F

படிப்போர்

Showing posts with label தணிகை. Show all posts

Saturday, 10 November 2012

145.வெற்றிசெய

“

வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
   விட்டகணை பட்ட                           விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
   ரித்தொளிப ரப்பு                                   மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
   பட்டதிகி ரிக்கு                                      மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
   பச்சைமயி லுற்று                              வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
   னைக்குமன மொத்த                             கழல்வீரா
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
   நித்தமிறு கத்த                                     ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
   எப்பொழுது நிற்கு                            முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
   இட்டசிறை விட்ட                             பெருமாளே
-      145 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன்
விட்ட கணை பட்ட விசையாலே

வெற்றி செய உற்ற = வெற்றியே தர வல்ல. கழை = கரும்பு. வில் குதை வளைத்து = வில்லின் முனையை வளைத்து. மதன் = மன்மதன். விட்ட = செலுத்திய. கணை பட்ட = பாணங்கள் மேலே தைத்த. விசையாலே = வேகத்தாலும்.

வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல்
விரித்து ஒளி பரப்பும் மதியாலே
வெட்ட வெளியில் = வெட்ட வெளியிடங்களிலும். தெருவில் = தெருக்களிலும் வட்ட பணையில் = வட்டமான பறை போல் விளங்கி கனல் விரித்து = நெருப்பை வீசி ஒளி பரப்பும் = ஒளியைப் பரப்புகின்ற மதியாலும் = சந்திரனாலும்.

பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை
பட்ட திகிரிக்கும் அழியாதே

பற்றி வசை = வசை மொழிகளைக் கொண்டு கற்ற = அவைகளையே பயின்று பேசும் பல தத்தையர் தமக்கு = பல பெண்களின் வசைப் பேச்சாலும் இசைபட்ட திகிரிக்கு = இசையை எழுப்பும் புல்லாங்குழலின் இசையாலும். அழியாதே = நான் மெலிந்து அழியாமலும்.

பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர்
பச்சை மயில் உற்று வர வேணும்

பத்தியை எனக்கு அருளி = பத்தி நெறியை எனக்குத் தந்து உதவி முத்தியை அளித்து வளர் = முத்தியையும் அளித்து உயர்ந்த பச்சை மயில் உற்று = பச்சை நிற மயில் மீது ஏறி. வரவேணும் = வர வேண்டுகின்றேன்.

நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர்
நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா

நெற்றி விழி பட்டு எரிய = நெற்றிக் கண்ணின் தீ பட்டு (மன்மதன்) எரிந்து போக நட்டம் இடும் உத்தமர் = நடனம் செய்யும் பெரியோனாகிய சிவ பெருமான் நினைக்கும் = (உன்னைத்) தியானிக்க மனம் ஒத்த = அவர் மனத்தில் பொருந்தி கழல் வீரா = திருவடிகளை உடைய வீரனே.

நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சை உற
நித்தம் இறுக தழுவும் மார்பா

நெய்க் கமல = தேன் பொருந்திய தாமரை போன்ற மொக்கு முலை = மொக்குப் போன்ற கொங்கையை உடைய மெய்க் குறவி = உண்மை நிலை தவராத குறத்தி (வள்ளி) இச்சை உற= உன்னிடம் அன்பு கொள்ளும்படி நித்தம் = நாள்தோறும் இறுகத் தழுவும் மார்பா = அவளைக் கெட்டியாய் அணைக்கும் மார்பனே

எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுது நிற்கும் முருகோனே

எற்றிய = (அலை) வீசும் திருச்சலதி = கடல் சுற்றிய = சூழ்ந்துள்ள (பூமியில்) திருத்தணியில் = திருத் தணிகையில் எப்பொழுதும் நிற்கும் = என்றும் நிலையாக வீற்றிருக்கும் முருகோனே = முருகனே.

எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர்
இட்ட நிறை விட்ட பெருமாளே.

எட்டு அசலம் = அட்ட கிரிகள் வரையிலும். எட்ட = எட்டிப் பரவும் நிலம் முட்ட = நிலம் முழுமையும் முடி நெட்ட = தங்கள் முடியைத் தள்ளிச் செலுத்திய அசுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே = அசுரர்கள் இட்ட சிறையிலிருந்து தேவர்களை நீக்கிய பெருமாளே.

சுருக்க உரை

கரும்பு வில்லை வளைத்து மன்மதன் செலுத்திய பாணங்கள் மேலே தைத்த வேகத்தாலும், எல்லா இடங்களிலும் நெருப்பை வீசி ஒளியைப் பரப்பும் நிலவாலும், மாதர்களின் வசை மொழிகளாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் இசையாலும், நான் மெலிந்து அழியாமல். பத்தி நெறியை எனக்குத் தந்து, முத்தியையும் அளித்து உதவ, பச்சை நிற மயிலின் மேல் ஏறி வர வேண்டுகின்றேன்.

நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து, நடனம் செய்த பெரியோனாகிய சிவ பெருமான், உன்னைத் தியானிக்க அவர் மனதில் பொருந்தி எழுந்தருளிய திருவடிகளை உடைய வீரனே, தாமரை மொக்குப் போன்ற கொங்கையை உடைய உண்மை நிலை தவறாத குறப் பெண் வள்ளி, நாள் தோறும் அன்பு கொள்ளும்படி அவளை இறுகத் தழுவிய மார்பனே, கடல் சூழ்ந்த பூமியில் திருத்தணியில் நிலையாக வீற்றிருக்கும் முருகோனே. நிலம் முழுதும் ஆட்சி செலுத்திய அசுரர்கள் இட்ட சிறையிலிருந்து தேவர்களை மீட்ட பெருமாளே, பச்சை மயிலின் மேல் ஏறி என்னை ஆள வரவேணும்.

விளக்கக் குறிப்புகள்

1.  பணை = பறை.  இசைப்பட்ட திகிரி = புல்லாங்குழல். திகிரி = மூங்கில்.

2. விசையாலே, மதியாலே, வசையாலே...அழியாதே....
காமம் மிகுந்தவர்களுக்கு வேதனை தருவன---மன்மதன் மலர்ப் பாணங்கள், நிலவொளி, பெண்களின் வசை மொழி, குழல் இசை.
(தெருவினில் நடவா மடவார்)...                                  திருப்புகழ் ,தெருவினில்நட.

3. உத்தமர் நினைக்குமன மொத்த கழல்வீரா.....
சிவபெருமான் தியானத்தில் இருந்தது முருகன் திருவடி.
(மத்தப்ர மத்தரணி மத்தச் சடைப் பரமர்
சித்தத்தில் வைத்த கழலோனே)...                              திருப்புகழ் ,முத்துத்தெ.

” tag:

144.வினைக்கின மாகும்

“

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
   பினுக்கெதி ராகும்                            விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
   சமத்திடை போய்வெந்                 துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
   கருக்குழி தோறுங்                            கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
   கழற்புக ழோதுங்                         கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
   சியைப்புணர் வாகம்                        புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
   பொருக்கெழ வானும்                      புகைமீளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
   திறக்கம ராடுந்                              திறல்வேலா
திருப்புகழ் ழோதுங் கருத்தினர் சேருந்
   திருத்தணி மேவும்                         பெருமாளே.
-      144 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு
எதிர் ஆகும் விழி மாதர்

வினைக்கு இனமாகும் = வினையைப் பெருக்குவதற்குக் காரணமான. தனத்தினர் = கொங்கையை உடையவர்கள் வேள் = மன்மதனுடைய அம்பினுக்கு எதிர் ஆகும் = அம்புக்கு ஒப்பாகும் விழி மாதர் = கண்களை உடைய விலை மாதர்கள் (மீது வைத்த ஆசையால்).

மிக பல மானம் தனில் புகுதா வெம்
சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி

மிகப் பல = மிகப் பலவான மானம் தனில் புகுதா = அவமானச் செயல்களில் நுழைந்து வெம் சமத்திடை = விரும்பிய (கலவிப்) போர்களில் போய் = ஈடுபட்டு வெம் துயர் மூழ்கி = கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து.

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும்
கரு குழி தோறும் கவிழாதே

கனத்த விசாரம் = தாங்குதற்கு அரிய கவலை அடைந்து. பிறப்பு அடி தோயும் = பிறவிக்கு அடி கோலும் கருக் குழி தோறும் = கருக்குக்குள் தோறும். கவிழாதே = நான் கவிழாமல்.

கலை புலவோர் பண் படைத்திட ஓதும்
கழல் புகழ் ஓதும் கலை தாராய்

கலைப் புலவோர்கள் = கலை வல்ல புலவர்கள் பண் படைத்திட = சீராக ஓதும் = ஓதியுள்ள கழல் புகழ் = (உனது) திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை தாராய் = கலை ஞானத்தைத் தந்தருளுக.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை
புணர் வாகம் புய வேளே

புனத்து இடை போய் = (தினைப்) புனத்துக்குப் போய் வெம் = கொடிய சிலைக் குறவோர் = வில்லேந்திய குறவர்களின் கொடி = கொடி போன்ற வள்ளியை புணர் = சேர்ந்த  வாகம் புய வேளே = அழகிய புயங்களை உடையவனே.

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும்
பொருக்க எழ வானும் புகை மூள

பொருப்பு = (கிரவுஞ்ச) மலை. இரு கூறும் பட = இரண்டு கூறாகும்படியும். கடல் தானும் = கடலும். பொருக்கி எழ = வற்றி போகவும். வானும் = வானமும். புகை மூள = புகை கொள்ள.

சினத்தோடு சூரன் கனத்த தி(ண்)ணிய மார்பம்
திறக்க அமர் ஆடும் திறல் வேலா

சினத்தோடு = கோபத்துடன் சூரன் = சூரனுடைய கன = கனத்த தி(ண்)ணி = திண்ணிய மார்ப(க)ம் மார்பு திறக்க = பிளவுபட அமர் ஆடும் திறல் வேலா = போர் செய்த வீர வேலாயுதனே.

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் பெருமாளே.
திருப்புகழ் ஓதும் = திருப்புகழ் ஓதும் கருத்தினர் = கருத்துள்ள அடியார்கள் சேரும் = கூடுகின்ற திருத்தணி மேவும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

வினைக்கு ஏதுவான செயல்களில் ஈடுபடக் காரணமாகும் கொங்கைகளை உடையவர், மன்மதனின் அம்புக்கு நிகரான கண்களை உடையவர் ஆகிய விலை மாதர்கள் மீதுள்ள ஆசையால், பல விதமான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய கலவிப் போர்களில் ஈடுபட்டு, கொடிய துன்பங்களை அனுபவித்து, கவலை அடைந்து, பிறப்புக்கு அடி கோலும் கருக்குழியில் நான் கவிழாமல், புலவர்கள் சீராக ஓதியுள்ள உனது திருவடியின் புகழைப் பாடும்படியான கலை ஞானத்தைத் தந்து அருளுக.

வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்துக்குப் போய், குறவர் மகளான வள்ளியைப் புணர்ந்த அழகிய புயங்களை உடைய வேளே, கிரவுஞ்ச கிரி இரு கூறாகவும், கடல் வற்றிப் போகவும், சூரனுடைய மார்பு பிளக்கவும், போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும் கருத்துடையவர்கள் கூடும் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் கழலை ஓதும் கலைத் திறனை எனக்குத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

ஒரு நாளிரவு நேரத்தில் வள்ளிமலை சுவாமிகள் திருத்தணியில் ஒரு வீட்டின் திண்ணையிலிருந்துகொண்டு பாடியபோது,
-        தெருத்திண்ணை தோறும் திருப்புகழ் ஓதும் - 
என்று ஓர் அடியை மாற்றிப் பாடினாராம்.

அப்போது தணிகையில் அந்தணக் கோலத்தோடு முருகன் கையில் விசிறியுடன் திண்ணையில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டும் எழுந்து ஆடிக்கொண்டும் பரவசமாகக் காட்சி அளித்தாராம்.
அப்போது திருத்தணி மலையில் ஒரு பேரொளி எழுந்ததாம்.

இந்தச் சம்பவமே வள்ளிமலை சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று நள்ளிரவில் திருத்தணி திருப்புகழ் திருப்படி திருவிழா எடுப்பிக்கச் செய்தது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஆங்கிலேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறும் வழக்கத்தை மாற்றவே ஸ்வாமிகள்1917-18 இந்த வழக்கத்தைத் துவக்கி வைத்தார் என்று கூறுவதும் உண்டு.

143.வரிக்கலை

“

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
   மயக்கிவிடு மடவார்கள்                            மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
   வயிற்றொலெரி மிகமூள                          அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி
   ஒருத்தர்தமை மிகநாடி                             யவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
   உயர்ச்சிபெறு குணசீல                          மருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
   மிகுத்தபல முடனோத                         மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
   விளைத்ததொரு தமிழ்பாடு                    புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
   திருக்கையினில் வடிவேலை              யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
   திருத்தணிகை மலைமேவு                     பெருமாளே.
-143 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை
மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே

வரி = உயர்ச்சி கொண்டுள்ள கலையின் நிகரான = மானுக்கு ஒப்பான. விழிக் கடையில் = கடைக் கண்ணால் இளைஞோரை = இளைஞர்களை மயக்கியிடும் = மயக்கும். மடவார்கள் = பொது மகளிர். மயலாலே = மோகத்தால்

மதி குளறி உள்ள காசும் அவர்க்கு உதவி மிடியாகி
வயிற்றில் எரி மிக மூள அதனாலே

மதிக் குளறி = அறிவு குழப்பம் அடைந்து. உள்ள காசும் = தம்மிடமிருந்த பொருளையும் அவர்க்கு  உதவி = அவர்களிடம் கொடுத்து விட்டு வயிற்றில் எரி மிக = வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும்  மிடியாகி = வறுமை அடைந்து

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரோடு பகையாகி
ஒருத்தர் தமை மிக நாடி அவரோடே

ஒருத்தருடன் உறவாகி = ஒருத்தருடன் நட்பு பூண்டும். ஒருத்தரோடு பகையாகி = ஒருத்தருடன் பகைமை பூண்டும் ஒருத்தர் தமை மிக நாடி  ]= வேறு ஒருவரை மிகவும் விரும்பியும்  அவரோடே = அவர்களோடு சேர்ந்து

உணக்கை இடு படு பாவி எனக்கு உனது கழல் பாட
உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே

உணக் கை இடு = உண்ணுவதற்கும் வேண்டிக் கையை நீட்டுகின்ற படு பாவி எனக்கு = பாவியாகிய எனக்கு உனது கழல் பாட = உன் திருவடிகளைப் பாடும்படியான உயர்ச்சி பெறு = சிறந்த. குண சீலம் அருள்வாயே = குணத் தூய்மையைத் தந்து அருளுக.

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை
மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே

விரித்த = விரிவாக அருணகிரிநாதன் உரைத்த = அருணகிரி நாதன் பாடியுள்ள தமிழ் எனும் மாலை = திருப்புகழ் என்னும் தமிழ் மாலையை மிகுத்த பலமுடன் = மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே = ஓத மகிழ்பவனே.

வெடித்து அமணர் கழு ஏற ஒருத்தி கணவனும் மீள
விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே

வெடித்த = (பொறாமையினாலும், அவமானத்தாலும்) துடித்த அமணர் = சமணர்கள் கழு ஏற = கழுவில் ஏறவும் ஒருத்திகணவனும் = ஒப்பற்ற மங்கயர்க்கரசியின் கணவன் (கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன்) மீள்ள = (திருநீறிடும் வழிக்கு) மீண்டும் வரவும் விளைத்தது ஒரு = வழி செய்த ஒப்பற்ற தமிழ் பாடு புலவோனே = (தேவாரத் தமிழ்ப் பாடல்களைச் (சம்பந்தராக வந்து) பாடிய புலவனே.

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது
திரு கையினில் வடி வேலை உடையோனே

செருக்கி இடு = ஆணவத்துடன் பொரு சூரர் = சண்டை செய்த அசுரர்களின் குலத்தை = குலத்தை அடி அற = அடியோடு அற்றுப் போக மோதும் = மோதித் தாக்கிய திருக்கையினில் = அழகிய கையில் வடிவேலை = கூரிய வேலாயுதத்தை உடையோனே = உடையவனே.

திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான
திருத்தணிகை மலை மேவு பெருமாளே.

திருக்குலவும் = அழகு விளங்கும் ஒரு = ஒப்பற்ற நீல மலர்ச் சுனையில் = நீலோற்பல மலர்ச் சுனையைக் கொண்ட அழகான = அழகு விளங்கும் திருத்தணிகை மலை மேவு பெருமாளே = தணிகை மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மானைப் போன்ற கண்களின் கடையால் இளைஞர்களை மயக்கும் விலை மாதர் மீதுள்ள மோகத்தால், அறிவு குழப்பம் அடைந்து, கைப் பொருளை அம்மாதர்களிடம் கொடுத்து, வறுமையில் வாடி, ஒருவரிடம் நட்பும், ஒருவரிடம் பகைமையும் பூண்டு, ஊடாடி, உண்ணுவதற்கும் பிறரிடம் கையை நீட்டும் பாவியாகிய எனக்கு, உனது திருவடிகளைப் பாடும்படியான சிறந்த குணத் தூய்மையைத் தந்து அருளுக.

அருணகிரி நாதர் என்னும் புலவன் பாடிய திருப்புகழ் மாலையைப் பலமுடன் ஓத மகிழ்பவனே, அவமானத்தால் உயிர் துடித்து அமணர் கழு ஏறவும், மங்கயர்க்கரசியின் கணவனான கூன் பாண்டியன் மீண்டும் சைவ சமயத்துக்கு வரவும், ஒப்பற்ற தேவாரப் பாக்களைத் தமிழில் பாடிய சம்பந்தராகிய புலவனே, ஆணவத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் குலத்தை அடியோடு அழியும்படி செய்த வேலைக் கையில் ஏந்தியவனே, அழகு விளங்கும் தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, காமுகனாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட குண சீலம் தந்து அருள வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

1.ஒருத்தி கணவனும் மீள......புலவோனே....
பாண்டியனுக்கு உற்ற சுரத்தின் வெப்பத்தால் அவன் அருகில் இருந்த சமணர்களின் மயிற்பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர் யாவும் வெந்து போயின என்பர்.
பீலி வெந்துய ராவி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கோண்டிட வாது கொண்டரு  ளெழுதேடு                 ...திருப்புகழ், மூலமந்திர
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது)        ...திருப்புகழ்,  நிகனமெனி.

2. உணக் கை இடு - உண்ண வேண்டிக் கையை நீட்டுகின்ற.

142.வட்டவாட்ட

“

வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
   மக்கள்தாய்க் கிழவி                               பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
   மற்றகூட் டமறி                                    வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
   முட்டர்பூட் டியெனை                    யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
   திக்குராக் கொளிரு                         கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
   பத்தின்வாட் பிடியின்                       மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
   திச்சிதோட் புணர்த                        மயில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி
   யெட்டுமாக் குலைய                          எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
   டெத்தினார்க் கெளிய                     பெருமாளே.
-      142 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை
மக்கள் தாய் கிழவி பதி நாடு

வட்ட வாள் தனம் = வட்ட வடிவும் ஒளியும் உள்ள கொங்கையைக் கொண்ட மனைச்சி = மனைவியும். பால் குதலை மக்கள் = (அவள்) பால் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகள் தாய் கிழவி =வயது முதிர்ந்த அன்னை பதி = என் ஊர். நாடு = என் நாடு.

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள்
மற்ற கூட்டம் அறிவு அயலாக

வைத்த தோட்டம் = எனக்கு உள்ள தோட்டம். மனை = வீடு. அத்தம் = செல்வம். ஈட்டு பொருள் = சம்பாதித்த பொருள். மற்ற கூட்டம் = மற்ற உறவினர் கூட்டம். அறிவு = என் அறிவு (இவை எல்லாம்). அயலாக = என்னை விட்டு நீங்க.

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை
முட்டர் பூட்டி எனை அழையா முன்

முட்ட = நன்றாக ஓட்டி = ஓட்டி மிக எட்டும் = மிகவும் நெருங்கி வரும் மோட்டு எருமை = பெரிய எருமை மேல் (வரும்) முட்டர்= கால தூதராகிய மூடர்கள் என்னை பூட்டி = (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி. அழையா முன் = பாசக்கயிற்றால் கட்டி என்னை அழைப்பதற்கு முன்.

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்)
குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்

முத்தி வீட்டை அணுக = (நான்) முத்தி வீட்டை அணுகிச் சேரவும் முத்தராக்க = ஞானியர் போல் என்னை ஆக்கவும் சுருதி = வேதத்தினுள்ளும் குராக்குள் = குரா மலர்களினுள்ளும் ஒளிர் = விளங்குகின்ற இரு கழல் தாராய் = இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக.

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர
இபத்தின் வாள் பிடியின் மணவாளா

பட்ட(ம்) = (நெற்றிப்) பட்டமும் நால் பெரு = நான்கு பெரிய மருப்பினால் =தந்தங்களும் கர(ம்) = (தொங்கும்) துதிக்கையும் உடைய இபத்தின் = (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த வாள் = ஒளி பொருந்திய பிடியின் = பெண் யானை போன்ற நடையை உடைய (தேவசேனையின்)  மணவாளா = மணவாளனே.

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர்
பதிச்சி தோள் புணர் தணியில் வேளே

பச்சை வேய்ப் பணவை = பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது இருந்த கொச்சை = இழி குலத்தவளான வேட்டுவர் = வேடர்களுடைய பதிச்சி = ஊரிலிருந்த (வள்ளியின்) தோள் புணர் = தோளை அணைந்த தணியில் வேளே = தணிகை வேளே.

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மா திகிரி
எட்டுமா குலைய எறி வேலா

எட்டு(ம்) நால் கர= தொங்கும் துதிக்கையை உடைய ஒருத்தல் = யானைகளும் மாத்திகிரி எட்டும் = பெரிய எட்டு மலைகளும் மாக்குலைய = நடுங்கும் படி எறி வேலா = செலுத்திய வேலனே.

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு
எத்தினார்க்கு எளிய பெருமாளே.

எத்திடார்க்கு அரிய = (உன்னைப்) போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்த = முத்தனே (பாசங்களை நீக்கியவனே) பாத் தமிழ் கொண்டு = தமிழ்ப் பாக்களால் எத்தினார்க்கு = போற்றுபவர் களுக்கு எளிய பெருமாளே = எளிதான பெருமாளே.

சுருக்க உரை

வட்டமான கொங்கையை உடைய மனைவி, அவள் பால் பெற்ற மழலை பேசும் குழந்தைகள், வயதான தாய், எனது ஊர், நாடு, வீடு, செல்வம், பொருள், சுற்றம், அறிவு இவை யாவும் அயலாக என்னை விட்டு நீங்க, யம தூதுவர் எருமையின் மேல் வந்து என்னைப் பாசக் கயிற்றால் அழைப்பதற்கு முன், என்னை ஞானியர் போலாக்கி, வேதங்களிலும், குரா மலர்களின் உள்ளும் விளங்கும் உன் கழலணிந்த திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

நெற்றிப் பட்டமும், பெரிய தந்தங்களும், துதிக்கையும் உடைய ஐராவதம் யானை வளர்த்த தேவசேனையின் மணவாளனே. மூங்கில் பரண் மீது இருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளியின் தோளை அணைபவனே, உலகைக் காக்கும் எட்டு மலைகளும், எட்டு யானைகளும் நடுங்கும்படி வேலைச் செலுத்தியவனே, உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதானவனே, உன்னைத் துதிப்பவர்களுக்கு எளிய பெருமாளே, உடல்  நிலையாமையை உணர்ந்து உன்னைப் போற்றுவேனாக. உன் திருவடிகளைத் தந்தருளுக.

விளக்கக் குறிப்புகள்

1அறிவு அயலாக....
புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
 அறிவு அழிந்திட்டு                                                               ... சம்பந்தர் தேவாரம்.
(ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன்              ..           திருநாவுக்கரசர் தேவாரம்

2. நாற்பெரு மருப்பினால்....
இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.

3. பணவை - பரண். ஒருத்தல் - யானை. அஷ்ட கஜங்கள் : எட்டு திசைகளில் இருக்கும் மலைகளில் வசிக்கும் யானைகள் அஷ்டதிக் கஜங்கள் எனப்படும். திசைக் காவலர்கள் என்றும் சொல்வர்.அவைகள் முறையே, ஐராவதம்( கிழக்கு), புண்டரீகம் ( தென் கிழக்கு), வாமனம் ( தெற்கு), குமுதம் ( தென் மேற்கு), அஞ்சனம் ( மேற்கு), புட்பதந்தம் ( வடமேற்கு) சார்வபௌமம் ( வடக்கு) சுப்ரதிபம் ( வடகிழக்கு)
புண்டரீகத்தைப் பற்றிய குறிப்பு கந்த புராணத்தில் வருகிறது. சூரபத்மன் தேவ லோகத்தை பிடித்தபோது அவனுடைய மந்திரி தர்ம கோபன், இந்த புண்டரீகத்தைப் சிறை பிடித்து, தன்னுடைய ஊராகிய மகேந்திரபுரிக்கு கொண்டு செல்கிறான். வீரபாகுத் தேவர் தூது சென்றபோது, சூர சேனைகளுடன் போரிட்டு, இந்த புண்டரீகத்தை மீட்டு வருகிறார்.

4.எத்திடார்க்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தி....இந்த அடியை ‘தொக்கறா’ என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் காணலாம்.