F

படிப்போர்

Showing posts with label நக்கீரன். Show all posts

Wednesday, 17 February 2016

278. கார்ச்சார்

“
278
திருவேற்காடு

               தாத்தாத்தன தானன தானன
               தாத்தாத்தன தானன தானன
               தாத்தாத்தன தானன தானன             தனதான

கார்ச்சார்குழ லார்விழி யாரயி
      லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
      வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள்           மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
      வார்க்காமுக னாயுறு சாதக
      மாப்பாதக னாமடி யேனைநி              னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
      சேர்ப்பாயலை யோவுன தாரருள்
      கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு         குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
      நீர்ப்பாரினில் மீறிய கீரரை
      யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ      லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
      நேர்ப்பாவச காரண மாமத
      ஏற்பாடிக ளேயழி வேயுற               அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
      வூக்காதிப யோகம தேயுறு
      மாத்தாசிவ பாலகு காவடி          யர்கள்வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மாமக
      ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
      வேற்காடுறை வேதபு ரீசுரர்               தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
      ளேட்டார்திரு மாமண வாபொனி
      னாட்டார்பெரு வாழ்வென வேவரு    பெருமாளே

பதம் பிரித்தல்

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார்
பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே
கார்ச் சார் குழலார் - மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள் ஆர் அயிலார் விழியார் - கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள் பால் மொழியார் - பால் போல் இனிய சொற்களை உடையவர்கள் இடை நூல் எழுவார் - இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் சார் இள நீர் முலை மாதர்கள் - பொருந்திய இள நீரைப் போன்ற கொங்கை உடையவர்களாகிய விலை மாதர்கள் மீதுள்ள மயலாலே - மயக்கத்தாலே

காழ் காதலது ஆம் மனமே மிக
வார் காமுகனாய் உறு சாதக
மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே

காழ் - திண்ணயதான காதலது ஆம் - அன்பு பூண்டுள்ளதான மனமே - மனமே மிக ஆர்க் காமுகனாய் உறு - மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற  சாதக(ன்) - சாதகத்தை உடையவனும் மா பாதகனாம் அடியேனை - மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை நின் அருளாலே - உன்னுடைய திருவருள் கொண்டு

பார்ப்பாய் அலையோ அடியாரொடு
சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா

பார்ப்பாய் அலையோ - பார்க்க மாட்டாயோ? அடியாரொடு சேர்ப்பாய் அலையோ - உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உனது - உன்னுடைய ஆர் அருள் - நிரம்பிய அருளை கூர்ப்பாய் அலையோ - நிரம்பத் தர மாட்டாயோ? உமையாள் தரு குமரேசா - உமா தேவி பெற்ற குமரேசனே

பார் பாவலர் ஓது சொ(ல்)லால் முது
நீர் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே

பார் பாவலர் - பூமியில் உள்ள புலவர்கள் ஓது சொலால் - ஓதும் புகழ்ச் சொற்களால் முது நீர் பாரினில் - பழைய நீர் சூழ்ந்த இவ்வுலகில் மீறிய - மேம்பட்டு விளங்குபவராகிய கீரரை - நக்கீரரை ஆர்ப்பாய் - மகிழ்ந்fது ஏற்பவனே உனது ஆம் அருளால் - உன்னுடைய திருவருளைப் பாலித்து ஒர்
சொல் அருள்வாயே - ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு உபதேசித்து அருளுக

வார் பேர் அருளே பொழி காரண
நேர் பாவ ச காரணமா(ம்) மத
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப

வார் - (உலகத்துக்கு) நீடிய பேர் அருளே - பேர் அருளையே பொழி காரண - பொழிந்த மூல காரணனே நேர் - நேரிட்டு எதிர்த்த பாவ சகாரணமாம் - பாவத்துக்குத் துணைக் காரணமாகிய மா மத ஏற்பாடிகளே - பெரிய (சமண) மதத்தை ஏற்பாடு செய்த (சமண மதக் குருக்கள்) அழிவே உற - (எண்ணாயிரவர்) அழிபட அறை கோப - (தேவாரப் பாடல்களைச்) சொன்ன கோபம் கொண்ட

வாக்கா சிவ மா மதமே மிக
ஊக்கு அதிப யோகமதே உறும்
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே

வாக்கா - திருவாக்கை உடையவனே சிவ மா மதமே - சிறந்த சிவ மதமே மிக ஊக்கு அதிப - பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே யோகமதே உறு மாத்தா - யோக நிலையில் இருக்கும் பெரியவனே சிவ பால குகா - சிவனது குமரனே குகனே அடியர்கள் வாழ்வே - அடியார்களின் செல்வமே

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு
ஆர்வ நன் மா மகிணா திரு
வேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே

வேல் காட - வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ - வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியின் பால் அன்பு பூண்ட நன் மா மகிணா - நல்ல அழகிய கணவனே திரு வேற்காடு உறை - திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேத புரீசுரர் - வேத புரீசுரர் தரு செயே - பெற்ற குழந்தையே

வேட்டார் மகவான் மகளானவள்
ஏடு ஆர் திரு மா மணவா பொ(ன்)னின்
நாட்டர் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே

வேட்டார் - வேள்வி நிரம்பிய மகவான் மகளானவள் - யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவசேனையின் ஏடு ஆர் - மேன்மை நிறைந்த திரு மா மணவா - சிறந்த அழகிய மணவாளனே பொ(ன்)னி நாட்டார் - பொன்னுலகத்தினரான தேவர்களுடைய பெரு வாழ்வு எனவே வரும் - பெருமாளே செல்வம் என வருகின்ற பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

கரிய கூந்தலும், கூரிய வேல் போன்ற கண்களும், இனிய மொழிகளும், பெரிய கொங்கையும் கொண்ட விலைமாதர்கள் மீதுள்ள காமப் பித்தனாயிருக்கும் சாதகத்தை உடைய அடியேனாகிய என்னை, உனது திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயா? அடியார்களுடன் என்னைச் சேர்க்க மாட்டாயா? உனது அருளை நிரம்பத் தரமாட்டாயா? பூமியில் உள்ள புலவர்களுள் மேம்பட்ட நக்கீரரை மகிழ்ந்து ஏற்றவனே எனக்கு ஒப்பற்ற உபதேசத்தை அருள வேண்டும்

சமண மதத்தைப் பரப்ப முயன்ற குருக்கள் அழிபட தேவாரப் பாடல்களை எழுதிய திருவாக்கை உடையவனே, சிவமதம் பெருகும்படி செய்த தலைவனே யோக நிலையில் இருப்பவனே, சிவ குமரனே, அடியார்கள் செல்வமே வேடர்கள் பெண்ணான வள்ளியின் மேல் அன்பு கொண்டவனே, திருவேற்காட்டில் உறைபவனே யாகபதியான இந்திரன் மகளான தேவசேனையின் அழகிய கணவனே தேவர்கள் பெருமாளே,உனது அருளால் ஒரு சொல்லை உபதேசிக்க மாட்டாயா?

விளக்கக் குறிப்புகள்

பார் பாவலர்........மீறிய கீரரை ஆர்ப்பாய்```

கார்முகி என்ற பூதத்தினால் நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் பூத்த்தினால் உண்ணப்பட்டிருப்பார்கள். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனை துதித்தார். முருகனால் அவர்களால் காப்பாற்றப் பட்டனர்.

நேர் பாவ ச காரணமா(ம்) மத ஏற்பாடிகள் அழிவே
சம்பந்த பெருமானல் சமணர்கள் கழுவேற்றப் பட்டதை நினைவு கூறுகிறார். பாடல் 233 ஊனத்தசை அடிகுறிப்பில் இந்த நிகழ்சிப்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

1பார்ப்பாவல ரோதுசொலால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை
பொய்யற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த ஐயற் கெனது சிறு சொல்லும் ஒப்பாகும்                           --- கந்த புராணம்
2 யோகமத தேயுறு மாத்தா
முருகவேளுக்கு யோகா சாரிய மூர்த்தி என்று ஒரு பெயர்
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள்    தம்பிரானே    --- திருப்புகழ், சேமக்கோமள
மால்பிரமன் அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை --- சுந்தரர் தேவாரம்
குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்து ஆய் உள்ள
அழகனே என்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே           
--- திருநாவுக்கரசர்  தேவாரம்
3 வேதபுரீசுரர் தரு சேயே
திருவேற்காட்டுக்கு வேத புரி என்று பெயர
பூதம் பாடப் புறங்காட்டுஇடை ஆடி
வேதவித்தகன் வேற்காடு                                     --- சம்பந்தர் தேவாரம்

” tag:

Tuesday, 25 September 2012

99.கடிமா மலர்

“

கடிமா மலர்க்கு ளின்ப முளவே ரிகக்கு நண்பு
      தருமா கடப்ப மைந்த                               தொடைமாலை
கனமே ருவொத்தி டும்ப னிருமா புயத்த ணிந்த
      கருணா கரப்ர சண்ட                                      கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீ துநித்த முந்தண்
      முடியா னதுற்று கந்து                                பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீ ரனுக்கு கந்து
      மலர்வா யிலக்க ணங்க                                ளியல்போதி
அடிமோ னைசொற்கி ணங்க வுலகா முவப்ப என்று
      னருளா லளிக்கு கந்த                                  பெரியோனே
அடியே னுரைத்த புன்சொ லதுமீ துநித்த முந்த
      ணருளே தழைத்து கந்து                                வரவேணும்
செடிநே ருடற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
      படிதா னலக்க ணிங்க                                  ணுறலாமோ
திறமா தவர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
      திருவே ரகத்த மர்ந்த                                     பெருமாளே.
-99 திருவேரகம்
காட்சி தர பிரார்த்தனை
 
பதம் பிரித்து உரை

கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு(ம்) நண்பு
தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை

கடி மா மலர்க்குள் = வாசனை பொருந்திய மலருள் இன்பம் உள= இன்பகரமான வேரி= தேனை கக்கும் = சொட்டுகின் றதும் நண்பு தரு = அன்பைப் பெருக்குவதுமாகிய மா கடப்பு அமைந்த = சிறந்த கடப்ப மலரால் அமைக்கப்பட்ட. தொடை மாலையை = பூமாலையை.

கன மேரு ஒத்திடும் ப(ன்)னிரு மா புயத்து அணிந்த
கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா

கன மேரு ஒத்திடும் = பொன் மயமான மேரு மலையைப் போன்ற பனிரு மா புயத்து = பன்னிரண்டு அழகிய கரங்களில் அணிந்த = அணிந்துள்ள கருணாகர = கருணாகரனே ப்ரசண்ட = கடுமையும் கதிர் வேலா = ஒளியும் வீசும் வேலனே.

வடிவு ஆர் குறத்தி தன் பொ(ன்)னடி மீது நித்தமும் தண்
முடியானது உற்று உகந்து பணிவோனே

வடிவு ஆர் குறத்தி தன் = அழகு மிக்க குறத்தியாகிய வள்ளியின். பொன் அடி மீது = அழகிய அடிகளில். நித்தமும் = நாள்தோறும் தண் = குளிர்ச்சி பொருந்திய முடியானது உற்று = உனது முடியானது பொருந்தும்படி உகந்து பணிவோனே = மகிழ்ந்து பணிபவனே.

வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து
மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி

வள வாய்மை சொல் = வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த சொற்கள் அமைந்த. ப்ரபந்தம் உள = நூல்களைப் பாட வல்ல. கீரனுக்கு = நக்கீரன் என்னும் புலவனுக்கு. உகந்து = மனம் மகிழ்ந்து. மலர் வாயில் = மலர் வாயால். இலக்கணங்கள் இயல்பு ஓதி = இலக்கண நயங்களை எடுத்து ஓதுவித்து.

அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று
உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே

அடி மோனை சொற்கு இணங்க = அடி, மோனை ஆகியவை சொல்லுக்குப் பொருந்த. உலகாம் உவப்ப என்று = உலகம் உவப்ப என்று.  உன் அருளால் அளிக்க உகந்து = உன்னுடைய அருள் திருவாக்கால் அடி எடுத்துக் கொடுத்து மகிழ்ந்து கூறிய. பெரியோனே = பெரியவனே.

அடியேன் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் உன் தண்
அருளே தழைத்து உகந்து வரவேணும்

அடியேன் உரைத்த = அடியவனாகிய நான் சொல்லுகின்ற. புன் சொல் அது மீது = இந்த இழிவான சொற்கள் மீதும். நித்தமும் = நாள்தோறும். தண் அருளே = குளிர்ந்த உனது திருவருளை. தழைத்து = பாலித்து. உகந்து வரவேணும் = மகிழ்ந்து வரவேணும்.

செடி நேர் உடல் குடம்பை தனின் மேவி உற்றிடு இந்த
படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ

செடி நேர் உடல் குடம்பை தனில் = பாவச் செய்லகளே நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டில். மேவி உற்றிடு = பொருந்தியிருக்கின்ற. இந்த படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ = இந்த வகையில் துன்பங்களை நான் அனுபவிக்கலாமா?

திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த
திருவேரகத்து அமர்ந்த பெருமாளே.

திற மாதவர் = திறம் வாய்ந்த தவசிகள் கனிந்து = உள்ளம் கனிந்து உருகி உன் இரு பாத பத்மம் = உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளால் உய்ந்த = ஈடேற.  திருவேரகத்து அமர்ந்த பெருமாளே = சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

வாசனை மிகுந்து தேன் சொறிவதும், அன்பைப் பெருக்குவதுமான கடப்ப மாலையை அணிந்த தங்க மயமான மேருமலை போன்ற பன்னிரு கரங்களை உடையவரே. கருணாகரனே. ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. அழகிய குறமகளுடைய அடிமிசை தன் முடியைப் பொருந்தும்படி மகிழ்பவனே. 

வளப்பம் வாய்ந்த சொற்கள் அமைந்த நூல்களைப் பாட நக்கீரருக்கு உனது வாயால் இலக்கண நயங்களை ஓதி, உலகம் உவப்ப என்று உன் திருவாக்கால் அடி எடுத்துக் கொடுத்தப் பெரியவனே. அடியவனாகிய நான் சொல்லும் சொற்கள் மீதும் உன்து திருவருளைப் பாலிக்க வேண்டும். 

துன்பம் மிகுந்த உடம்பாகிய கூட்டில் நான் சிக்கித் துன்பத்தை அனுபவிப்பது தகுமா? சிறந்த தவத்தோர்கள் உள்ளம் கனிய உனது இரு பாதங்களால் உய்வு பெற்ற சுவாமி மலையில் வாழும் பெருமாளே. நான்அலக்கண் இங்கு உறலாமோ?

ஒப்புக:

1. வடிவார் குறத்தி தன் பொனடி மீது......
இது முருகவேள் அடியார்க்கு எளியன் என்னும் தத்துவத்தை விளக்குகின்றது.
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா....கந்தர் அனுபூதி
குறமின் பத சேகரனே   .........  கந்தர் அனுபூதி

2. சொற் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து....
நக்கீர தேவர் முருகக் கடவுள் அருள் பெறு நிமித்தம், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு என்று அடி எடுத்து அருளிச் செய்த திருமுருகாற்றுப் படையைக் குறித்தது. உலகம் என்பது உலகாம் என்று நீண்டுள்ளது.

Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,    
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan