F

படிப்போர்

Showing posts with label சீகாழி. Show all posts

Friday, 9 August 2013

242.சுருதி யாயிய

242
திருக்குடவாயில்
 பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய்
                                      
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன          தனதான

சுருதி யாயிய லாயியல் நீடிய
  தொகுதி யாய்வரு வாய்வெகு பாஷைகொள்
  தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு          துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
  விரியு மாய்விளை வாயருள் ஞானிகள்
  சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு                  சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
  பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
  பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு                  பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
  மறியொ ணாததை நீகுரு வாயிது
  பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு               பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
  கருதொ ணாவகை யோரர சாய்வரு
  கவுணி யோர்குல வேதிய னாயுமை                   கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலணு                                    
  மதலை யாய்மிகு பாடலின் மீறிய
  கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்               கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
  நிறைய தாய்விட நீறிட வேசெய்து
  கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை        குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
  யியலை யாரண வூரென நேர்செய்து
  குடசை மாநகர் வாழ்வுற மேவிய                   பெருமாளே

பதம் பிரித்தல்

சுருதியாய் இயலாய் இயல் நீடிய
தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்

சுருதியாய் = வேதமாய் இயலாய் = இயல் தமிழாய் இயல் நீடிய = அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான தொகுதி = பகுதியாய் வெகுவாய் = பலவுமாய் வெகு பாஷை = பல மொழிகளில் கொள் = கொள்ளப்பட்ட தொடர்புமாய் = சம்பத்தப்பட்டதாய் அடியாய் = அடிப்படையாய் நடுவாய் = நடுவாய் மிகு துணையாய் = மிக்க துணையாய் மேல் = பின்னும்

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு
விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்

துறவுமாய் = அனைத்தையும் துறந்த நிலையதாய் அறமாய் = தருமமாய் நெறியாய் = நல்லொழுக்க வழியாய் மிகு விரிவுமாய் = மிகுந்த விரிவு உடையதாய் விளைவாய் = விளைவுப் பொருளாய் அருள் ஞானிகள் = அருள் நிறைந்த ஞானிகள் சுகமுமாய் = அனுபவிக்கும் சுகப் பொருளாய் முகிலாய் = மேகமாய் மழையாய் = மழையாய் எழு சுடர் வீசும் = ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும்

பருதியாய் மதியாய் நிறை தாரகை
பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்

பருதியாய் = சூரியனாய் மதியாய் = சந்திரனாய் நிறை தாரகை பலவுமாய் = நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய் வெளியாய் = ஆகாய வெளியாய் ஒளியாய் = (ஸ்வயம்) சோதியாய் எழு = உண்டாகின்ற பகல் இராவு இலையாய் = பகலும் இரவும் இல்லாததாய் நிலையாய் = நிலைத்துள்ளதாய் மிகு பரமாகும் = மிக்க மேலான பொருளான

பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்

பரம மாயையின் = பெரிய மாயையின் நேர்மையை = உண்மைத் தத்துவத்தை யாவரும் அறிய ஒணாததை = எவரும் அறிய முடியாததை நீ குருவாய் = நீ குருவாக வந்து இது பகருமாறு செய்தாய் = (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய் முதல் நாள் உறு பயனோ தான் = (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?

கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
கருத ஒணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார

கருதும் = யாவராலும் கருதிப் போற்றப்படும் ஆறிரு தோள் = பன்னிரு தோள்கள் மயில், வேல் இவை = மயில், வேல் இவற்றை கருத ஒண் வகை = எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து) அரசாய் வரு = (சீர்காழியில்) அரசாக வந்த கவுணியோர் குல வேதியன்=கவுணிய குல ( கௌண்டிண்ய கோத்திர )  மறை யோனாய் - வேதியானாய் உமை கன பார = பார்வதியின் மிக்க பாரமான

களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு
மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற

களப பூண் முலை ஊறிய = கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் சுரந்த பால் உணு மதலையாய் = பாலைப் பருகிய குழந்தையாய் மிகு பாடலின் மீறிய = மிக்க பாடல்கள் பாடுவதில் மேம்பட்ட கவிஞனாய் = கவித் திறன் பெற்றவனாய் விளையாடு இடம் = திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில் வாதிகள் = வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழு ஏற = கழுவில் ஏறவும்

குருதி ஆறு எழ வீதி எ(ல்)லாம் மலர்
நிறைவதாய் விட நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்

குருதி ஆறு எழ = அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும் வீதி எலாம் மலர் நிறைவதாய் விட = தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும் நீறு இடவே செய்து = திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து கொடிய மாறன் = கொடிய மனம் வாய்ந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் மெய் கூன் = கூன் பட்ட உடல் நிமிரா = நிமிர்ந்து விளங்கவும் முனை குலையா = (சமண்) பகையை அழித்து வான் = பொன்னுலகில்

குடி புகீர் என மா மதுரா புரி
இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே

குடி புகீர் என = உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என மா = சிறந்த மதுராபுரி = மதுரையின் இயலை = (முன்னிருந்த சமண்) நிலையை மாற்றி ஆரண ஊர் என நேர் செய்து = வேத புரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து குடசை மாநகர் = திருக்குட வாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வுற = வாழ்வு கொண்டு மேவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

”பால் கொடுத்தது யார்” என தந்தை கேட்க “அவர் தான்” என தந்தைக்கு சுட்டிகாட்டும் சம்பந்தர் – கோயில் சிற்பம்

வேதமாய், தமிழாய், இயற்றமிழையும் மிக்கான பல பகுதிகளாய், பல மொழிகளின் சம்பந்தம் உடையதாய், அடியாய், நடுவாய், துறவாய், நெறியாய்விரிவாய், விரிவு உடையதாய், ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஒளியாய், ஆகாய வெளியாய், சோதியாய், பகல் இரவு இல்லாததாய், மாயையின் உண்மைத் தத்துவமாய், எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து, அதை உலகத்தாருக்குஎடுத்து ஓதுமாறு எனக்குத் திருவருள் புரிந்தது நான் முற் பிறப்பில் செய்த தவத்தின்
பயனோ?

உன்னுடைய பன்னிரு தோள்களும், மயில், வேல் இவைகளை மறைத்து, கவுணிய குலத்தைச் சேர்ந்த காழிப்பதியின் அரசனாய்த் தோன்றி, உமையின்f பாலை உண்டு, பல திருவளையாடல்கள் செய்த சமயத்தில், வாதுக்கு வந்த சமணர்களை வென்று அவர்களைக் கழுவில் ஏற்றி, பாண்டியனின் உடல் கூனையும் நீக்கி, சமண் பகையை அழித்து, தேவர்கள் பொன்னுலகத்தில் குடி போகச்செய்து, மதுரையின் பெயரை வேத புரியாக மாற்றி, திருக்குட வாயிலில் வீfற்றிருக்கும் பெருமாளே நீ குருவாய் வந்தது நான் செய்த பயன் தான்

விளக்கக் குறிப்புகள்

சம்பந்தர் வரலாறு

பால் உ(ண்)ணு மதலையாய் மிகு பாடலின் மீறிய கவிஞனாய்

7-ம் நூற்றாண்டில் சைவம் தழைப்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவதரித்த ஸ்தலம் சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஊர். சிவபாத ஹிருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார் குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, ‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவினார் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல்
தேவாரப் பதிகம் இதுதான்

உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா
நடைபெறும்

ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான் 

சமணர்களை கழுவேறிய வரலாறு பாடல் 187 விளக்கத்தில் காணலாம்                                          

கருது மாறிரு தோள்மயல் வேலிவை கருதொணா வகை
   
முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்

திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு   மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினல்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற - திருப்புகழ் நிகமமெனி
  
ஆ நீ குருவாயிது பகரு மாறு செய்தாய்
  
அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து  வியக்கின்றார்

{உலகோருக்கு எடுத்துச் சொல்லுமாறு பணித்தாயே ( குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ) என்று காஞ்சியில் இறைஞ்சினார் குடவாயிலில் இது கிடைத்தது தனக்குக் கிடைத்த பரம மாயையின் விளக்கத்தை அகர முதலென, அதல விதல  முதலிய திருப்புகழ் பாடல்களில் சித்சக்தியின் வியாபகமாக

சித்தரித்திருக்கிறார்  நடராஜன்}
” tag:

Friday, 2 August 2013

236.பூமாதுர

236
சீகாழி

        தானாதன தானன தானன
         தானாதன தானன தானன
         தானாதன தானன தானன     தந்ததான

பூமாதுர மேயணி மான்மறை
     வாய்நாலுடை யோன்மலி வானவர்
     கோமான்முநி வோர்முதல் யாருமி       யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
     ஆராய்வ திலாதட லாசுரர்
     போரால்மறை வாயுறு பீதியின்            வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
     பாமாலைக ளால்தொழு தேதிரு
     நீறார்தரு மேனிய தேனியல்       கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
     காகோதர மாதுளை கூவிள
     நேரோடம் விளாமுத லார்சடை        யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
     வேயாரரு ளாலவ ரீதரு
     போர்வேலவ நீலக லாவியி               வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
     நேரோர்நொடி யேவரு வோய்சுர
     சேனாபதி யாயவ னேயுனை         யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
     தாமாமண மார்தரு நீபசு
     தாமாவென வேதுதி யாதுழல்      வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
     யேசாடிய கூர்வடி வேலவ
     காரார்தரு காழியின் மேவிய             தம்பிரானே

பதம் பிரித்தல்

பூ மாது உரமே அணி மால் மறை
வாய் நாலு உடையோன் மலி வானவர்
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு(ம்) வேதம்

பூ மாது = தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியை உரமே அணி = மார்பிடத்தே வைத்துள்ள மான்(ல்) = திருமாலும் மறை வாய் நாலு உடையோன் = வேதம் ஓதும் நான்கு வாய்களை உடைய பிரமனும் மலிவான = கூட்டமான வானவர் கோமான் = தேவர்களின் தலைவனான இந்திரனும் முநிவோர் = முனிவர்களும் முதல் யாரும் = முதலான யாவரும் இயம்பும் = புகழ்ந்து சொல்லும் வேதம் = வேதப் பொருளை

பூராயமதாய் மொழி நூல்களும்
ஆராய்வது இலாத அடல் அசுரர்
போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி

பூராயமதாய் மொழி = ஆராய்ந்து கூறும் நூல்களும் = நூல்களில் ஆராய்வது இலாத = ஆராய்ச்சி செய்யாத அடல் அசுரர் = வலிமை வாய்ந்த அசுரர்கள் போரால் = போருக்கு மறைவாய் = மறைந்து உறு பீதியின் = தாம் கொண்ட பயத்தின் காரணமாக வந்து கூடி = வந்து ஒன்று கூடி

நீ மாறு அருளாய் என ஈசனை
பா மாலைகளால் தொழுதே திரு
நீறு ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு

நீ மாறு = அப் பகைவர்களை அழிக்க வல்ல ஒருவனை நீ அருளாய் என = தந்து அருள வேண்டும் என்று ஈசனை = சிவபெருமானை பாமாலைகளால் தொழுதே = பாமாலைகள் பாடித் தொழுது திரு நீறு ஆர் தரு = திரு நீறு விளங்கும் மேனிய = மேனியனே தேன் இயல் = தேன் பொதியும் கொன்றையோடு = கொன்றைப் பூவுடன்

நீரேர் தரு சானவி மா மதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே

நீர் ஏர் தரு = நீர் அழகுடன் ததும்பும் சானவி = கங்கையையும் மா மதி = சிறந்த நிலவையும் காகோதர(ம்) = பாம்பையும் மாதுளை = மாதுளம் பூ கூ விளை = வில்வம் நேரோடம் = நாவல் இலை விளா = விளா இலை முதல் ஆர் சடை = முதலியவை நிறைந்துள்ள சடையை உடைய எம்பெருமானே = எம்பெருமானே

போமாறு இனி வேறு ஏது ஓது எனவே
ஆர் அருளால் அவர் ஈதரு
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு

போ மாறு = (எங்களுக்கு உய்ந்து) போகும் வழி இனி வேறு ஏது என = (உன்னை) ஒழிய இனி வேறு எது உள்ளது ஓது எனவே = சொல்லி அருள்வாய் என்று முறையிடவே ஆர் = நிறைந்த அருளால் = கருணையால் அவர் = அந்த சிவபெருமான் ஈ தரு =
தந்தருளிய போர் வேலவ = போர் செய்ய வல்ல வேலவனே நீல கலாவி இவர்ந்து = நீலத் தோகை மயிலில் ஏறி நீடு = நீண்ட

பூ லோகமொடு அறு லோகமும்
நேர் ஓர் நொடியே வருவோய் சுர
சேனாபதியாயவனே உன்னை அன்பினோடும்

பூலோகமோடு = இந்தப் பூலோகத்துடன் அறு லோகமும் = பாக்கி உள்ள அறு லோகங்களையும் நேர் = நேராக ஓர் நொடியே = ஒரே நொடிப் பொழுதில் வருவோய் = சுற்றி வந்தவனே சுர சேனாபதியாயவனே = தேவர்களின் சேனாதிபதியானவனே உனை அன்பினோடும் = உன்னை அன்பினால்

காமா அறு சோம சம ஆனன
தாமா மணமார் தரு நீப
சுதாமா எனவே துதியாது உழல் வஞ்சனேனை

காமா = மன்மத அழகு உடையவனே அறு சோம = ஆறு பூரணச் சந்திரருக்கு சம ஆனன = சமம் ஆன திரு முகங்களைக் கொண்டவனே தாமா மணமார் தரு நீப = மணம் நிறைந்து வீசும் கடப்ப மாலை அணிந்தவனே சுதாமா = நல்ல ஒளியை உடையவனே எனவே துதியாது = என்று கூறி உன்னைத் துதிக்காமல் உழல் = திரிகின்ற வஞ்சனேனை = வஞ்சகம் பொருந்திய என்னை

காவாய் அடி நாள் அசுரேசரையே
சாடிய கூர் வடி வேலவ
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே

காவா = காத்தருள்க அடி நாள் = முன்பு அசுரேசரை = அசுரர் முதலானவர்களை சாடிய = அழித்த கூர் வடி வேலவ = மிகக் கூரிய வேலாயுதத்தை உடையவனே கார் ஆர் தரு = மேகங்கள் நிறைந்துள்ள காழியில் மேவிய = சீகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே = தம்பிரானே

சுருக்க உரை

இலக்குமியை மார்பில் வைத்துள்ள திருமாலும், வேதங்களை ஓதும் பிரமனும், தேவர்களின் தலைவனான இந்திரனும், முனிவர்களும், நல்ல நூல்களை ஆராய்ந்து கற்காத அசுரர்களுக்குப் பயந்து, பகைவர்களிடமிருந்து உய்ய எங்களுக்கு வேறு வழி இல்லை, அசுரர்களை அழிக்க வல்ல ஒருவனை நீங்கள் அளிக்க வேண்டும் என்று கங்கை, நிலவு, பாம்பு, வில்வம், விளா முதலியவற்றை அணிந்த சடையை உடைய சிவ பெருமானிடம் முறை இட, அவர் தந்தருளிய வேலவனே

நீல மயிலின் மேல் ஏறி, ஏழு உலகங்களையும் சுற்றி வந்தவனே, தேவர்கள் சேனாபதியே, அழகனே, மணம் வீரும் கடப்ப மாலை அணிந்தவனே, என்று உன்னைத் துதியாமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்க. வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, சீகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே, இந்த வஞ்சகனைக் காத்தருள்க

விளக்கக் குறிப்புகள்

இந்தப் பாடலில் கந்த புராணச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது

பூலோகமொடு அறு லோகமும்
பூலோகம், புவ லோகம், சுவர்க்க லோகம், மக லோகம், தவ லோகம், சன லோகம்,   சத்திய லோகம்

ஒப்புக:

1 அவர் ஈதரு போர் வேலவ

எப்படைக்கும் நாயகமாவதொரு தனிச் சுடர் வேல் நல்கியே
மதலைகக் கொடுத்தான்                     ......                                       கந்த புராணம்  

இருண்ட கண்டர் தந்த அயில் வேலா    ............     ..                திருப்புகழ், கனங்கள்

2 பூமாதுரமே அணி

திரு மரு மார்பில் அவனும் திகழ் தரு மா மலரோனும்
......சம்பந்தர் தேவாரம்

3. சானவி மா மதி
   
சானவி~ ஜான்வி = கங்கை சன்னு( ஜன்நு) முனிவரிடத்தினின்று தோன்றியவள்