F

படிப்போர்

Showing posts with label செங்கோடு. Show all posts
Showing posts with label செங்கோடு. Show all posts

Thursday, 13 December 2012

181.புற்புதமென

                  தத்த தனதான தத்த தனதான
                  தத்த தனதான                தனதான

    புற்பு தமெனாம அற்ப நிலையாத
       பொய்க்கு டில்குலாவு             மனையாளும்
    புத்தி ரரும்வீடு மித்தி ரருமான
       புத்தி சலியாத                         பெருவாழ்வு
    நிற்ப தொருகோடி கற்ப மெனமாய
       நிட்டை யுடன்வாழு              மடியேன்நான்
    நித்த நினதாளில் வைத்த தொருகாதல்
       நிற்கும் வகையோத                  நினைவாயே
    சற்ப கிரிநாத முத்த மிழ்விநோத
       சக்ர கதைபாணி                       மருகோனே
    தர்க்க சமண்மூகர் மிக்க கழுவேற
       வைத்த வொருகாழி                 மறையோனே
    கற்ப வழுவாது வெற்ப டியின்மேவு
      கற்றை மறவாணர்                   கொடிகோவே
    கைத்த அசுரேசர் மொய்த்த குலகால
      கற்ப தருநாடர்                         பெருமாளே
-181 திருச்செங்கோடு

பதம் பிரித்தல்

   புற்பதம் என நாம அற்ப நிலையாத
   பொய் குடில் குலாவும் மனையாளும்

புற்பதம் என = நீர்க் குமிழி என்னும்  நாமம் = பேர் படைத்து அற்ப = சிறிதளவும் நிலையாத = நிலைத்திராத பொய்க் குடில் = இவ்வுடலுடன் குலவும் = விளங்கும் மனையாளும் = மனைவியும்.

   புத்திரரும் வீடு மித்திரருமான
   புத்தி சலியாத பெரு வாழ்வு

புத்திரரும் = புத்திரரும் வீடு மித்திரரும் ஆன = வீடு, நண்பர்கள் ஆகிய (சூழலில்) புத்தி சலியாத = மனம் சோர்வு அடையாமல் பெரு வாழ்வு = இந்தப் பெரு வாழ்வு.

   நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய
   நிட்டையுடன் வாழும் அடியான் யான்

நிற்பது = நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்பம் என = ஒரு கோடி காலம் என்னும் மாய = மாய மயக்க நிட்டையுடன் = தியான நிலையில் வாழும் அடியேன்
நான் = வாழ்கின்ற அடியேனாகிய நான்.

   நித்த(ம்) நின தாளில் வைத்தது ஒரு காதல்
   நிற்கும் வகை ஓத நினைவாயே

நித்த(ம்) = தினந்தோறும் நின தாளில் =  உனது திருவடியில் வைத்த = வைத்த ஒரு காதல் = ஓர் ஆசை நிற்கும் வகை = நிலைத்து நிற்கும் வழியை ஓத = (அடியேனுக்கு) உபதேசிக்க நினைவாயே = நினத்தருள வேண்டுகின்றேன்.

   சற்ப கிரி நாத முத்தமிழ் விநோத
   சக்ர கதை பாணி மருகோனே

சற்பகிரி நாத = பாம்பு மலையாகிய திருச்செங் கோட்டு நாதனே முத்தமிழ் விநோத = முத்தமிழில் மகிழ்பவனே சக்ர கதை பாணி = சக்கரம், கதை இவைகளைக் கரத்தில் கொண்ட (திருமாலின்) மருகோனே = மருகனே.

   தர்க்க சமண் மூகர் மிக்க கழு ஏற
   வைத்த ஒரு காழி மறையோனே

தர்க்க சமண் = வாது செய்த சமணர்களாகிய மூகர் = ஊமைகளை மிக்க கழு ஏற = நிறைந்த கழுவில் ஏற வைத்த வைத்த ஒரு   ஒப்பற்ற  காழி மறையோனே = சீகாழியில் அந்தணனாகிய ஞான சம்பந்தராக அவதரித்தவனே.

   கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு
   கற்றை மற  வாழ்நர் கொடி கோவே

கற்பு வழுவாது = கற்பு நிலை தவறாமல் வெற்பு அடியில் = (வள்ளி) மலை அடிவாரத்தில் மேவு = இருந்த கற்றை = கூட்டமான, மற வாணர் = வேடர்களின் கொடி கோவே = கொடி போன்ற மகளான வள்ளியின் தலைவனே
   கைத்த அசுரேசர் மொய்த்த குல கால
   கற்ப தரு நாடர் பெருமாளே.

கைத்த = (தேவர்கள்) வெறுத்த. அசுரேசர் = அசுரத் தலைவர்களின் மொய்த்த = நெருங்கிய குல கால = குலத்துக்குக் காலனாக இருந்தவனே கற்ப தரு நாடர் = கற்பக மரங்கள் உள்ள நாட்டில் வாழும் தேவர்கள் பெருமாளே = பெருமையில் மிகுந்தவரே.

சுருக்க உரை

நீர்க் குமிழி என்று பேர் படைத்து, சிறிதளவும் நிலைத்து இல்லாத இவ்வுடல்,வீடு,
நண்பர், மனைவி என்னும் மயக்கத்தில் வாழும் நான் இவைகளை நிலையாக இருப்பவை அல்ல என்பதை உணர்ந்து, நாள் தோறும் உனது திருவடியில் ஆசையை நிலைத்து நிற்கும் வழியை அடியேனுக்கு உபதேசம் செய்ய வேண்டுகின்றேன்.

திருச்செங்கோட்டு நாதனே. முத்தமிழில் மகிழ்பவனே. சக்கரம், கதை இவைகளைக்
கையில் ஏந்திய திருமாலின் மருகனே. வாது செய்த சமணர்களைக் கழுவில் ஏற்றி வைக்க, சீகாழியில் சம்பந்தராக அவதரித்த மறையோனே. வள்ளி மலை அடிவாரத்தில் இருந்த வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் தலைவனே. அசுரத்
தலைவர்களை அழிக்க யமனாக இருந்தவனே. கற்பக மரங்கள் உள்ள தேவர்கள் பெருமாளே. உன்னை எப்போதும் நினைக்க அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்

 கற்பம் = பிரமனது ஒரு நாள் 432 கோடி ஆண்டுகள் ஆகும் என்பர்.

ஒப்புக
முத்தமிழ் விநோதன்.....
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்)...                                     வேடிச்சி காவலன் வகுப்பு.
    
பொற்பலகை மீதமர் தமிழ் த்ரய விநோதக் காரனும்
                                                                                   ...     திருவேளைக்காரன் வகுப்பு  
முத்தமிழ் விநோதா கீதா..                                                .திருப்புகழ், மைக்குலொத்த.

.  தர்க்க சமண் மூகர் மிக்க எழி கழு...
   
    திகுதிகென மண்ட விட்ட தீயொரு
    செழியனுடல் சென்று பற்றி வாருகர்
    திகையினமண் வந்து விட்ட போதினும் அமையாது                           .திருப்புகழ், திடமிலிசற்.

” tag:

Tuesday, 11 December 2012

180.பத்தர்கணப்ரிய

          தத்தன தத்தன தத்தன தத்தன
           தத்தன தத்தன                 தனதான

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
   பட்சிந டத்திய                           குகபூர்வ    
பச்சிம தட்சிண வுத்தர திக்குள    
   பத்தர்க ளற்புத                 மெனவோதுஞ்    
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி    
   ருப்புக ழைச்சிறி                    தடியேனுஞ்    
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி    
   சித்தவ நுக்ரக                         மறவேனே    
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி    
   கற்கவ ணிட்டெறி                 தினைகாவல்    
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி    
   கட்டிய ணைத்தப                  னிருதோளா     
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத    
   கப்பனு மெச்சிட                   மறைநூலின்    
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய    
   சர்ப்ப கிரிச்சுரர்                    பெருமாளே.
-180 திருச்செங்கோடு

பதம் பிரித்து உரை

பத்தர் கண ப்ரிய நிர்த்த(ம்) நடித்திடு
பட்சி நடத்திய குக பூர்வ

பத்தர் கண ப்ரிய = பத்தர் கூட்டங்களின் மீது அன்பு உடையவனே நிர்த்தம் நடத்திடு = நடனம் செய்ய வல்ல பட்சி நடத்திய குக = பட்சியாகிய மயிலை வாகனமாகக் கொண்ட                                                               குகனே பூர்வ = கிழக்கு.                                    

பச்சிம தட்சிண உத்தர திக்கு உ(ள்)ள    
பத்தர்கள் அற்புதம் என ஓதும்

பச்சிம = மேற்கு தட்சிண = தெற்கு உத்தர = வடக்கு (ஆகிய) திக்கு உள்ள பத்தர்கள் = திசைகளில் வாழும் பத்தர்கள் அற்புதம் என ஓதும் = இது அற்புதமானது என்று கொண்டாடும்
  
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த     
திருப்புகழை சிறிது அடியேனும்

சித்ர கவித்துவ = அழகிய கவி பாடும் திறனும் சத்தம் மிகுத்த = சந்தங்களின் மேன்மையும் மிகுந்துள்ள திருப்புகழை = திருப்புகழ் என்னும் நூலின் பாக்களை
சிறிது அடியேனும் = சிறிதளவு அடியேனும். 

செப்பு என வைத்து உலகில் பரவ      
தெரிசித்த அநுக்ரகம் மறவேனே

செப்பு என = சொல்லும்படியாக வைத்து = திருவருள் செய்தும் உலகில்  = இந்தப் பூமியில் பரவ = (அந்தப் பாக்களைப்) பரவும் படியாக தெரிசித்த = வெளிப் படுத்தியும் அநுக்கிரகம் = நீ அருள் செய்ததை மறவேனே = நான் மறக்க மாட்டேன்.

கத்திய தத்தை களைத்து விழ திரி    
கல் கவண் இட்டு எறி தினை காவல்

கத்திய தத்தைகளை = கத்துகின்ற கிளிகளை.
களைத்து விழ = களைத்து விழும்படியாக.
திரி = சுழற்றும் கல் கவண் இட்டு எறி = கவணில் கல்லை வைத்து எறிந்து தினை காவல் கற்ற = தினைப் புனத்தைக் காவல் செய்யக் கற்றுக் கொண்ட

கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி
கட்டி அணைத்த பன்னிரு  தோளா

குறத்தி = குறத்தியாகிய வள்ளியின் நிறத்த கழுத்து = ஒளி பொருந்திய கழுத்தின். அடி கட்டி = அடியில் கட்டி அணைத்த பன்னிரு தோளா =அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே

சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த
தகப்பன் மெச்சிட மறை நூலின்

சத்தியை ஒக்க= பராசக்தியாகிய பார்வதியை இடத்தினில் வைத்த = இடப் பாகத்தில் பொருந்தும்படி வைத்த தகப்பனும் மெச்சிட = தந்தையாகிய சிவபெருமானும் மெச்சும்படி. மறை நூலின் = வேத நூலின்.

தத்துவ(ம்) தற்பரம் முற்றும் உணர்த்திய    
சர்ப்ப கிரி சுரர் பெருமாளே.

தத்துவம் = உண்மைப் பொருள் தற்பரம் = பரம் பொருள் (ஆகிய) முற்றும் உணர்த்திய = எல்லாவற்றையும் போதித்து விளக்கிய. சர்ப்ப கிரி பெருமாளே = பாம்பு மலையாகி திருச் செங்கோட்டில் உறையும் பெருமாளேசுரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

அடியார்கள் கூட்டங்களில் அன்பு வைப்பவனே. நடனம் செய்ய வல்ல மயிலை வாகனமாக உடையவனே. எல்லா திசைகளிலும் உள்ள பத்தர்களும் அற்புதம் என்று புகழும்படி, சந்தங்கள் நிறைந்த அழகிய திருப்புகழ் என்னும் நூலை சிறிதளவு அடியேனும் பாட நீ அருள் புரிந்ததை என்னால் மறக்க முடியாது.

கிளிகள் விழும்படி கவணில் கல்லைக் கட்டி சுழற்றித் தினைப் புனத்தைக் காவல் புரிந்த வள்ளியை அணைந்த பன்னிரு தோளனே. பார்வதியை இடப்பாகத்தில் கொண்ட தந்தையாகிய சிவபெருமானக்கு வேதப் பொருளை முற்றும் போதித்தவனே. பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. உன் திருவருளை எப்போதும் மறவேன்.

விளக்கக் குறிப்புகள்

1. செப்பென வைத்து உலகில் பரவ.....
   செய்ப்பதி வைத்து என்றும் பாடம்.     
  
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு   
   செப்பென எனக்கருள்கை மறவேனே...............   .....திருப்புகழ், பக்கரைவிசித்ர.    
 
 திருப்புகழ் நித்தம்    
   பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே...        .திருப்புகழ், கோலகுங்கு.    

திகழ்ப்படு செய்ப்பதிக்கு எனைத்    
   தடுத்து அடிமைப் படுத்த அருள்    
   திரு பழநிக்கிரிக் குமரப் பெருமாளே..................  ......திருப்புகழ், குறித்தமணி.    
 
அருணை நகர் மிசை கருணையொடு அருளிய    
   மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே..           .திருப்புகழ், முருகுசெறி.