்கத் தக்க திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கோபம் கொண்டவர்களின் தலைக்கும், பகைமை கொண்டவர் குடிக்கும், கொலை செய்வோர் உயிருக்கும், சிரிப்பவர்களுக்கும், பழிப்பவர்களுக்கும், திருப்புகழ் நெருப்பு போன்ற உண்மை என்பதை நாம் அறிவோம். திருப்புகழ் ஓதுதல் நினைத்ததைத் தரும், மனத்தை உருக்கும், பிறப்பை அறுக்கும், நெருப்பை எரிக்கும், மலையைப் பொடி படுத்தும். ஆதலால் உனது புகழை ஓதும் திருப்பணியை எனக்குப்
பணித்திடுவாய்.

பேரி, உடுக்கைப் பறை இவைகளின் பேரொலியோடும், படைகளோடும் போருக்கு வந்த சூரர்களை அழித்து, அந்தப் பிண மலைகளைச் சிரிப்பினால் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலனே, தினை விளையும் மலையில் வள்ளியின் கொங்கையில் சுகித்து, சிறந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிறைப் புகழைப் பாடும் பணியை எனக்குத் தருக.

விளக்கக் குறிப்புகள்

இந்தத் திருப்புகழ் முருகனின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும். முதல் இரண்டு அடிகளில் துட்டர்களைத் தண்டித்தலையும், அடுத்த இரண்டு அடிகள் அடியார்களைக் காப்பதையும், ஈற்று இரண்டு அடிகள் அங்ஙனம் செய்வதற்கு எடுத்துக் காட்டுகளையும் காணலாம். ஏழாவது அடியில் அசுரர்களை அழித்ததையும், எட்டாவது அடியில் வள்ளியை மணந்து அருள் புரிந்ததையும் அருணகிரியார் எடுத்துக் காட்டுகிறார்.

இருமலுரோகம் என்று தொடங்கும் திருப்புகழை நோய் தீர்க்கும் மந்திரத் திருப்புகழ் என்றால், சினத்தவர் முடிக்கும் என்று தொடங்கும் பாடலைச் சித்தி தரும் தந்திரத் திருப்புகழ் என்றும் கூறுவர் ( வ.சு. செங்கல்வராய பிள்ளை).

ஒப்புக

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்    குருநாதா                        ...                               திருப்புகழ், கருப்புவிலில்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு   மெனவோதும்        ...                                     திருப்புகழ், இருப்பவல்.

1. சூரர் சினத்தையும் உடல் சங்கரித்து அம் மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா......
அழிக்கப்பட்ட அசுரர்களின் பிணக் குவியலை எரித்துச் சாம்பலாக்கினார்.
அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த      ...                    கந்த புராணம்