F

படிப்போர்

Thursday 11 October 2012

129. கிறிமொழி

         கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
                   கெடுபிறப் பறவிழிக்                     கிறபார்வைக்
        கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
                கிகள்தமைச் செறிதலுற்                     றறிவேதும்
        அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
               றறவுநெக் கழிகருக்                               கடலூடே
        அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
               றடியிணைக் கணுகிடப்                 பெறுவேனோ
        பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
               பொறியிலச் சமணரத்                       தனைபேரும்
        பொடிபடச் சிவமெனப் பொடிபரப் பியதிருப்
               புகலியிற் கவுணியப்                          புலவோனே
        தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
                தவர்திருப் புதல்வநற்                       சுனைமேவுந்
        தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருதிருத்
               தணியினிற் சரவணப்                        பெருமாளே.
-129 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை
கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை

கிறி மொழி = பொய்ம்மொழி பேசும் கிருதரை = செருக்கு உள்ளவர்களை பொறி வழி = ஐம்புலன்களின் வழியே செறிஞரை = செல்லுபவர்களை கெடு பிறப்பு = கெட்ட இப்பிறப்பு அற = (நற் பிறப்பு) ஆகாமல் தொலையும்படி. விழிக்கிற பார்வை = விழிக்கின்ற விழியை உடைய.

கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்
தமை செறிதல் உற்று அறிவு ஏதும்

கெடு மடக் குருடரை = கெட்ட அறிவில்லாத குருடர்களை. திருடரை = திருடர்களை. சமய தர்க்கிகள் தமை = சமய வாதிகளை செறிதல் உற்று = (நான்) நெருங்குதலுற்று. அறிவு ஏதும் = அறிவு சற்றும்.

அறிதல் அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று
அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கரு கடல் ஊடே

அறிதல் அற்று = அறிதல் இல்லாமல் அயர்தல் உற்று = தளர்ச்சி உற்று அவிழ்தல் அற்று = (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல். அருகல் உற்று = குறைபாடு அடைந்து. அறவும் நெக்கு = மிகவும் கெட்டு. அழி = அழிவு தரும். கருக்கடல் ஊடே = பிறவிக் கடலுள்ளே.

அமிழ்தல் அற்று எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று
அடியிணைக்கு அணுகிட பெறுவேனோ

அமிழ்தல் அற்று = அவிழ்ந்து போதல் நீங்கி எழுதல் உற்று = மேல் எழுதல் உற்று உணர் நலத்து = நல்லுணர்வு பெறும் நலமான வழியில் உயர்தல் உற்று = மேம்பாடு அடைந்து. அடி இணைக்கு = உன் திருவடியிணையை அணுகிடப் பெறுவேனோ = அணுகப் பெறுவேனோ?

பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை
பொறி இல சமணர் அத்தனை பேரும்

பொறி உடைச் செழியன் = அறிவுள்ள (கூன்) பாண்டியனு டைய வெப்பு ஒழிதர = சுர நோய் நீங்கவும் பறி தலை = மயிர் பறிபடும் தலையராகிய பொறி இலாச் சமணர் = அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் = அத்தனை பேரும்

பொடி பட சிவ மண பொடி பரப்பிய திரு
புகலியில் கவுணிய புலவோனே

பொடி பட = அழியவும் சிவ மணப் பொடி = சிவ மணத் திருநீற்றை பரப்பிய = (மதுரையில்) பரப்பின திருப் புகலியில் = சீகாழியில் உதித்த கவுணியப் புலவோனே = கவுணியர் குலப் புலவனாகிய ஞான சம்பந்தரே.

தறி வளைத்து உற நகை பொறி எழ புரம் எரித்தவர்
திரு புதல்வ நல் சுனை மேவும்

தறி வளைத்து உற = அழிவு உண்டாகும்படி நகைப் பொறி எழ = புன் சிரிப்புப் பொறியை எழுப்பி புரம் எரித்தவர் = திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய திருப் புதல்வ = நல்ல மகனே நல் சுனை மேவும் = சிறந்த சுனையில் உள்ள.

தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு
தணியினில் சரவண பெருமாளே.

தனி = ஒப்பற்ற மணக் குவளை = நறு மணம் வீசும் குவளை நித்தமும் = நாள்தோறும் மலர் தரு = பூவைத் தருகின்ற திருத்தணியினில்= திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே = சரவணப் பெருமாளே.

சுருக்க உரை

பொய் பேசபவர்களும், ஐம்புலன் வழியே நடப்பவர்களும், இப்பிறப்பு நற் பிறப்பு ஆகாமல் தொலையும்படி விழிக்கின்ற விழியை உடையவர்களும், அறிவில்லாதவர்களும் ஆகிய சமய வாதிகளை நான் நெருங்கி, அறிவிழந்து, தளர்ச்சி உற்று, அழிந்து போதல் நீங்கி, மேம்பாடு அடைந்து, உன் திருவடியைப் பெறுவேனோ?

கூன் பாண்டியனின் சுரநோய் நீங்கவும், மயிர் நீங்கிய தலையை உடைய சமணர் அழியவும், திருநீற்றைப் பரப்பிய கவுணியப் புலவனே, சிரிப்புப் பொறியால் திரி புரங்களை எரித்த சிவபெருமானின் மகனே, சுனையில் நறு மணம் வீசும் திருத்தணிகையில் சரவணப் பெருமாளே, உன் திருவடியைப் பெறுவேனோ?

விளக்கக் குறிப்புகள்

1.பறிதலைப் பொறியிலச் சமணர்.....
(பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநி யமர்ந்த பெருமாளே) --- திருப்புகழ் (கருகியகன்று)
2.. சிவமணப் பொடிபரப்பிய....
(தென்னவன் தனக்கு நீறு.....
மன்னன் நீறு அணிந்தான்
என்று மற்று அவன் மதுரை வாழ்வார்
துன்னி நின்றார்கள் எல்லாம்
தூய நீறு அணிந்து கொண்டார்)                                                              --- பெரிய புராணம்
   
3. புகலியிற் கவுணயப் புலவோனே..
சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்கள். பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சைவயம், வெங்குரு, கழுமலம் என்பன.
4. கவுணியப் புலவோனே....
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன்...                                                                             ---- சம்பந்தர் தேவாரம்
கவுணியன் – கௌண்டின்ய கோத்திரகாரன்

சம்பந்தர் சுரம் நீக்கிய வரலாறும், சமணர்கள் கழுவேறியதும்

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞான சம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார்.   அவர் சமயத்தில் நம்பிக்கை யில்லாத சமணர்கள் அவர் வருகை தந்ததை வரவேற்கவில்லை. அவரை ஒழித்துக்கட்ட  அவர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே பைய சாரட்டும்'' என்று சொல்லி பதிகம் பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்பு நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதனால் மனம் மகிழ்ந்த  மன்னன்  சைவதத்திற்கு மாற எண்ணிணான்.   இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய் விடுவதாகவும் அறிவித்தனர். அதன்படி  இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச்  செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்`என்றனர்.

முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் வசனத்தை எழுதி
ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர்
ஓடும் திசையிலே ஓடிற்று.  ஞான சம்பந்தர், `வாழ்க அந்தணர்` என்னும்
திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை
ஆற்றில் இட்டருளினார்.  அந்த ஏடு வைகை ஆற்று வெள்ள ஒட்டத்துக்கு மாறாக எதிர் திசையில் சென்றது. அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான்

இதற்கு முன் சமணர்கள்` இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில்
எழுதி நெருப்பில் இட்டால்வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்
சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார்.
பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை நூல் போட்டு விரித்ததில். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் வந்தது. ஞானசம்பந்தர் திரு நள்ளாறு இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து அது நெருப்பில்  வேகாதிருக்க வேண்டி  `தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் அஸ்தி நாஸ்தி`  என்ற தங்கள் சமய வசனத்தை எழுதி ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் வழங்க பெறுவதாயிற்று.  இந்த இரண்டு போட்டிலும் தோற்ற சம்ணர்கள் போட்டிக்கு முன்னால் ஒப்புக்கொண்டபடி தாங்களே கழு ஏறினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

அருணகிரி நாதர் திருநள்ளார் திருப்புகழை பச்சையொண்கிரி என ஆரம்பிப்பது
நோக்கத்தககது

” tag:

128.கனைத்த

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட           ன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு                 திங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச                ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச       ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம       டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ்            கந்தவேளே
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய              மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள்              தம்பிரானே
-128 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே

கனைத்து = ஒலித்து அதிர்க்கும் = அதிரும் இப் பொங்கு கடல் =  பொங்குகின்ற இந்தக் கடல் ஒன்றினாலே = ஒன்றாலும் கறுத்து = கோபித்து அற சிவத்து = மிகச் சிவந்து அங்கி வாய்த்து = நெருப்புத் தன்மை பூண்டு எழு = உதித்தெழுந்துள்ள திங்களாலே = நிலவாலும்.

தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ

தனி = ஒப்பற்ற கருப்பு வில் கொண்டு = கரும்பு வில்லை ஏந்தி வீழ்த்த சரங்களாலே = (மன்மதன்) செலுத்திய அம்புகளாலும் தகைத்து = வாட்டமுற்று ஒருத்தி = தனித்த ஒருத்தியாம் இத் தலைவி எய்த்து = இளைப்புற்று இங்கு யாக்கை = இங்கு உடல் சழங்கலாமோ = சோர்வு அடையலாமோ?

தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே

தினைப் புனத்தினை = தினைப் புனத்தை. பண்டு = முன்பு காத்த மடந்தை = காவல் புரிந்த வள்ளியின் கேள்வா = கணவனே திருத்தணிப் பதிக் குன்றின் மேல் = திருத்தணிகை மலையின் மேல் திகழ் = விளங்கும் கந்த வேளே = கந்த வேளே.

பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா
படைத்து அளித்து அழிக்கும் த்ரி மூர்த்திகள் தம்பிரானே.

பனைக் கர = பனை மரம் போன்ற கையையும் கயத்து = வெள்ளை யானையையும் உடைய அண்டர் = தேவர்கள் போற்றிய = போற்றி வளர்த்த மங்கை பாகா = தெய்வ யானையின் கணவனே. படைத்து அளித்து அழிக்கும் = முத் தொழில்களைப் புரியும் த்ரி மூர்த்திகள் = மும்மூர்த்திகளுக்கும். தம்பிரானே = தம்பிரானே (தலைவரே).

சுருக்க உரை

பொங்கும் கடலாலும், நெருப்பு போன்ற நிலவாலும், மன்மதன் எய்த கணையாலும், வாட்டமுற்று தனித்து நிற்கும் இத் தலைவி சோர்வு அடையலாமோ?

தினைப்புனம் காத்த வள்ளியின் கணவரே. தேவர்கள் போற்றி வளர்த்த தேவசேனையின் கணவரே. மும்மூர்த்திகளுக்கும் தம்பிரானே. காம நோயால் வாடும் இப் பெண் சோர்வு அடையலாமோ?

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது. 

Monday 8 October 2012

127.கவடுற்ற

உனது திருவடியின் உயர்வை அறிந்து உய்ய வேண்டும்
        
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
      கடவுட்ப்ர திஷ்டைபற்                            பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவார்க்கக மிட்டிடர்க்
      கருவிற்பு கப்பகுத்                           துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
      கசரப்ப ளிக்கெனப்                            பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
      சரணப்ர சித்திசற்                                  றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
      குமுறக்க லக்கிவிக்                                    ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
      துதிரத்தி னிற்குளித்                           தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
      றுவலைச்சி மிழ்த்துநிற்                       பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
      சுருதித் தமிழ்க்கவிப்                            பெருமாளே.
127 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

கவடு உற்ற சித்தர் சட் சமய ப்ரமத்தர் நல்
கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக
கவடு உற்ற = வஞ்சகம் கொண்ட சித்தர் = சித்தர்களும் சட் சமய ப்ரமத்தர் = ஆறு சமயங்களில் மயங்குவர்களும் (ப்ரமத்து - மயங்கி) நல் = சிறந்த கடவுள் ப்ரதிஷ்டை = கடவுளர்களின் திருவுருவை நிலை பெறுத்துகை என்று. பற்பலவாக = பலப்பல வகையாக.

கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர்
கருவில் புக பகுத்து உழல்வானேன்
கருதி = யோசித்து பெயர் குறித்து = பெயர்களைக் குறிப்பிட்டு உரு வர்க்கம் இட்டு = உருவ அமைப்பு ஏற்படுத்தி இடர் = துன்பத்துக் காரணமான கருவில் புக = உட்பொருளில் புகுதற்கு வேண்டிய பகுத்து = திட்டத்தைச் செய்து. உழல்வானேன் = ஏன் அலைய வேண்டும்?

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க
சரப்பளிக்கு(ம்) என பொருள் தேடி
சவடிக்கு = பொன் சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகைக்கும் இலச்சினைக்கு = முத்திரை மோதிரத்துக்கும் இரு கை சரிக்கும் = இரண்டு கைகளிலும் அணியப்படும் வளையல் வகைக்கும் மிக்க = மேலான சரப்பளிக்கும் = வயிரம் பொதித்த கழுத்தணி வகைக்கும் என பொருள் தேடி = (பொது மகளிருக்குக் கொடுக்க வேண்டிய) பொருளைத் தேடி.

சகலத்தும் ஒற்றை பட்டு அயல் பட்டு நிற்கு நின்
சரண ப்ரசித்தி சற்று உணராரோ
சகலத்தும் = எல்லாவற்றிலும் ஒற்றைப் பட்டு = ஒன்று பட்டும் (வேறுபாடின்றி வியாபித்தும்) அயல் பட்டு நிற்கும் = (அவைகளில் கலவாது புறம்பாய்) வேறாக நிற்கும் நின் சரண = உனது திருவடியின் ப்ரசித்தி = கீர்த்தியை சற்று உணராரோ = சற்றேனும் உணர மாட்டார்களா?

குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை
குமுற கலக்கி விக்ரம சூரன்
குவடு எட்டும் அட்டு = எட்டு மலைகளையும் வருத்தி. நெட்டு வரிக் கணத்தினை = பெரிய கடல் கூட்டங்களை. குமுறக் கலக்கி = ஒலி செய்யக் கலக்கி விக்ரம சூரன் = வலிமை வாய்ந்த சூரனுடைய.

குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி
உதிரத்தினில் குளித்து எழும் வேலா

குடலைப் புயத்தில் இட்டு = குடலைத் தனது புயத்தில் மாலையாக அணிந்து உடலைத் தறித்து = உடலைத் துண்டாக்கி உருத்தி = கோபித்து உதிரத்தினில் குளித்து = அவனுடைய இரத்தத்தில் குளித்து எழும் வேலா = எழுந்த வேலாயுதத்தை உடையவனே.

சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில்
துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண

சுவடு உற்ற = (வள்ளி, முருகன் ஆகிய இருவரின்) பாதச் சுவடுகள் உள்ள அற்புத = அழகான கவலைப் புனத்தினில் = செந்தினைப் புனத்தில் துவலைச் சிமிழ்த்து = உதிர்ந்த பூக்களை மாலையாகக் கட்டி. நிற்பவள் = நின்ற வள்ளி அம்மை நாண = நாணம் கொள்ளும்படி.

தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி
சுருதி தமிழ் கவி பெருமாளே.

தொழுது எத்து = தொழுது ஏத்தி நின்ற. முத்த = முத்தனே. பொன் = அழகிய. புரிசை செரு = மதில் சூழ்ந்த. தணி = திருத்தணிகைப் பெருமாளே. சுருதித் தமிழ்க் கவி = (சம்பந்தராக வந்துத்) தமிழ் வேதமாகிய தேவாரப் பாக்களைப் பாடிய. பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை
வஞ்சகம் கொண்ட சித்தர்களும், ஆறு சமயங்களை மேற் கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களைப் ப்ரதிஷ்டை செய்து, பல பெயர்களைக் கொடுத்து, உருவ அமைப்பை ஏற்படுத்தித் துன்பத்துக்கு ஆளாகி ஏன் அலைய வேண்டும்? விலை மகளிர்க்குக் கொடுக்கும் பொருட்டுப் பொருள் தேடும் மக்கள், மெய்ப்பொருள் எல்லாவற்றிலும் ஒன்று பட்டும், அவைகளுக்குப் புறம்பாகியும் நிற்கும் உனது திருவடியின் புகழைச் சற்றேனும் உணர மாட்டார்களா?

எட்டு மலைகளையும் கடலையும் வருத்திய வலிமை வாய்ந்த சூரனுடைய உடலை அழித்து, அவனுடைய இரத்தத்தில் குளித்த வேலனே, அழகிய
செந்தினைப் புனத்தில் உதிர்ந்த பூக்களை மலையாகத் தொடுத்து நின்ற வள்ளி அம்மை நாணும்படி அவளைத் தொழுது நின்ற பெருமாளே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, மக்கள் உன் சரணப் புகழை உணர மாட்டார்களோ?

விளக்கக் குறிப்புகள்

1.    கவடுற்ற சித்தர் சட் சமய.....
இந்தத் திருப்புகழ் வஞ்சக சித்தர்களையும், ஆடம்பர பூசை செய்பவர்களையும் கண்டிக்கின்றது.
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து    மடலாலும்
ஆறார் தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமா றெரி தாமிந் தனத்து மருளாதே..                           ---                திருப்புகழ், ஆராதனராடம்
2. சுருதித் தமிழ்க்கவி......
தமிழ் வேதமாகிய தேவாரத்தைக் குறிக்கும். முருகன் ஞானசம்பந்தராக அவதரித்துத் தேவாரப் பாக்ளைப் பாடினார் என்பது அருணகிரி நாதர் கருத்து.

3. சட் சமயம்-  புறப்புற சமயங்கள் 6, புறச் சமயங்கள் 6, அகப்புறச் சமயங்கள் 6, அகச்சமயங்கள் 6  ( இவ்வாறு, அவ்வாறு)

126.கலைமடவார்

இந்த ஆன்மாவின் துயர் நீங்க நினது திருமாலைத் தந்து அருள் புரியவேண்டும் என்பது துதி

கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
        கனவளை யாலுங்                              கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
        கருதலை யாலுஞ்                             சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
        கொடியிடை யாள்நின்                          றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
        குளிர்தொடை நீதந்                            தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
        திருமகள் நாயன்                           தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
        செறிவுடன் மேவுந்                               திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
        தணிகையில் வாழ்செங்                      கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
        தனிமயி லேறும்                                  பெருமாளே
-126 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

கலை மடவார் தம் சிலை அதனாலும்
கன வளையாலும் கரை மேலே

கலை = மேகலை முதலிய இடையணிகள் பூணும். மடவார் தம் = பெண்களின் சிலை அதனாலும் = வசைப் பேச்சின் ஒலியாலும் கன = திரண்ட. வளையாலும் = சங்கின் ஒலியாலும். கரை மேலே = கரை மேல் (இருந்து கூவும்).

கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும் சிலை ஆலும்

கருகிய = கரிய காளம் = (மன்மதனின் ஊது குழலாகிய) குயிலின் ஒலியாலும் பெருகிய தோயம் = பெருகியுள்ள (கடல்) நீரின் ஒலியாலும் சிலை ஆலும் = வில்லினிடத்து அசைகின்ற.

கொலை தரு காமன் பல கணையாலும்
கொடி இடையாள் நின்று அழியாதே

கொலை தரு காமன் = கொலையே செய்ய வல்ல மன்மதனது பல கணையாலும் = பல பாணங்களாலும் கொடி இடையாள் = கொடி போன்ற இடையை உடைய இவள் (தலைவி) நின்று அழியாதே = கவலைப் பட்டு நின்று அழிவு படாமல்.

குரவ அணி நீடும் புயம் அணி நீபம்
குளிர் தொடை நீ தந்து அருள்வாயே

குரவு அணி = குரவ மலர்களால் அலங்காரம் கொண்டு. நீடும் = விளங்கும் புயம் அணி = திருப்புயத்தில் அணிந்துள்ள. நீபம் = கடப்ப மலரின் குளிர் தொடை = குளிர்ந்த மாலையை நீ தந்து அருள்வாயே = நீ  கொடுத்து அருள வேண்டும்.

சிலை மகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும் வேலா

சிலை மகள் நாயன் = பர்வதராசன் மகளின் தலைவனான சிவபெருமானும் கலை மகள் நாயன் = சரஸ்வதியின் தலைவனான பிரமனும். திருமகள் நாயன் = இலக்குமியின் தலைவனான் திருமாலும் தொழும் வேலா = தொழும் வேலனே.

தினை வன மானும் கந வன மானும்
செறிவுடன் மேவும் திருமார்பா

தினை வன மானும் = தினைப் புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியும் கந வன மான = விண்ணுலகத்திலுள்ள கற்பக வனத்தில் வளர்ந்த தெய்வயானையும் செறிவுடன் = நெருங்கி  மேவும் = அணையும் திருமார்பா = திருமார்பனே

தல மகள் மீது எண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ் செம் கதிர் வேலா

தல மகள் மீது = ஸ்தலமகளாகிய பூமியின் மேல் எண் புலவர் = மதிக்கப்படும் தேவர்கள் உலாவும் = வந்து உலாவும். தணிகையில் வாழ் = திருத்தணிகையில் வாழும் செம் = செவ்விய கதிர் வேலா = ஒளி வாய்ந்த வேலனே.

தனி அவர் கூரும் தனி கெட நாளும்
தனி மயில் ஏறும் பெருமாளே.

தனி அவர் கூரும் = (சுற்றமும் பற்றும் ஒழித்துத்) தனிமையை விரும்பித் தவம் செய்யும் தன்மையாளரின் தனி கெட = தனிமை நீங்க நாளும் = நாள் தோறும் தனி மயில் ஏறும் பெருமாளே = ஒப்பற்ற மயில் மீது ஏறி வந்து அவர்களுக்கு உதவும் பெருமாளே

சுருக்க உரை
பெண்களின் வசைப் பேச்சாலும், சங்கின் ஒலியாலும், குயிலின்ஒலியாலும்,
பெருகியுள்ள நீராலும், எண்ணி எண்ணிக் கருதும்சிந்தையாலும் நிற்கும் இப்
பெண் கவலைப் பட்டு அழியாமல்,அவளுக்குக் குரா மலர் விளங்கும் திருப்புயத்
 தில் கடப்ப மலையைத் தந்து அருள வேண்டும்.  பார்வதியின் தலைவனான சிவபெருமானும், சரஸ்வதியின் தலைவனான பிரமனும், இலக்குமியின் தலைவனான திருமாலும் தொழும் வேலனே,
தினைப்புனத்தில் வாழும் வள்ளியும், கற்பக வனத்தில் வாழும் தெய்வ யானையும் நெருங்கி அணையும் மார்பனே, பூமியில் வந்து தேவர்கள் உலாவும் தணிகையில் வாழும் வேலனே, சுற்றமும், பற்றும் ஒழித்துத் தனிமையில் தவம் செய்பவர்களின் தனிமையைப் போக்கும் பெருமாளேகாம நோயால் வாடும் இப் பெண்ணுக்குக் குளிர்ந்த கடப்ப மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது. தனித்திருந்து வருந்தும் துயர் உறும் தலைவிக் குக் குளிர்ந்த கடப்ப மாலயைத் தரவேண்டும் என்பது, தனித்திருந்து நின்று போற்றுபவரின் துயரைக் களைவது போல் என்ற கருத்து.

கலை மகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா....
திருமால் முருகனை வழிபட்டு தாரகாசுரனால் கவரப்பட்டத் தமது சக்கரம், சங்கு முதலியவற்றைப் திரும்பப் பெற்றார். பிரமன் முருகனை வழிபட்டு சிருட்டித் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார்.

ஒப்புக
சிவன் முருகனைத் தியானித்து உபதேசம் பெற்றார்.
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு னிவனாய..                                     ---               திருப்புகழ் ,தொக்கறாக்கு