F

படிப்போர்

Monday 29 December 2014

270. பகருமுத்தமிழ்

270
திருவிடைக்கழி
                                  (திருக்கடவூருக்கு அருகில் உள்ளது)

முருகன் கால் பதித்து நடந்த இடங்களில் இது ஒன்று திருகுரா மரத்தடியில்குமார சிவமாக அருள்பொழியும் ஸ்தலம் இஙகுள்ள கோயிலில் எல்லா மூர்ததங்களுமே சுப்பிரமணிய சொரூபமாக விளங்குகிறார்கள்

அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் இப்பாடலில்.

தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத்                       தனதான

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்    
    பயனு மெப்படிப்                         பலவாழ்வும்  
பழைய முத்தியிற் பதமு  நட்புறப்   
   பரவு கற்பகத்                              தருவாழ்வும்   
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்   
   பொலியும் அற்புதப்                    பெருவாழ்வும்   
புலன கற்றிடப் பலவி தத்தினைப்   
   புகழ்ப லத்தினைத்                         தரவேணும்   
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்   
   சரவ ணத்தினிற்                        பயில்வோனே   
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்   
    தழுவு பொற்புயத்                          திருமார்பா   
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்   
   திறல யிற்சுடர்க்                              குமரேசா   
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்   
   றிருவி டைக்கழிப்                         பெருமாளே

பதம் பிரித்து உரை

பகரு(ம்) முத்தமிழ் பொருளு(ம்) மெய் தவ   
பயனும் எப்படி பல வாழ்வும்
பகரும் = சொல்லப்படுகின்ற முத்தமிழ் பொருளும் = முத்தமிழ் நூல்களின் பொருளையும் மெய்த்தவப்பயனும் =  உண்மைத் தவத்தால் பெறப்படும் பயனையும் எப்படிப் = எத்தன்மையான பல வாழ்வும் = பல வகையான வாழ்வையும்

பழைய முத்தியில் பதமு(ம்) நட்பு உற   
பரவு(ம்) கற்பக தரு வாழ்வும்

பழைய முத்தியில் பதமும் = பழைமையாய் வரும் முத்திச் செல்வ நிலையையும் நட்பு உற = யாவரும் நண்பு வைத்து பரவும் =  போற்றும் கற்பகத் தரு வாழ்வும் = கற்பக மர தேவலோக வாழ்வையும்

புகரில் புத்தி உற்று அரசு பெற்று உற   
பொலியும் அற்புத பெரு வாழ்வும்

புகர் இல் = குற்றம் இல்லாத புத்தியுற்ற = புத்தியுடன் அரசு பெற்று உற = அரச வாழ்வைப் பெற்று பொலியும் = விளங்கும் அற்புதப் பெரு வாழ்வும் = அற்புதமான சிறந்த வாழ்வையும்

புலன் அகற்றிட பல விதத்தினை   
புகழ் பலத்தினை தர வேணும்

புலன் அகற்றிட = ஐம்புலன்களின் சேட்டைகள் நீங்கப் பெற பல விதத்தினை = பல வகையாலும் புகழ் = புகழும் பலத்தினை = திடத்தினை தர வேணும் = தந்து அருள வேண்டும்

தகரில் அற்ற கைத்தலம் விட பிணை   
சரவணத்தினில் பயில்வோனே   

தகரில் = (தக்க யாகத்தில் நடந்த பூசலில்) தாக்கப்பட்டு அற்ற கைத்தலம் = அறுந்துப் போய்( மீண்டும் வளர்ந்த) கைகள் விட = (பொறிகளின் சூடு தாங்காது (கங்கையில்) விட்டுவிட  பிணை = சேர்ந்த சரவணத்தினில் = சரவண மடுவில் பயில்வோனே = பொருந்தி இருந்தவனே

{தக்க்ஷ  யாகத்தில் வீரபத்திரரால் அக்கினி பகவான் கைகளை இழந்தார். இழந்தக் கைளை மீண்டும் பெற்றார். அந்தக்  கைகளினால் சிவனின் நெற்றிக்கண்களிளிருந்து வெளிவந்தத் தீப்பொறிகளை சரணவ பொய்கையில் இட்டார்}

தனி வனத்தினில் புன மறத்தியை
தழுவு பொன் புய திரு மார்பா

தனி வனத்தினில் = தனியாக வள்ளி மலைக் காட்டில் புனமறத்தியை = தினைப் புனம் காத்திருந்த வேடப் பெண்ணை தழுவு = அணைகின்ற பொன் = அழகிய புயத் திருமார்பா = தோள்களையும், மார்பையும் உடையவனே

சிகர வெற்பினை பகிரும் வித்தக   
திறல் அயில் சுடர் கதிர் குமரேசா

சிகர வெற்பினை = சிகரங்களைக் கொண்ட கிரௌஞ்ச மலையை பகிரும் = பிளந்த வித்தகத் திறல் = ஞானத்தையும் வெற்றியையும் கொண்ட அயில் சுடர்க் குமரேசா = ஒளி வீசும் வேலாயுதத்தை உடைய குமரேசா

செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன்   
திருவிடைக்கழி பெருமாளே

செழு மலர்ப் பொழில் = செழுவிய பூஞ்சோலையில் குரவம் உற்ற = குரா மரங்கள் உள்ள பொன் = அழகிய திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக் கழி என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

முத்தமிழ் நூல்களின் பொருளையும், பல வகையான வாழ்வையும், தவத்தால் பெறப்படும் பயனையும், முத்தி செல்வ நிலையையும் யாவரும் நண்பு வைத்துப் போற்றும் கற்பகத் தரு வாழ்க்கையையும், குற்றமற்ற அரச வாழ்க்கையையும், அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலன்களின் சேட்டைகள் நீங்கும்படி, அறிவின் பலத்தையும், நாவின் வன்மையையும் தந்தருள வேண்டும் 

தக்க்ஷ யாகத்தில் தகர்க்கப்பட்டு அறுந்த போய் மீண்டும் பெற்ற கைகளைக் கொண்ட  அக்கினி தேவனின் கைகள் தாங்காது கங்கையில் விட்டுவிட, சரவண மடுவில் இருந்தவனே, வள்ளி மலைக் காட்டில் தினைப்புனம் காத்த வள்ளியைத் தழுவிய மார்பை உடையவனே  கிரௌஞ்ச மலையைப் பிளந்து, ஞானத்தையும் வெற்றியையும் கொண்ட ஒளி வீசும் வேலாயுதத்தை உடைய குமரேசா, குரா மரங்கள் நிறைந்த திருவிடைக் கழிப் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்

1 தகரில் அற்ற கைத்தலம்  
சிவபிரானுக்கு உகந்த மரியதை தராததினால் தக்க்ஷன் யாகம் தடைப் பெற்றது. அதில் கலந்து கொண்ட பல தேவர்கள் தண்டிக்கப்பெற்றனர் வீரபத்திரரால். அதில் கைகளை இழந்தான் அக்கினி பகவான். சிவனின் அருளால் கைகளை மீண்டும் பெற்றான். “அற்ற கைதலம்” என்பது அறுபட்டு மூண்டும் கரம் பெற்ற அக்கினி பகவானை குறிக்கும்.  

ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை   
வீழ நன் பாரதியு மூக்கு நழவிடவந்த மாயன்
திருப்புகழ், மாகசஞ்சார   

2 குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி
திருக்குரா நிழற் கீழ் முருகன் என்பது திருவிடைக்கழி முருகனையே குறிக்கும்   

கொந்துவார் குர வடியினும் அடியவர்
திருப்புகழ், கொந்துவார்

சிவபெருமானே முருகனைக் குறித்து பார்வதியிடம் சிலாகிப்பதாகச் சொல்கிறது கந்தபுராணம்:

‘‘நமது சக்தி ஆறுமுகன்’’ என்று எடுத்துச் சொல்லி, ‘‘ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும், போற்றினர்க் கருளவல்லான்’’ என்று உறுதியளிக்கிறார்.

 முருகப் பெருமான் இவ்வாறு சிவனால் அருளப்பெற்றவன் என்பதையும் சிவ ஸ்வரூபமே அவன் என்பதையும் உணர்த்துகிற திருத்தலம் திருவிடைக்கழி.

சூரபத்மனின் மகனான இரண்யாசுரனை திருவிடைக்கழியில்தான் சம்ஹாரம் செய்தான் முருகன். அந்த சம்ஹார தோஷம் நீங்குவதற்காக, இத்தலத்திலுள்ள குராமரத்தின் நிழலில் சிவபெருமானுக்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். சிவபெருமானும் அவனுடைய தோஷத்தை நீக்கி ஆட்கொண்டதோடு, அவ்விடத்தில் முருகன் தன்னுடைய ஸ்வரூபத்தையே பெற்று விளங்கும்படிச் செய்தாராம்! சிவஸ்வரூபமாக முருகனே இருக்கையில் தமக்கு அங்கு வேலை இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம்!

 அதனால்தான் இந்த ஊரின் முருகன் கோயில் சிவாலய அமைப்பிலேயே இருக்கிறது. பிராகார அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தால் சோமாஸ்கந்தமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகனே இருக்கிறார்! நடராஜர் சன்னிதி இருக்க வேண்டிய இடத்தில் _ சபா மண்டபத்தில் _ குமரப் பெருமான் இடது கையில் வில்லும் வலக் கரத்தில் வேலும் ஏந்தி நிற்கிறான்!

இத்தலத்தில் திருக்குராவடி நிழலில் சிவலிங்கத்தை பூஜித்தபடி காணக்கிடைக்கிறான் முருகன். சம்ஹாரமூர்த்தியாயிருந்தபோது அணிந்த கடப்ப மாலையைக் களைந்து, குரா மலர்களாலான மாலையை முருகன் அணிந்த தலம் இது (கடப்ப மாலையை இனி விட வரவேணும்)

பிரதான மூர்த்தியாக கருவறையில் குமார சிவமாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் பாலசுப்ரமணியன். அவனுக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவிலும் பின் புறத்தில் லிங்க உருவமாகவும் பாபநாசப் பெருமான் என்ற பெயருடன் சிவபெருமான் கோலோச்சுகிறார்!

மகிழாரண்யம், மகிழ்வளங்குடி என்ற மங்களமான பெயர்களும் திருவிடைக்கழிக்கு உண்டு. நாகதலம் என்பது மற்றும் ஒரு பெயர்! சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற குராப்பள்ளி என்ற ஊர் இவ்வூர்தான். – தலம் தோறும் தமிழ்க் கடவுள், குருஜி ராகவன்

” tag:

Sunday 17 August 2014

269. குசமாகி

269
திருவான்மியூர்

தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன             தனதான

குசமாகி யாருமுலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு                    குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண                      மிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு                 புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவா யிறாதவகை
     பொலிவான பாதமல                   ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்போத மானபர                    முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள்                     குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில்                       அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு                   பெருமாளே

பதம் பிரித்து உரை

நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு
நிகழ் போதமான பர முருகோனே

நிச = மெய்யான நாரணாதி = நாராயண மூர்த்தி என்னும் தலைவனதுதிரு = அழகிய மருகா = மருகனே (சத்ய நாராயணா) உலாசம் மிகு = உள்ளக் களிப்பு மிகுந்து நிகழ் = உண்டாகும் போதமான = அறிவு ரூபமான பர முருகோனே = மேலான முருகனே

நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு
நிபுணா நிசாசரர்கள் குலகாலா

நிதி = செல்வம் போன்ற ஞான போதம் = சிறந்த ஞானோபதேசத்தை அரன் = சிவபெருமானுடைய இரு காதிலே உதவும் = இரண்டு காதுகளிலேயும் உபதேசித்து அருளிய நிபுண = சாமர்த்திய சாலியே நிசா சரர்கள் = இருளில் சஞ்சரிப்பவர்களாகிய அசுரர்குலகாலா = குலத்துக்கு யமன் போன்றவனே

திசை மா முக ஆழி அரி மகவான் முனோர்கள் பணி
சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர்

திசை மா முகன் = நான்கு திசைகளை நோக்கும் நான்முகன் ஆழி அரி = சக்கரத்தை உடைய ( ஆழியை ஏந்தி தேரார்களை அடக்கும்) திருமால் மகவான் = இந்திரன் முனோர்கள் = முதலியவர்கள் பணி = வணங்கும் சிவ நாதர் = சிவ மூர்த்தி ஆலம் = விடத்தை அயில் = உண்ட அமுதேசர் = அமுதத்தை ஒத்த பெருமானுடைய

திகழ் பால மாகம் உற மணி மாளி(கை) மாடம் உயர்
திருவான்மியூர் மருவு பெருமாளே

திகழ் பால = விளக்கமுற்ற குழந்தையே மாகம் உற = ஆகாயத்தை அளாவும்படி மணி = அழகிய மாளி(கை) = மாளிகைகள் மாடம் = மாடங்கள் உயர் = உயர்ந்துள்ள திருவான்மியூர் மருவு = திருவான்மியூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே

குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை
குடிலான ஆல் வயிறு குழை ஊடே

குசமாகி ஆரும் மலை =  மலை போல் பருத்த மா பெரும் தனங்களும் மரை  மா  நுண் நூலின்  இடை =  தாமரையின் அழகிய நுண்மை நூல் போல் நுணுகிய இடையும் குடிலான ஆல்  வயிறு = ஜீவன் தங்கும் அல்ப இருப்பிடமான ஆலிலைப் போன்ற வயிறும்,

குறி போகு மீன விழி மதி மா முக ஆரு மலர்
குழல் கார் அதான குணம் இலி மாதர்

குழை  ஊடே குறி  போகு மீன விழி =  செவி அணியான குழையின் இடுவிடம் குறித்து செல்லும் கயல் மீன் போன்ற கண்களும் மதி  மா  முக = நிறை மயி போன்ற முகமும் ஆரும் மலர் = நிறைந்த மலர் கார் அதான = மேகம் போன்ற குழல் = கூந்தல் (இவைகளைக் கொண்ட)குணம் இலி மாதர் = நற்குணம் இல்லாத விலை மாதர்களின்

புச ஆசையால் மனது உனை நாடிடாத படி
புலையேன் உலாவி மிகு புணர்வாகி

புச ஆசையால் = தோள் மீது உள்ள ஆசையினால் மனது = என்னுடைய மனம் உனை நாடிடாதபடி = உன்னை நாடாதபடி புலையேன் = இழிந்தவனாகிய நான் உலாவி = அங்கும் இங்கும் உலாவித் திரிந்து மிகு புணர்வாகி = (அத்தகைய வழிகளில் ) சேர்க்கை உடையவனாகி

புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை
பொலிவான பாத மலர் அருள்வாயே

புகழான பூமி மிசை = புகழ் பெற்ற இந்த பூவுலகிலே மடிவாய் = அழிவு உற்றவனாக இறாத வகை = முடிந்து போகாத வண்ணம் பொலிவான = ஒளி பொருந்திய பாத மலர் அருள்வாயே = உனது திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக
                                                                                                                                                               
நடராஜன் அளிக்கும் விரிவுரை 

நாரம் =   நீர் அதன் நிறம் உற்றார்  அதனால் திருமால் நாரணர்  என்னும் பெயர் பெற்றார் மூல காரண முதல்வரில் ஒருவராய் ஆதி நாரணர் என ஆனார் அசத்தியத்தை அழித்து நீடித்த சத்தியம் நிலை நிற்க அடிக்கடி அவதரிப்பவர் ஆதலின நிச நாரண ஆதி என நின்றார் பெருமித நிலையினரான இவர் பெற்ற மகளிர் இருவர் இவர்கள் வாழ்விக்கும் அன்பின் வடிவினர் தவம் நிறைந்து பிரம்மம் வளர்த்த தாய் மாமன் தந்த மகளிர் இருவரை மணந்தவனே என்பார் மருகா என்றார் திருமருக என்பதால் நாரணர் திருமகள் இருவரின் நலம் சிறந்த மருகனே எனவும் கூற இடமுண்டு

உள்ளத்தில் நிறையும் இன்பக் கிளர்ச்சியை உல்லாசம் என்பர் - உல்லாச நிராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ அலையோ - எனும் கந்தர் அனுபூதியும் எண்ணிக் கொள்வது நலம் தரும் இதன் படி அமைதியுடன் ஆய்ந்து சிந்திக்கும் அறிவு ஞானம் எனப் பெறும் ஐயம், மயக்கம் அறியாமை இன்றி தேர்ந்த அதனை தெளிந்து நிற்றல் போதம் எனப்பெறும்   எனவே ஞான போதம் என்பது தேர்ந்து தெளிதல் எனும் நியதியான பொருளில் நின்றது

நீடித்த ஞான போதத்தில் கிடைப்பது நிதி அந்நிதியே பிரணவப் பெரும் செல்வம்  மும்மல கண்டன முதல்வர் அரர் எனும் பேர் பெறுவர் அப்பெருமான் இரு செவியில் ஞான போத நிதி எனும் பிரணவப் பொருளை ஓதிய நிபுணன் அந்த ஓம் வடிவினன் நிதி  ஞான போதம்  அரன்  இருகாதிலே  உதவு நிபுணா  என்பதை ஊன்றி உணர்ந்தால் உள்ளம் உருகும்

அசுர காலன் -  பகலை மறந்தனர் இரவை நினைந்தனர்  இருண்ட மேனியர் , இருண்ட மனத்தர் இருளில் நடமாடினார் பிறர் உறங்கும் நேரத்தில் கொள்ளை அடித்தனர் கோதையர் பலரை நோதல் செய்தனர் அமரரை அடர்த்தனர் நல் தவ முனிவரை நைய வைத்தனர் ஐயோ முருகா,   ஐயோ குமரா என்று அலறியது உலகம்
எம்மான் எழுந்தான் வேலை ஏவினான் ஞான சக்தி அகில உலகமும் அளாவி விரைந்தது அதன் மூலம் அசுர உணர்வு அழிந்தது   இது ஒரு காலம்

அமைதிஉணர்வு எனும் இதய உணர்வு எவரிடமும் இருக்கிறது பாவ சிந்தனையை படபடத்து எழுப்பி அந்த அருமை ஒளியை அணைத்து விடுவர் அதன் பின் ஆகாமிய வினையை அளவிறந்து எழுப்புவர் இதனால் பீடு அழியும் நோதல் பிறக்கும் இடர் மிகுந்த நிலையில் குமர குமரா,   முருக முருகா என்று குமுறுவர் பக்த கோடிகள் அந்நிலையிலும் அம்மான் சன்னதி ஞான சக்தி அளவளாவி வரும் இடர்பாடு ஒழியும் இன்பம் உதிக்கும் இப்படி அதிகரிக்கும் அசுர உணர்வை அழிப்பவனை நிசாசரர் குல காலா என்னும் அருமையே அருமை

வழிபட்டோர் - திசைமாமுக ஆழிஅரி மகவான் முனோர்கள்   பணி  சிவநாதர்  எனும் வரியில் பிரமன் திருமால், இந்திரன் முதலானோர் வழிபட்ட வரலாறுகள் இருக்கின்றன முனோர்கள் =  முதலினோர் இம்மிகைச் சொல்லால் ஒரு ரட்சசுசந்திரன்சூரியன்காமதேனு, எமன் , பிருங்கி, வான்மீகர் முதலானோர் இத்தலத்தில் வழிபட்டதும் எண்ணப்படும்

பேறு தரும் பெருமான் -   காலன் போல் எழுந்த ஆலம் அயின்ற அமுதேசர் திரு முன், அந்த விட ஆற்றல் முடங்கி அடங்கியது பால குமாரனைப் பார்ப்பார் அமுதேசரை அரிய அத்திருவுருவில் அறிந்து மகிழ்வார்  திருமருகா, உல்லாச, முருகோனே, நிபுணா, நிசாசரர் குலகாலா, திகழ் பாலா, திருவான்மியூர் பெருமாளே,

தையலர் தம்  தனம் கண்டேன், இடை கண்டேன், வயிறு கண்டேன், கண்கள் கண்டேன் , முகம் கண்டேன் கூந்தல் கண்டேன், அவர்களைத் தழுவும் ஆசை கொண்டேன்  இதனால் தெய்வமே, மா பெரும் உனை மறந்தேன் அல்ப அறிவு உடையவனாய் உலகில் அலைந்து திரிந்தேன்  புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே என்று எண்ணிய விண்ணவர் வந்து வழிபடும் புண்ணியம் நண்ணிய    புனித பூமி இந்த நில உலகம் புகழ் நிறைந்த இவ்வுலகில் பிறந்த அடியேன் அறிவிலாமல் இச்சையால் மடங்கி முடங்கி மடியாத படி அருள் ஞான திருவடி தரிசனம் அருள்க என்று வினயம் மிகுந்து வேண்டியபடி

விளக்கக் குறிப்புகள்

1 நிதி ஞான போதம்

சிவஞான போதம் என்பதைக் குறிக்கும் சைவ நெறி நூல்கள் பதினான்கு
அவையாவன - திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா விருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்

2 அரன் இரு காதிலே உதவு நிபுண

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும் பகர்செய் குருநாதா ----         திருப்புகழ், சிவனார்மனங்