F

படிப்போர்

Showing posts with label சேவல். Show all posts

Thursday, 29 December 2016

295. கலைமேவு

“
295
மதுரை

                    தனதான தானத்     தனதான

கலைமேவு ஞானப்          பிரகாசக்

     கடலாடி ஆசைக்             கடலேறிப்

பலமாய வாதிற்             பிறழாதே

     பதிஞான வாழ்வைத்        தருவாயே

மலைமேவு மாயக்           குறமாதின்

     மனமேவு வாலக்              குமரேசா

சிலைவேட சேவற்            கொடியோனே

     திருவாணி கூடற்           பெருமாளே

பதம் பிரித்தல்

கலை மேவு ஞான பிரகாச

கடல் ஆடி ஆசை கடல் ஏறி

கலை மேவும் - கலைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடங்கியுள்ள ஞானப் பிரகாச - ஞான ஒளியான கடல் ஆடி - கடலிடையே திளைத்துக் குளித்து கடல் ஏறி - (மூவாசை என்னும்) கடலைக் கடந்து

பலம் ஆய வாதில் பிறழாதே

பதி ஞான வாழ்வை தருவாயே

பலம் ஆய - வலிமை வாய்ந்த வாதில் - (சமய) வாதங்களில் பிறழாதே - மாறுபட்டுக் கிடக்காமல் பதி ஞான வாழ்வை - இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வை தருவாயே - தந்து அருளுக

மலை மேவு மாய குறமாதின்

மனம் மேவு வால குமரேசா

மலை மேவு - (வள்ளி) மலையில் வாழ்கின்ற மாயக் குற மாதின் - ஆச்சரியத் தோற்றத்தைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் மனம் மேவு - மனத்தில் வீற்றிருக்கும் வால - இளமையான குமரேசா - குமரேசனே

சிலை வேட சேவல் கொடியோனே

திருவாணி கூடல் பெருமாளே

சிலை - (பொய்யா மொழிப் புலவர் பொருட்டு) வில்லேந்திய வேட - வேடனாய் விளங்கியவரே சேவல் கொடியோனே - சேவற் கொடியைக் கொண்டவரே திருவாணி கூடல் பெருமாளே - இலக்குமியும் சரஸ்வதியும் விளங்கும் கூடல் (மதுரை) நகர்ப் பெருமாளே

சுருக்க உரை

எல்லா கலைகளையும் தன்னுள் அடங்கியிருக்கும் ஞான ஒளியே மூவாசைகளையும் கடந்து சமய வாதங்களில் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவஞான வாழ்வைத் தந்து அருளுக  

வள்ளி மலையில் வாழும் வள்ளி நாயகியின் மனத்தில் வீற்றிருப்பவனே! வில்லேந்திய வேடரே! மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்குப் பதி ஞான வாழ்வைத் தந்து அருளுக

விளக்கக் குறிப்புகள்

சிலை வேட  - பொய்யாமொழி புலவரை குறிக்கும்

பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார்.    ஒரு நாள் பொய்யா மொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக!“ என்று கேட்க, புலவரோ, “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவில் மறைந்தான் முருகன். நாட்கள் சென்றன. வைகைக் கரையில் இருந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரில் தஞ்சை வாணன் என்பவர் வசித்து வந்தார். அவரைக் காண வேண்டிச் சென்றார் பொய்யாமொழிப் புலவர். வழியில் பாலை நிலக் காடுகள் இருந்தன. அந்தக் காட்டைக் கடந்தே செல்லவேண்டும். புலவர் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேடன் அவரை வழி மறித்தான். இடக்கையில் வில், வலக்கையில் அம்பு, தோளில் அம்புறாத்தூணி எனக் காட்சி அளித்தான் வேடன். இளைஞன். வசீகரமான முகம். முகத்தின் காந்தி பிரமிக்க வைத்தது. அவன் நிறமோ, செக்கச் சிவந்த சூரியனை ஒத்திருந்தது. இளம் சூரியனோ  எனக் காட்சி அளித்த அந்த வேடன் தன் கண்களை உருட்டி விழித்துப் பயம் காட்டியதைக் கண்டார் புலவர். தம்மிடம் பொருள் ஏதும் இல்லை எனத் தெளிந்தார். வேடனும் புரிந்து கொண்டான் அவரிடம் பொருளில்லை என்பதையும் அவர் ஒரு புலவர் என்றும் அறிந்து கொண்டான். 

“
புலவனா நீ? உன்னிடம் பொருள் இல்லையா? சரி, போகிறது, என் மேல் ஒரு பாடல் பாடு!” என்றான் வேடன். புலவர் சற்றுத் தயங்கினாலும், இவனிடமிருந்து தப்பவேண்டி, “சரியப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் முட்டை!” என்று பதில் வந்தது.. பாடும் பாட்ல அகதுறையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

புலவரும் பாடினார். பாட்டின் பொருள் 

 முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேலை வைத்திருக்கிறான். இந்த அடர்த்தியான கருவேலங்காட்டுக்குள்ளே செல்லுபவர்கள் முட்டையின் எதிரிகளாய்த் தான் இருக்க முடியும். சூரிய வெப்பத்தினால் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். அத்தகைய இந்தக் காட்டுக்குள் பேதையும், இளம்பெண்ணுமாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே!” என்பது இதன் பொருள்.

பாடலைக் கேட்ட வேடன் பெரிதாகச் சிரித்தான். “புலவா, உன் பாட்டில் உண்மை ஏதுமே இல்லை, ஆனால் நீ பொய்யாமொழி என அறிமுகம் செய்து கொண்டாயே? தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கருவேல முட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? இதோ, நான் பாடுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு வேடன் பாடலை மாற்றிப் பாட

 “விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச் – செழுங்கொண்டல்

பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

பொய்யா மொழிப் பகைஞர் போல்”

இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார்..

முருகனும் அவர் முன் தோன்றி  முட்டையை பாடமாட்டேன் என்று சொன்ன நீ பாடி விட்டாயே எனவும்  எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார். முருகன் அவர் நாவில் வேல் ஊன்றி அருள் பாதித்ததாக வரலாறு

மாயக் குறமாதின் மனம் மேவு

வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட

வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்

மறவர் குன்றி னிற்போன பெருமாளே  --- திருப்புகழ் களவுகொண்டு

Rev 2023

” tag:

Thursday, 4 August 2016

280. தவர்வாட்

“
280
திருவோத்தூர்

(காஞ்சிக்கு அருகே உள்ளது. தற்சமயம் செய்யார், திருவந்திபுரம் என அழைக்கப்படுகிது.)
வேல், ம்யில், சேவல், வள்ளி தேவசேனை, இறைவன்  இவர்கள் யாவரும் இப்பாடலில் கூறப்பட்டிருக்கிறார்கள்
      
       தனனாத் தானன தானந் தனனாத் தானன தானந்
        தனனாத் தானன தானந்                           தனதான

தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் 
   தணியாச் சாகர மேழுங்                                           கிரியேழுந்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
   தரிகூத் தாடிய மாவுந்                                           தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுஞ்
   துணையாத் தாழ்வற வாழும்                              பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
   தொலையாப் பாடலை யானும்                          புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
   பழமாய்ப் பார்மிசை வீழும்                                       படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
   பறிகோப் பாளிகள் யாருங்                                      கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
   டிருநீற் றாலம ராடுஞ்                                              றியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
  திருவோத் தூர்தனில் மேவும்                                 பெருமாளே.

பதம் பிரித்து உரை

தவர் வாள் தோமர(ம்) சூலம் தரியா காதிய சூரும் 
தணியா சாகரம் ஏழும் கரி ஏழும்
தவர் = வில். வாள் = வாள். தோமரம் = தண்டாயுதம். சூலம் = சூலம். தரியா = (இவைகளைத்) தரித்து. காதிய = கொலைகளைச் செய்த. சூரும் = சூரனும். தணியா = வற்றாத. சாகரம் ஏழும் = ஏழு கடல்களும். கிரி ஏழும் = ஏழு மலைகளும்.

சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு(ம்) நீல(ம்)
தரி கூத்தாடிய மாவும் தினை காவல்

சருகா(க) = சருகைப் போல. காய் = உலர்ந்து போகும்படி எரித்து அழித்த. கதிர் வேலும் = ஒளி வேலும். பொரு = சண்டை செய்கின்ற. கால் சேவலும் = காலை உடைய கோழியும். நீலம் தரி = நீல நிறம் கொண்டு. கூத்தாடிய = நடனம் செய்ய வல்ல. மாவும் = மயிலாகிய குதிரையும். தினை காவல் = தினைப் புனம் காத்து வந்த.

துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும்
துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே

துவர் வாய் = பவளம் போன்ற வாயைக் கொண்ட. கானவர் மானும் = வேடுவர்களுடைய மான் போன்ற வள்ளியையும். சுர நாட்டாள் ஒரு  தேனும் = விண்ணுலக மங்கையாகிய தேன் போன்ற தேவசேனையையும். துணையா = துணையாகக் கொண்டு. தாழ்வு அற வாழும் = ஒரு குறையும் இன்றி வாழும். பெரியோனே = பெரியோனே.

துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள் பாலும் 
தொலையா பாடலை யானும் புகல்வேனோ

துணையாய் காவல் செய்வாய் = (நீ) துணையாகக் காவல் செய்து காப்பாற்றுவாய். என உணராப் பாவிகள் பாலும் = என்று உணராத பாவிகளிடமும் போய். தொலையாப் பாடலை = அழிவில்லாத அருமைப் பாடல்களை. யானும் புகல்வேனோ = நானும் சொல்லித் திரிவேனோ?

பவ(ம்) மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண(ம்) நாறும்
பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்

பவம் = பிறப்பை. மாய்த்து = ஒழித்து. ஆண் அது வாகும் பனை = ஆணாய் இருந்த பனை. காய்த்தே மணம் நாறும் = காய்த்து நறு மணம் வீசும். பழமாய் = பழங்களாகி. பார் மிசை வீழும்படி = பூமியில் விழும்படி. வேதம் = வேதத்தை.  (தேவார வேதத்தை)

படியா பாதகர் பாய் அன்றி உடா(த) பேதைகள் கேசம்
 பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற

படியாத = படிக்காத. பாதகர் = பாதகர்கள். பாய் அன்றி = பாயைத் தவிர வேறு ஒன்றையும். உடாத = உடுக்காத. பேதைகள் = பேதைகள். கேசம் பறி = தலை மயிரை நீக்கிய. கோப்பாளிகள் = கூத்தாடிச் சமர்த்தர்கள். யாரும் = அனைவரும். கழு ஏற = கழுவில் ஏறும்படி. 

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் 
திரு நீற்றால் அமராடும் சிறியோனே

சிவமாய் = சிவ மயமானதும். தேன் அமுது ஊறும் = தேனும் அமுதும் ஊறிய. திரு வாக்கால் = (சம்பந்தராக வந்த உனது) பாடல்களாலும். ஒளி சேர் = பெருமை வாய்ந்த. திருநீற்றாலும் = திரு நீற்றாலும். அமர் ஆடும் சிறியோனே = வாதப் போர்  செய்த இளையவனே.

செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும்
 திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே.

செழு நீர் = செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட. சேய் நதி = சேயாறு. ஆரம் கொழியா = முத்துக்களைச் கொழித்து. கோமளம் வீசும் = அழகு வீசும். திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே = திருவோத்தூரில் வீfற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

வில், வாள், தண்டம், சூலம் இவைகளைத் தரித்துக் கொலைகளைச் செய்த சூரன் சரகு போல் காயும்படி அழித்த ஒளி வேலும், சண்டை செய்ய வல்ல கால்களை உடைய சேவலும், நீல நிறங் கொண்டு நடனம் செய்யும் மயிலும், தினைப் புனம் காத்த மறவர் பெண்ணாகிய வள்ளியையும், விண்ணுலக மங்கையான தேவசேனையையும்  துணையாகக் கொண்டு ஒரு குறைவுமின்றி வாழும் பெரியோனே.

நீ துணையாக நின்று காத்தருள்வாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அருமையான பாடல்களை நானும் சொல்லுவேனோ? ஆண் பனையைப் பெண்ணாக்கி இனிய பழங்களைக் கொடுக்கும்படி தேவாரப் பதிகம் பாடி, தலை மயிரை நீக்குபவரும், பாய் ஒன்றையே ஆடையாக அணிபவரும் ஆகிய சமணர்களுடன் வாதப் போர் செய்து அவர்களைக் கழுவில் ஏற்றிய இளையோனே. செழுமையான நீர் ஓடும் சேயாறு பாயும் திருவோத்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே பாவிகள் முன் என் பாடல்களைப் பாடுவேனோ?

விளக்கக் குறிப்புகள்

1 பொருகால் சேவல்.... 

சேவல் காலைக் கொண்டு சண்டை செய்யும் (காலாயுதம், பதாயுதம்). 

2. ஆண் அதுவாகும் பனை காய்த்து.... 
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் 
அரும்பு கொன்றை அடிகளை 
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் 
விரும்புவார் வினை வீடே... சம்பந்தர் தேவாரம். 

3. வேதம் படியாப் பாதகர்... 
வேதவேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே... சம்பந்தர் தேவாரம். 
4. வெண் திரு நீற்றால் அமராடும்....
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி
  மருந்தும் ஆய்த் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்திப்
  பகர் திருப்பதிகம் பாடி...                                            திருத்தொண்டர் புராணம்

சம்பந்தர் வரலாற்றை முந்திய திருப்புகழ் பாக்களில் பார்க்கலாம் 