F

படிப்போர்

Showing posts with label திருவருள். Show all posts

Friday, 13 November 2015

275. வண்டுபோல்

“
275
திருவெஞ்சமாக்கூடல்

(கருவூருக்கு அருகில் 19 கிமீ தொலைவில்)

விக்ருதீஸ்வ்ரர் திருக்கோயிலில்  வெஞ்சமாக் கூடற்பெருமான் பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறான்

                               தந்தனாத் தானத்    தனதான

வண்டுபோற் சாரத்              தருள்தேடி
      மந்திபோற் காலப்        பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்            துடனாடிச்
      சிந்தைமாய்த் தேசித்     தருள்வாயே
தொண்டராற் காணப்        பெறுவேனா
      துங்கவேற் கானத்      துறைவோனே
மிண்டராற் காணக்          கிடையோனே
      வெஞ்சமாக் கூடற்       பெருமாளே

பதம் பிரித்தல்

வண்டு போல் சாரத்து அருள் தேடி
வண்டு போல் - வண்டு எவ்வாறு
சாரத்து - மலர்த் தேனை (நாடிப் பருகிக் களிக்கின்றதோ) அருள் தேடி - அவ்வாறு நான் உனது திருவருள் என்னும் தேனை நாடவும்

மந்தி போல் கால பிணி சாடி

மந்தி போல் - குரங்கு எவ்வாறு மரக் கிளைகளத் தாண்டித் திரிய வல்லதாய் இருக்கின்றதோ அவ்வாறு
காலப் பிணி சாடி - யமன் என்னைப் பாசத்தினால் கட்டுவதை சாடி - தாண்ட வல்லவன் ஆகுமாறும்

செண்டு போல் பாசத்துடன் ஆடி

செண்டு போல் - செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு
பாசத்துடன் ஆடி - நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே

சிந்தை மாய்த்தே - என் மனத்தே நீ அழிய வைத்து
சித்து அருள்வாயே - சும்மா இருக்கும்அறிவைஅருள்வாயே

தொண்டரால் காண பெறுவோனே

தொண்டரால் - அடியார்களால்
காணப் பெறுவோனே - காணப் பெறும்படி இருப்பவனே

துங்க வேற்கானத்து உறைவோனே
துங்க - பரிசுத்தமான
வேற்கானத்து - திருவேற்காடு என்னும் தலத்தில்
உறைவோனே - வீற்றிருப்பவனே

மிண்டரால் காண கிடையானே

மிண்டரால் - ஆணவம் கொண்டவர்களால்
காணக் கிடையானே - காணக் கூடாதவனே

வெஞ்ச மா கூடல் பெருமாளே

வெஞ்சமாக் கூடல் பெருமாளே - வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

வண்டு மலர்த் தேனைப் பருகிக் களிப்பதைப் போல் நானும் உன் திருவருள் தேனை நாடவும், குரங்கு எவ்வாறு மரக் கிளையைத் தாண்டித் திரிகின்றதோ, அவ்வாறே நானும் யமன் பாசத்தினால் என்னைக் கட்டுவதைத் தாண்டும் வலிமை பெறவும், செண்டாயுதம் எவ்வாறு பகையை அழிக்கின்றதோ, அவ்வாறு நானும் பாசங்களுடன் போறாடி வெல்லுமாறும், என் மனத்தை மாய்த்து, சும்மா இருக்கும் நிலையைத் தந்து மெய்யறிவைப் பெறுவேனோ?

அடியார்களால் காணப் பெறுவோனே பரிசுத்தமான திருவேற்காட்டில் வீற்றிருப்பவனே ஆணவ மலம் மிகுந்தவர்களால் காண முடியாதவனே வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குச் சித்து அருள்வாயக

விளக்கக் குறிப்புகள்

1 வண்டு போல் சாரத்து

இறைவன் திருவருளைப் பெறுதற்கு வண்டு தான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு தூது பாடுவார்கள் அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்க வேண்டும் என்பது கருத்து

2 செண்டு - பிரம்பை போல் நுணி வளைந்திருக்கும் ஓர் ஆயுதம். பழங்கால தமிழர்களின் ஒரு போர் கருவி. 

இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே –திருப்புகழ்  

ஐயனார்க்கு இந்த ஆயுதம் உண்டு. (கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி). மன்னார்குடி ராஜகோபால சுவாமி, மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கைகளில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம்

3தொண்டரால் காணப் பெறுவேனோ

பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
காணும் காரோணத்தானே ......                             சம்பந்தர் தேவாரம்

” tag:

Sunday, 19 May 2013

216.நித்தப் பிணிகொடு

“

216
கருவூர்

             தத்தத் தனதன தானன தானன  
             தத்தத் தனதன தானன தானன 
             தத்தத் தனதன தானன தானன      தனதான

நித்தப் பிணிகொடு மேவிய காயமி
   தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
   நிற்பொற் ககனமொ டாமிவை பூதக                லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
   டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
   நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு           மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
   வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
   டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி         லுழல்வேனை 
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
   முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
   திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற             இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
   தித்தித் திமிதிமி தீதக தோதக
   டத்தக் குடகுகு தாகுட தீகுட                        வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
   திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
   சர்பப்ச் சதமுடி நாணிட வேலதை                 யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
   சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
   வெற்புப் புரமது நீறெழ காணிய                     ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
   சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
   வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய              பெருமாளே.
-    216 கருவூர்
பதம் பிரித்து உரை

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது
அப்பு பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்)  
நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத கலவை மேவி

நித்தம் = நாள்தோறும் பிணி கொடு = நோய்களுடன் மேவிய = கூடித காயம் இது = இவ்வுடலாகும் அப்பு, பிருதி, வாயுவு(ம்) =
(இது) நீர், மண், காற்றுடன் தேயுவு(ம்) = நெருப்பும் நில் = உள்ளதான பொன் = பொலிவுள்ள ககனமோடு ஆம் இவை =
ஆகாயம் எனப்படும் பூத கலவை மேவி = ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகி

நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் 
இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்) 
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை

நிற்கப்படும் = தோன்றி நிற்பதாகும் உலகு ஆளவும் = உலகத்தை எல்லாம் ஆள வேண்டும் மாகர் இடத்தை = விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொளவுமே = கொள்ள வேண்டும் என்று நாடிடும் = ஆசை கொண்டு ஓடிடு(ம்) = அதற்காக அங்கும் இங்கும் ஓடி அலையும் நெட்டு = செருக்குடன் பணி = அணி கலன்களையும். கலை = ஆடைகளையும் பூணிடு = அணிந்து நான் எனும் = நான் என்கின்ற மட ஆணைமை  =  முட்டாள்  தனமான அகங்காரத்துடன்

எத்தி திரியும் இது ஏது பொய்யாது என
உற்றது தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சை பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை

எத்தித் திரியும் = வஞ்சித்துத் திரியும் இது ஏது = இது என்ன பொய்யானது என = பொய்யாகாது நிலைத்திருக்கும் என்று உற்று
= திடமாக நினைத்து தெளிவு உணராது = தெளிவான உண்மையை உணராமல் மெய் ஞானமோடு = மெய்ஞ்ஞானத்தை இச்சைப் பட அறியாது = விரும்ப அறியாமல் பொய் மாயையில் = பொய்யான உலக மாயைகளில் உழல்வேனை = அலைச்சல் உறுகின்ற என்னை

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும்
உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டு திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய்

எத்தில் கொடு = தந்திரமாக ஆட்கொண்டு நினது அடியாரோடும் =உன் அடியார்களுடன்  உய்த்திட்டு = என்னைக் கொண்டு சேர்ப்பித்து உனது அருளால் = உன் திருவருளால் உயர் ஞான அமுது இட்டு = சிறந்த ஞானஅமுதத்தைத் தந்து திருவடியாம் உயர் வாழ்வு உற = திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிது ஆள்வாய் = இனிதே ஆண்டருள்க.

தத்தத்........என பேரி

தத்தத்.......என பேரி = இவ்வாறு ஒலிக்கும் முரசுகளின்

சத்தத்து ஒலி திகை தாவிட வானவர்
திக்கு கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே

சத்தத்து ஒலி = பேரொலி திகை தாவிட = திசைகளைக் கடந்து தாவிச் செல்ல வானவர் = தேவர்கள் திக்குக் கெட = (வாழும்)திசைகள் கலங்கிக் கெட வரு = வந்த சூரர்கள் தூள்பட = அசுரர்கள் தூளாகி பொடிபட சர்ப்பச் சத முடி = (ஆதிசேடனாகிய)
பாம்பின் நூறு பணா முடிகள் நாணிட = அச்சம் கொள்ள வேல் அதை எறிவோனே = வேலைச் செலுத்தியவனே

வெற்றி பொடி அணி மேனியர் கோகுல
சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா

வெற்றிப் பொடி அணி = வெற்றியைத் தரும் திரு நீற்றை அணிந்த மேனியர் = திருமேனியர் கோகுல சத்திக்கு = ஆயர் பாடியில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு இடம் அது அருள் = தமது இடதுபாகத்தைத் தந்தருளிய தாதகி வேணியர் = ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருள் பாலா = அருளிய குழந்தையே.

வெற்பு தட முலையாள் வ(ள்)ளி நாயகி
சித்தத்து அமர் குமரா எமை ஆள் கொள
வெற்றி புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே.

வெற்புத் தட முலை = மலை போன்ற பெரிய கொங்கைகளை உடைய வ(ள்)ளி நாயகி = வள்ளி நாயகி சித்தத்து அமர் = உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரா = குமரனே எமை ஆள்கொள = என் உள்ளத்தில் இருக்கப்பெற்ற வெற்றிப் புகழ் = வெற்றிப் புகழ் விளங்கும் கருவூர் தனில் மேவிய பெருமாளே = கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

நோய்கள் கூடிய, ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆகிய இவ்வுடல்
நிலையானது அல்ல. இருப்பினும், இந்த உலகமெல்லாம் ஆள வேண்டும், விண்ணுலகத்தையும் வெல்ல வேண்டும் என்று ஆசை பூண்டு, அதன் பொருட்டு அங்குமிங்கும் ஓடியும், ஆடியும், செருக்குடன் ஆடை அணி கலன்களை அணிந்தும், நான் என்னும் அகங்காரத்துடன் வஞ்சித்துத் திரியும் நான், இது பொய்யானதல்ல என்னும் உண்மையைத் திடமாக உணராமல், மெய்ஞ்ஞானத்தை விரும்பாமல், பொய்யான மாயையிலேயே அலைச்சல் உறுகின்றேன். என்னைத் தந்திரமாக ஆட்கொண்டு, உன்னுடைய அடியார்களோடு சேர்த்து, திருவருள் ஞான அமுதைத் தந்து, உன் திருவடியாகிய மேலான நிலையைத் தந்து அருளுக.   

பேரொலி முழங்க, முரசுகள் ஒலிக்க, தேவர் உலகம் கலங்கிட, சூரர்கள் தூள் ஆக,  ஆதிசேடனின் பணா முடிகள் நடுங்க, வேலைச் செலுத்தியவனே,  திருநீற்றை அணிந்தவரும், திருமாலுக்குத் தன் இட பாகத்தைத் தந்தவரும், திரிபுரங்களைச் சிரித்து அழித்தவரும் ஆகிய சிவபெருமான்  அருளிய குழந்தையே, பெரிய கொங்கைகளை உடைய குறப் பெண்ணின் உள்ளத்தில் உறையும் குமரனே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்கு உயர் வாழ்வு தந்து அருள வேண்டும்.

ஒப்புக

1. அப்பு பிருதிவி வாயு...

ஐம்பெருமா பூதங்களா ஒருவீர் வேண்டிற்று
ஒருவீர் வேண்டீர் ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்.................                திருநாவுக்கரசர் தேவாரம்

2. நான் எனும் மட ஆண்மை....
  
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய்
நல்வினை தீ வினை எனவே நடுவே காட்டி...............           தாயுமானவர் பன்மாலை
   
முக்குணம் அது கெட நானா என வரு
முத்திரை அழிதர…………………………………….…..         திருப்புகழ்,எட்டுடனொரு

3. அடியாரோடும் உய்த்திட்டு உனது...

பார்ப்பாயலையோ அடியாரோடு
சேர்ப்பாயலையோ……………………………………….…….        திருப்புகழ்,கார்ச்சார்

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரோடு கூட்டு கண்டாய்…………………………...       தாயுமானவர்,சுகவாரி  

ஆடியாமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு……………… …...            பெரியாழ்வார்,திருப்பல்லாண்டு காப்பு.
  
அப்பன் ஆண்டு கொண்டு அடியாரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே......................................                 திருவாசகம், அதிசயப் பத்து

கெடுதல் இல்லாத் தொண்டரில் கூட்டியவா…………..........           கந்தர் அலங்காரம்