F

படிப்போர்

Showing posts with label திருவடிகள். Show all posts

Saturday, 24 November 2012

158.அரிவையர்கள்

“

                     தனதனன தனன தந்தத்
                    தனதனன தனன தந்தத்
                    தனதனன தனன தந்தத்          தனதான

      அரிவையர்கள் தொடரு மின்பத்
         துலகுநெறி மிகம ருண்டிட்
         டசனனென மனது நொந்திட்            டயராமல்
      அநுதினமு முவகை மிஞ்சிச்
         சுகநெறியை விழைவு கொண்டிட்
         டவநெறியின் விழையு மொன்றைத் தவிர்வேனோ
      பரிதிமதி நிறைய நின்றஃ
         தெனவொளிரு முனது துங்கப்
         படிவமுக மவைகள் கண்டுற்            றகமேவும்
      படர்கள்முழு வதும் கன்றுட்
         பரிவினொடு துதிபு கன்றெற்
         பதயுகள மிசைவ ணங்கற்             கருள்வாயே
      செருவிலகு மசுரர் மங்கக்
         குலகிரிகள் நடுந டுங்கச்
        சிலுசிலென வலைகு லுங்கத்              திடமான
      செயமுதவு மலர்பொ ருங்கைத்
         தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
         தியைவிடுதல் புரியு முன்பிற்         குழகோனே
      கருணைபொழி கிருபை முந்தப்
         பரிவினொடு கவுரி கொஞ்சக்
         கலகலென வருக டம்பத்                திருமார்பா
      கரிமுகவர் தமைய னென்றுற்
         றிடுமிளைய குமர பண்பிற்
         கநககிரி யிலகு கந்தப்                 பெருமாளே.
-  158 கனகமலை
கநக கிரி – ஆரணியிலிருந்து 15 கி.மீ தூரம்.
தேவிகாபுரம் என தற்சமயம் அழைக்கப்படுகிறது

பதம் பிரித்து உரை

அரிவையர்கள் தொடரும் இன்பத்து
உலகு நெறி மிக மருண்டிட்டு
அசடன் என மனது நொந்திட்டு அயராமல்

அரிவையர்கள = மாதர்களை தொடரும் இன்பத்து = தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து உலக நெறி = உலகு நெறியில் மிக மருண்டிட்டு= அதிகமாக மோகம் கொண்டு அசடன் என = முட்டாள் என்று பிறர் கூற மனது நொந்திட்டு = மனம் வேதனைப்பட்டு அயராமல் = சோர்வு அடையாமல்.

அநுதினமும் உவகை மிஞ்ச
சுக நெறியை விழைவு கொண்டிட்டு
அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ

அநுதினமும் உவகை மிஞ்சி = நாள் தோறும் களிப்பு மிக்கு
சுக நெறியை = சுக வழியிலே விழைவு கொண்டிட்டு = விருப்பம் கொண்டு அவ நெறியின்= பாவ வழியில் விழையும் ஒன்றை = செல்ல விரும்பும் அந்த புத்தியை
தவிர்வேனோ = நீக்க மாட்டேனோ.

பரிதி மதி நிறைய நின்ற அஃது
என ஒளிரும் உனது துங்க
படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும்

பரிதி = சூரியன் மதி = நிலா நிறைய நின்ற = பூரண ஒளியுடன் நின்ற அஃது என = அந்தத் தன்மையை ஒப்ப
ஒளிரும் = விளங்குகின்ற உனது = உம்முடைய துங்க = பரிசுத்தமான படிவம் = வடிவம் உள்ள முகம் அவைகள் = திருமுகங்களை கண்டுற்று = காட்சியை மனதில் நிறுத்தி
அகம் மேவும் = என் மனத்திலுள்ள.

படர்கள் முழுவதும் அகன்று உள்
பரிவினொடு துதி புகன்று எல்
பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ

படர்கள் = துயரங்கள் முழுவதும் அகன்று = முழுமையும் நீங்கப் பெற்று உள் பரிவினொடு = உள்ளத்தில் அன்புடன் துதி புகன்று = உன்னைத் துதித்து எல் = ஒளி பொருந்திய பத உகளம் மிசை = பாதத் திருவடிகளை வணங்கற்கு அருள்வாயே = வணங்குதற்கு அருள் புரிவாயாக.

செரு விலகும் அசுரர் மங்க
குல கிரிகள் நடு நடுங்க
சிலுசிலு என வலை குலுங்க திடமான

செரு விலகும் = போரில் பின் வாங்கிய அசுரர் மங்க = அசுரர்களின் பெருமை குறைய குல கிரிகள் நடுநடுங்க = சிறந்த மலைகள் எல்லாம் நடுநடுங்க. சிலுசிலு என =  சிலுசிலென்று வலை = கடல் குலுங்க = கலங்க  திடமான             
= பலமுள்ளதும்

செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம்
இலகும் அயில் கொளும் சத்தியை
விடுதல் புரியும் முன்பில் குழகோனே

செயம் உதவும் = வெற்றியை உதவுவதுமான மலர் பொரும் = பூக்களை போன்ற கைத்தலம் இலங்கும் = திருக்கரத்தில் விளங்கும் அயில் கொளும் = கூர்மை வாய்ந்த சத்தியை = வேலை விடுதல் புரியும் = விடுத்தருளிய முன்பில் குழகோனே = பெருமை வாய்ந்த இளையோனே

கருணை பொழி கிருபை முந்த
பரிவினொடு கவுரி கொஞ்ச
கல கல என வரு கடம்ப திருமார்பா

கருணை பொழி = கருணை பொழியும் கிருபை முந்த = அருளே முந்துவதால் பரிவினொடு - அன்புடன் கவுரி கொஞ்ச = பார்வதி கொஞ்சி நிற்க கலகல என வரு = கலகலென்று (தண்டை ஒலிக்க) வருகின்ற கடம்பத் திருமார்பா = கடம்பம் அணியும் அழகிய மார்பனே

கரி முகவர் தமையன் என்று
உற்றிடும் இளைய குமர பண்பில்
கநக கரி இலகு கந்த பெருமாளே.

கரி முகவர் தமையன் என்று = யானை முகக் கடவுளைத் தமையனாக உற்றிடு = வாய்க்கப் பெற்ற இளைய குமர = இளைய குமரனே பண்பில் = அழகுடன் கநக கரி = பொன் மலையில் இலகும் = விளங்கும். பெருமாளே = பெருமாளே.
     
சுருக்க உரை

மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்ப நெறியில் மயக்கம் கொண்டு, அசடன் என்று பலர் கூற, மனம் வேதனைப்பட்டு சோர்வு அடையாமல், தினமும் சுக வாழ்விலேயே செல்ல விரும்பும் ஒரு புத்தியை நீக்க மாட்டேனோ. சூரிய சந்திரர்களைப் போல் ஒளி வீசும் உனது திருமுகங்களைக் கண்டு, என் துயரம் முழுவதும் நீங்கப்பெற்று உன் திருவடியை வணங்குவதற்கு அருள் புரிவாயாக.

போரில் அசுரர்களின் பெருமை குறைய, மலைகள் நடுங்க, மலர் போன்ற திருக்கரத்தில் ஏந்திய வேலைச் செலுத்திய பெருமை வாய்ந்தவனே, கணபதியைத் தமையனாகப் பெற்ற இளையவனே, அழகுடன் கனக மலையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. உன்னை வணங்க அருள் புரிவாயாக.
 
பரிவினொடு கவுரி கொஞ்ச....

கவுரி கொஞ்சுவதைக் கோசலை இராமனைக் கொஞ்சுதலை
ஒப்பிடலாம்.
மலர் சூடிட வருக என்று பரிவினொடு கோசலை புகல  வருமாயன்)
--- திருப்புகழ்    (தொந்திசரிய)
    
” tag:

Tuesday, 11 September 2012

58. அருத்தி வாழ்வொடு

“

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு           முறவோரும்
           அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு        வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது               நினையாதுன்
           தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது        தருவாயே
எருத்தி லேறிய இறைவர் செவிபுக                        வுபதேசம்
           இசைத்த நாவின இதணுறு குறமக            ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு                            தெய்வயானை
           பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை      பெருமாளே.
-பழநி

பதம் பிரித்து உரை

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
அடுத்த பேர்களும் இதம் உறு மகவொடு வளநாடும்

அருத்தி வாழ்வொடு = ஆசையுடன் கூடிய வாழ்க்கையும் தனகிய = உள்ளத்லில் களிப்பைத் தரும்  மனைவியும் = மனைவியும்  உறவோரும் = சுற்றத்தார்களும் அடுத்த பேர்களும் = தம்மிடம் நட்பு கொள்பவர்களும்  இதம் மிகு = இன்பத்தைத் தருகின்ற  மகவொடு = குழந்தையும்  வள நாடும் = வளப்பமுள்ள நாடும். 

தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன் தனை
பராவியும் வழிபடு தொழிலது தருவாயே

தரித்த ஊரும் = இருப்பிடமாகக் கொண்ட ஊரும் மெய் என= நிலையானது என்று நினையாது = எண்ணம் கொள்ளாமல்  உன்தனைப் பராவியும் = உன்னைப் போற்றி வழிபடும் தொழிலை = வழிபடும் பணியை  தருவாயே = தந்து அருளுக.

எருத்தில் ஏறிய இறைவர் செவி புக
இசைத்த நாவின இதண் உறு குற மகள் இரு பாதம்

எருத்தில் ஏறிய = இடப வாகனத்தில் ஏறும். இறையவர் = இறைவராகிய சிவபெருமானது. செவி புக = காதுகளில் புகும்படி. உபதேசம் இசைத்த = உபதேசப் பொருளைச் சொல்லி அருளிய நாவின = திரு நாவை உடையவனே இதண் உறு= பரண் மிசை இருந்த குற மகள் இரு பாதம் = குறப் பெண்ணான வள்ளியின் இரு பாதங்களை. 

பரித்த சேகர மகபதி தர வரு(ம்) தெய்வ யானை
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே.

பரித்த சேகர = தாங்கித் திருமுடியில் அணிந்து கொண்டவரே. மகபதி = வேள்வி நாயகனாகிய இந்திரன் தர வரு தெய்வ யானை = தர வந்த தேவசேனையை பதி கொள் = நாயகனாகக் கொண்டவனே ஆறிரு புய =  பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே பழநியில் உறை பெருமாளே = பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

ஆசையான வாழ்வும், களிப்பைத் தரும் மனைவியும், சுற்றத்தாரும், நண்பர்களும், குழந்தைகளும், வாழும் நாடும் ஊரும் நிலையானவை என்று நினைத்து அழியாமல், உன்னை வழிபடுவதே என் பணியாகக் கொள்ள அருள்வாயாக. இடப வாகனனாகிய சிவபெருமானது செவிகளில் உபதேசம் செய்தவரே. 
தினைப் புனத்தில் காவல் புரிந்த வள்ளியின் பாதங்களைத் தரித்தவரே, இந்திரன் மகளான தேவசேனையின் கணவரே, பன்னரு புயங்களைக் கொண்டவரே, உன்னை நான் வழிபடுதலே என் பணி என்னும்படி அருள் புரிவாயாக.

ஒப்புக:

குறமகள் இருபாதம் தரித்த சேகர.........
  • பணியா வென வள்ளிபதம் பணியுந்
         தணியா அதிமோக தயாபரனே ............................................................... கந்தர் அனுபூதி

  • வள்ளி பதம் பணியும்வேளைச் சுரபூபதி மேருவையே) .......................... கந்தர் அனுபூதி

Saturday, 25 August 2012

13.அருணமணி

“

அருணமணி மேவு பூஷித 
     ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின்  முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
     அங்கைக் கொங்கைக்                          கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
      லிழைகலைய மாத ரார்வழி
     யின்புற் றன்புற்                                 றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ  படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
     னெஞ்சிற் செஞ்சொற்                          றருவாயே
தருணமணி யாட ராவணி  குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
     சங்கத் துங்கக்                                   குழையாளர்
தருமுருக மேக சாயலர்தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யோயமு
     துண்டிட் டண்டர்க                             கருள்கூரும்                                                
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளினுடன் மூல மேயென
     முந்தச் சிந்தித்                                    தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
     செந்திற் கந்தப்                                  பெருமாளே.
- திருச்செந்துர்
 
பதம் பிரித்தல்
***********************
மாத ரார்வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்

மாதரார் வழி = விலை மாதர்களின் வசத்தே. இன்புற்று அன்புற்று = இன்பமும் அன்பும் கொண்டு. அழியா நீள் = அழிந்து நெடும்போது.

இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என்நெஞ்சில் செஞ்சொல் தருவாயே

இரவு பகல் மோகனாகியே = இரவம் பகலும் மோகம் கொண்டவனாக. படியில் = உலகில். மடியாமல் = இறவாமல். யானும் உன் = நானும் உனது. இணை அடிகள் பாடி = இணையடிகளைப் பாடி. வாழ = வாழ. என் நெஞ்சில் = என்னுடைய மனதில். செம் சொல் தருவாயே = செம் சொற்களைத் தந்து அருள்வாயாக.

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்

தருண= இளமையையும். மணி = மணிகளையும். ஆடு அரா அணி = ஆடலையும் உடைய பாம்புகளை அணிந்த. குடில = வளைந்த. சடில = சடையை உடைய. ஆதி = ஆதிப் பொருளும். ஓதிய சதுர் மறையின் ஆதியாகிய = ஓதியுள்ள நான்மறையின் ஆதிப் பொருளும் ஆகிய. சங்க = சங்கினால் ஆனதும். துங்க = பசிசுத்தமானதும் ஆன. குழையாளர் = குழையினராகிய சிவபெருமான். 

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவி
தனை முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள் கூரும்

தரு முருக = தந்து அருளிய முருகனே. மேக சாயலார் = நீல மேக நிறத்தினர். தமர = ஒலியுடன் கூடிய. மகர ஆழி = மகர மீன்கள் வாழ்கின்ற கடல். சூழ் = சூழ்ந்த. புவி தனை = பூமியை. முழுதும் வாரியே = முழுமையும் எடுத்து. அமுது உண்டிட்ட = அமுதென உண்டு. அண்டர்க்கு அருள் கூரும் = தேவர்களுக்கு அருள் பாலித்த.

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்

செரு முதலி = போருக்குத் தலைவரும். மேவும் = விரும்பும். மா வலி = மிக்க வலிமையும். அதி மத கபோல = அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தை உடைய. மாமலை = பெரிய மலை போன்ற கஜேந்திர யானை. தெளிவுடன் = தெளிந்த அறிவுடன். மூலமே என = ஆதி மூலமே என்று கதற. முந்தச் சிந்தித்து = முற்பட்டு கருணையுடன் நினைத்து. அருள் மாயன் = வந்து அருளியவருமான திருமாலின். 

திருமருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே.

திரு மருக = திருமருகனே. சூரன் மார்பொடு = சூரனுடைய மார்புடன். சிலை உருவ = (ஏழு) மலைகளையும் ஊடுருவிச் செல்லும்படி. வேலை ஏவிய = வேலாயுதத்தைச் செலுத்திய. ஜெய சரவணா = வெற்றிச் சரவணா. மனோகர = மனோகரனே. செந்தில் கந்தப் பெருமாளே = செந்தூர்க் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

******* விலை மாதர்களின் காம லீலைகளில் முழுகி, அவர்களுடன் உறவாடி, இன்பம் பூண்டவனாய் நான் அழிந்து இப் பூமியில இறந்து போகாமல், உனது திருவடிகளைப் பாடி வாழ என்னுடைய மனதில் செஞ்சொற்களைத் தந்து அருளுக.

பாம்பை அணிந்த சடையை உடைய ஆதிப் பெருமானும், நான்கு வேதங்களுக்கும் முதல்வனுமாகிய சிவபெருமான் தந்து அருளிய முருகனே. கஜேந்திரன் ஆதி மூலமே என்று கதறியவுடன், முன்னதாக வந்து அருளிய திருமாலின் மருகனே. சூரனுடைய மார்பும் அவனுடைய ஏழு மலைகளும் ஊடுருவும்படி வேலைச் செலுத்தியவனே. செந்தூர்க் கந்தப் பெருமாளே. உன்னைப் பாடி வாழ செஞ்சொற்களை எனக்குத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. இருள் நிறை அம் ஓதி.... கருமை வாய்ந்த கரிய கூந்தல்.