F

படிப்போர்

Friday 3 August 2012

1 கைத்தல

1

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
          கப்பிய கரிமுக                                            னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
   கற்பக மெனவினை                                          கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
          மற்பொரு திரள்புய                                    மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
          மட்டவிழ் மலர்கொடு                               பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
          முற்பட எழுதிய                                  முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
          அச்சது பொடிசெய்த                                         அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
          அப்புன மதனிடை                                             இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை

          அக்கண மணமருள்                                     பெருமாளே.

பதம் பிரித்தல்   

 கைத்தலம் நிறைகனி அப்பமொடு அவல் பொரி
 கப்பிய கரி முகன் அடிபேணி

 கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
 கற்பகம் என வினை கடிது ஏகும்

 மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
 மல் பொரு திரள் புய மத யானை

 மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
 மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே

 முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில்
 முற்பட எழுதிய முதல்வோனே

 முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
 அச்சு அது பொடி செய்த அதிதீரா

 அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும்
 அப்புனம் அதனிடை இபம் ஆகி

 அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
 அக்கணம் மணம் அருள் பெருமாளே.

பத உரை

கைத்தலம் = கையில்.
நிறை = நிறைய.
கனி = பழம்.
அப்பம் ஒடு அவல் பொரி = அப்பம், அவல், பொரி (இவைகளை).
கப்பிய = வாரி உண்ணும்.
கரி முகன் = யானை முகக் கடவுளன்.
அடி பேணி = திருவடிகளை விரும்பி.
கற்றிடும் அடியவர் = கற்கும் அடியவர்களுடைய.
புத்தியில் உறைபவ = மனதில் உறைபவனே.
கற்பகம் என = (உன்னைக்) கற்பகமே என்று கூறினால்.
வினை = வினைகள் (யாவும்). கடிது ஏகும் = விரைவில் ஓடிப் போகும்.
மத்தமும் – ஊமத்த மலரும்.
மதியமும் = (பிறைச்) சந்திரனும்.
வைத்திடும் அரன் மகன் = (சடையில்) தரித்த சிவபெருமானுடைய மகனும்.
மல் பொரு திரள் புய = மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும்.
மத யானை = மத யானையை ஒத்தவனும்.
மத்தள வயிறனை = மத்தளம் போன்ற வயிறு உடையவனும்.
உத்தமி = உத்தமியாகிய (பார்வதியின்).
புதல்வனை = மகனும் (ஆகிய கணபதியை).
மட்டு அவிழ் மலர் கொடு = வாசனை வீசும் மலர்களைக் கொண்டு. பணிவேனே = நான் பணிவேன்.
முத்தமிழ் அடைவினை = முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில் = (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய = முதல் முதலில் எழுதிய. முதல்வோனே = முதன்மையானவனே.
முப்புரம் எரி செய்த = (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த.
அச்சிவன் = அந்தச் சிவ பெருமான்.
உறை ரதம் = எழுந்தருளிய இரதத்தின்.
அச்சு அது = அச்சை. பொடி செய்த = பொடியாக்கிய.
அதி தீரா = மிக்க தீரனே.
அத்துயரது கொடு = (வள்ளியம்மை மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு.
சுப்பிர மணி படும் = (உன் தம்பியாகிய) சுப்பிரமணி நடந்த.
அப்புனம் அதன் இடை = அந்தத் (தினைப்) புனத்திடை.
இபமாகி = யானையாகத் தோன்றி.
அக்குற மகளுடன் = அந்த குற மகளாகிய வள்ளியுடன்.
அச்சிறு முருகனை = அந்தச் சிறிய முருக பெருமானை
அக்கணம் = அப்பொழுதே.
மணம் அருள் பெருமாளே = மணம் புரிவித்த பெருமாளே.
சுருக்க உரை
கை நிறையப் பழம், அப்பம், அவல், பொரி இவைகளை வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடியை விரும்பிக் கற்கும் அடியவர் உள்ளத்தில் உறைபவனே. உன்னைக் கற்பகமே என்று கூறினால் விரைவில் வினைகள் யாவும் ஓடிப் போகும். ஊமத்தம், பிறைச்சந்திரன், இவற்றைச் சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களை உடையவனும், மதயானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற வயிற்றை உடையவனும்  உத்தமியாகிய பார்வதியின் மகனுமாகிய கணபதியை, வாசனை வீசும் மலர்களைக் கொண்டு நான் பணிவேன்.
முத்தமிழை எல்லாம் பழமையான மேரு மலையில் முன்பு எழுதிய முதன்மையானவனே. திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய இரதத்தின் அச்சைப் பொடியாக்கிய மிக்க வல்லவனே. வள்ளி  நாயகியின் மீதுள்ள காதலால் துயரமுற்ற உன் தம்பியாகிய சுப்பிரமணி நடந்த அந்தத் தினைப் புனத்தில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளுடன் இளையவனாகிய முருக வேளுக்கு மணம் புரிவித்த பெருமாளே. உன்னை மட்டவிழ் மலர் கொண்டு பணிவேன்.
விளக்கக் குறிப்புகள்
அ. முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய….. 
பொரி, அவல், பழம் முதலிவற்றைப் படைத்து, விநாயகரைத் துதித்து, வியாசமுனிவர் கூறிவர மேரு மலையை ஏடாகவும், தமது தந்தமே எழுத்தாணியாகவும் கொண்டு, விநாயகர் பாரதத்தை எழுதினார் என்பது புராணம்.
( நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்ன நான்
ஏடாக மாமேரு வெற்பாக வங்கூ ரெழுத்தானிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ)— வில்லி பாரதம்
பாரதத்தை மேரு வெளி வெளி திகழ்
கோடொ டித்த நாளில் வரை வரை பவர்
பானி றக்க ணேசர் குவா குவா கனர் இளையோனே)- திருப்புகழ் (சீர்சிறக்கும்).
(பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி மிளையோனே)— திருப்புகழ் (ஒருபதுமிரு).
மகாபாரதம் எழுதின வரலாறு இங்கு சொல்லப்படவில்லை என்பதாக சிலர் சொல்கின்றனர்.
ஆ. அச்சது பொடி செய்த அதிதீரா….
திரிபுரம் எரிக்கத் தொடங்குகையில் சிவபெருமான்  விநாயகரைப் பூசிக்க மறந்தார்.
ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சுமுரியும்படி விநாயகர் செய்தார் என்பது புராணம்.
இ கற்பகம் – கற்பகத்தரு – வேண்டியனவற்றை எல்லாம் கொடுக்கவலலது. 
தேவலோகத்தில் இருக்கும் மரங்களில் (ஐந்தரு) ஒன்று – மற்றவைகள்  சந்தானம், மந்தாரம், பரிசாதம்,  அரிசந்தனம்.
ஈ அப்புனம் அதனிடை இபம் ஆகி -
விநாயகர் உதவியது தன் அருமைத் தம்பிக்கு.  உதவிய வரலாறு. விநாயகர் உதவி இன்றி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. திருமாலின் கண்மலரின் தோன்றிய இரு பெண்களில் ஒருத்தியான சுந்தரவல்லி முருகப் பெருமானைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி தவமிருக்க முருகன் அவளைப் பூமியில் பிறந்து தம்மை மணப்பாள் எனச் சொல்கின்றார். அவளும் நம்பிராஜனுக்கு மகளாய்த் தோன்றி வள்ளிமலையில் வளர்ந்து வருகின்றாள். வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்த அவளைத் திருமணப் பருவம் வந்ததும், மணம் செய்து கொள்ள முருகன் ஒரு வேடனாய், பின்னர் கிழவனாய் வர, வள்ளி மறுக்கின்றாள். முருகன் வள்ளிக்கு யானையின் மீது உள்ள பயத்தைப் புரிந்து கொண்டு, தன் அண்ணனான விநாயகரை வேண்ட, விநாயகரும் யானை உருவில் வந்து வள்ளியோடு முருகனுடன்  சேர்ந்து விளையாடல்கள் புரிந்து பின்னர் வள்ளியை முருகன் திருமணம் செய்து  கொள்ள உதவுகின்றார்

உ. முதல்வேனே

ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர் அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால் முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை)யானதால் (கணாத்யஷன்- விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன். சொல்லிக்கொண்டே போகலாம்.

” tag:

6 comments:

  1. Amazing,I do not find sufficient words/phrases to express my emotion/feelings.I only realise that it is Lord Murugan's Arul only.
    My ambition goes toofar.i.e. if possibleto accommodate audio (teaching/singing)of our Guruji from available CDS under each song.I pray our Lord to turn my ambition into reality soon. Om Muruga

    ReplyDelete
  2. Yes we have plans. It may take some time. Thanks for your active interest and valuable suggestion

    ReplyDelete
  3. VERY HAPPY TO NOTE.AS U r aware that our Guruji's song (teaching) rreadily available online KAUMARAM SITE.It will be easily possible to forward to our site with their permission and reduce our job.Kindly consider.Om Muruga

    ReplyDelete
  4. I started with " kaithala nirai kani" prayer in music keyboard. the audio i could get and now i am blessed to get the meanings in full. prayers to Lord Muruga to bless the website managers and all of us.
    Lord Ganapathiye thunai- Lord Murugane thunai

    ReplyDelete
  5. Thank you KRG, have your become follower of this blog?.

    ReplyDelete

Your comments needs approval before being published