F

படிப்போர்

Thursday, 29 November 2012

167.மனையவள்

“

        தனதன தனத்த தான தனதன தனத்த தான
         தனதன தனத்த தான         தனதான

நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
   மகளிரு நகைக்க தாதை                    தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
   வசைமொழி பிதற்றி நாளு                 மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
   னகமதை யெடுத்த சேம               மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
   மணுகிமு னளித்த பாத                    மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
   தமருக மறைக்கு ழாமு                   மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
   சமரிடை விடுத்த சோதி                   முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
   எழுதரிய பச்சை மேனி                     யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
   இலகிய சசிப்பெண் மேவு                 பெருமாளே

-167ஞானமலை

(இடம் விளங்கவில்லை--- வ.சு.செங்கல்வராயபிள்ளை.
ஆனால் அரக்கோணம் காட்பாடி வழியில் பாணாவரம் அருகில் கோவிந்தச்சேரி கிராமம்தான் ஞானமலை என வலையப்பட்டி கிருஷ்ணன் கருதுகிறார். 
அங்கு  முருகன் பிரம்ம சாஸ்தாவாக 
{முருகனின் 16 திருவுருவ கோலங்களில் ஒன்று} 
காட்சியளிக்கிறார்).

பதம் பிரித்து உரை

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு(ம்) நகைக்க லோக
மகளிர் நகைக்க தாதை தமரோடும்

மனையவள் = மனைவி. நகைக்க = நகைக்க. ஊரில் அனைவரும் நகைக்க = ஊரில் உள்ள யாவரும் நகைக்க. லோக மகளிர் நகைக்க = உலகத்திலுள்ள பெண்கள் நகைக்க. தாதை =  தந்தை. தமரோடும் = சுற்றத்தாரோடு.

மனம் அது சலிப்ப நாயனும் உ(ள்)ளம் அது சலிப்ப யாரும்
வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை

மனம் அது சலிப்ப = மனம் வெறுப்பு அடைய. நாயேன் உள்ளம் அது சலிப்ப = அடியேனது உள்ளம் வெறுப்பு அடைய. யாரும் = யாவரும். வசை மொழி = பழிப்பு மொழியை பிதற்றி = பலவாறு ஆராய்ந்து பேசி. நாளும் = நாள்தோறும். அடியேனை = அடியேனை

அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின்
அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று

அனைவரும் இழிப்ப = எல்லாரும் இழிவாகப் பேச. நாடும் மனம் = எண்ணமிடும் மனத்தில். இருள் மிகுந்து = இருள் மிகுந்து நாடின் = யோசித்துப் பார்த்தால். அகம் அதை = (நான்) உடலை. எடுத்த சேமம் = எடுத்த இன்பம். இதுவோ என்று = இது தானோ என்று.

அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்த போதும்
அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே

அடியனும் = அடியேனும். நாளும் நினைத்து = நாள் தோறும் நினைத்து. உடல் உயிர் விடுத்த போதும் = (முடிவில்) உடலினின்று உயிரை விடத் துணிந்த சமயத்தில். அணுகி = என் அருகில் வந்து. முன் அளித்த = நீ அப்போது அளித்த. பாதம் அருள்வாயே = திருவடியை அருள் புரிந்து உதவுக.

தனதன .............என முரசு ஒலிப்ப வீணை
தமருகம் மறை குழாமும் அலை மோத

தனதன...என = (இவ்வாறு). முரசு ஒலிப்ப = பறை ஒலி செய்ய. வீணை தமருகம் = வீணையும் உடுக்கையும். மறை = வேத ஒலி. குழாம் = கூட்டம். அலை மோத = அலை மோதுவதைப் போலப் பெருக.

தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்கு மாறு
சமர் இடை விடுத்த சோதி முருகோனே

தடி நிகர் = மின்னல் போல ஒளிவிடும். அயில் கடாவி = வேலைச் செலுத்தி. அசுரர்கள் இறக்குமாறு = அசுரர்கள் மடியும்படி. சமர் இடை விடுத்த = போர்க்களத்தே விடுத்த. சோதி முருகோனே = சோதி முருகனே.

எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
எழுத அரிய பச்சை மேனி உமை பாலா

எனை மனம் உருக்கி = என் மனத்தை உருக்கி. யோக அநுபூதி அளித்த = அனுபூதியை அளித்த. பாத = திருவடிகளை உடையவனே. எழுத அரிய = எழுதுதற்கு அரிதான. பச்சை மேனி = பச்சை மேனியை உடைய. உமை பாலா = பார்வதியின் பாலனே.

இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம்
இலகிய சசி பெண் மேவு பெருமாளே.

இமையவர் துதிப்ப = தேவர்கள் துதிக்க. ஞான மலை உறை = ஞான மலையில் வீற்றிருக்கும். குறத்தி பாக = குறத்தியாகிய வள்ளியின் பங்கனே. இலகிய = விளங்குகின்ற. சசிப் பெண் மேவு = இந்திராணியின் மகளாகிய தேவசேனை விரும்புகின்ற. பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

மனைவி, ஊரில் உள்ளவர்கள், உலகிலுள்ள மகளிர் இவர்கள் யாவரும் நகைக்கவும், தந்தையும், சுற்றத்தார்களும் மனம் சலிப்படையவும், எல்லரும் பழிப்பு மொழியைப் பலவாறு ஆராய்ந்து பேசி அடியேனை இழிவாகப் பேசவும், எண்ணிப் பார்த்தால், நான் பிறப்பு எடுத்த இன்பம் இது தானோ என்று நாள் தோறும் நினைத்து, முடிவில் உயிரை விடத் துணித்த போது, நீ என் அருகில் வந்து அளித்த திருவடியை அருள் புரிந்து உதவுக.

தனதன....தன என்று முரசு ஒலி செய்ய, வீணை, தமருகம், வேத ஒலிக் கூட்டம் இவை எல்லாம் அலை மோதுவதைப் போல் பெருக, ஒளி வீசும் வேலைச் செலுத்தி, அசுரர்கள் மடியும்படி போர்க்களத்தில் விடுத்த முருகனே, என் மனத்தை உருக்கி, யோக அனுபூதியை அளித்த திருவடிகளை உடையவனே, உமா தேவியின் பாலனே. தேவர்கள் துதிக்க ஞான மலையில் வீற்றிருக்கும் குறப் பெண் வள்ளியின் பங்கனே, இந்திராணியின் மகளான தேவசேனை விரும்புகின்ற பெருமாளே. முன் எனக்கு அளித்த பாதம் அருள்வாயே.

விளக்கக் குறிப்புகள்

1. நாளும் உடல் உயிர் விடுத்த போதும் அணுகி...
தமது வாழ்க்கைத் துன்பத்தை நினைத்துத் தாம் உயிர் துறக்கத் துணிந்த வரலாற்றைக் குறிக்கும்.

2. எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த....
இறைவன் திருவடி சூட்டி யோக அனுபூதியைத் தமக்கு அருளிய திறன் இங்கு குறிப்பிடப்படுள்ளது.

” tag:

166.தொல்லைமுதல்

“

              தையதன தானந்த தையதன தானந்த
                தையதன தானந்த                     தனதான

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
   சொல்லுகுண மூவந்த                               மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
   தொய்யுபொரு ளாறங்க                          மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
    பல்குதமிழ் தானொன்றி                         யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
   பௌவமுற வேநின்ற                              தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
   கல்வருக வேநின்று                                   குழலுதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
   கைதொழுமெய்ஞ் ஞானஞ்சொல்                 கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
   கொள்ளைகொளு மாரன்கை                        யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
   கொல்லிமலை மேனின்ற                         பெருமாளே.
-    166 கொல்லிமலை
-    நாமக்கல் அருகில்

பதம் பிரித்து உரை

தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள்
சொல்லு(ம்) குணம் மூ அந்தம் என ஆகி

தொல்லை = பழம் பொருள் முதல் = முதற் பொருள் (என்னும்படி) தான் ஒன்று = தான் ஒன்றாய் விளங்குவதாய் மெல்லி இரு பேதங்கள் = சிவம், சக்தி என்னும் இரண்டு வேறு தன்மையதாய் சொல்லும் = சொல்லப்படும் குணம் மூ அந்தம் = ராசத, தாமத, சாத்துவிகம் எனப்படும் மூன்று குணங்களின் முடிவாக உள்ள. என ஆகி = திரி மூர்த்திகளாய்

துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும்

துய்ய = தூயதான சதுர் வேதங்கள் = நான்கு வேதங்களாய்  வெய்ய = கொடிய  புலன் ஓர் ஐந்தும் = ஐம்புலன்களையும்  தொய்யும் = சோர்வடையச் செய்யும்   
பொருள் = பொருள் கொண்ட ஆறு அங்கம் என = ஆறு வகைப்பட்ட வேதப் பொருள் உணர்த்தும் கருவிகளாக மேவும் = விளங்குவதாய்.

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
பல்கு(ம்) தமிழ் தான் ஒன்றி இசையாகி

பல்ல பல = பலப்பல நாதங்கள் அல்க = ஒலிகளில் தங்குவதாய் பசு பாசங்கள் பல்கு = உயிர், தளை என்பனவாய்ப் பெருகும். தமிழ் தான்    ஒன்றி = தமிழில் பொருந்தி இசையாகி = இன்னிசையாகி

பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருப ஆனந்த
பௌவம் உறவே நின்றது அருள்வாயே

பல் உயிருமாய் = பல உயிர்களுமாய் அந்தம் இல்ல = முடிவில்லாததாய் சொருப ஆனந்த = உள்ள ஆனந்த உருவ பௌவம் உறவே = கடலை அடையும்படி நின்றது அருள்வாயே = செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை அருள்வாயாக.

கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல்
வருகவே நின்று குழல் ஊதும்

கல் உருக = மலையும் உருகும்படி வேயின் கண் = மூங்கிலில் அல்லல் படும் = கட்டப்படும் கோ = பசுக்கள் அம் புகல் வருகவே = அழகிய புகும் இடம் வந்து சேரும்படி நின்று குழல் ஊதும் = நின்று புல்லாங் குழலை ஊதுகின்ற

கையன் மிசை ஏறும் உம்பன் நொய்ய சடையோன் எந்தை
கை தொழு(ம்) மெய் ஞானம் சொல் கதிர்வேலா

கையன் = கையை உடைய திருமாலாகிய மிசை ஏறும் = (விடையின்) மீது ஏறுகின்ற உம்பன் = பெரியோனும் நொய்ய சடையோன் எந்தை = புன் சடையோனும் எந்தையுமாகிய சிவ பெருமான் கை தொழுது = கை தொழுது நிற்க மெய்ஞ் ஞானம் சொல் = (அவருக்குப்)  பிரணவப் பொருளைப் போதித்த  கதிர் வேலா = ஒளி வேலனே.

கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று
கொள்ளை கொளும் மாரன் கை அலராலே

கொல்லை மிசை வாழ்கின்ற = (தினைக்) கொல்லையில் வாழ்கின்ற. வள்ளி = வள்ளியின்  புனமே சென்று = புனத்துக்குச் சென்று கொள்ளை கொள்ளும் = (உயிரைக்) கொள்ளை கொள்ளும் மாரன் = மன்மதனுடைய  கை அலராலே = கையில் உள்ள மலர்ப் பாணத்தின் செய்கையால்.

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த
கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே.

கொய்து தழையே கொண்டு செல்லும் = தழை கொய்து எடுத்துக் கொண்டு சென்ற மழவா = கட்டழகு உடையவனே  கந்த = கந்தனே கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே = கொல்லி மலை மேல் விளங்கும் பெருமாளே.

.சுருக்க உரை

பழம் பொருள், மூலப் பொருள் எனத் தான் ஒன்றாய் விளங்குவதாய், சக்தி, சிவம் எனப்படும இரு வேறு தன்மைகளை உடையதாய், மூன்று குணங்களின் முடிவாக உள்ளதாய், தூயதாய், நான்கு வேதங்களாய், ஐம்புலன்களையும் சோர்வடையச் செய்ய வல்லதாய், வேதப் பொருள் விளங்குவதாய், பல ஒலிகளில் தங்குவதாய், தமிழின் இசையாய், எல்லா உயிர்களுக்கும் முடிவாக நிற்கும்  பொருள் எதுவோ, அந்த ஆனந்தக் கடலில் நான் முழுக, அதை எனக்குச் சொல்லி அருள்வாயாக.

புல்லாங்குழலை ஊதும் திருமாலாகிய விடையின் மேல் ஏறும் சிவபெருமானும் கை தொழுது நிற்க, அவருக்கு மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்த வேலனே. வள்ளி இருந்த தினைப் புனத்துக்குத் தழை கொண்டு சென்ற கட்டழகு உடையவனே. கொல்லி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. முடிவில்லாத ஆனந்தக் கடலில் நான் நிற்க அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்

1. இப்பாடலில் மூலப் பொருள் ஒன்று, சக்தி சிவம் இரண்டு, குணங்கள் மூன்று, வேதங்கள் நான்கு, புலன்கள் ஐந்து, அங்கங்கள் ஆறு என வரும் அழகைக் காணலாம்.
  (ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
 நின்றவன் மூன்னறினுள் நான்குணர்ந் தான்ஐந்து
 வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
 சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே)...திருமந்திரம் 1.
ஆறு அங்கங்கள் ...சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், சோதிடம், கல்பம் என்பன.

2. கையன் மிசை ஏறும் உம்பன்....
திரிபுரம் எரிக்கச் சென்றபோது, சிவனுடைய தேர் நெரிந்து பூமியில் அழுந்தியது. திருமால் இறைவன் கொடுத்த வலிமையால் இடபமாகி தேரை முன் போல் நிறுத்தினார். பின்னர் இறைவனை வேண்டி அவரை எந்நாளும் சுமக்க மழவிடையாக மாறினார். 

3. கொய்து தழையே கொண்டு செல்லும் மழவன்...
அகப் பொருளில் தழை கொண்டு சேறுதல் என்பது ஒரு துறை. தலைவிக்குத் தலைவன் சந்தனத் தழை ஆடை உடுக்கத் தருவது.
(தழையு டுத்தகு றத்திப தத்துணை
   வருடி வட்டமு கத்தில தக்குறி)...திருப்புகழ் (பழமைசெப்பிய).