F

படிப்போர்

Monday, 8 October 2012

125. ஏது புத்திஐயா

“

திருவடி தீட்சை கேட்டுப் பாடின துதி

  ஏது புத்திஐ யாஎ னக்கினி
    யாரை நத்திடு வேன வத்தினி
      லேயி றத்தல்கொ லோஎ னக்குநி       தந்தைதாயென்
  றேயி ருக்கவு நானு மிப்படி
       யேத வித்திட வோச கத்தவ
      ரேச லிற்பட வோதந கைத்தவர்        கண்கள்காணப்
   பாதம் வைத்திடை யாதெ ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
      பார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப்
   பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
      யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
      பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது              சிந்தியாதோ
   ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீச முட்டரை
      யோட வெட்டிய பாநு சத்திகை      யெங்கள்கோவே
   ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
      மான்ம ழுக்கர மாட பொற்கழ
      லோசை பெற்றிட வேந டித்தவர்           தந்தவாழ்வே
   மாதி னைப்புன மீதி ருக்குமை
      வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
      மார்ப ணைத்தம யூர அற்புத                    கந்தவேளே
   மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
      லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
      வாழ் திருத்தணி மாம லைப்பதி               தம்பிரானே.
-125 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

ஏது புத்தி ஐயா எனக்கு இனி
யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல் கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே

ஏது புத்தி ஐயா எனக்கு = எனக்கு புத்தியே இல்லை, ஐயனே இனி = இனிமேல் யாரை நத்திடுவேன்= யாரை விரும்பி நாடுவேன் அவத்தினில்=வீணாக இறத்தல் கொலோ= இறப்பது தான் என் தலை விதியோ எனக்கு நீ தந்தை தாய் என்றே = எனக்கு நீயே தந்தையும் தாயும் என்று

இருக்கவும் நான் இப்படியே
தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண

இருக்கவும் = இருந்தும் நானும் இப்படியே = நானும் இவ்வாறாக தவித்திடவோ = தவித்திடலாமா?  சகத்தவர் = உலகோர் ஏசலிற் படவோ = என்னை இகழ்ச்சி மொழிக்கு ஆளாக்கலாமா நகைத்தவர் கண்கள் காண = (என்னை) இகழ்ந்து சிரிப்பவர்கள் கண் முன்னே.

பாதம் வைத்திடு ஐயா தெரித்து எனை
தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி

பாதம் வைத்திடு ஐயா = (உனது) திருவடியை வைப்பாயாக தெரித்து = என் நிலை தெரிந்து தாளில் வைக்க= (என்னைத்) திருத்தாளில் சேர்க்க நீயே = நீயே மறுத்திடில் = மறுப்பா யானால் பார் நகைக்கும் ஐயா = இந்த உலகமே சிரிக்கும், ஐயனே தகப்பன் முன் மைந்தன் ஓடி = தந்தையின் முன் குழந்தை ஓடிச் சென்று.

பால் மொழி குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ

பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில் = பால் வேண்டும் குறிப்பு மொழிக் குரலுடன் அழுதால்  யார் எடுப்பது எனா = யார் இந்தக் குழந்தையை எடுப்பதென்று வெறுத்து= வெறுத்து அழ = அழும்படி பார் விடுப்பார்களோ = இப்பூமியில் விட்டு விடுவார்களா எனக்கு இது சிந்தியாதோ = இந்த உண்மை என் மனதில் படலாகாதா.

ஓதம் உற்று எழு பால் கொதித்தது
போல எட்டு திகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே

ஓதம் உற்று எழு = வெள்ளமாகப் பெருகி எழும் பால் கொதித்தது போல = பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை = எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை. ஓட வெட்டிய = ஓடும்படி வெட்டி அழித்த பாநு சத்தி = சூரிய ஒளி கொண்ட சத்தி வேலை கை எங்கள் கோவே = கையில் ஏந்திய கையில் கொண்ட எங்கள் அரசே.

ஓதம் மொய் சடை ஆட உற்று அமர்
மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே

ஓத மொய்ச் சடை = கங்கை வெள்ளம் நெருங்கும் சடை. ஆடவும் = ஆடவும். உற்று அமர் மான் = பொருந்தியிருக்கும் மான். மழு = மழு. கரம் = ஏந்திய கரங்கள். ஆட = ஆடவும். பொன் கழல் = அழகிய காலின் ஒலி. ஓசை பெற்றிடவே = ஒலி செய்ய. நடித்தவர் தந்த வாழ்வே = நடனம் செய்தவர் அளித்த செல்வமே.

மா தினை புன மீது இருக்கு மை
வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே

மா = பெரிய. தினைப் புனம் மீது இருக்கும் = தினைப் புனத்தின் மேல் இருந்தவளும். மை வாள் விழி = மை பூசிய ஒளி பொருந்திய கண்களை உடைய. குற மாதினை = குறப் பெண்ணாகிய வள்ளியை. திரு மார்பு அணைத்த = அழகிய மார்பில் அணைத்த. மயூர = மயில் வாகனனே. அற்புத = அற்புதமான. கந்த வேளே = கந்த வேளே.

மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார்
வியப்புற நீடு மெய் தவர்
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரானே.

மாரன் = மன்மதன். வெற்றி கொள் = வெற்றி பெறும்படியான. பூ முடிக் குழலார் வியப்புற = பூ முடித்த கூந்தலை உடைய மாதர்களும் வியக்கும் படியான. நீடு மெய்த் தவர் = பெரிய உண்மைத் தவசிகள். வாழ் = வாழும். திருத்தணி மா மலைப்பதி தம்பிரானே = சிறந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.

தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு

சுருக்க உரை
எனக்கு ஏன் இந்த புத்தி ஐயா. இனி யாரை விரும்பி நாடுவேன். வீணாக இறப்பது தான் என் தலை விதியா. உலகத்தவர் இகழ்ச்சிக்கு நான் ஆளாகலாமா. உன் திருவடியை என் தலைமேல் வைப்பாயாக. நீர் மறுத்தால் உலகோர் நகைப்பர். தந்தை முன் ஓடிய குழந்தை அழுதால் அதை யார் எடுப்பது என்று யாரேனும் பூமியிலேயே விட்டு விடுவார்களா? இந்த உண்மை என் மனதில் படாதா. 

பால் பொங்குவது போல் பெருகி வந்த அசுரர் சேனைகளை அழித்த வேலனே, கங்கை, மான், மழு ஆகியவற்றை ஏந்திய சிவனுடைய செல்வமே, தினைப் புனம் காத்த வள்ளியை அணைத்த மார்பனே, மயில் வாகனனே, மிகக் அழகு வாய்ந்த மாதர்கள் வியக்கும்படியான தவசிகள் வாழும் தணிகையில் வாழும் பெருமாளே, உன் திருவருள் எனக்குச் சிந்தியாதோ.
ஒப்புக
1.பாதம் வைத்திடையாது.... 
எனதுதலை யிற்பதங்க ளருள்வோன    --                             திருப்புகழ் , களபமுலையை

‘எனது தலையிற் பதங்கள் அருள்வோனே’, ‘பதயுக மலர் தந்த பேரருள்’, ‘முன் அளித்த பாதம்’, ‘தலை நாளிற் பதம் ஏத்தி’,  என்பன அவர் வாக்குகள்
  
தந்தையாகிய நீர் குழந்தையாகிய என்னை ஆதரித்து ஆட்கொள்வீர் என்பது கருத்து

” tag:

124.எனையடைந்த

“

முக்திக்கு விண்ணப்பம்

எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
        மெரிவ ழங்கு வெப்பு                       வலிபேசா
  இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
         டிரும லென்று ரைக்கு              மிவையோடே
  மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
        மதிம யங்கி விட்டு                            மடியாதே
  மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
        மயிலில் வந்து முத்தி                     தரவேணும்
  நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
        நெறியில் நின்ற வெற்றி            முனைவேலா
  நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
        நெடிய குன்றில் நிற்கு                 முருகோனே
  தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
        செயல றிந்த ணைக்கு                  மணிமார்பா
  திசைமு கன்தி கைக்க அசர ரன்ற டைத்த
        சிறைதி றந்து விட்ட                     பெருமாளே
-124 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

எனை அடைந்த குட்ட(ம்) வினை மிகுந்த பித்தம்
எரி வழங்கு(ம்) வெப்பு வலி பேசா

எனை அடைந்த குட்ட = எனக்கு வந்த குட்ட நோய் வினை மிகுந்த = வினைக்கு ஈடாக மிக்கு வரும் பித்தம் = பித்தம் எரி வழங்கும் = கொதிப்பைத் தருகின்ற வெப்பு = சுர நோய் வலி பேசா = வலி சொல் முடியா வண்ணம்.

இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பு
ஒடு இருமல் என்று உரைக்கும் இவை ஓடே

இகலி = மாறு பட்டு அலைக்கும் = வருத்தும் முயலகன் = முயலகன் என்னும் வலிப்பு குலைப்பு ஒடு = நடுக்கம் தரும் நோயுடன் இருமல் என்று உரைக்கும் = இருமல் என்று சொல்லப்படும் இவை ஓடே = இந்நோய்களுடன் ஊடாடி.

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த
மதி மயங்கி விட்டு மடியாதே

மனைகள் = வீடுகள் பெண்டிர்= பெண்கள் மக்கள் = மக்கள் தமை = ஆகியவற்றை நினைந்து = நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு = நல்ல அறிவு மயக்கம் அடைந்து மடியாதே = (நான்) இறந்து போகாமல்.

மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும்
மயிலில் வந்து முத்தி தரவேணும்

மருவி = (நீ) தோன்றி இன்று எனக்கு= இன்று எனக்கு மரகதம் சிறக்கும் = பச்சை ஒளி வீசும் மயிலில் வந்து முத்தி தரவேணும் = மயிலின் மீது வந்து நீ வீட்டுப் பேற்றை அளிக்க வேண்டுகிறேன்.

நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனை வேலா

நினை வணங்கு பத்தர் அனைவரும் = உன்னை வணங்கும்  அடியார்கள் அனைவரும் தழைக்க = சுகத்துடன் வாழ நெறியில் நின்ற = (அவர்களுக்கு அருள் பாலிக்கும்) வழியில் நிற்கும் முனை வேலா = கூரிய வேலாயுதத்தை ஏந்தியவனே.

நிலை பெறும் திருத்தணியல் விளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கும் முருகோனே

நிலை பெறும் திருத்தணியில் விளங்கும்= (அழியாது) நிலை பெற்று விளங்கும் திருத்தணிகையில் சித்ர = அழகிய நெடிய குன்றில் = பெருமை வாய்ந்த மலையில் நிற்கும் முருகோனே = நிற்கும் முருகனே.

தினை விளங்கல் உற்ற புன இளம் குறத்தி
செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா

தினை விளங்கலுற்ற = தினை செழித்து விளங்கும் புன = (மலைக்) கொல்லையில் (இருந்த)இளம் குறத்தி= இளைய குறப் பெண்ணான வள்ளியின் செயல் அறிந்து அணைக்கும் = (பத்திச்) செயலை அறிந்து அவளை அணைக்கும் மணி மார்பா = அழகிய மார்பனே.

திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த
சிறை திறந்து விட்ட பெருமாளே.

திசை முகன் = பிரமன் திகைக்க = திகைத்து நிற்கும்படி அசுரர் அன்று அடைத்த = அன்று (தேவர்களை) அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே = சிறையைத் திறந்து விட்ட பெருமாளே.

சுருக்க உரை

சொல்ல ஒணாத வலிகளைக் கொடுக்கும் பிணிகளால் துன்பப் பட்டு, மனைவி, மக்கள் என்பவற்றை நினைந்து, அறிவு மயக்கம் அடைந்து, நான் இறவாமல், நீ பச்சை மயிலில் என் முன்னே தோன்றி, முத்தி தர வேண்டும். 

உன் பத்தர்கள் சுகத்துடன் வாழ, அவர்களுக்கு அருள் பாலிக்கும் வழியில் நிற்கும் வெற்றி பெறும் கூரிய வேலனே, வள்ளியின் பத்திச் செயலை அறிந்து அவளை அணைத்த மார்பனே, பிரமன் திகைக்க, அசுரர்கள் அன்று அடைத்த சிறையைத் திறந்து விட்ட பெருமாளே, மயிலில் வந்து எனக்கு முத்தி தர வேண்டுகின்றேன்.

ஒப்புக
1.  எனையடைந்த குட்ட....
வேசையர் மயல்மேலாய் வெடுக் கெடுத்து மகா பிணி மேவிட முடக்கி வேட்கு மதாமத வீணனை                                                                ---                      திருப்புகழ்,  மலைக்கனத்தென.

Saturday, 6 October 2012

123.எனக்கெனயாவும்

“

எனக்கென யாவும் படைத்திட நாளும்
        இளைப்பொடு காலந்                   தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
        இலச்சையி லாதென்                          பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
         உரைத்திடு வார்தங்                        குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
        பொலச்சர ணானுந்                 தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
         விழக்கொடு வேள்கொன்                றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
        விருப்புற வேதம்                       புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
   சிரத்தினை மாறும்                            முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
   திருத்தணி மேவும்                             பெருமாளே.
-123 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

எனக்கு என யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலம் தனில் ஓயா

எனக்கு என = எனக்கேன்றே யாவும் = எல்லாம் படைந்திட = சேகரிக்க வேண்டி நாளும் = நாள்தோறும் இளைப்பொடு = உழைத்து காலம் தனில் ஓயா = காலக் கணக்கில் ஓய்வு இல்லாமல்.

எடுத்திடு காயம் தனை கொடு மாயும்
இலச்சை இலாது என் பவம் ஆற
 
எடுத்திடு காயம் தனை கொ(ண்)டு = எடுக்கின்ற உடல்களை அடைந்து மாயும் = பின்னர் இறந்து போகும் இலச்சை = வெட்கம் இலாது = அழிய என் பவம் ஆற = என் பிறப்பு ஒழிய.

உனை பல நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்கு உளி மேவி
உனைப் பல நாளும் = உன்னைப்பல நாட்களும் திருப்புக ழாலும் = திருப்புகழை உரைத்திடுவார் = கூறிப் புகழ்வோர்கள் தங்கு உளி மேவி = இருக்கும் இடத்துக்குச் சென்று

உணர்த்திய போதம் தனை பிரியாது ஒண்
பொல சரண் நானும் தொழுவேனோ

உணர்த்திய போதம் தனை = (அவ்வடியார்கள் விளக்கும் ஞான)  அறிவுரைகளை பிரியாது = விலகாது (ஒட்டி ஒழுகி) ஒண் பொல = ஒளி வீசும் அழகிய சரண் = திருவடியை நானும் தொழுவேனோ = தொழும் பாக்கியம் எனக்கும் கிட்டுமோ?

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழ கொடு வேள் கொன்றவன் நீயே

வினைத் திறமோடு = தொழிலில் திறமையுடன் அன்று எதிர்த்திடும் வீரன் = அன்று அம்பு எய்த வீரனான மன்மதன் விழ = (வெந்து) விழும்படி. கொடு = கொடிய வேள் = மன்மதனை கொன்றவன் = கொன்று எரித்த வனாகிய சிவபெருமான்.

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும்
விருப்பு உற வேதம் புகல்வோனே

நீயே விளப்பு என = (பிரணவ மந்திரத்தின் பொருளை) உரைப்பாயாக இனி மேல் என்று = நன்கு எனக்கூறி இடக்கு அயனாரும் = (முதலில் உன்னை வணங்காது) முரண் செய்த பிரமனும் விருப்புற = விரும்பி மகிழ வேதம் புகல்வேனே = வேதப் பொருளை உரைத்தவனே.

சினத்தொடு சூரன் தனை கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே

சினத்தொடு சூரன்தனை = கோபத்துடன் சூரனை கொடு
= கொடுமை வாய்ந்த வேலின்= வேல் கொண்டு சிரத்தினை மாறும் = (சூரனின்) தலையைத் தள்ளி ஒதுக்கின முருகோனே = முருகோனே.

தினை புன மேவும் குற கொடியோடும்
திருத்தணி மேவும் பெருமாளே.

தினைப் புனம் மேவும் = தினைப் புனத்தில் வாழும் குறக் கொடியோடும் = கொடி போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியுடன் திருத்தணி மேவும் = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

என் உடைமைகளுக்காக நாள் தோறும் உழைத்து, ஓய்ந்து போய், எடுக்கின்ற உடல்களைக் கொண்டு, பின்னர் இறந்து போகும் கேவலம் அழிய, என் பிறப்பு அற, அடியார்கள் விளக்கும் அறிவுரைகளை மேற்கொண்டு, உபதேச நெறிகளினின்றும் விலகாது, உன் திருவடியைத் தொழுவேனோ?

மன்மதனை அழித்த சிவபெருமான் பிரணவ மந்திரத்தை நீயே உரைப்பாய் என்று கேட்க, பிரமனும் வணங்கும் படி, வேதப் பொருளை உரைத்தவனே. சூரனை வேல் கொண்டு அழித்தவனே, வள்ளியுடன் தணிகை மலையில் வாழ்பவனே, பிறப்பு அற உன் திருவடியை நானும் தொழுவேனோ?

குறிப்பு
இலச்சை = வெட்கம்.  உளி = இடம்.  

122.எலுப்பு நாடி

“

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
   டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
    விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ               சதிகாரர்
 இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
    யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
    னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு                 சமுசாரம்
 கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
   அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
    கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர்        கொலைகாரர்
 கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
   வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
    கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ     ணுழல்வேனோ
 ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
   மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
    யுடைத்து வானவர் சித்தர்து தித்திட      விடும்வோலா
 உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
   வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
    உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன்      மருகோனே
  வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
     செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
    மணத்த தாதைப ரப்ரம ருக்கருள்                   குருநாதா
  வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
     குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
    மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய            பெருமாளே
-122 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

எலுப்பு நாடிகள் அப்பு ஒடு இரத்தம் ஒடு
அழுக்கு மூளைகள் மச்சு ஒடு கொள் புழு
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர்

எலுப்பு நாடிகள் = எலும்பு, நாடிகள் அப்பொடு இரத்த மொடு = நீர், இரத்தம்  இவற்றுடன் அழுக்கு = அழுக்கு மூளைகள் = மூளைகள் மச்சொடு கொடு = தகுதியின் மையைக் கொண்ட புழு இருக்கும் = புழுக்கள் ஆகியவை இருக்கும் வீடு அதில் = வீடாகிய உடலில் எத்தனை = எத்தனை தத்துவ சதிகாரர் = குணத்து மோசக்காரர்கள்

இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி
உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டு உறு சமுசாரம்

இறப்பர் = அதிக்கிரமம் செய்பவர்கள். சூதக அர்ச்சுதர் = சூதான உள்ளமுடைய மக்கள் அப் பதி உழப்பர் = தமது ஊரில் போலி வாதம் செய்பவர்கள் பூமி தரிப்பர் = பூமியில் தோன்றுவர் பிறப்புடன் இருப்பர் = (பிறந்த) பிறப்புடன் இருப்பர். வீடுகள் கட்டி = வீடுகளைக் கட்டி. அலட்டு உறு = அலைச்சல் உறும் சமுசாரம் = சமுசாரத்தில்.

கெலிப்பர் மால் வலை பட்டு உறு துட்டர்கள்
அழிப்பர் மா தவம் உற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர்

கெலிப்பர் = வெற்றி பெறுவார்கள் மால் வலை பட்டு உறு = மோக வலையில் அகப்பட்டு கிடக்கும் துட்டர் = பொல்லாத வர்கள். மாதவம் உற்று நினைக்கிலர்= பெரிய தவ நிலையைச் சற்றேனும் நினைக்க மாட்டாதவர்கள் யாரையும் கெடுப்பர் = எவரையும் கெடுப்பவர்கள் மித்திர குத்திரர் = நட்பாளருக்கு வஞ்சனை செய்வர் கொலைகாரர் = கொலை செய்பவர்கள்.

கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு
அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ

கிருத்தர் = செருக்குள்ளவர் கோளகர் = கோள் சொல்லும் குணத்தவருடன் பெற்று = சேர்ந்து. திரி = திரிந்து களவு அரிப்பர் = களவுத் தொழிலில் தினைவு கொள்வர் சூடகர் = கோப உள்ளத்தினர். எத்தனை வெம் = எத்தனை கொடிய. பிணி  கெலிக்கும் = பிணி முதலியவற்றை வெற்றி பெறும். வீடு அதை = இவ்வுடலாகிய வீட்டை நத்தி எடுத்து = ஆசையுடன் எடுத்து இவண் = இவ்வுலகில் உழல்வேனோ = திரிவேனோ?

ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம்
எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்தட விடும் வேலா

ஒலிப் பல் பேரிகை = ஒலிக்கின்ற பல பேரிகைகள் (கொண்ட) உக்ர அமர்க்கள = கடுமையான போர்க் களத்தில் எதிர்த்த சூரரை = எதிர்த்து வந்த அசுரர்களைவெட்டி= வெட்டியழித்து இருள் கிரி = இருள் மாயை செய்த கிரௌஞ்ச மலையை உடைத்து= பிளந்து வானவர் சித்தர்= தேவர்களும் சித்தர்களும் துதித்திட = போற்றித் துதிக்க விடும் வேலா = செலுத்திய வேலனே.

உலுத்த ராவணனை சிரம் இற்றிட
வதைத்து மாபலியை சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே

உலுத்த ராவணனை = ஆசைக்காரனாகிய இராவணனின். சிரம் இற்றிட = தலை அற்று விழ. வதைத்து = (அவனை) வதைத்து. மாபலியை = மாவலியை. சிறை வைத்தவன் = சிறை வைத்தவன். உலக்கை ராவி = உலக்கையைத் தாவி (அரத்தால் பொடி செய்து) நடுக் கடல் விட்டவன் = நடுக் கடலில் விட்டவனாகிய திருமாலின் மருகோனே = மருகனே

வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு
செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குரு நாதா

வலிக்க = வலி உண்டாகும்படி. வேதனைக் குட்டி = பிரமனைக் குட்டி. நடித்த ஒரு = நடனம் செய்து ஒப்பற்ற செகத்தை = உலகங்களை ஈனவள் = ஈன்ற பச்சை நிறத்தியை = பச்சை நிறத்தவளாகிய பார்வதியை மணந்த = மணந்த  பரப்ரமருக்கு = பரப் பிரமப் பொருளான சிவ பெருமானுக்கு. அருள் குரு நாதா = (உபதேசம்) அருளிய குரு நாதரே.

வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு
குறத்தியாரை மயக்கி அணைத்து உள
மகிழ்ச்சி ஓடு திருத்தணி பற்றிய பெருமாளே.

வனத்தில் வாழும் = (வள்ளி மலைக்) காட்டில் வாழும்  மயில் குலம் ஒத்திடு = மயிலினம் போன்ற குறத்தியாரை = குறத்தி யாகிய வள்ளி நாயகியை மயக்கி அணைத்து = மயக்கி அணைத்து உ(ள்)ள மகிழ்ச்சியோடு= உள்ளத்தில் மகிழ்வோடு திருத்தணி பற்றிய பெருமாளே = திருத்தணிகையில் பற்று வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
எலும்பு, நாடிகள், புழுக்கள் முதலியவை நிறைந்த உடலாகிய வீட்டில் எத்தனை மோசக்காரர்கள், அநீதி செய்பவர்கள், முதலிய குணக்கேடர்கள் தோன்றி, சமுசாரத்தில் வெற்றி பெற்று, மோக வலையில் கிடந்து, தவ நிலையைச் சற்றேனும் நினைக்காதவர்களாகப் பிணி உற்று உழல்வர். இத்தகைய வீட்டை நான் ஆசையுடன் எடுத்து இவ்வுலகில் திரிவேனோ?

பேரிகைகள் முழுங்க எதிர்த்து வந்த சூரனையும், கிரௌஞ்ச மலையையும் பிளந்து வேலைச் செலுத்தியவனே. திருமாலின் மருகனே. பிரமனைக் குட்டியவனும், பார்வதியை மணந்தவனுமாகிய சிவபெருமானுக்கு  உபதேசம் அருளிய குருநாதனே. வள்ளியை அணைத்து மகிழ்ச்சியோடு திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
1.மாபலியைச் சிறை வைத்தவன்.....
திருமால் காசிபரிடத்து வாமனனாக அவதரித்து, அசுர சக்ரவர்த்தி மாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். அசுரப் புரோகிதர் சுக்கிரன் இது விஷ்ணுவின் மாயை என்று தடுத்தார். பலி அதை கேட்காமல் சம்மதிக்கவும் வாமனர் இரண்டு அடியால் மூவுலகை அளந்து, ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்க, மாவலி தன் தலையைக் காட்டினார். திருமால் மூன்றாவது அடியால் மாவலியின் தலையில் கால் பதித்து அவனைப் பாதளத்தில் அழுத்திச் சிறை இட்டார். 

ஒப்புக:
·         விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் ....                                -                               திருப்புகழ், வதனசரோருக

·         மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து - திருப்புகழ், நூலினை
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து
ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்        -                        திருப்புகழ், வேனின்மத

·         திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டுச்
சுக்கிரன் அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய
நெடியவர் திருவும் அழகியர்  - -                                              திருப்புகழ், மருவுகடல்முகி.

2.வலிக்க வேதனை குட்டி.....
பிரமனை முனிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறி               —             திருப்புகழ், கறைபடு. 
3. உள மகிழ்ச்சியோடு.... 
உலகில் உள்ள பல்வேறு மலைகளிலும் திருத்தணி மலையில் தான் தமக்கு அதிக மகிழ்ச்சி என்று முருகவேள் வள்ளிக்குக் கூறுகின்றார்.
சுந்தரக்கிரி தொல் புவி தனிற்பல எனினும்
இந்த வெற் பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டெமக்கே---       கந்த புராணம் வள்ளியம்மை திருமணம்