F

படிப்போர்

Thursday, 30 August 2012

22. கட்டழகு

“

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே
 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.

 - திருச்செந்தூர்

பதம் பிரித்து பத உரை

கட்டு அழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம்
இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே        

கட்டு அழகு விட்டு = இறுகிக் கட்டுக் கோப்பாய் இருந்த அழகு நீங்கி
தளர்ந்து அங்கு = தளர்ச்சி அடைந்து அங்கு இருந்து முனம் = முன்பு இட்ட பொறி = உதவியாக் இருந்த ஐம்பொறிகளும். தப்பி = கலங்கிச் சிதறிப் போய். பிணம் கொண்டதின் = பிணம் என்னும் நிலையை அடைந்தவுடன். சிலர்கள் கட்டணம் எடுத்து = சிலர் கூலிக்கு எடுத்து. சுமந்தும் = சுமந்து போகவும். பெரும் பறைகள் = பெரிய பறைகள் முறையோடே = வரிசைப்படி.

வெட்ட விட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என
மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ

வெட்ட விட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சம் என = (இவ்வாறு) பல விதமான ஒலிகளை எழுப்ப மக்கள் ஒருமிக்கத் தொடர்ந்தும் = மக்கள் ஒன்று கூடிப் பிணத்தைத் தொடர்ந்தும் புரண்டும் = கீழே விழுந்து புரண்டும் வழி விட்டு வரும் இத்தை = வழி விடுகின்ற இந்தப் பொய்யான வாழ்வை விட்டு. தவிர்ந்து = விலகி உன் பதங்கள் உற உணர்வேனோ = உன்னுடைய திருவடிகளை  அடையும் வழியை உணர மாட்டேனோ?

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல்
முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய

பட்டு உருவி = பட்டு உருவம்படியாக நெட்டைக் க்ரவுஞ்சம் = உயரமான கிரௌஞ்ச கிரி பிளந்து = பிளவுபட்டு கடல் முற்றும் அலை வற்றி = கடல் முழுமையும் அலை வற்றி குழம்பும் குழம்ப = குழம்பு குழம்பாய்ப் போகும்படி முனை பட்ட = கூர்மையானஅயில் தொட்டு
 = வேலாயுதத்தைச் செலுத்தி திடம் கொண்டு = பலமாய் எதிர்ந்த அவுணர் = எதிர்த்து வந்த அசுரர்களின் முடி சாய = தலைகள் சாயும்படி

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு
நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற் சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே.

தட்டு அழிய = அடியுடன் அழியும் படியாக. வெட்டி = துண்டித்து கவந்தம் = தலை இல்லாத உடலை. பெரும் கழுகு = பெரிய கழுகுகள் நிர்த்தம் இட = (தின்று) நடனமிடவும். ரத்தக் குளம் கண்டு = இரத்தக் குளம் பெருக வைத்து. மணி உமிழ்ந்து முடியினின்று மணிகள் சிதறி விழ வைத்து சற் சமய வித்தை = (முனிவர்களுக்கு) நல்ல காலம் வருவதற்கு வேண்டிய வித்தையை பலன் கண்டு = பலன் காட்டும்படி வைத்து செந்தில் உறை பெருமாளே = திருச்செந்தூரில் வீற்றிருக்கும்                            பெருமாளே.

சுருக்க உரை
கட்டுக் கோப்பான உடல் தளர்ந்து, இதுவரை உதவியாக இருந்த ஐம் பொறிகளும் சிதறிப் போய்ப் பிணம் என்னும் நிலையை அடைந்தவுடன், பேரிகைகள் முழங்க, மக்கள் ஓருமுகமாகப் பின் செல்லும் இந்தப் பொய்யான வாழ்வை விட்டு நீங்கி உன் திருவடியை அடையும் வழியை உணரமாட்டேனோ?
கிரவுஞ்ச மலையைப் பிளந்து, கடல் வற்றும்படி வேலைச் செலுத்திப் பலமாக வந்த அவுணர்கள் முடி சாயும்படி வெட்டி, கழுகுகள் தலை இல்லாத உடலைத் தின்று நடம் இட, இரத்தம் பெருக, முனிவர்களுக்கு நல்ல காலம் வருவதைக் காட்டித் திருச்செந்தூரில் வாழும் பெருமாளே. உன் பதங்களை உணர்வேனோ?

ஒப்புக

அ. வருமித்தை...
வரும் இத்தை = வரும் இதை. அல்லது வரும் மித்தை = வருகின்ற பொய்யை.
ஆ. கவந்தம்பெருங்கழுகு...
கவந்தம் = சிறிது தொழிலுடன் கூடிய தலையற்ற உடல்

இப்பாடல் 8 பிரிவுகள் இல்லாமல் 4 பிரிவுகளை (சரணங்கள்) மட்டுமே கொண்டு அமைந்துள்ளது.
” tag:

21. ஓரா தொன்றை

“

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
       தோடே வந்திட்                               டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
       டாமால் தந்திட்                                டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
       கோயா நின்றுட்                              குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
       கோடா தென்கைக்                          கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
       றோளா குன்றைத்                           தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
       சூர்மா அஞ்சப்                                 பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
       சேவே றெந்தைக்                            கினியொனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
       சேயே செந்திற்                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே
வந்திட்டு உயிர் சோர

ஒன்றை ஓராது = (உண்மை நெறியாகிய) ஒரு பொருளை நன்கு
ஆராய்ந்து அறியாமலும்  பாராது = சிந்தித்துப் பார்க்காமலும்
அந்தத்தோடே = அழகுடன்  வந்திட்டு = நெருங்கி வந்து உயிர்
சோர = உயிர் சோர்ந்து போகும்படி ( ஒன்று – பிரணவம் என்றும் கொள்ளலாம்)

ஊடா நன்று அற்றார் போல் நின்று
எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்

ஊடா = பிணங்கியும் நன்று அற்றார் போல் = (ஆடவரிடம் பொருள் பரிக்கும் பொருட்டு) நல்ல ஆடை அணிகள் இல்லாதவர்கள் போல  நின்று = நின்றும்  எட்டா = அளவு கடந்த மால் தந்திட்டு = காம மயக்கத்தைக் கொடுத்து. உழல் மாதர் =
அலையும் விலை மாதர்கள்

கூரா அன்பில் சோரா நின்று அக்கு
ஓயா நின்று உள் குலையாதே

கூரா அன்பில் = உண்மையில்லாத அன்பில் சோரா நின்று = ஓய்ந்து நின்று அக்கு = எலும்போடு கூடிய உடம்பு ஓயா நின்று= தளர்ந்து நின்று உள் குலையாதே = உள்ளம் நிலை குலையாதபடி.

கோடு ஆர் செம் பொன் தோளா நின் சொல்
கோடாது என் கைக்கு அருள் தாராய்

கோடு ஆர் = மலை போன்ற  செம்பொன் தோளா = பொன் மயமான தோளை உடையவனே  நின் சொல் = உன்னுடைய திருப்புகழை  கோடாது என்கைக்கு = (உலகோருக்கு) நேர் நின்று உதவும்  என்று சொல்லும்படி அருள் தாராய் = அருள் புரிய வேண்டும்.

தோரா வென்றி போரா மன்றல்
தோளா குன்றை தொளை ஆடீ

தோரா = தோல்வி இல்லாமல் வென்றிப் போரா = வெற்றிப் போர் செய்பவனே மன்றல் = மணம் வீசும்  தோளா = தோள்களை உடையவனே  குன்றை = கிரௌஞ்ச மலையை
தொளை ஆடீ = துளைத்தவரே

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச
சூர் மா அஞ்ச பொரும் வேலா

சூதாய் = மிக்க வஞ்சகத்துடன் எண் திக்கு ஏயா = எட்டுத் திசைகளிலும் பொருந்திச் சென்ற சூர் மா = மாமரமாய் வந்த சூரன் அஞ்ச = பயப்படும்படி பொரும் வேலா = போர் புரிந்த வேலனே.

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற
சே ஏறு எந்தைக்கு இனியோனே

சீர் ஆர் = சிறந்த ஆத்தி. கொன்றை = கொன்றை. தார் மார்பு ஒன்ற = மாலைகளை அணிந்த மார்பில் திகழும். சே ஏறு = விடையின் மேல் ஏறும். எந்தைக்கு இனியோனே = என் தந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே.

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல்
சேயே செந்தில் பெருமாளே.

தேனே = தேன் போல் இனிப்பவனே அன்பர்க்கே ஆம் = அன்பர்களுக்கு என்றே இன் சொல் = இனிய சொற்களைப் பேசும். சேயே = செம்மைப் பண்புடையவரே. செந்தில் பெருமாளே = திருச் செந்தூரில் எழுந்தருளியிருக்கும்                     பெருமாளே.

சுருக்க உரை

உண்மை நெறிகளை நன்கு ஆராய்ந்து பாராமல், அழகுடன் வந்து, ஆண்களுக்குக் காம மயக்கம் தந்து, உடலும் உள்ளமும் தளரும்படி, நல்ல பொருள் இல்லாதவர்கள் போல் நடிக்கும் விலைமாதர்களின் பொய்யான அன்பில் சோர்வடைந்து, உள்ளம் குலைந்து போகாமல், உன் திருப்புகழ் யாவர்க்கும் உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் புரிவாய்.

வெற்றிப் போர் செய்பவனே. மாமரமாய் வந்த சூரன் அஞ்சும்படி அவனுடைய கிரௌஞ்ச மலையைத் தொளைய போர் புரிந்தவனே, கொன்றை மலர் மாலைகள் அணிந்த மார்பை உடையவரே, எந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே, அன்பர்களுக்கு இனிமையான சொற்களைப் பேசும் செந்திற் பெருமாளே, உன்னுடைய திருப்புகழ் நின்று உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் தாராய்.

ஒப்புக

அ. ஓராது ஒன்றை =   (ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார்)--- கந்தர் அலங்காரம்  
ஆ. ஊடா.... காம மயக்கத்தால் பிணங்குதல்.
     (ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
      கூடி முயங்கப் பெறின்) --- திருக்குறள் 1330.

இ  இன் சொல் சேயே – இன்சொல் விசாகா - திருப்புகழ்

20.ஏவினை

“

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
       ஏதனை மூடனை                       நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
       ஏழையை மோழையை                அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
       வாய்மையி லாதனை                  யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
       வாழ்வுற ஈவது                         மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
       நாரத னார்புகல்                       குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
       நாயக மாமயி                           லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
       தேன்மொழி யாள்தரு                 சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
       சீரலை வாய்வரு                       பெருமாளே.
-திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

ஏவினை நேர் விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா

ஏவினை நேர் = அம்பை நிகர்க்கும் விழி மாதரை = கண்களை உடைய விலை மாதரை மேவிய = விரும்பும் ஏதனை = கேடனை மூடனை = முட்டாளாகிய என்னை நெறி பேணா = நல்லொழுக்கம் விரும்பாத.

ஈனனை வீணனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்

ஈனனை = இழிந்தோனை வீணனை = வீணாகக் காலம் கழிப்பவனை ஏடு எழுதா = படிப்பு இல்லாத முழு ஏழையை= முழு ஏழையை மோழையை= மடையனை அகலா நீள் = விட்டு நீங்காத நீண்ட

மா வினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மை இலாதானை இகழாதே
மாவினை மூடிய = பெரிய வினை மூடியுள்ள நோய் பிணியாளனை = நோயும், பிணியும் கொண்டவனை வாய்மை இலாதனை = உண்மை இல்லாதவனை இகழாதே = இகழ்ந்து ஒதுக்காமல்.

மா மணி நூபுர சீதள தாள் தனி
வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
மா மணி நூபுரம் = சிறந்த மணியாலாகிய சிலம்பணிந்துள்ள
சீதள = குளிர்ந்த  தாள் = (உன்) திருவடிகளை தனி வாழ்வு = முத்தி இன்பத்தை உற = நான் பெற ஈவது ஒரு நாளே= (எனக்குத்) தந்து உதவும் ஒரு நாளும் உண்டோ?

நாவலர் பாடிய நூல் இசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை

நாவலர் = புலவர்கள். பாடிய = பாடியுள்ள. நூல் இசையால்
வரும் = நூல்களில் புகழப்பட்ட நாரதனார் புகல் = நாரத முனிவர் எடுத்துரைத்த  குற மாதை = குறப்பெண்ணாகிய வள்ளியை.

நாடியே கான் இடை கூடிய சேவக
நாயக மா மயில் உடையோனே

நாடியே = நாடிச் சென்று கான் இடை = காட்டில் கூடிய சேவக = அவளைக் கூடிய வீரனே நாயக = நாயகனே மா மயில் உடையோனே = சிறந்த மயில் வாகனனே.

தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே

தேவி மநோமணி ஆயி பராபரை = தேவி, மனோமணி, ஆயி,   பராபரை                                                        {தேவி =  ஒளி மயமானவளும், மநோமணி= மனத்திற்கு இசைந்த மணியும்,ஆயி =
  அகில உலகங்களுக்கும் அன்னையும், பராபரை = பெரிய பொருளும் – வாரியார்
ஸ்வாமிகள்} தேன் மொழியாள் = (ஆகிய பார்வதி) தேன் போலும் மொழியையுடையவள் தரு = பெற்ற சிறியோனே= இளையவனே.

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.

சேண் உயர் = ஆகாயம் வரை உயர்ந்தசோலையின் நீழலிலே திகழ் = சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலை வாய் = திருச்செந்தூரில். வரும் = எழுந்தருளியிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

அம்பு போன்ற கண்களை உடைய விலை மாதரை விரும்பும் கேடனை, மூடனை, கல்வி இல்லாதவனை, பிணியால் பீடிக்கப்பட்டவனை, இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ? 

நாரதர் எடுத்துரைத்த வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே, மயில் வாகனனே, பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே, உயர்ந்த சோலைகளிண் நிழலில் விளங்கும் சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே, நான் வாழ்வுற உன் திருவடிகளை ஈவதும் ஒரு நாளே.

விளக்கக் குறிப்புகள்

  அ. வாய்மையிலாதனை இகழாதே... 
      (மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி
      இவனென நினையாமல்)---திருப்புகழ் (ஆசாரவீனன்)
 ஆ. வீணனை...
     (உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே)---திருப்புகழ் (கொம்பனையார்)