F

படிப்போர்

Sunday 16 June 2013

224.ஆதி முதல் நாளில்

224
கோடைநகர்
வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புத்துரிலிருந்து 10 கி.மீ தூரம். 2 மீட்டர் உயரத்துடன் முருகனின் சரணாகதி காட்டும் கர அமைப்பு சிலை வேறுயெங்கும் காண முடியாதது

தானதன தான தந்த தானதன தான தந்த
                  தானதன தான தந்த                தனதான
      
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று                             புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி மின்று                        விளையாடிப்
பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று                   பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள் சேர அன்பு                            தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன்                         மருகோனே
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன்                      முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த                              குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடை நகர் வாழ வந்த                     பெருமாளே
 
பதம் பிரித்தல்
 
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து
ஆக மலமாகி நின்று புவி மீதில்

ஆதி முதல் நாளில் = முதல் முதலிலேயே. என்தன் தாய் உடலிலே இருந்து = என்னுடைய தாயின் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று = உடல் அழுக்குடன் இருந்து. புவி மீதில் = (பிறகு) இந்தப் பூமியில்.

ஆசை உடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து
ஆள் அழகனாகி நின்று விளையாடி

ஆசையுடனே பிறந்து = (பிறக்கும் போதே) ஆசையுடன் பிறந்து நேசமுடனே வளர்ந்து = பெற்றோரால் அன்புடன் வளர்க்கப்பட்டு ஆள் அழகனாகி நின்று = அழகுடையவன் என்னும்படி விளங்கி விளையாடி = பல விளையாட்டுகளில் ஈடுபட்டு.

பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து
பூமி தனில் வேணும் என்று பொருள் தேடி

பூதம் எலாம் அலைந்து = பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து மாதருடனே கலந்து = பெண்களுடன் மருவிக் கலந்து பூமி தனில் = பூமியில் வேணும் என்று = வேண்டியிருக்கிறது என்று பொருள் தேடி = செல்வத்தைத் தேடி.

போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன்
பூ அடிகள் சேர அன்பு தருவாயே

போகம் அதில் = சுகங்களிலேயே அலைந்து = திரிதலுற்று. பாழ் நரகு எய்தாமல் = பாழான நரகத்தை நான் அடையாமல் உன் தன் = உனது பூ அடிகள் = மலர் போன்ற திருவடிகளை சேர அன்பு தருவாயே = அருள் புரிவாயாக.

சீதை கொடு போகும் அந்த ராவணனை மாள வென்று
தீரன் அரி நாரணன் தன் மருகோனே

சீதை கொடு போகு ராவணன் = சீதையைக் கொண்டு போன ராவணனை மாள வென்ற = அழியும்படி வெற்றி கொண்ட தீரன் அரி நாரணன் மருகோனே = ஆண்மை மிக்க அரி, நாராணனுடைய மருகனே.

தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று
தேட அரிதானவன் தன் முருகோனே

தேவர் முநிவர்கள் = தேவர்களும், முனிவர்களும் கொண்டல் = மேக நிறம் கொண்ட  மால் அரி = திருமாலாகிய அரியும். பிர்மாவு நின்று தேட = பிரமனும் நின்று தேடியும் அரிதானவன் தன் முருகோனே = காணுதற்கு அரிதவனாக நின்ற சிவபெருமானின் குழந்தையே

கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற
கோமளி அநாதி தந்த குமரேசா

கோதை = பார்வதி மலை வாழ் = கயிலை மலையில் வாழ்கின்ற நாதர் = சிவ பெருமானின் இட பாகம் நின்ற = இடது பக்கத்தில் உறைகின்ற கோமளி = அழகி(யும்) அனாதி = தொடக்கம் இல்லாதவளும் ஆகிய உமை தந்த குமரேசா = ஈன்ற குமரேசனே.

கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட
கோடை நகர் வாழ வந்த பெருமாளே.

கூடி வரு சூரர்கள் தங்கள் = ஒன்று கூடி வந்த சூரர்களுடைய மார்பை இரு கூறு கண்ட = இரண்டு பிளவாகப் பிளந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே = கோடை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

முதலில் தாயின் கருப்பையில் தோன்றி, அவளுடைய உடல் அழுக்கில் வளர்ந்து, பிறக்கும் போதே ஆசைகளுடனேயே பிறந்து, அன்புடன் வளர்க்கப்பட்டு, அழகாக வளர்ந்து, மாதர்களுடன் உறவாடி, பொருள் தேடி, உலக சுக போகத்தில் திளைத்து, நான் பாழும் நரகத்தை அடையாமல், உன் மலரான திருவடிகளைச் சேர அருள் புரிவாயாக.

சீதையைக் கடத்திச் சென்ற இராவணனை அழித்த வீரனாகிய நாராயணனுடைய மருகோனே, தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரமன் முதலானோர் காண ஒண்ணாத சிவபெருமானின் குழந்தையே,

சிவனுடைய இடது பாகத்தில் வாழும் அழகியான பார்வதியின் பாலனே, ஒன்று கூடி வந்த சூரன் உடலைப் பிளந்தவனே, கோடை நகரில் வாழும் பெருமாளே, உன் பூவடிகளைத் தருவாயாக.

ஒப்புக:

 கோதைமலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற....

ஏதம் இல பூமொடு கோதைதுணை ஆதிமுதல் வேத விகிர்தன்...
.....சம்பந்தர் தேவாரம்.

விளக்கக் குறிப்புகள்

 கூடிவரு சூரர் தங்கள் மார்பை இருகூறு கண்ட...
      
சூரன் பதுமன் என்னும் இருவரே ஒரு வடிவமாகி சூரபத்மன் என ஆனார்கள். மாமரமாகிய சூரனது உடல் வேலால் தடியப்பட்டுப்   பின்னரும் அவன் உடல் அழியாது ஒன்று கூடி மீண்டும் போருக்கு வந்தான். வேல் அவன் உடலை மறுமுறையும் கிழித்து இரு கூறாக்கியது. அவற்றுள் ஒன்று சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் மாற முருகன் அருள் புரிந்தார்.
       
       சூருரங் கிழித்துப் பின்னும் அங்கம் திருகூறாக்கி
       எஃகம் வான் போயிற்றம்மா)                          --                        - கந்த புராணம்
       மெய்பகிர் இரண்டுகூறும் சேவலும் மயிலுமாகி  ---                      கந்த புராணம்      
      
” tag:

223.நீல முகிலான

223
கோடி நகர்(குழகர் கோயில்)
வேதாரண்யத்திற்கு அருகில் 14 கி.மீ தொலைவில்
கையில் அமிர்த கலசம் ஏந்தி அமிர்தகர சுப்ரமணியன் என அழைக்கப்படுகிறான்

              தானதன தானதன தானதன தானதன
              தானதன தானதன                      தனதான             

நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
   நேயமதி லேதினமு                            முழலாமல் 
நீடுபூவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை 
   நீரிலுழல் மீனதென                          முயலாமற்  
காலனது நாவரவ வாயிலிடு தேரையென 
   காயமரு வாவிவிழ                           அணுகாமுன்  
காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு 
   கால்முருக வேளெனவு                       மருள்தாராய் 
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி 
   தோகைகுற மாதினுட                         னுறவாடிச் 
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ  
   சோதிகதிர் வேலுருவு                          மயில்வீரா 
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு 
   கூடிவிளை யாடுமுமை                        தருசேயே 
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர் 
   கோடிநகர் மேவிவளர்                        பெருமாளே

பதம் பிரித்து உரை

நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன 
நேயம் அதிலே தினமும் உழலாமல்

நீல முகிலான = கரிய மேகம் போன்ற. குழலான = கூந்தலை உடைய மடவார்கள் = மாதர்களின் தன நேயம் அதிலே = கொங்கை மேலுள்ள ஆசையால் தினமும் உழலாமல் = நாள் தோறும் அலைச்சல் உறாமல்.

நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை 
நீரில் உழல் மீன் அது என முயலாமல் 

நீடு = பெரிய. புவி ஆசை = மண்ணாசை பொருள் ஆசை = பொருள்கள் மேலுள்ள ஆசை. மருளாகி = (இவற்றில்) மயக்கம் கொண்டு. அலை நீரில் = அலை மிகுந்த கடல் நீரில். உழல் = அலைச்சல் உறுகின்ற. மீன் அது என = மீனைப் போல உழலும் பொருட்டு முயலாமல் = முயற்சி செய்யாமல்

காலனது நா அரவ வாயில் இடு தேரை என
காயம் மருவு ஆவி விழ அணுகா முன்

காலனது = யமனுடைய. நா = (என்னை) விரட்டும் பேச்சு என்கின்ற அரவ வாயில் இடு தேரை என = பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல காயம் மருவி = உடலில் பொருந்தியுள்ள.ஆவி விழ = உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி. அணுகா முன் = அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக.

காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு 
கால் முருக வேள் எனவும் அருள் தாராய்

காதலுடன் = அன்புடன். ஓதும் = உன்னை ஓதுகின்ற அடியார்களுடன் = அடியார் களுடன் நாடி = விரும்பி ஒருகால் = ஒரு முறையாவது. முருக வேள் எனவும் = முருக வேள் என்று நான் புகழுமாறு அருள் தாராய் = திருவருளைத் தந்தருளுக.

சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி 
தோகை குற மாதினுடன் உறவாடி

சோலை பரண் மீது = (வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலை மரங்கள் உள்ள பரண் மீது. நிழலாக = நிழல் தர.தினை காவல் புரி = தினைப் புனத்தைக் காவல் செய்யும் தோகை குற மாதினுடன் = மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவாடி = உறவு கொண்டாடி.

சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ 
சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா

சோரன் என = கள்வன் என்று நாடி வருவார்கள் = உன்னைத் தேடி  வந்தவர்களான வன வேடர் விழ = காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ. சோதி கதிர் = மிக்க ஒளி வீசும். வேல் உருவும் மயில் வீரா = வேலைச் செலுத்திய மயில் வீரனே

கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு  
கூடி விளையாடும் உமை தரு சேயே

கோல = அழகுள்ளதும் அழல் = (வினைகளை அழிப்பதில்) நெருப்புப் போன்றதும் (ஆகிய) நீறு புனை = திரு  நீற்றை அணிந்துள்ள ஆதி சருவேசரோடு = மூலப் பொருளாகிய  சி  பெருமானோடு கூடி விளையாடும் = கூடி விளையாடுகின்ற உமை தரு சேயே = உமா தேவியார் பெற்றெடுத்த குழந்தையே.

கோடு முக ஆனை பிறகான துணைவா  குழகர்
கோடி நகர் மேவி வளர் பெருமாளே.

கோடு முக ஆனை = தந்தத்தை முகத்தில் கொண்ட ஆனையாகிய கணபதிக்கு பிறகான துணைவா = பின்னர் தோன்றிய தம்பியே குழகர் கோடி நகர் = குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் மேவி வளர் பெருமாளே = விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கரிய கூந்தலைக் கொண்ட விலை மாதர்களின் கொங்கை மேலுள்ள ஆசையில் நான் தினமும் அலைச்சல் உறாமல், மண்ணாசை, பொன்னாசை ஆகிய மயக்கம் கொண்டு, கடல் நடுவே அலைச்சல் உறும் மீனைப் போல் உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல், காலன் என்னை விரட்டும் போது, பாம்பின் வாய்த் தேரை போல் இந்த உயிர் உடலை விட்டு நீங்கும் போது, காலன் என்னை அணுகா முன், உன்னை அன்புடன் ஓதும் அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேளே என்று புகழுமாறு உன் திருவருளைத் தந்து அருளுக.

வள்ளி மலைக் காட்டில் தினைக் காவல் புரிந்த மயில் போன்ற வள்ளியுடன் உறவாடி, கள்வன் என்று உன்னைத் தேடி வந்த வேடர்கள் அனைவரும் மாண்டு விழ வேலைச் செலுத்திய மயில் வீரா, வினைகளை அழிக்க வல்ல நெருப்புப் போன்ற திரு நீற்றை அணிந்துள்ள ஆதிப் பிரானாகிய சிவபெருமானோடு கூடி விளையாடும் உமா தேவியின் குழந்தையே, ஆனை முகக் கணபதிக்குத் தம்பியே. கோடி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, முருக வேளே என்று ஒரு முறையாவது ஓத அருள் புரிவாயாக.

ஒப்புக

1. அரவ வாயிலிடு தேரை என....

செடி கொள் நோய் ஆக்கை அப் பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறு
பறவை...                                                                           சம்பந்தர்  தேவாரதம்.

பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே
               ....திருநாவுக்கரசர் தேவாரம்

2. கோல அழல் நீறு.... 

திங்களை வைத்து அனல் ஆடலினார் திருநாரையூர் மேய 
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே
                ...சம்பந்தர் தேவாரம்