ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.
-திருச்செந்தூர்
பதம் பிரித்து உரை
ஏவினை நேர் விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
ஏவினை நேர் = அம்பை நிகர்க்கும் விழி மாதரை = கண்களை உடைய விலை மாதரை மேவிய = விரும்பும் ஏதனை = கேடனை மூடனை = முட்டாளாகிய என்னை நெறி பேணா = நல்லொழுக்கம் விரும்பாத.
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
ஈனனை = இழிந்தோனை வீணனை = வீணாகக் காலம் கழிப்பவனை ஏடு எழுதா = படிப்பு இல்லாத முழு ஏழையை= முழு ஏழையை மோழையை= மடையனை அகலா நீள் = விட்டு நீங்காத நீண்ட
மா வினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மை இலாதானை இகழாதே
மாவினை மூடிய = பெரிய வினை மூடியுள்ள நோய் பிணியாளனை = நோயும், பிணியும் கொண்டவனை வாய்மை இலாதனை = உண்மை இல்லாதவனை இகழாதே = இகழ்ந்து ஒதுக்காமல்.
மா மணி நூபுர சீதள தாள் தனி
வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
மா மணி நூபுரம் = சிறந்த மணியாலாகிய சிலம்பணிந்துள்ள
சீதள = குளிர்ந்த தாள் = (உன்) திருவடிகளை தனி வாழ்வு = முத்தி இன்பத்தை உற = நான் பெற ஈவது ஒரு நாளே= (எனக்குத்) தந்து உதவும் ஒரு நாளும் உண்டோ?
நாவலர் பாடிய நூல் இசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
நாவலர் = புலவர்கள். பாடிய = பாடியுள்ள. நூல் இசையால்
வரும் = நூல்களில் புகழப்பட்ட நாரதனார் புகல் = நாரத முனிவர் எடுத்துரைத்த குற மாதை = குறப்பெண்ணாகிய வள்ளியை.
நாடியே கான் இடை கூடிய சேவக
நாயக மா மயில் உடையோனே
நாடியே = நாடிச் சென்று கான் இடை = காட்டில் கூடிய சேவக = அவளைக் கூடிய வீரனே நாயக = நாயகனே மா மயில் உடையோனே = சிறந்த மயில் வாகனனே.
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
தேவி மநோமணி ஆயி பராபரை = தேவி, மனோமணி, ஆயி, பராபரை
{தேவி = ஒளி மயமானவளும், மநோமணி= மனத்திற்கு இசைந்த
மணியும்,ஆயி =
அகில
உலகங்களுக்கும் அன்னையும், பராபரை = பெரிய பொருளும் – வாரியார்
ஸ்வாமிகள்} தேன் மொழியாள் = (ஆகிய பார்வதி) தேன் போலும்
மொழியையுடையவள் தரு = பெற்ற சிறியோனே= இளையவனே.
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
சேண் உயர் = ஆகாயம் வரை உயர்ந்தசோலையின்
நீழலிலே திகழ் = சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலை வாய் = திருச்செந்தூரில். வரும் = எழுந்தருளியிருக்கும். பெருமாளே
= பெருமாளே.
சுருக்க உரை
அம்பு போன்ற கண்களை
உடைய விலை மாதரை விரும்பும் கேடனை, மூடனை, கல்வி இல்லாதவனை, பிணியால்
பீடிக்கப்பட்டவனை, இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற
பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ?
நாரதர் எடுத்துரைத்த
வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே, மயில் வாகனனே, பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே, உயர்ந்த சோலைகளிண் நிழலில் விளங்கும் சீரலைவாயில்
உறைகின்ற பெருமாளே, நான் வாழ்வுற உன் திருவடிகளை ஈவதும் ஒரு நாளே.
விளக்கக் குறிப்புகள்
அ. வாய்மையிலாதனை இகழாதே...
(மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி
இவனென
நினையாமல்)---திருப்புகழ் (ஆசாரவீனன்)
ஆ. வீணனை...
(உய்ந்திட
வீணாள் படாதருள் புரிவாயே)---திருப்புகழ் (கொம்பனையார்)

No comments:
Post a Comment
Your comments needs approval before being published