F

படிப்போர்

Showing posts with label திருவேற்காடு. Show all posts

Wednesday, 17 February 2016

278. கார்ச்சார்

“
278
திருவேற்காடு

               தாத்தாத்தன தானன தானன
               தாத்தாத்தன தானன தானன
               தாத்தாத்தன தானன தானன             தனதான

கார்ச்சார்குழ லார்விழி யாரயி
      லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
      வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள்           மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
      வார்க்காமுக னாயுறு சாதக
      மாப்பாதக னாமடி யேனைநி              னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
      சேர்ப்பாயலை யோவுன தாரருள்
      கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு         குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
      நீர்ப்பாரினில் மீறிய கீரரை
      யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ      லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
      நேர்ப்பாவச காரண மாமத
      ஏற்பாடிக ளேயழி வேயுற               அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
      வூக்காதிப யோகம தேயுறு
      மாத்தாசிவ பாலகு காவடி          யர்கள்வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மாமக
      ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
      வேற்காடுறை வேதபு ரீசுரர்               தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
      ளேட்டார்திரு மாமண வாபொனி
      னாட்டார்பெரு வாழ்வென வேவரு    பெருமாளே

பதம் பிரித்தல்

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார்
பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே
கார்ச் சார் குழலார் - மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள் ஆர் அயிலார் விழியார் - கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள் பால் மொழியார் - பால் போல் இனிய சொற்களை உடையவர்கள் இடை நூல் எழுவார் - இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் சார் இள நீர் முலை மாதர்கள் - பொருந்திய இள நீரைப் போன்ற கொங்கை உடையவர்களாகிய விலை மாதர்கள் மீதுள்ள மயலாலே - மயக்கத்தாலே

காழ் காதலது ஆம் மனமே மிக
வார் காமுகனாய் உறு சாதக
மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே

காழ் - திண்ணயதான காதலது ஆம் - அன்பு பூண்டுள்ளதான மனமே - மனமே மிக ஆர்க் காமுகனாய் உறு - மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற  சாதக(ன்) - சாதகத்தை உடையவனும் மா பாதகனாம் அடியேனை - மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை நின் அருளாலே - உன்னுடைய திருவருள் கொண்டு

பார்ப்பாய் அலையோ அடியாரொடு
சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா

பார்ப்பாய் அலையோ - பார்க்க மாட்டாயோ? அடியாரொடு சேர்ப்பாய் அலையோ - உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உனது - உன்னுடைய ஆர் அருள் - நிரம்பிய அருளை கூர்ப்பாய் அலையோ - நிரம்பத் தர மாட்டாயோ? உமையாள் தரு குமரேசா - உமா தேவி பெற்ற குமரேசனே

பார் பாவலர் ஓது சொ(ல்)லால் முது
நீர் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே

பார் பாவலர் - பூமியில் உள்ள புலவர்கள் ஓது சொலால் - ஓதும் புகழ்ச் சொற்களால் முது நீர் பாரினில் - பழைய நீர் சூழ்ந்த இவ்வுலகில் மீறிய - மேம்பட்டு விளங்குபவராகிய கீரரை - நக்கீரரை ஆர்ப்பாய் - மகிழ்ந்fது ஏற்பவனே உனது ஆம் அருளால் - உன்னுடைய திருவருளைப் பாலித்து ஒர்
சொல் அருள்வாயே - ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு உபதேசித்து அருளுக

வார் பேர் அருளே பொழி காரண
நேர் பாவ ச காரணமா(ம்) மத
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப

வார் - (உலகத்துக்கு) நீடிய பேர் அருளே - பேர் அருளையே பொழி காரண - பொழிந்த மூல காரணனே நேர் - நேரிட்டு எதிர்த்த பாவ சகாரணமாம் - பாவத்துக்குத் துணைக் காரணமாகிய மா மத ஏற்பாடிகளே - பெரிய (சமண) மதத்தை ஏற்பாடு செய்த (சமண மதக் குருக்கள்) அழிவே உற - (எண்ணாயிரவர்) அழிபட அறை கோப - (தேவாரப் பாடல்களைச்) சொன்ன கோபம் கொண்ட

வாக்கா சிவ மா மதமே மிக
ஊக்கு அதிப யோகமதே உறும்
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே

வாக்கா - திருவாக்கை உடையவனே சிவ மா மதமே - சிறந்த சிவ மதமே மிக ஊக்கு அதிப - பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே யோகமதே உறு மாத்தா - யோக நிலையில் இருக்கும் பெரியவனே சிவ பால குகா - சிவனது குமரனே குகனே அடியர்கள் வாழ்வே - அடியார்களின் செல்வமே

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு
ஆர்வ நன் மா மகிணா திரு
வேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே

வேல் காட - வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ - வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியின் பால் அன்பு பூண்ட நன் மா மகிணா - நல்ல அழகிய கணவனே திரு வேற்காடு உறை - திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேத புரீசுரர் - வேத புரீசுரர் தரு செயே - பெற்ற குழந்தையே

வேட்டார் மகவான் மகளானவள்
ஏடு ஆர் திரு மா மணவா பொ(ன்)னின்
நாட்டர் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே

வேட்டார் - வேள்வி நிரம்பிய மகவான் மகளானவள் - யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவசேனையின் ஏடு ஆர் - மேன்மை நிறைந்த திரு மா மணவா - சிறந்த அழகிய மணவாளனே பொ(ன்)னி நாட்டார் - பொன்னுலகத்தினரான தேவர்களுடைய பெரு வாழ்வு எனவே வரும் - பெருமாளே செல்வம் என வருகின்ற பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

கரிய கூந்தலும், கூரிய வேல் போன்ற கண்களும், இனிய மொழிகளும், பெரிய கொங்கையும் கொண்ட விலைமாதர்கள் மீதுள்ள காமப் பித்தனாயிருக்கும் சாதகத்தை உடைய அடியேனாகிய என்னை, உனது திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயா? அடியார்களுடன் என்னைச் சேர்க்க மாட்டாயா? உனது அருளை நிரம்பத் தரமாட்டாயா? பூமியில் உள்ள புலவர்களுள் மேம்பட்ட நக்கீரரை மகிழ்ந்து ஏற்றவனே எனக்கு ஒப்பற்ற உபதேசத்தை அருள வேண்டும்

சமண மதத்தைப் பரப்ப முயன்ற குருக்கள் அழிபட தேவாரப் பாடல்களை எழுதிய திருவாக்கை உடையவனே, சிவமதம் பெருகும்படி செய்த தலைவனே யோக நிலையில் இருப்பவனே, சிவ குமரனே, அடியார்கள் செல்வமே வேடர்கள் பெண்ணான வள்ளியின் மேல் அன்பு கொண்டவனே, திருவேற்காட்டில் உறைபவனே யாகபதியான இந்திரன் மகளான தேவசேனையின் அழகிய கணவனே தேவர்கள் பெருமாளே,உனது அருளால் ஒரு சொல்லை உபதேசிக்க மாட்டாயா?

விளக்கக் குறிப்புகள்

பார் பாவலர்........மீறிய கீரரை ஆர்ப்பாய்```

கார்முகி என்ற பூதத்தினால் நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் பூத்த்தினால் உண்ணப்பட்டிருப்பார்கள். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனை துதித்தார். முருகனால் அவர்களால் காப்பாற்றப் பட்டனர்.

நேர் பாவ ச காரணமா(ம்) மத ஏற்பாடிகள் அழிவே
சம்பந்த பெருமானல் சமணர்கள் கழுவேற்றப் பட்டதை நினைவு கூறுகிறார். பாடல் 233 ஊனத்தசை அடிகுறிப்பில் இந்த நிகழ்சிப்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

1பார்ப்பாவல ரோதுசொலால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை
பொய்யற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த ஐயற் கெனது சிறு சொல்லும் ஒப்பாகும்                           --- கந்த புராணம்
2 யோகமத தேயுறு மாத்தா
முருகவேளுக்கு யோகா சாரிய மூர்த்தி என்று ஒரு பெயர்
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள்    தம்பிரானே    --- திருப்புகழ், சேமக்கோமள
மால்பிரமன் அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை --- சுந்தரர் தேவாரம்
குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்து ஆய் உள்ள
அழகனே என்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே           
--- திருநாவுக்கரசர்  தேவாரம்
3 வேதபுரீசுரர் தரு சேயே
திருவேற்காட்டுக்கு வேத புரி என்று பெயர
பூதம் பாடப் புறங்காட்டுஇடை ஆடி
வேதவித்தகன் வேற்காடு                                     --- சம்பந்தர் தேவாரம்

” tag:

Friday, 13 November 2015

275. வண்டுபோல்

“
275
திருவெஞ்சமாக்கூடல்

(கருவூருக்கு அருகில் 19 கிமீ தொலைவில்)

விக்ருதீஸ்வ்ரர் திருக்கோயிலில்  வெஞ்சமாக் கூடற்பெருமான் பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறான்

                               தந்தனாத் தானத்    தனதான

வண்டுபோற் சாரத்              தருள்தேடி
      மந்திபோற் காலப்        பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்            துடனாடிச்
      சிந்தைமாய்த் தேசித்     தருள்வாயே
தொண்டராற் காணப்        பெறுவேனா
      துங்கவேற் கானத்      துறைவோனே
மிண்டராற் காணக்          கிடையோனே
      வெஞ்சமாக் கூடற்       பெருமாளே

பதம் பிரித்தல்

வண்டு போல் சாரத்து அருள் தேடி
வண்டு போல் - வண்டு எவ்வாறு
சாரத்து - மலர்த் தேனை (நாடிப் பருகிக் களிக்கின்றதோ) அருள் தேடி - அவ்வாறு நான் உனது திருவருள் என்னும் தேனை நாடவும்

மந்தி போல் கால பிணி சாடி

மந்தி போல் - குரங்கு எவ்வாறு மரக் கிளைகளத் தாண்டித் திரிய வல்லதாய் இருக்கின்றதோ அவ்வாறு
காலப் பிணி சாடி - யமன் என்னைப் பாசத்தினால் கட்டுவதை சாடி - தாண்ட வல்லவன் ஆகுமாறும்

செண்டு போல் பாசத்துடன் ஆடி

செண்டு போல் - செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு
பாசத்துடன் ஆடி - நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே

சிந்தை மாய்த்தே - என் மனத்தே நீ அழிய வைத்து
சித்து அருள்வாயே - சும்மா இருக்கும்அறிவைஅருள்வாயே

தொண்டரால் காண பெறுவோனே

தொண்டரால் - அடியார்களால்
காணப் பெறுவோனே - காணப் பெறும்படி இருப்பவனே

துங்க வேற்கானத்து உறைவோனே
துங்க - பரிசுத்தமான
வேற்கானத்து - திருவேற்காடு என்னும் தலத்தில்
உறைவோனே - வீற்றிருப்பவனே

மிண்டரால் காண கிடையானே

மிண்டரால் - ஆணவம் கொண்டவர்களால்
காணக் கிடையானே - காணக் கூடாதவனே

வெஞ்ச மா கூடல் பெருமாளே

வெஞ்சமாக் கூடல் பெருமாளே - வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

வண்டு மலர்த் தேனைப் பருகிக் களிப்பதைப் போல் நானும் உன் திருவருள் தேனை நாடவும், குரங்கு எவ்வாறு மரக் கிளையைத் தாண்டித் திரிகின்றதோ, அவ்வாறே நானும் யமன் பாசத்தினால் என்னைக் கட்டுவதைத் தாண்டும் வலிமை பெறவும், செண்டாயுதம் எவ்வாறு பகையை அழிக்கின்றதோ, அவ்வாறு நானும் பாசங்களுடன் போறாடி வெல்லுமாறும், என் மனத்தை மாய்த்து, சும்மா இருக்கும் நிலையைத் தந்து மெய்யறிவைப் பெறுவேனோ?

அடியார்களால் காணப் பெறுவோனே பரிசுத்தமான திருவேற்காட்டில் வீற்றிருப்பவனே ஆணவ மலம் மிகுந்தவர்களால் காண முடியாதவனே வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குச் சித்து அருள்வாயக

விளக்கக் குறிப்புகள்

1 வண்டு போல் சாரத்து

இறைவன் திருவருளைப் பெறுதற்கு வண்டு தான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு தூது பாடுவார்கள் அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்க வேண்டும் என்பது கருத்து

2 செண்டு - பிரம்பை போல் நுணி வளைந்திருக்கும் ஓர் ஆயுதம். பழங்கால தமிழர்களின் ஒரு போர் கருவி. 

இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே –திருப்புகழ்  

ஐயனார்க்கு இந்த ஆயுதம் உண்டு. (கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி). மன்னார்குடி ராஜகோபால சுவாமி, மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கைகளில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம்

3தொண்டரால் காணப் பெறுவேனோ

பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
காணும் காரோணத்தானே ......                             சம்பந்தர் தேவாரம்