F

படிப்போர்

Showing posts with label அனுபூதி. Show all posts

Sunday, 19 May 2013

215.தசையாகிய

215
கருவூர்

 தனனா தனனத் தனனா தனனத்
 தனனா தனனத்                தனதான

தசையா கியகற் றையினால் முடியத்
     தலைகா லளவொப்                    பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
    றவிரா வுடலத்                        தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
    படுபூ ரணநிட்                             களமான
பதியா வனையுற் றநுபூ தியிலப்
     படியே யடைவித்                    தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
    கருணோ தயமுத்                      தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
      றவர்வாழ் வயலித்                      திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
      கமலா லயன்மைத்                     துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
      கருவூ ரழகப்                           பெருமாளே.

-   215 கருவூர்

பதம் பிரித்து உரை

தசையாகிய கற்றையினால் முடிய
தலை கால் அளவு ஒப்பனையாயே

தசை ஆகிய =மாமிசமாகிய  கற்றையினால் = திரளால் முடிய =முழுமையும் தலை கால் அளவு = தலை முதல் கால் வரையும் ஒப்பனையாயே
=  அலங்காரமாகவே (அமையப் பெற்று).

தடு மாறுதல் சற்று ஒரு நாள் உலகில்
தவிரா உடலத்தினை நாயேன்

தடுமாறுதல் = சஞ்சலம் உறுதல் சற்று ஒரு நாள் = கொஞ்சமேனும் ஒரு நாள் கூட உலகில் தவிரா = இந்த உலகத்தில் நீங்காத உடலத்தினை = (இந்த) உடம்பை நாயேன் = அடியேன்

பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு
பூரண நிட்களமான

பசு =தற்போதத்தையும் (அகங்காரத்தையும்) பாசமும் = பந்தத்தையும் விட்டு = விடுத்து அறிவால் = ஞானத்தால் அறியப்படு = அறியப்படுகின்ற பூரண= பரிபூரணமானதும்
நிட்களமான = உருவில்லாததுமான

பதி பாவனை உற்று அநுபூதியில்
அப்படியே அடைவித்து அருள்வாயே

பதி பாவனை = பரம் பொருளாகிய கடவுள் தியானத்தை உற்று =மேற்கொண்டு அநுபூதியில் அநுபவ ஞானத்தில் அப்படியே அடைவித்து = அந்தத் தியான நிலையிலேயே என்னை ஒப்படைத்துச் சேர்ப்பித்து அருள்வாயே = அருள் புரிவாயாக

அசல ஈசுரர் புத்திரனே குண திக்கு
அருணோதய முத்தமிழோனே

அசலேசுரர் = கயிலை மயிலைக் கடவுளாகிய சிவபெருமானின் (அசைவற்றிருக்கும் தாணுவாம் சிவபெருமானின்) புத்திரனே மகனே குண திக்கு = கிழக்குத் திசையில் தோன்றும் அருணோதய = உதய சூரியனுடைய ஒளியை உடையவனே முத்
தமிழோனே = முத்தமிழ்க் கடவுளே

அகில ஆகம வித்தகனே துகள்
அற்றவர் வாழ் வயலித் திருநாடா

அகில ஆகம = எல்லா ஆகமங்களிலும் வித்தகனே = வல்லவனே துகள் அற்றவர் = குற்றமற்றவர்கள் வாழ் = வாழும் வயலித்
திருநாடா = வயலூர் என்னும் அழகிய ஊரில் வீற்றிருப்பவனே.

கசிவார் இதயத்து அமிர்தே மதுப(ம்)
கமலாலயன் மைத்துன வேளே

கசிவார் = உள்ளம் உருகுபவர்களுடைய இதயத்து அமிர்தே = மனத்தில் ஊறும் அமுதமே மதுப(ம்) = வண்டு மொய்க்கின்ற
கமலாலயன் = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் மைத்துன வேளே = மைத்துன னாகிய முருக வேளே.

கருணாகர சற் குருவே குடகில்
கருவூர் அழக பெருமாளே.

கருணகர = கருணாகரனே சற் குருவே = சற் குரு மூர்த்தியே குடகில் = மேற்குத் திசையில் உள்ள கருவூர் = கருவூரில் வீற்றிருக்கும் அழகப் பெருமாளே = அழகிய பெருமாளே.

சுருக்க உரை

தலை முதல் கால் வரை மாமிசத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒவ்வொரு நாளும் துன்பத்துக்கு இடமானதும் ஆகிய இந்த உடலை உடைய அடியேனாகிய நான், என் அகங்காரத்தையும், ஆசைகளையும் விடுத்து, ஞானத்தால் மட்டும் அறியப்படுவதும், உருவமில்லாததுமான பரம்பொருளாகிய உன்னைத் தியானித்து, அந்த அனுபவ ஞானத்தினின்றும் நீங்கா வண்ணம் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக.

கயிலை மலைக் கடவுளாகிய சிவபெருமானின் மகனே, கீழ் வானம் போன்ற ஒளியை உடையவனே, முத்தமிழ்க் கடவுளே, எல்லா ஆகமங்களிலும் வல்லவனே, வயலூரில் வாழ்பவனே, மனம் கசிபவர் உள்ளத்தில் ஊறுகின்ற அமுதமே, தாமரை மலரில் வாழும் பிரமனின் மைத்துனனே, கருணாகரனே, ஞான சற் குருவே, கருவூரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே, என்னை அனுபூதியில் சேர்ப்பாயாக.

ஒப்புக

1. பசுபாசமும் விட்டு அறிவால் அறிய......

இவ்வடிகள் சன் மார்க்க நிலையை திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளவாறு
விளக்குகின்றன.

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யான சன்மார்க்கமே.......................                           திருமந்திரம் 

பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால் மெய் உணர்ந்திடேனோ...........                   திருப்புகழ், குயிலோமொழி.

2. அநுபூதியில் அப்படியே அடைவித்து.....

மீளா அடிமை உமக்கே ஆளாய்..........................................                  சுந்தரர் தேவாரம்.

3. மதுபக் கமலா லயன் மைத்துன வேளே.....

வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா......................                 திருப்புகழ், நீதானெத்.

” tag:

Tuesday, 19 March 2013

195.இலாபமில்

195
இலாபமில்

மனலோயம் பெற

            தனாதன தனாதன தனாதன தனாதன
             தனாதன தனாதனன                  தனதான

          இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
           ரியாவரு மிராவுபக                      லடியேனை
        இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
           மிலானிவ னுமாபுருஷ                   னெனஏய
        சலாபவ மலாகர சசீதர விதாரண
           சதாசிவ மயேசுரச                         கலலோக
        சராசர வியாபக பராபர மநோலய
           சமாதிய நுபூதிபெற                    நினைவாயே
        நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
           நியாயப ரிபாலஅர                           நதிசூடி
        நிசாசர குலாதிப திராவண புயாரிட
           நிராமய சரோருகர                     னருள்பாலா
        விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
           வியாதர்கள் விநோதமகள்                மணவாளா
        விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
           விராலிம லைமீதிலுறை                 பெருமாளே

-    195 விராலிமலை

பதம் பிரித்து பத உரை

இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர்
இயாவரும் இராவு பகல் அடியேனை

இலாபம் இல = ஒரு லாபமும் இல்லாத பொலா உரை = பொல்லாத மொழிகளை சொலா = சொல்லாத மன = மனத்தை உடைய தபோதனர் = தவத்தினர்கள் இயாவரும் = யாவரும் இராவு பகல் = இரவும் பகலும் அடியேனை = அடியேனாகிய என்னை (குறித்து).

இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும்
இலான் இவனும் மா புருஷன் என ஏய

இராகமும் விநோதமும் = ஆசை, விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும் உலோபமுடன் = ஈயாக்குணமும் மோகமும் = காம மயக்கம் ஆகியவை இலான் = இல்லாதவன் இவனும் மா புருஷன் என = இவனும் ஒரு சற்புருஷன் என்று சொல்லும் சொல் ஏய = பொருந்துமாறு.

ச(ல்)லாபம் அமல ஆகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுர சகல லோக

சல்லாபம் = இனிய குணத்தினனாக அமலாகர = பரிசுத்தத்துக்கு இருப்பிடமான சசீதர= சந்திரனைத் தரித்த விதரண= கருணை நிறைந்த சதாசிவ மயேசுர = சதாசிவ நிலையதாய் சகல லோக = சகல உலகங்களிலும் உள்ள.

சராசர வியாபக பராபர மநோலய
சமாதி அனுபூதி பெற நினைவாயே

சராசர வியாபக = எங்கும் எவற்றிலும் கலந்ததான. பராபர = பரம் பொருளாய் உள்ள. மநோலய = மனம் ஓடுங்கிய. சமாதி அனுபூதி பெற = சமாதி அனுபூதி நிலையை அடியேன் பெற. நினைவாயே = நினைந்து அருளுமாறு வேண்டுகின்றேன்.

நிலா விரி நிலா மதி நி(ல்)லாத அநில அசன
நியாய பரிபால அர நதி சூடி

நிலா விரி = சந்திர கிரணங்கள் விரிந்து பிரகாசிக்கின்ற. நிலா மதி = பிறைச் சந்திரன் நி(ல்)லாத அநில(ம்) அசன(ம்) = நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கின்ற. நியாய பரிபால அர = நியாய பரிபாலனம் செய்வதில் வல்ல ஆதிசேடனான பாம்பையும். நதி = கங்கையையும். சூடி = சூடியவரும்.

நிசாசர குல அதிபதி ராவண புய அரிட
நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா

நிசாசுர = அரக்கர். குலாதிபதி = குலத்துக்குத் தலைவனான இராவணனுடைய புய அரிட = தோள்களுக்குக் கேடு செய்பவரும் நிர ஆமய = நோயற்ற மூர்த்தியும் சரோருக அரன் = தாமரையில் வீற்றிருப்பவருமான அரன் (சிவபெருமான்) அருள் பாலா = பெற்ற மகனே.

வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம்
வியாதர்கள் விநோத மகள் மணவாளா

வில் ஆசுகம் = வில், அம்பு விடுதலில் வ(ல்)லார் எனும் = வல்லவர் என்னும் உலாச இத = மனக் களிப்பில் இன்பம் கொண்டு ஆகவம் = போரிடும்  வியாதர்கள் = வேடர்களின் விநோத மகள் = அற்புத மகளாகிய வள்ளியின் மணவாளா = கணவனே.

விராவு வயல் ஆர் புரி சிரா மலை பிரான் மலை
விராலி மலை மீதில் உறை பெருமாளே.

விரவு = பொருந்திய வயல் ஆர் புரி = வயலூர் சிரா மலை = திரிசிரா மலை பிரான் மலை = கொடுங்குன்றம் இவைகளை இடமாகக் கொண்டு) விராலி மலை மீதில் உறை =  விராலி மலையில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

பொல்லாத மொழிகளைச் சொல்லாத பெரும் தவத்தினர்கள் யாவரும் என்னைக் காம மயக்கம் முதலிய கெட்ட குணங்கள் இல்லாதவன், இவனும் ஒரு சற் புருஷன் என்று சொல்லும்படி, எங்கும் எதிலும் கலந்ததான பரம் பொருளாய் உள்ள, மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி நிலையை அடியேன் பெற அருள்வாய்.

பிறையையும், கங்கையையும் பாம்பையும் சூடிய சிவபெருமான் அருளிய குழந்தையே. வில் விடுவதில் வல்ல வேடர்கள் மகளான வள்ளியின் கணவனே. நான் மநோலய சமாதி அனுபூதி பெற நினைவாயே.

ஒப்புக

1. இராவண புராரிட....
சதுரன் வரையை எடுத்த நிருத னுடலை வதைத்து……..............          திருப்புகழ்,முகைமுளரி.

2. சரோருக அரன்....
பதும மலரது மருவிய சிவனது.......சம்பந்தர் தேவாரம்.
சுடர்க் கமலப் போது அகம் சேர் புண்ணியனார்)-------------........................சம்பந்தர் தேவாரம்.

3. நிராமய....
ஆமயம் = நோய். நிராமயம் = நோயின்மை.
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சராதிகப்   ப்ரபையாகி---------------------------...........................--திருப்புகழ், நிராமய.

4. மநோலய சமாதிய னூதிபெற....
இவ்வடிகள் காணப்படும் மற்ற திருப்புகழ் பாடல்கள்.

நினையொ ணாதரு வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம்   வந்து தாராய்-------....................-----—திருப்புகழ், தறையின்.
குரங்கை யொத்துழல் வேனோம னோலய மென்றுசேர்வேன்
-................--திருப்புகழ்,நிறைந்த துப்பிதழ்
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்
சரமனோ லய சுகந்   தருவாயே.......................................................திருப்புகழ், கரவுசேர்
நிராமய பராபர புராதன பராவுசிவ......................................................சம்பந்தர் தேவாரம்.