F

படிப்போர்

Sunday 7 July 2013

228.புலவரை ரக்ஷிக்கும்

228
சிக்கல்
                (நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது)

மிக அருமை பட்டு உன் பாத தாமரை
சரணம் என பற்றும் பேதையேன் மிசை
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே

                                            தனதன தத்தத் தந்தான தானன
                                           தனதன தத்தத் தந்தான தானன
                                         தனதன தத்தத் தந்தான தானன  தனதானா

                            புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
     ரிடகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
                      பொருபுய திக்கெட் டும்போயு லாவிய          புகழாளா
                       பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
  லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
                   பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய      கவிபாடி
                      விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
                வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு         மிடிதீர
                      மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
  சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
                    விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு  மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
      சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
     இமயம கட்குச் சந்தான மாகிய               முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
      எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன்        மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாக்ம் வாசனை
     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
     அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி         யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
     அசுரரை வெட்டிச் சங்கார மாடிய            பெருமாளே.

பதம் பிரித்து உரை

புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித
குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா

புலவரை ரக்ஷிக்கும் = புலவர்களை ஆதரித்துக் காக்கும் தாருவே = கற்பக மரமே மதுரித = இனிமை மிக்க குண வெற்பு ஒக்கும் = குணம் கொண்ட மலைக்கு நிகரான பூவை மார் முலை = மாதர்கள் கொங்கையில் பொரு = திளைக்கும் புய = புயத்தனே. திக்கு எட்டும் போய் உலாவிய = எட்டுத் திசைகளிலும் போய் உலவுகின்ற. புகழாளா = புகழாளனே.

பொரு அரு நட்பு பண்பான வாய்மையில்
உனக்கு ஒப்பு உண்டோ எனா ந(ல்)ல
பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி

பொரு அரு = ஒப்பு உவமை அற்ற. நட்புப் பண்பான = நட்புத் தன்மை கூடிய வாய்மையில் = சத்திய நிலையில்.உலகில் = இவ்வுலகில் உனக்கு ஒப்பு உண்டோ = உனக்கு ஒப்பார் ஒருவர் உளரோ. எனா = என்று நல்ல பொருள்கள் = நல்ல பொருட் சொற்களை நிரைத்து = வரிசையாக வைத்து செம்பாகமாகிய = செவ்வையான. கவி பாடி = கவிகளைப் பாடி.

விலை இல் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள்
எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும்
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர

விலை இல் = விலை மதிப்பிட முடியாத. தமிழ்ச் சொற்கு = தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன் போல் உதாரிகள் = உன்னைப் போல சிறந்த கொடையாளிகள் எவர் என = யார் இருக்கின்றார்கள் என்று மெத்தக் கொண்டாடி = நிரம்பப் புகழ்ந்து வாழ்வு என்னும் = (தமது) வாழ்வே பெரிது என்னும் வெறி கொள் = தீவிர உணர்வைக் கொண்ட உலுத்தர்க்கு = உலோபிகளிடம். என் பாடு = என் வருத்தங்களை கூறிடும் = போய் முறையிடும். மிடி தீர = தரித்திர நிலை நீங்க.

மிக அருமைப் பட்டு = மிக்க அருமைப் பாடுடன் உன் பாத தாமரை = உனது பாத தாமரைகளை சரணம் என = புகலிடம் என்று பற்றும் பேதை = பற்றியுள்ள பேதையாகிய என் மீது குன்றாத வாழ்வையும் அருள்வாயே = குறையில்லாத வாழ்வையும் தந்து அருள்வாயாக.

இலகிய வெட்சி செம் தாமரை மார் புய
சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல்
இமய மகட்கு சந்தானமாகிய முருகோனே

இலகிய = விளங்கும் வெட்சி = வெட்சி பூவால் ஆகிய செந்தாம = சிவந்த மாலை அணிந்த. மார் புய = மார்பும் புயமும் உடையவனே சிலை நுதல் = வில்லைப் போன்ற புருவத்தையும் மைக்கண் = மை பூசிய. சிந்தூர = குங்குமப் பொட்டு அணிந்த  வாள் நுதல் = ஒளி வீசும் நெற்றியையும் இமய மகட்கு = இமயமலை பெற்ற மகளாகிய பார்வதிக்கு) சந்தானமாகிய = மைந்தனாக வந்த குழந்தையே.

இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன்
உதவும் ஒருத்திக்கும் சீல நாயக
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே

இளைய கொடிச்சி = இளையவளும், மலை நாட்டுப் பெண்ணுமாகிய வள்ளிக்கும் பாக சாதனன் = இந்திரன் உதவும் ஒருத்திக்கும் = பெற்ற ஒப்பற்ற தேவ சேனைக்கும். சீல நாயக = பரிசுத்த நாயகனே. எழிலி = மேகத்தின். எழில் பற்றும் = அழகைக் கொண்ட. காய மாதவன் = திரு மேனியை உடைய திருமாலின் மருகோனே = மருகனே.

அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை
திசை தொறும் முப்பத்து எண் காதம் வீசிய
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே

அலர் தரு புட்பத்து = மலர்கின்ற பூக்களில் உண்டாகும். வாசனை = நறு மணம். திசை தொறும் = (எட்டுத்) திசைகளிலும் முப்பத்து எண் காதம் வீசிய = முப்பத்து எட்டு மைல் வரை வீசிய அணி = அழகிய பொழிலுக்கு = நந்தவனங்களில். சஞ்சாரமாம் = சஞ்சரிக்கும் அளி = வண்டுகளின் இசையாலே = இசை ஒலியால்.

அழகிய சிக்கல் சிங்கார வேலவ
சமர் இடை மெத்த பொங்கு ஆரமாய் வரும்
அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே.

அழகிய = அழகு பெற்று விளங்கும் சிக்கல் = சிக்கல் என்னும் பதியில் வீற்றிருக்கும். சிங்கார வேலவ = சிங்கார வேலனே சமர் இடை = போரில் மெத்தப் பொங்கு = மிகவும் பொங்கி. ஆரமாய் வரும் = கொதிப்புடனே வரும் அசுரரை வெட்டி = அசுரர்களை வெட்டி சங்காரம் ஆடிய = அழித்த. பெருமாளே = பெருமாளே

சுருக்க உரை

புலவர்களை ஆதரிக்கும் கற்பகத் தருவே. எட்டுத் திக்குகளிலும் பரவிய புகழ் உடையவனே. சத்திய நிலையில் உனக்கு ஒப்பானவர் யாருமில்லை என்று நல்ல பொருள் கொண்ட சொற்களை அமைத்து, அருமையான பாடல்களைப் பாடி, தமிழை ஆதரிப்பதற்கு உன்னைப் போல்  கொடையாளிகள் யார் தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, உலோபிகளிடம் என் குறைகளை முறையிடும் தரித்திர நிலை நீங்க, உனது திருவடித் தாமரைகளைப் பற்றியுள்ள பேதையாகிய என்னிடம் அருள் வைத்து எனக்குப் பேரின்ப வாழ்வைத் தந்தளுக.

வெட்சி மாலை அணிந்த மார்பை உடையவனே, இமய மலைப் பயந்தருளிய பார்வதியின் மைந்தனே, மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளிக்கும், இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவசேனைக்கும் நாயகனே, எழில் மிக்க திருமேனி படைத்தத் திருமாலின் மருகனே, அழகு பெற்று விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் வீறிருக்கும் வேலனே, அசுரர்களை வெட்டி அழித்த பெருமாளே, எனக்குக் குன்றாத வாழ்வை அளித்து அருள்வாய்.

சிக்கல் முருக வேளின் திருப் பெயர் சிங்கார வேலர்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published