F

படிப்போர்

Showing posts with label திருப்புகழ். Show all posts

Saturday, 3 November 2012

131.சினத்தவர்

“

முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
        செகுத்தவ ருயிர்க்குஞ்                        சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
        திருப்புகழ் நெருப்பென்             றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
        நிசிக்கரு வறுக்கும்                           பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
        நிறைப்புக ழுரைக்குஞ்                செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
        தகுத்தகு தகுத்தந்                                  தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
        தளத்துட னடக்குங்                          கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
        சிரித்தெரி கொளுத்துங்                    கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
        திருத்தணி யிருக்கும்                      பெருமாளே.
-131 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்

தனத்தன.......தன பேரி

தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா

தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை

சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும் பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும். செகுத்தவர் உயிர்க்கும் கொல்லுபவர்களுடைய உயிருக்கும். சினமாக = கோபத்துடன் (நோக்கி).

சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.

நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும். மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும். நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)

நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும் பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும் நிறைப் புகழ் = உனது நிறை புகழை உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.

தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும் தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன் தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த. கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.

சினத்தையும் = கோபத்தையும் (அழித்து) உடல் சங்கரித்து = உடலை அழித்து அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும் சிரித்து = (தனது) சிரிப்பினால் எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.

தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்). குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு எண் = யாவரும் மதிக்கத் தக்க திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கோபம் கொண்டவர்களின் தலைக்கும், பகைமை கொண்டவர் குடிக்கும், கொலை செய்வோர் உயிருக்கும், சிரிப்பவர்களுக்கும், பழிப்பவர்களுக்கும், திருப்புகழ் நெருப்பு போன்ற உண்மை என்பதை நாம் அறிவோம். திருப்புகழ் ஓதுதல் நினைத்ததைத் தரும், மனத்தை உருக்கும், பிறப்பை அறுக்கும், நெருப்பை எரிக்கும், மலையைப் பொடி படுத்தும். ஆதலால் உனது புகழை ஓதும் திருப்பணியை எனக்குப்
பணித்திடுவாய்.

பேரி, உடுக்கைப் பறை இவைகளின் பேரொலியோடும், படைகளோடும் போருக்கு வந்த சூரர்களை அழித்து, அந்தப் பிண மலைகளைச் சிரிப்பினால் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலனே, தினை விளையும் மலையில் வள்ளியின் கொங்கையில் சுகித்து, சிறந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிறைப் புகழைப் பாடும் பணியை எனக்குத் தருக.

விளக்கக் குறிப்புகள்

இந்தத் திருப்புகழ் முருகனின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும். முதல் இரண்டு அடிகளில் துட்டர்களைத் தண்டித்தலையும், அடுத்த இரண்டு அடிகள் அடியார்களைக் காப்பதையும், ஈற்று இரண்டு அடிகள் அங்ஙனம் செய்வதற்கு எடுத்துக் காட்டுகளையும் காணலாம். ஏழாவது அடியில் அசுரர்களை அழித்ததையும், எட்டாவது அடியில் வள்ளியை மணந்து அருள் புரிந்ததையும் அருணகிரியார் எடுத்துக் காட்டுகிறார்.

இருமலுரோகம் என்று தொடங்கும் திருப்புகழை நோய் தீர்க்கும் மந்திரத் திருப்புகழ் என்றால், சினத்தவர் முடிக்கும் என்று தொடங்கும் பாடலைச் சித்தி தரும் தந்திரத் திருப்புகழ் என்றும் கூறுவர் ( வ.சு. செங்கல்வராய பிள்ளை).

ஒப்புக

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்    குருநாதா                        ...                               திருப்புகழ், கருப்புவிலில்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு   மெனவோதும்        ...                                     திருப்புகழ், இருப்பவல்.

1. சூரர் சினத்தையும் உடல் சங்கரித்து அம் மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா......
அழிக்கப்பட்ட அசுரர்களின் பிணக் குவியலை எரித்துச் சாம்பலாக்கினார்.
அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த      ...                    கந்த புராணம்

” tag:

Saturday, 6 October 2012

123.எனக்கெனயாவும்

“

எனக்கென யாவும் படைத்திட நாளும்
        இளைப்பொடு காலந்                   தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
        இலச்சையி லாதென்                          பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
         உரைத்திடு வார்தங்                        குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
        பொலச்சர ணானுந்                 தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
         விழக்கொடு வேள்கொன்                றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
        விருப்புற வேதம்                       புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
   சிரத்தினை மாறும்                            முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
   திருத்தணி மேவும்                             பெருமாளே.
-123 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

எனக்கு என யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலம் தனில் ஓயா

எனக்கு என = எனக்கேன்றே யாவும் = எல்லாம் படைந்திட = சேகரிக்க வேண்டி நாளும் = நாள்தோறும் இளைப்பொடு = உழைத்து காலம் தனில் ஓயா = காலக் கணக்கில் ஓய்வு இல்லாமல்.

எடுத்திடு காயம் தனை கொடு மாயும்
இலச்சை இலாது என் பவம் ஆற
 
எடுத்திடு காயம் தனை கொ(ண்)டு = எடுக்கின்ற உடல்களை அடைந்து மாயும் = பின்னர் இறந்து போகும் இலச்சை = வெட்கம் இலாது = அழிய என் பவம் ஆற = என் பிறப்பு ஒழிய.

உனை பல நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்கு உளி மேவி
உனைப் பல நாளும் = உன்னைப்பல நாட்களும் திருப்புக ழாலும் = திருப்புகழை உரைத்திடுவார் = கூறிப் புகழ்வோர்கள் தங்கு உளி மேவி = இருக்கும் இடத்துக்குச் சென்று

உணர்த்திய போதம் தனை பிரியாது ஒண்
பொல சரண் நானும் தொழுவேனோ

உணர்த்திய போதம் தனை = (அவ்வடியார்கள் விளக்கும் ஞான)  அறிவுரைகளை பிரியாது = விலகாது (ஒட்டி ஒழுகி) ஒண் பொல = ஒளி வீசும் அழகிய சரண் = திருவடியை நானும் தொழுவேனோ = தொழும் பாக்கியம் எனக்கும் கிட்டுமோ?

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழ கொடு வேள் கொன்றவன் நீயே

வினைத் திறமோடு = தொழிலில் திறமையுடன் அன்று எதிர்த்திடும் வீரன் = அன்று அம்பு எய்த வீரனான மன்மதன் விழ = (வெந்து) விழும்படி. கொடு = கொடிய வேள் = மன்மதனை கொன்றவன் = கொன்று எரித்த வனாகிய சிவபெருமான்.

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும்
விருப்பு உற வேதம் புகல்வோனே

நீயே விளப்பு என = (பிரணவ மந்திரத்தின் பொருளை) உரைப்பாயாக இனி மேல் என்று = நன்கு எனக்கூறி இடக்கு அயனாரும் = (முதலில் உன்னை வணங்காது) முரண் செய்த பிரமனும் விருப்புற = விரும்பி மகிழ வேதம் புகல்வேனே = வேதப் பொருளை உரைத்தவனே.

சினத்தொடு சூரன் தனை கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே

சினத்தொடு சூரன்தனை = கோபத்துடன் சூரனை கொடு
= கொடுமை வாய்ந்த வேலின்= வேல் கொண்டு சிரத்தினை மாறும் = (சூரனின்) தலையைத் தள்ளி ஒதுக்கின முருகோனே = முருகோனே.

தினை புன மேவும் குற கொடியோடும்
திருத்தணி மேவும் பெருமாளே.

தினைப் புனம் மேவும் = தினைப் புனத்தில் வாழும் குறக் கொடியோடும் = கொடி போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியுடன் திருத்தணி மேவும் = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

என் உடைமைகளுக்காக நாள் தோறும் உழைத்து, ஓய்ந்து போய், எடுக்கின்ற உடல்களைக் கொண்டு, பின்னர் இறந்து போகும் கேவலம் அழிய, என் பிறப்பு அற, அடியார்கள் விளக்கும் அறிவுரைகளை மேற்கொண்டு, உபதேச நெறிகளினின்றும் விலகாது, உன் திருவடியைத் தொழுவேனோ?

மன்மதனை அழித்த சிவபெருமான் பிரணவ மந்திரத்தை நீயே உரைப்பாய் என்று கேட்க, பிரமனும் வணங்கும் படி, வேதப் பொருளை உரைத்தவனே. சூரனை வேல் கொண்டு அழித்தவனே, வள்ளியுடன் தணிகை மலையில் வாழ்பவனே, பிறப்பு அற உன் திருவடியை நானும் தொழுவேனோ?

குறிப்பு
இலச்சை = வெட்கம்.  உளி = இடம்.  

Thursday, 30 August 2012

21. ஓரா தொன்றை

“

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
       தோடே வந்திட்                               டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
       டாமால் தந்திட்                                டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
       கோயா நின்றுட்                              குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
       கோடா தென்கைக்                          கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
       றோளா குன்றைத்                           தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
       சூர்மா அஞ்சப்                                 பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
       சேவே றெந்தைக்                            கினியொனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
       சேயே செந்திற்                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே
வந்திட்டு உயிர் சோர

ஒன்றை ஓராது = (உண்மை நெறியாகிய) ஒரு பொருளை நன்கு
ஆராய்ந்து அறியாமலும்  பாராது = சிந்தித்துப் பார்க்காமலும்
அந்தத்தோடே = அழகுடன்  வந்திட்டு = நெருங்கி வந்து உயிர்
சோர = உயிர் சோர்ந்து போகும்படி ( ஒன்று – பிரணவம் என்றும் கொள்ளலாம்)

ஊடா நன்று அற்றார் போல் நின்று
எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்

ஊடா = பிணங்கியும் நன்று அற்றார் போல் = (ஆடவரிடம் பொருள் பரிக்கும் பொருட்டு) நல்ல ஆடை அணிகள் இல்லாதவர்கள் போல  நின்று = நின்றும்  எட்டா = அளவு கடந்த மால் தந்திட்டு = காம மயக்கத்தைக் கொடுத்து. உழல் மாதர் =
அலையும் விலை மாதர்கள்

கூரா அன்பில் சோரா நின்று அக்கு
ஓயா நின்று உள் குலையாதே

கூரா அன்பில் = உண்மையில்லாத அன்பில் சோரா நின்று = ஓய்ந்து நின்று அக்கு = எலும்போடு கூடிய உடம்பு ஓயா நின்று= தளர்ந்து நின்று உள் குலையாதே = உள்ளம் நிலை குலையாதபடி.

கோடு ஆர் செம் பொன் தோளா நின் சொல்
கோடாது என் கைக்கு அருள் தாராய்

கோடு ஆர் = மலை போன்ற  செம்பொன் தோளா = பொன் மயமான தோளை உடையவனே  நின் சொல் = உன்னுடைய திருப்புகழை  கோடாது என்கைக்கு = (உலகோருக்கு) நேர் நின்று உதவும்  என்று சொல்லும்படி அருள் தாராய் = அருள் புரிய வேண்டும்.

தோரா வென்றி போரா மன்றல்
தோளா குன்றை தொளை ஆடீ

தோரா = தோல்வி இல்லாமல் வென்றிப் போரா = வெற்றிப் போர் செய்பவனே மன்றல் = மணம் வீசும்  தோளா = தோள்களை உடையவனே  குன்றை = கிரௌஞ்ச மலையை
தொளை ஆடீ = துளைத்தவரே

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச
சூர் மா அஞ்ச பொரும் வேலா

சூதாய் = மிக்க வஞ்சகத்துடன் எண் திக்கு ஏயா = எட்டுத் திசைகளிலும் பொருந்திச் சென்ற சூர் மா = மாமரமாய் வந்த சூரன் அஞ்ச = பயப்படும்படி பொரும் வேலா = போர் புரிந்த வேலனே.

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற
சே ஏறு எந்தைக்கு இனியோனே

சீர் ஆர் = சிறந்த ஆத்தி. கொன்றை = கொன்றை. தார் மார்பு ஒன்ற = மாலைகளை அணிந்த மார்பில் திகழும். சே ஏறு = விடையின் மேல் ஏறும். எந்தைக்கு இனியோனே = என் தந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே.

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல்
சேயே செந்தில் பெருமாளே.

தேனே = தேன் போல் இனிப்பவனே அன்பர்க்கே ஆம் = அன்பர்களுக்கு என்றே இன் சொல் = இனிய சொற்களைப் பேசும். சேயே = செம்மைப் பண்புடையவரே. செந்தில் பெருமாளே = திருச் செந்தூரில் எழுந்தருளியிருக்கும்                     பெருமாளே.

சுருக்க உரை

உண்மை நெறிகளை நன்கு ஆராய்ந்து பாராமல், அழகுடன் வந்து, ஆண்களுக்குக் காம மயக்கம் தந்து, உடலும் உள்ளமும் தளரும்படி, நல்ல பொருள் இல்லாதவர்கள் போல் நடிக்கும் விலைமாதர்களின் பொய்யான அன்பில் சோர்வடைந்து, உள்ளம் குலைந்து போகாமல், உன் திருப்புகழ் யாவர்க்கும் உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் புரிவாய்.

வெற்றிப் போர் செய்பவனே. மாமரமாய் வந்த சூரன் அஞ்சும்படி அவனுடைய கிரௌஞ்ச மலையைத் தொளைய போர் புரிந்தவனே, கொன்றை மலர் மாலைகள் அணிந்த மார்பை உடையவரே, எந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே, அன்பர்களுக்கு இனிமையான சொற்களைப் பேசும் செந்திற் பெருமாளே, உன்னுடைய திருப்புகழ் நின்று உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் தாராய்.

ஒப்புக

அ. ஓராது ஒன்றை =   (ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார்)--- கந்தர் அலங்காரம்  
ஆ. ஊடா.... காம மயக்கத்தால் பிணங்குதல்.
     (ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
      கூடி முயங்கப் பெறின்) --- திருக்குறள் 1330.

இ  இன் சொல் சேயே – இன்சொல் விசாகா - திருப்புகழ்

Saturday, 18 August 2012

4. நினது திருவடி

“

நினது திருவடி சத்திம யிற்கொடி 
    நினைவு கருதிடு புத்திகொ டுத்திட 
    நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு        நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
    நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
    நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும்              இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
    மகர சலநிதி வைத்தது திக்கர
    வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை               வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு   
    வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
    வனச பரிபுர பொற்பத அர்ச்சனை              மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
    சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
    திரளும் உறுசதை பித்தநி ணக்குடல்          செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்   
    நிரைய அரவநி றைத்தக ளத்திடை
    திமித திமிதிமி மத்தளி டக்கைகள்                செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்   
    துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
    டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில்           எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட      
    இரண பயிரவி சுற்றுந டித்திட   
    எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள்             பெருமாளே.
 -004 நினதுதிருவடி

பதம் பிரித்தல்

நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட 
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்

நினது திருவடி = (முருகா) உன்னுடைய திருவடி சத்தி மயில் கொடி = வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவு கருதிடு = நினைவில் கருதும் புத்தி கொடுத்திட = அறிவை நான் பெறுதற்கு நிறைய செய் = நிரம்பச் செய்யப்பட்ட அமுது = அமுது. முப்பழம் = மூன்று வகையான பழங்கள் அப்பமும் = அப்பமும் நிகழ் = பொருந்திய பால் தேன் = பால், தேன்.

நெடிய வளை முறி இக்கொடு லட்டு கம் 
நிற வில்  அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி  கனி வர்க்கமும் இளநீரும்

நெடிய வளை முறி = நீண்டு வளைந்த முறுக்கு இக்கு ஒடு = கரும்புடன் லட்டு = லட்டு கம் நிற வில் அரிசி = நிறமும் ஒளீயும் உள்ளஅரிசி பருப்பு அவல் எள் பொரி = அரிசி, பருப்பு, எள், பொரி நிகர் இல் = ஒப்பில்லாத  இனி = இனிய. கதலிக் கனி வர்க்கமும் = வாழைப்பழ வகைகளும் இள நீரும் = இள நீரும்.

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு  
மகர சலநிதி வைத்த துதி கர   
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மனது மகிழ்வொடு = மன மகிழ்ச்சியுடன் தொட்ட = உண்ணும். கரத்து = கைகளையும்  ஒரு = ஒப்பற்ற  மகர சலநிதி வைத்த =  மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக் கர = துதிக்கையையும் உடைய வளரும் கரி முக = வளரும் யானை முகத்து ஒற்றை மருப்பனை = ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை  வலமாக = வலம் வந்து.

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு  
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு  
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

மருவு = பொருந்திய. மலர் புனை = மலர் கொண்டு (வழிபட்டும்)
தொத்திர சொல் கொடு = (சிறப்பித்துக் கூறும்) துதிச் சொற்களைக் கொண்டு (துதித்தும்) வளர் கை = தூக்கிய கைகளால். குழை பிடி = காதைப் பிடித்தும். தொப்பண குட்டொடு = தோப்பணம் குட்டு முதலின செய்தும். வனச = (அவருடைய) தாமரை போன்ற பரிபுர பொன் பதம் = சிலம்பு அணிந்த அழகிய பாதங்களீல். அர்ச்சனை மறவேனே = அர்ச்சனை செய்வதை நான் மறவேன்.

தெனன தெனதென தெத்தென அன பல    
சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்  
திரளும் உறு சதை பித்த(ம்) நிண குடல் செறி மூளை
தெனன ..... என = இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய அறுபதம் = பல சிறிய ஈக்கள். மொய்த்த = மொய்க்கும். உதிரப் புனல் = இரத்த நீர். திரளும் உறு சதை = திரண்டுள்ள சதைகள். பித்த நிணக் குடல் = பித்த மாமிசக் குடல். செறி மூளை = நெருங்கிய மூளை.

செரும உதர நிரப்பு(ம்) செரு குடல்   
நிரைய அரவ நிறைத்த களத்து இடை  
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே

செரும = நிரம்பிய. உதர = அவ்வயிற்றில் நிரப்பு = நிறைந்து செருக் குடல் = மிக்க குடல் நிரைய = வரிசைகள் அரவ(ம்) நிறைத்த = ஒலி (இவைகள்) நிறைந்த களத்திடை = போர்க் களத்தில் திமித திமிதிமி மத்தள(ம்) = திமித என்று ஒலிக்கும் மத்தளம். இடக்கைகள் = இடக்கை என்னும் வாத்தியம் செகசேசே எனவே = என்று ஓசை செய்ய.

எனவே துகு துகு துத்தென ஒத்துகள் 
துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட   
டிமுட டிமு டிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை

துகு துகு துத்து என = என்று ஓசையுடன் ஒத்துகள் = ஊது குழலுடன்
துடிகள் = உடுக்கைப் பறைகள் இடி மிக = இடி என ஒத்து முழக்கிட = மிக ஒத்து முழங்க  டிமுட ...எனத் தவில் = என்றபடி மேள வகைகள் எழும் ஓசை = ஓசைகள் எழ

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட   
இரண பயிரவி சுற்று நடித்திட   
எதிரு நிசிசரரை பெலி இட்டு அருள் பெருமாளே. 

இகலி = ஒன்றோடொன்று பகைத்த அலகைகள் = பேய்கள் கைப்பறை கொட்டிட = கைப்பறைகளைக் கொட்ட இரண பயிரவி = ரண பயிரவி என்னும் தேவதைகள்  சுற்று நடித்திட = சுற்றிக் கூத்தாட எதிரும் நிசிசரரை = எதிர்த்து வந்து அசுரர்களை பெலி இட்டு அருள் பெருமாளே = அழித்தருளிய பெருமாளே.

சுருக்க உரை

முருகா, உனது திருவடி, வேல், மயில் சேவல்  முதலிவற்றை நான் கருத்தில் நினைவு கொள்ளும்படி, அமுது, முக்கனி, முதலிவற்றை மகிழ்ச்சியுடன், துதிக்கையும், ஒற்றைக் கொம்பையும் உடைய விநாயகப் பெருமான் உண்ணும்படி வைத்து, காதைப் பிடித்து, தோப்பணமும் குட்டும் இட்டு, அவருடைய தாமரைத் திருவடியை அரச்சனை செய்வதை நான் மறவேன்.

ஈக்கள் மொய்க்கும் இரத்தம், குடல் முதலிவை நிறைந்த போர்க் களத்தில், மத்தளம், இடக்கை, ஊது கொம்புகள், உடுக்கை, பறைகள் முதலிய வாத்தியங்கள் பேரொலி செய்ய, அதற்குத் தக்கபடி, பேய்கள் கைப்பறையைக் கொட்டவும், பயிரவி என்னும் தேவதைகள் கூத்தாடவும், எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே. உன் திருவடியை நான் எப்போதும் கருதும் படிக் கணபதியை அரச்சிப்பதை மறவேன்.

விளக்கக் குறிப்புகள்

சிறிய அறு பதம் = சிறிய ஆறு கால்களைக் கொண்ட ஈக்கள்.
இப்பாடல் கணபதிக்குத் துதியாக அமைந்தது. இந்த பாடலின் விளக்கத்தை கட்டுரை பகுதியில்  ‘வனச பரிபுத அர்ச்சனை’  என்ற தலைப்பில் பார்கவும் http://thiruppugazhamirutham.shutterfly.com/.
மகர சலநிதி வைத்த துதிக் கர....
திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை
ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக்
கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கிய போது தமது
துதிக்கையால் கடல் நீரெல்லாம் உறிஞ்சினார்.