F

படிப்போர்

Friday 31 August 2012

25. காலனார்

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
        காலினார் தந்துடன்                                    கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
        கானமே பின்தொடர்ந்                                தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
        சூடுதோ ளுந்தடந்                                       திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
        தோகைமேல் கொண்டுமுன்                      வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
        தேவர்வா ழன்றுகந்                                    தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
        தாதிமா யன்றனன்                                      மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
        சாரலார் செந்திலம்                                     பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
        தாரைவே லுந்திடும்                                    பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை

காலனார் வெம் கொடும் தூதர் பாசம் கொ(ண்)டு என்
காலில் ஆர்தந்து உடன் கொ(ண்)டு போக

காலனார் = யமனுடைய வெம் கொடும் = மிகக் கொடுமையான தூதர்= தூதுவர்கள் பாசம் கொடு = பாசக் கயிற்றால் என் காலில் ஆர்தந்து = என் காலைக் கட்டி  உடன் கொ(ண்)டு போக = தம்முடன் கொண்டு போக காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்

சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும்
சூடு தோளும் தடம் திரு மார்பும்

காதல் ஆர் மைந்தரும் = அன்பு மிக்க பிள்ளைகளும்  தாயராரும் = தாய்மார்களும் சுடும் கானமே = சுடுகாட்டுக்கு பின் தொடர்ந்து = பின் தொடர்ந்து வந்து அலறா முன் = அலறி அழுது வருவதற்கு முன்பு சூலம் வாள் தண்டு = சூலம், வாள், தண்டாயுதம் செம் சேவல் = செவ்விய சேவல் கோதண்டமும் சூடு(ம்) = வில் இவைகளை ஏந்தியுள்ள. தோளும் = கைகளும் தடம் = அகன்ற திரு மார்பும் = அழகிய மார்பும் 

தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும்
தோகை மேல் கொண்டு முன் வரவேணும்

தூய தாள் தண்டையும் = தூய்மையான காலில் அணிந்துள்ள தண்டையும் காண = நான் காணும்படி ஆர்வம் செய்யும் = அன்பு கொண்டுள்ள தோகை மேல் = மயிலின் மீது. கொண்டு முன் வரவேணும் = ஏறி என் முன்னே நீ வந்தருள வேண்டும்

ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும்
தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்

ஆலகாலம் = ஆலகால விடத்தை பரன் = சிவபெருமான்
பாலதாக = பால் போல ஏற்றுக் கொள்ள அஞ்சிடும் = பயந்து நின்ற தேவர் வாழ = தேவர்கள் வாழும்படி அன்று உகந்து = அன்று மகிழ்ச்சியுடன் அமுது ஈயும் = அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து

ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த
ஆதி மாயன் தன் நல் மருகோனே

ஆரவாரம் செய்யும் = பேரொலி செய்யும் வேலை மேல் = கடல் மீது கண் வளர்ந்த = துயில் கொள்ளும் ஆதி மாயன் தன் = ஆதி மாயனாகிய திருமாலின் நல் மருகோனே = நல்ல மருகனே.

சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம்
சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே

சாலி = செந் நெல் (சாலி என்ற வகையான நெல் விளையும் வயலில்) சேர் = சேர்ந்த சங்கினம் = சங்கின் கூட்டங்களும் வாவி சூழ் = குளங்களில் மலர்ந்துள்ள பங்கயம் = தாமரைகளும் சாரல் ஆர் = பக்கங்களில் சார்ந்து  நிறைந்துள்ள   செந்தில் அம் பதி வாழ்வே திருச்செந்தூர் என்னும் அழகிய ஊரில் வாழ்பவனே.

தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம் பெறும்
தாரை வேல் உந்திடும் பெருமாளே.

தாவு = தாவி வந்த சூர் = சூரன் அஞ்சி = அஞ்சி முன் சாய = முன் சாய்ந்து அழிய. வேகம் பெறும் = வேகமும் தாரை வேல் = கூர்மையும் கொண்ட வேலை உந்திடும் பெருமாளே = செலுத்திய பெருமாளே.

சுருக்க உரை

கொடிய யம தூதர்கள் என் காலைக் கட்டிக் கொண்டு போக, மக்களும் தாய்மார்களும் என் பின்னால் சுடு காட்டுக்குப் பின் தொடர்ந்து வந்து அலறி அழுவதற்கு முன், உன்னுடைய சூலம், வாள், தண்டை, வில் இவைகளை ஏந்திய கரங்களுடன் மயில் மீது என் முன் வரவேண்டும்.

ஆலகால விடத்தைச் சிவபெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள, தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்துக் கடல் மேல் துயில் கொள்ளும் திருமாலின் மருகனே, சங்குகள் சூழ்ந்த குளங்களில் தாமரை மலர்கள் நிறைந்த திருச்செந்தூரில் வாழ்பவனே, சூரன் அழிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே, தோகை மேல் என் முன்னே வர வேண்டும்.  

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில்சுப்பிரமண்ய பராக்ரமம்என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில்சிருங்கிபேரி புரம்என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.* கங்கையை கடக்க குகன் உதவி புரிந்த கதை நாம் அறிவோம். ........

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே. எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடுஎனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.  - கி வா கட்டுரை [Dec2021]

” tag:

24.கமலமாதுடன்

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
        சொலவொ ணாதம டந்தையர் சந்தன
        களப சீதள கொங்கையில் அங்கையில்  இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
        விழியின் மோகித கந்தசு கந்தரு
        கரிய ஓதியில் இந்துமு கந்தனில்          மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
        தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
        அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின்     அருள்தானே
அறியு மாறுபெ ரும்படி அன்பினின்
        இனிய நாதசி லம்புபு லம்பிடும்
        அருண ஆடக கிண்கிணி தங்கிய         அடிதாராய்
 குமரி காளிப யங்கரி சங்கரி
        கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
        குடிலை யோகினி சண்டினி குண்டலி  எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
        வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
        குமர மூஷிக முந்திய ஐங்கர                 கணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
        அணிக ஜானன விம்பனொர் அம்புலி
        மவுலி யானுறு சிந்தையு கந்தருள்        இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
        இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
        மகிமை மாநகர் செந்திலில் வந்துறை  பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை

கமல மாதுடன் இந்திரையும் சரி
சொ(ல்)ல ஒணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்

கமல மாது உடன் = தாமரைப் பிராட்டியாகிய கலைமகளும் இந்திரை = இலக்குமியும் சரி சொல ஒணாத = ஒப்பு என்று சொல்ல முடியாத மடந்தையர் = வேசியர்களின் சந்தன = சந்தனம் பூசிய களப = கலவைச் சாந்து அணிந்த சீதள= குளிர்ந்த
கொங்கையில் அங்கையில் = தனங்களிலும் அங்கையிலும் இரு = இரண்டு போது ஏய் = வேளைகளிலும் பொருந்தியிருந்து

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்த சுகம் தரு
கரிய ஓதியில் இந்து முகம் தனில் மருளாதே

களவு நூல் தெரி = களவு நூல்களைக் கற்றறிந்த வஞ்சனை = வஞ்சகம் கொண்ட அஞ்சன = மை தீட்டிய விழியின் = கண்களிலும் மோகித = காம மயக்கத்தையும் கந்த சுகம் தரு = நறு மணச் சுகத்தையும் தருகின்ற கரிய = கரு நிறம் கொண்ட ஓதியில் = கூந்தலிலும் இந்து முகந்தனில் = சந்திரனை ஒத்த  முகத்திலும் மருளாதே = மருட்சி அடையாமல்.

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல்
தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே

அமலம் ஆகிய = மாசு அற்ற சிந்தை அடைந்து = மனதை அடைந்து அகல் = பரந்துள்ள தொலைவு இலாத = முடிவில்லாத
அறம் பொருள் இன்பமும் = அறம், பொருள், இன்ப நூல்களை அடைய ஓதி = முழுவதும் ஓதி உணர்ந்து= நன்கு கற்று உணர்ந்து
தணந்த பின் = (ஆசைகள்) அடங்கிய பின்னர் அருள் தானே = உனது திருவருள் உண்மையையே.

அறியும் ஆறு பெறும்படி அன்பினின்
இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்

அறியும் ஆறு பெறும்படி = நான் அறியவும் பெறவும் அன்பினின் = அன்புடனே இனிய நாத = இனிய ஒலியைத் தரும் சிலம்பு புலம்பிடும் = சிலம்பு ஒலிக்கின்ற அருண ஆடக = செம் பொன்னால் ஆகிய கிண்கிணி = சலங்கைகள் தங்கிய = அணிந்துள்ள அடி தாராய் = திருவடிகளைத் தந்து அருளுக.

குமரி காளி பயங்கரி சங்கரி
கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி

குமரி = என்றுமகலாத இளம் பருவத்தையுடைய கன்னிப்                                           பெண்ணும் காளி = கரிய நிறத்தையுடையவளும்  பயம் ஹரி = அடியவர் பயத்தை நீக்குபவளும் சங்கரி = ஆன்மாக்களுக்குச் சுகத்தை செய்பவளும் கவுரி = பொன்னிறத்தை உடையவளும் நீலி = நீல நிறத்தையுடையவளும் பரம்பரை = பெரிய பொருள்களுக்கெல்லாம் பெரிய பொருளாக வீற்றிருப்பவளும் அம்பிகை = உலகமாதாவும் குடிலை = சுத்தமாயையும் யோகினி = யோகினி என்னும் தெய்வமாக இருப்பவளும், சண்டினி பாவிகளுக்குக் கொடியவளாகத் திகழ்பவளும்,  குண்டலி = குண்டலி சக்தியும் எமது ஆயி =  எங்கள் தாயும்

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி
வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்

குறைவு இலாள் = ஒரு குறைவும் இல்லாதவள் உமை = உமா தேவியும் மந்தரி = சுவர்க்க லோகத்தை அருள்பவளும் அந்தரி = முடிவில்லாதவளும் வெகுவித = பல விதமான ஆகம சுந்தரி = சிவாமகங்களால் துதிக்கப்படும் கட்டழகு  உடையவளும் தந்து அருள்
= பெற்றருளிய குமர = குமரனே மூஷிகம் உந்திய = எலியை வாகனமாகக் கொண்டவனும் ஐங்கர கண ராயன் = ஐந்து கரங்களை உடையவனுமாகிய  கணபதி.

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி
அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே

மம = எனது விநாயகன் = விநாயக மூர்த்தி நஞ்சு உமிழ் = விடத்தைக் கக்குகின்ற கஞ்சுகி= பாம்பை அணி=அரையில் அணிந்துள்ள கஜானன விம்பன்= யானை முகத்தன் ஒர் = ஒப்பற்ற அம்புலி = பிறைச் சந்திரனை மவுலியான் உறு = முடியில் அணிந்தவன் (ஆகிய கணபதி). சிந்தை = மனம் உகந்து = மகிழ்ந்து அருள் இளையோனே = அருளும் இளையவனே.

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே.

வளரும் வாழையும் = வளர்கின்ற வாழை மரங்களும். மஞ்சளும், இஞ்சியும் = மஞ்சளும் இஞ்சியும் இடைவிடாது நெருங்கிய = இடைவெளியில்லாமல் நெருங்கி விளங்கும். மங்கல = மங்கலமும் மகிமை மா நகர் = பெரிய நகரமாகிய செந்திலில் வந்து உறை பெருமாளே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே                      

சுருக்க உரை

கலைமகள், திருமகள் இருவருக்கும் ஒப்பு என்று சொல்ல முடியாத அழகு வாய்ந்த விலை மாதர்களின், கலவைச் சாந்து அணிந்த கொங்கைகளிலும், கண்களிலும், கரிய கூந்தலாலும், சந்திரன் போன்ற முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், தூய மனதுடன் அறம், பொருள், இன்ப நூல்களை ஓதி, உணர்ந்து, பிறகு உனது திருவருள் உண்மையை அறிந்து கொள்ள, சிலம்புகள் அணிந்த உன் திருவடியைத் தந்து அருள வேண்டும்.

பல விதமான ஆகமங்களால் போற்றப்படுபவளும், பல வேறு நாமங்களால் அழைக்கப் படுபவளும் ஆகிய பார்வதி அருளிய குமரனே, எலியை வாகனமாக உடையவனும், அரையில் பாம்பை அணிந்தவனுமாகிய யானை முகத்தனனான கணபதி மனம் மகிழ்ந்தருளும் தம்பியே, வாழை, மஞ்சள், இஞ்சி எப்போதும் விளங்கும் திருச் செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடிகளைத் தாராய்.

விளக்கக் குறிப்புகள்

அ. குடிலை .....   பிரணவ மந்திரத்திற்கு உரியவளாய் இருத்தலின் உமா தேவிக்கு இப்பெயர் வந்தது.
ஆ. யோகினி..   (எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்) என்ற படி இறைவன் யோக    வடிவம் கொள்ளுங்கால் தானும் யோக வடிவம் கொண்டு ஆன்மாக்களுக்கு யோக
 ஞானத்தை உணர்த்துவதால் யோகினி என்ற பெயர் வந்தது.
இ. சிந்தை உகந்தருள் இளையோனே...    (ஆதரவா யடியவருக் கருள்சுரக்கு மைங்கரத்தோன் அன்பு கூர்ந்து    மாதவமே எனவழைத்துப் புயத்தணைக்கத் திருவுளத்து மகிழுங் கோவே) ---
 சிதம்பர சுவாமிகள் (திருப்போரூர் சந்நிதி முறை). 

Thursday 30 August 2012

23.கண்டுமொழி

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்தல்

***********************
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு
பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்

பண்டு வினை கொண்டு = பழவினை தாக்க உழன்று = திரிந்துவெந்து விழுகின்றல் = நான் வெந்து விழுவதை. கண்டு = பார்த்து  பங்கய பதங்கள் = உன் தாமரை போன்ற திருவடிகளை தந்து = கொடுத்து புகழ் ஓதும் = (உன்னுடைய) புகழை ஓதும்.

பண்புடைய சிந்தை அன்பர் தங்களில் உடன் கலந்து
பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்

பண்புடைய சிந்தை  = பண்பு கொண்ட மனம் உடைய. அன்பர் தங்களில் உடன் கலந்து = அடியார்களுடன் சேர்ந்து. பண்பு பெற = நான் நற் குணம் அடைய வேண்டி அஞ்சல், அஞ்சல் என = பயப்பட வேண்டாம் என்று கூறி வாராய் = வருவாயாக.

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இ(ஈ)ண்டு
வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி

வண்டு படுகின்ற = வண்டுகள் ஓசை செய்யும் தொங்கல் = மாலையை கொண்டு = பூண்டு உற நெருங்கி இண்டு = மிக நெருங்கி அழுத்தமான வம்பினை அடைந்து = (முலைக்) கச்சு பூண்டதான சந்தின் = சந்தனக் குழம்பில் மிக மூழ்கி = மிக முழுகி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை
வந்து அழகுடன் கலந்த மணி மார்பா

வஞ்சியை = வஞ்சிக் கெடி போன்ற வள்ளியை முனைந்த = வருத்துகின்ற கொங்கை மென் குற மடந்தை = கொங்கைகளை உடைய  மெல்லிய வள்ளியின் செம் கை = செவ்விய கைகளை
வந்து அழகுடன் = அவள் இருக்கும் வள்ளி மலைக்கு வந்து கலந்த மணி மார்பா = கலந்த அழகிய மார்பனே.

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே

திண் திறல் புனைந்த அண்டர் = திண்ணிய வலிமை கொண்ட
தேவர்கள் தங்கள் அபயங்கள் கண்டு = தம்மாட்டு அபயம் புகுவதைப் பார்த்து செம் சமர் புனைந்து = செவ்விய போர்க்கோலம் பூண்டு துங்க மயில் மீதே = பரிசுத்தமான மயில் மேல்

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து
செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

சென்று அசுரர் அஞ்ச = சென்று அசுரர்கள் பயப்படும்படி வென்று = வெற்றி பெற்று குன்றிடை = திருப்பரங்குன்றத்தில்  மணம் புணர்ந்து மணம் செய்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே = செந்தில் அமர்ந்த பெருமாளே. 
சுருக்க உரை

இனிக்கும் சொற்கள், யானைத் தந்தம் பேன்ற கொங்கைகள், மேகம் போன்ற கூந்தல் என்று உவமை கண்டு, மிக வருந்தி, விலை மாதர்கள் வசப்பட்டு, எந்நாளும் விதியின் பயனாய் நின்று, பண்டை விதியின் தாக்கம் இது என்று அறிந்து, நான் வெந்து விழுவதைக் கண்டு, தாமரை போன்ற உன் திருவடிகளின் புகழ் ஓதும் அடியார்களுடன் கலந்து, நானும் குணம் அடைவதற்குப் பயப்படாதே என்று வரவேண்டும்.

கச்சு அணந்த வள்ளியை அடைய, அவள் இருந்த மலைக்கு வந்து அவளுடன் கலந்த மணி மார்பனே. வலிமை உள்ள தேவர்கள் தம்மிடம் அபயம் புகுவதைக் கண்டு, போர்க்கோலம் பூண்டு, மயில் மீது வந்து, அசுர்களை அழித்து, வள்ளியைத் திருப்பரங்குன்றத்தில் மணம் புரிந்த பெருமாளே, அஞ்சேல் என்று வந்து அடியார்களுடன் சேர அருள் புரிய வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

சந்து = சந்தனம். வஞ்சியை முனிந்த =   கொடி போலும் இடையை வருத்துகின்ற. 