F

படிப்போர்

Tuesday, 26 May 2015

272. பழியுறு

272
திருவிடைக்கழி

உன கமல பதம் நாடி உருகி உள்ளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே என்பது பிரார்த்தனை
      
தனதனனத் தனதான தனதனனத் தனதான
       தனதனனத் தனதான              தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
   பகரும்வினைச் செயல்மாதர்               தருமாயப்
படுகுழிபுக் கினிதோறும் வழிதடவித் தெரியாது
   பழமைபிதற் றிடுலோக                     முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
   யொருபயனைத் தெளியாது             விளியாமுன்
உனகமலப் பதனாடி யுருகியுளத் தமுதூற
   உனதுதிருப் புகழோத                   அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
   திடுதிடெனப் பலபூதர்                       விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
   ஜெயஜெயெனக் கொதிவேலை          விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
   அடல்தருகெற் சிதநீல                      மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
   அதிபஇடைக் கழிமேவு                   பெருமாளே

பதம் பிரித்து உரை

பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான
பகரும் வினை செயல் மாதர் தரும் மாய

பழி உறு - பாவம், குற்றம் இவைகளுக்கு இடமான சட்டகமான - உடலாகிய குடிலை எடுத்து - குடிசையை எடுத்து இழிவான பகரும் - இழிவான சொற்களைச் சொல்லும் வினை - வினையைப் பெருக்கும் செயல் மாதர் - தொழிலைச் செய்யும் விலை மாதர்கள் தரும் - கொடுக்கின்ற மாய - மாயமான

படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது
பழமை பிதற்றிடு(ம்) லோக முழு மூடர்

படு குழி - படு குழியில் புக்கு - விழுந்து இனிதேறும் - நல்லபடியாகக் கரை ஏறும் வழி தடவி - வழி உண்டா எனத் தடவிப் பார்த்தும் தெரியாது - தெரியாமல் பழமை - பழங் கொள்கைகளையே பிதற்றிடு - பிதற்றுகின்ற லோக முழு மூடர் - உலகில் உள்ள முழு மூடர்கள்

உழலும் விருப்புடன் ஓது(ம்) பல சவலை கலை தேடி
ஒரு பயனை தெளியாது விளியா முன்

உழலும் - திரிந்து விருப்புடன் - ஆசையுடன் ஓதும் - ஓதுகின்ற பல சவலை - பல விதமான மனக் குழப்பத்தைத் தரும் கலை தேடி - நூல்களைத் தேடி ஒரு பயனை - ஒரு பயனையும் தெளியாது - தெரிந்து கொள்ள முடியாமல் விளியா முன் - இறந்து போவதற்கு முன்பாக

உன கமல பத(ம்) நாடி உருகி உ(ள்)ளத்து அமுது ஊற
உனது திருப்புகழ் ஓத அருள்வாயே

உன - உனது கமல பதம் நாடி - தாமரை போன்ற திருவடிகளை விரும்பி உருகி - மனம் உருகி உ(ள்)ளத்து அமுது ஊறி - உள்ளத்தில் அமுத ரசம் ஊற உனது - உன்னுடைய திருப்புகழ் ஓத - திருப் புகழை ஓதுவதற்கு அருள்வாயே - அருள்வாயாக

தெழி உவரி சலராசி மொகு மொகு என பெரு மேரு
திடு திடு என பல பூதர் விதமாக

தெழி - முழங்குகின்ற உவரி - உப்பு நீரைக் கொண்ட சலராசி - கடல் மொகு மொகு என - மொகு மொகு என்று கொந்தளிக்கவும் பெரு மேரு - பெரிய மேரு மலை திடு திடு என - திடு திடு என்று இடி பட்டு பொடியாகவும் பல பூதர் - பல விதமான பூத கணங்கள் விதமாக - விதம் விதமாக

திமி திமி என பொரு சூரன் நெறு நெறு என பல தேவர்
ஜெய ஜெய என கொதி வேலை விடுவோனே

திமி திமி என - திமி திமி எனக் களிப்புறவும் பொரு சூரன் - சண்டை செய்த சூரனாகிய (மாமரம்) நெறு நெறு என - நெறு நெறு என்று முறியவும் பல தேவர் - (இதைக் கண்ட) பல தேவர்களும் ஜெய ஜெய என - ஜெய ஜெய என்று போற்றவும் கொதி - கோபம் எழும் வேலை விடுவோனே - வேலாயுதத்தைச் செலுத்தியவனே

அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல
அடல் தரு கெற்சித நீல மயில் வீரா

அழகு தரித்திடு - அழகு கொண்டுள்ள நீப - கடப்ப மாலை அணிந்தவனே சரவண உற்பவ - சரவணப் படுகையில் உற்பவித்தவனே வேல - வேலனே அடல் தரு - வெற்றியைத் தருவதும் கெற்சித - முழங்கி ஒலிப்பதும் ஆன நீல மயில் வீரா - நீல மயில் வீரனே

அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை
அதிப இடைக்கழி மேவும் பெருமாளே

அருணை - திருவண்ணா மலை திருத்தணி - திருத்தணிகை நாக மலை - திருச்செங்கோடு பழனிப் பதி - பழனி நகர் கோடை - வல்லக் கோட்டை அதிப - (இத்தலங்களில் வாழும்) தலைவனே இடைக் கழி மேவும் பெருமாளே - திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே

திருஇடைகழி முருகன்
சுருக்க உரை

பாவங்களுக்குத் தக்க இடமான இந்தக் குடிலையாகிய உடலை எடுத்து, இழிவான சொற்களைச் சொல்லும் வினையைப் பெருக்கும் செயல்களை உள்ள விலை மாதர்கள் தரும் மாயமானப் படு குழியில் விழாமல், ஈடேறும் நல்ல வழி உண்டோ என்று தேடிப் பார்த்தும் தெரியாமல், பழைய கொள்கைகளையே பிதற்றுகின்ற உலகில் உள்ள மூடர்கள், திரிந்து, மனக் குழப்பம் தரும் நூல்கைளையே ஓதி, ஒரு பயனும் காணாது, இறந்து போவதற்கு முன், உன்னுடைய தாமரைத் திருவடிகளை விரும்பி, உன் திருப்புகழை ஓதுதற்கு அருள் செய்வாயாக
                         
கடல் கொந்தளிக்கவும், பெரிய மேரு மலை இடிந்துப் பொடி படவும், பூத கணங்கள் களிப்புறவும், போருக்கு வந்த சூரனாகிய மாமரம் முறியவும், தேவர்கள் ஜெய ஜெய என்று போற்றவும், கோபமாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே கடப்ப மாலை அணிந்தவனே சரவணப் படுகையில் தோன்றியவனே வேலனே வெற்றியைத் தரும் மயிலின் மேல் வரும் வீரனே அருணை, தணிகை, செங்கோடு, பழனி, வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே திருவிடைக்கழியில் மேவும் பெருமாளே உனது திருப்புகழை நான் ஓத அருள் செய்வாயாக

ஒப்புக   உளத்து அமுதூற உனது திருப்புகழ் ஓத  -  மாணிக்ககவாசகர் சென்னிபத்து திருவாசக பாடல் வரிகள்
காயத்துள் அமுது ஊற ஊற நீ
கண்டுகொள் என்று காட்டிய

சட்டகம் - உடல்

திருஇடைகழி
” tag:

271. படிபுனல்

271
திருவிடைக்கழி

             தனதனன தத்தனத் தனதனன தத்தனத் 
          தனதனன தத்தனத்               தனதான 

படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் 
   பவமுறைய வத்தைமுக்                     குணநீடு 
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் 
   பசிபடுநி ணச்சடக்                    குடில்பேணும் 
உடலது பொறுத்தறக் கடைபெறுபி றப்பினுக் 
  குணர்வுடைய சித்தமற்                  றடிநாயேன் 
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் 
  துனதுதம ரொக்கவைத்                   தருள்வாயே 
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் 
  கொடியபடர்பு யக்கரிக்                   கதிர்வேலா 
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் 
   குமரமகிழ் முத்தமிழ்ப்                   புலவோனே 
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் 
  தடலனுச வித்தகத்                     துறையோனே 
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் 
   தருதிருவி டைக்கழிப்                    பெருமாளே 

பதம் பிரித்து உரை 

படி புனல் நெருப்பு  அடல் பவனம் வெளி பொய் கரு 
பவம் உறை அவத்த முக்குண(ம்) நீடு 

படி = பூமி புனல் = நீர் நெருப்பு = தீ அடல் பவனம் = வலிமை கொண்ட வாயு வெளி = ஆகாயம் பொய் = பொய் கருப் பவம் உறை அவத்தை = கருவில் பிறப்பு கூடும் துன்பம் முக்குண(ம்) = சத்துவ, ராஜசம், தாமதம் ஆகிய முக்குணங்கள் நீடு = நெடியதாய்

பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் 
பசி படு நிண சட குடில் பேணும் 

பயில் பிணிகள் = கூடிவரும் நோய்கள் மச்சை = மூளை சுக்கிலம் = இந்திரியம் உதிரம் = இரத்தம் அத்தி = எலும்பு மெய்ப்பசி = உடலில் உண்டாகும் பசி நிண(ம்) = மாமிசம்  சடக் குடில் = (இவை கூடிய) அறிவில்லாத பொருளாகிய சிறு வீடாகப் போற்றப்படும்

உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு 
உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் 

உடல் அது = இந்த உடலை பொறுத்து = தாங்கி அறக் கடை பெறு = மிகக் கீழானதாய்ப் பெறப்பட்ட பிறப்பினுக்கு = இப்பிறப்பில் உணர்வுடைய = ஞானத்தோடு கூடிய சித்தம் அற்று = உள்ளம் இல்லாமல் போய் அடி நாயேன் = அடி நாயேனாகிய நான்

உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து 
உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே 

உழலும் அது = திரிகின்ற தன்மை கற்பு அல = நீதி அன்று கழல் இணை = (உனது) திருவடியிணையை எனக்கு அளித்து = எனக்குக் கொடுத்து உனது தமர் ஒக்க = உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்துடன் வைத்து = (என்னையும்) ஒரு சேர வைத்து அருள்வாயே = அருள் புரியவாயாக

கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன 
கொடி படர் புய கிரி கதிர் வேலா 

கொடிய ஒரு குக்குடக் கொடியவ = கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான கோழியைக் கொடியாக உடையவனே வடிவில் = அழகுள்ள புனக் கொடி படர் = தினைப் புனத்தில் (வள்ளியாகிய) கொடி படரும் புயக் கிரி = மலை போன்ற தோள்களை உடைய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே

குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் 
குமர மகிழ் முத்தமிழ் புலவோனே 

குமர = இளையோனே சமர சினக்கும் அரவு = போரில் மிகக் கோபிக்கும் பாம்பை அணி = தரித்த அத்தன் = ஐயன் சிவபெருமானுடைய மெய்க் குமர = மெய்ப் புதல்வனே மகிழ் = (யாவரும்) மகிழும் முத்தமிழ்ப் புலவோனே = முத்தமிழிலும் வல்ல  புலவனே

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த 
அடல் அனுச வித்தக துறையோனே 

தட விகட = விசேடமான அழகிய மத்தகத்து = மத்தகத்தோடு தட = பெரிய வரையர் = மலையை ஒத்தவரான கணபதியின் அத்தர் = தந்தைக்கு அத்த = குருவே அடல் அனுச = (கணபதியின்) வலிமை வாய்ந்த தம்பியே வித்தகத்து உறைவோனே = ஞான நிலையில் உறைபவனே

தரு மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியை 
தரு திருவிடைக்கழி பெருமாளே 

தரு மருவு = (பல) மரங்கள் பொருந்தி விளங்கும் திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக்கழி என்னும் பதியில் வீற்றிருப்பவனே எத்தலத்தரும் = எந்தப் பூமியில் உள்ளவர்களும் மருவ = தன்னிடம் அடைந்தால் முத்தியைத தரு = முத்தியைத் தருகின்ற (பெருமாளே)

சுருக்க உரை 

மண், நீர், தீ, வலிமையான காற்று, ஆகாயம் இவைகளைக் கூடியதாய், கருவில் பிறப்பைக் கூடும் துன்பமும்முக்குணங்களும் நெடிதாய்க்கூடி வரும் நோய்கள், மூளை, எலும்பு, இரத்தம், மாமிசம் இவைகள் கூடிய குடிலாகிய உடலைத் தாங்கி, மிகக் கீழானதான பிறப்பை அடைந்துஞானத்தோடு கூடிய அறிவில்லாமல் நான் திரிவது நீதி
அன்று என்னை உன் அடியாருடன் சேர்த்து அருள்
புரிய வேண்டுகிறேன் 
ஒப்பற்ற கோழிக் கொடியை உடையவனே அழகிய தினைப்  புனத்து வள்ளியாகிய கொடி படரும் புய மலைகளை  உடையவனே பெரிய மத்தகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவ பெருமானின் குருவே கணபதியின் தம்பியே ஞான நிலையில் உறைபவனே மரங்கள் நிறைந்த திருவிடைக் கழியில் வீற்றிருக்கும் பெருமாளே எந்தப் பூமியில் இருப்போரும் தன்னிடம் அடைக்கலம்  புகுந்தால்
முத்தி அளிப்பவனே உன் அடியார்களுடன் என்னைச் சேர்ப்பாயாக 
 
விளக்கக் குறிப்புகள் 

அனுசன் ~ அனுஜன் - தம்பி, இளையவன்

1 முத்தமிழ்ப் புலவோனே 

மதித்த முத்தமிழ்ப் பெரியோனே                      நினைத்ததெத்தனை 
தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே                       சமயபத்தி 
மாலை மார்ப நூலறி புலவ               நக்கீரர், திருமுறுகாற்றுப்படை
பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும                    கல்லாடம்   

2 கொடிய ஒரு குக்குடக் கொடி 
கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ, தருமருவு தருமருவ என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன
                                                வசுசெங்கல்வராய பிள்ளை

திருவிடைக்கழி ஸ்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் ஸ்தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.   குரா மரம் ஸ்தல்விருக்ஷ்சம் திருவிடைகழி. தேவயானை மட்டும் இருகிறார் தனிசன்னதில்.” tag:
271
திருவிடைக்கழி

             தனதனன தத்தனத் தனதனன தத்தனத் 
          தனதனன தத்தனத்               தனதான 

படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் 
   பவமுறைய வத்தைமுக்                     குணநீடு 
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் 
   பசிபடுநி ணச்சடக்                    குடில்பேணும் 
உடலது பொறுத்தறக் கடைபெறுபி றப்பினுக் 
  குணர்வுடைய சித்தமற்                  றடிநாயேன் 
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் 
  துனதுதம ரொக்கவைத்                   தருள்வாயே 
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் 
  கொடியபடர்பு யக்கரிக்                   கதிர்வேலா 
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் 
   குமரமகிழ் முத்தமிழ்ப்                   புலவோனே 
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் 
  தடலனுச வித்தகத்                     துறையோனே 
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் 
   தருதிருவி டைக்கழிப்                    பெருமாளே 

பதம் பிரித்து உரை 

படி புனல் நெருப்பு  அடல் பவனம் வெளி பொய் கரு 
பவம் உறை அவத்த முக்குண(ம்) நீடு 

படி = பூமி புனல் = நீர் நெருப்பு = தீ அடல் பவனம் = வலிமை கொண்ட வாயு வெளி = ஆகாயம் பொய் = பொய் கருப் பவம் உறை அவத்தை = கருவில் பிறப்பு கூடும் துன்பம் முக்குண(ம்) = சத்துவ, ராஜசம், தாமதம் ஆகிய முக்குணங்கள் நீடு = நெடியதாய்

பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் 
பசி படு நிண சட குடில் பேணும் 

பயில் பிணிகள் = கூடிவரும் நோய்கள் மச்சை = மூளை சுக்கிலம் = இந்திரியம் உதிரம் = இரத்தம் அத்தி = எலும்பு மெய்ப்பசி = உடலில் உண்டாகும் பசி நிண(ம்) = மாமிசம்  சடக் குடில் = (இவை கூடிய) அறிவில்லாத பொருளாகிய சிறு வீடாகப் போற்றப்படும்

உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு 
உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் 

உடல் அது = இந்த உடலை பொறுத்து = தாங்கி அறக் கடை பெறு = மிகக் கீழானதாய்ப் பெறப்பட்ட பிறப்பினுக்கு = இப்பிறப்பில் உணர்வுடைய = ஞானத்தோடு கூடிய சித்தம் அற்று = உள்ளம் இல்லாமல் போய் அடி நாயேன் = அடி நாயேனாகிய நான்

உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து 
உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே 

உழலும் அது = திரிகின்ற தன்மை கற்பு அல = நீதி அன்று கழல் இணை = (உனது) திருவடியிணையை எனக்கு அளித்து = எனக்குக் கொடுத்து உனது தமர் ஒக்க = உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்துடன் வைத்து = (என்னையும்) ஒரு சேர வைத்து அருள்வாயே = அருள் புரியவாயாக

கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன 
கொடி படர் புய கிரி கதிர் வேலா 

கொடிய ஒரு குக்குடக் கொடியவ = கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான கோழியைக் கொடியாக உடையவனே வடிவில் = அழகுள்ள புனக் கொடி படர் = தினைப் புனத்தில் (வள்ளியாகிய) கொடி படரும் புயக் கிரி = மலை போன்ற தோள்களை உடைய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே

குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் 
குமர மகிழ் முத்தமிழ் புலவோனே 

குமர = இளையோனே சமர சினக்கும் அரவு = போரில் மிகக் கோபிக்கும் பாம்பை அணி = தரித்த அத்தன் = ஐயன் சிவபெருமானுடைய மெய்க் குமர = மெய்ப் புதல்வனே மகிழ் = (யாவரும்) மகிழும் முத்தமிழ்ப் புலவோனே = முத்தமிழிலும் வல்ல  புலவனே

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த 
அடல் அனுச வித்தக துறையோனே 

தட விகட = விசேடமான அழகிய மத்தகத்து = மத்தகத்தோடு தட = பெரிய வரையர் = மலையை ஒத்தவரான கணபதியின் அத்தர் = தந்தைக்கு அத்த = குருவே அடல் அனுச = (கணபதியின்) வலிமை வாய்ந்த தம்பியே வித்தகத்து உறைவோனே = ஞான நிலையில் உறைபவனே

தரு மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியை 
தரு திருவிடைக்கழி பெருமாளே 

தரு மருவு = (பல) மரங்கள் பொருந்தி விளங்கும் திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக்கழி என்னும் பதியில் வீற்றிருப்பவனே எத்தலத்தரும் = எந்தப் பூமியில் உள்ளவர்களும் மருவ = தன்னிடம் அடைந்தால் முத்தியைத தரு = முத்தியைத் தருகின்ற (பெருமாளே)

சுருக்க உரை 

மண், நீர், தீ, வலிமையான காற்று, ஆகாயம் இவைகளைக் கூடியதாய், கருவில் பிறப்பைக் கூடும் துன்பமும்முக்குணங்களும் நெடிதாய்க்கூடி வரும் நோய்கள், மூளை, எலும்பு, இரத்தம், மாமிசம் இவைகள் கூடிய குடிலாகிய உடலைத் தாங்கி, மிகக் கீழானதான பிறப்பை அடைந்துஞானத்தோடு கூடிய அறிவில்லாமல் நான் திரிவது நீதி
அன்று என்னை உன் அடியாருடன் சேர்த்து அருள்
புரிய வேண்டுகிறேன் 
ஒப்பற்ற கோழிக் கொடியை உடையவனே அழகிய தினைப்  புனத்து வள்ளியாகிய கொடி படரும் புய மலைகளை  உடையவனே பெரிய மத்தகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவ பெருமானின் குருவே கணபதியின் தம்பியே ஞான நிலையில் உறைபவனே மரங்கள் நிறைந்த திருவிடைக் கழியில் வீற்றிருக்கும் பெருமாளே எந்தப் பூமியில் இருப்போரும் தன்னிடம் அடைக்கலம்  புகுந்தால்
முத்தி அளிப்பவனே உன் அடியார்களுடன் என்னைச் சேர்ப்பாயாக 
 
விளக்கக் குறிப்புகள் 

அனுசன் ~ அனுஜன் - தம்பி, இளையவன்

1 முத்தமிழ்ப் புலவோனே 

மதித்த முத்தமிழ்ப் பெரியோனே                      நினைத்ததெத்தனை 
தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே                       சமயபத்தி 
மாலை மார்ப நூலறி புலவ               நக்கீரர், திருமுறுகாற்றுப்படை
பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும                    கல்லாடம்   

2 கொடிய ஒரு குக்குடக் கொடி 
கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ, தருமருவு தருமருவ என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன
                                                வசுசெங்கல்வராய பிள்ளை

திருவிடைக்கழி ஸ்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் ஸ்தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.   குரா மரம் ஸ்தல்விருக்ஷ்சம் திருவிடைகழி. தேவயானை மட்டும் இருகிறார் தனிசன்னதில்.