F

படிப்போர்

Sunday 19 May 2013

218. தாரணிக்கதி

218
காசி

                  தான தத்தன தான தானன
                     தான தத்தன தான தானன
                     தான தத்தன தான தானன      தனதான

தார ணிக்கதி பாவி யாய்வெகு 
   சூது மெத்திய மூட னாய்மன
   சாத னைக்கள வாணி யாயிறு                   மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
   வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
   தாமு யச்செயு மேது தேடிய                  நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
   மோது தற்புணர் வான நேயர்கள்
   பூசு மெய்த்திரு நீறி டாஇரு             வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
   காண வைத்தருள் ஞான மாகிய
   போத கத்தினை யேயு மாறருள்                 புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
   னேவ ளைத்திடு போது மேவிய 
   மாய வற்கித மாக வீறிய                      மருகோனே
வாழு முப்புற வீற தானது
   நீறெ ழப்புகை யாக வேசெய்த
   மாம திப்பிறை வேணி யாரருள்            புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
   ரான வர்க்குமு னாக வேநெறி
   காவி யச்சிவ நூலை யோதிய                 கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
   ஞான சொற்கும ராப ராபர
   காசி யிற்பிர தாப மாயுறை                   பெருமாளே.

பதம் பிரித்தல்

தாரணிக்கு அதி பாவியாய் வெகு
சூது மெத்திய மூடனாய் மன
சாதனை களவாணியாய் உறும் அதி மோக

தாரணிக்கு = (இந்தப்) பூமியில் அதி பாவியாய் = மிகவும் பாவச் செயல்களை செய்பவனாய் வெகு சூது மெத்திய = மிக்க வஞ்சகம் நிறைந்தவனாய் மூடனாய் = முட்டாளாய் மனசாதனை = மனத்தால் எண்ணுவதில் களவாணியாய் = போலியாய் உறும் = இருக்கும் அதி = மோக = மிக்க காம மயக்கில்.

தாப(ம்) மிக்கு உள வீணனாய் பொரு
வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள்
தாம் உ(ய்)ய செ(ய்)யும் ஏது தேடிய நினைவாகி

தாபம் மிக்கு உள வீணனாய் = விரகம் மிகுந்துள்ள பயனற்றவனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகும் = சண்டைக்கு உற்ற வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்களான மாதர்கள் = பொது மகளிர்கள் தாம் உய்ய = தாம் பிழைக்கும்படி செய்யும் = உதவும் ஏது தேடிய நினைவாகி = செல்வத்தை தேடித் தரும் நினைவைக் கொண்டு.

பூரண சிவ ஞான காவியம்
ஓது(ம்) தற்ப உணர்வான நேயர்கள்
பூசும் மெய் திரு நீறு இடா இரு வினையேனை

பூரண = எங்கும் நிறைந்த சிவ ஞான காவியம் அது = சிவதத்துவ நூல்களை ஓதும் தற்ப உணர்வான = ஓதுகின்ற தன்மையை உடைய நேயர்கள் = அடியார்கள் மெய்ப் பூசும் = உடலில் இடுகின்ற திரு நீறு இடா = திரு நீற்றை உடலில் இடாத இரு வினையேனை = பெரிய தீ வினைகளை உடையவனாய் (திரியும் என்னை).

பூசி மெய் பதமான சேவடி
காண வைத்து அருள் ஞானம் ஆகிய
போதகத்தினையே ஏயும் மாறு அருள் புரிவாயே

பூசி = (அத்திரு நீற்றை) அணியச் செய்து மெய்ப் பதமான = உண்மையான நிலையாகிய சேவடி காண வைத்து அருள் = திருவடியைக் காணும்படிச் செய்து அருளிய ஞானமாகிய போதகத்தினையே = ஞான அறிவை ஏயும் மாறு = நான் அடையும்படி அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.

வாரணத்தினையே கராவும் மு(ன்)னே
வளைத்திடு போது மேவிய
மாயவற்கு இதமாக வீறிய மருகோனே

வாரணத்தினையே = (கஜேந்திரனாகிய) யானையை கராவும் = முதலையும் முன்னே = முன்னொரு நாளில் வளைத்திடு போது = (காலைப்பற்றி) வளைத்த போது மேவிய மாயவற்கு = சென்று உதவிய மாயவனாகிய திருமாலுக்கு இதமாக = இன்பம் தரும்படி வீறிய மருகோனே = மேம்பட்டு விளங்கும் மருகனே.

வாழும் முப்புர(ம்) வீறதானது
நீறு எழ புகையாகவே செய்த
மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே

வாழும் = வாழ்ந்திருந்த முப்புரம் வீறதானது = முப்புரங்களின் பொலிவு  நீறு எழ = சாம்பலாகும்படி புகையாகவே செய்த = (நெற்றிக் கண்ணால்) எரித்த மா மதிப் பிறை = சிறந்த பிறைச் சந்திரனை வேணியர் அருள் = சடையில் தரித்த சிவ பெருமான் ஈன்றருளிய புதல்வோனே = மகனே.

காரண குறியான நீதியர்
ஆனவர்க்கு மு(ன்)னாகவே நெறி 
காவிய சிவ நூலை ஓதிய கதிர்வேலா

காரணக் குறியான = (அனைத்துக்கும்) மூல காரணனாகிய நீதியரானவர்க்கு = பெற்றியை உடைய சிவபெருமானுக்கு முன்னாகவே = பண்டை நாளில் நெறி காவியச் சிவ நூலை = சிவநூலாகிய தேவாரத்தை  ஓதிய = (சம்பந்தராக வந்து) ஓதிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலாயுதனே.

கானக குற மாதை மேவிய
ஞான சொல் குமரா பராபர
காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே.

கானகக் குற மாதை = காட்டில் வாழ்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை மேவிய = நாடிச் சென்ற ஞான சொல் குமரா = ஞான குருவாகிய குமரனே பராபர  = தயாள குணமுடையவனே காசியில் = காசி என்னும் தலத்தில் பிரதாபமாய் உறை = புகழ் கொண்டு வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

பூமியில் பெரிய பாபம் செய்பவனாக, வஞ்சனைகளில் மிக்கவனாக, மூடனாக, தீய எண்ணங்கள் உடையவனாக, காமமும், தாபமும் நிறைந்தவனாக, கூரிய கண்களை உடைய விலை மாதர்களையே நினைக்கும் இழி குணம் உடையவனாக இருக்கும் என்னை, சிவ ஞானத்தில் மிக்க அடியார்களிடம் சேர்த்து, திரு நீற்றை அணியும்படி செய்து, சிவ ஞான தத்துவங்களை உபதேசித்து அருள் செய்ய வேண்டுகின்றேன்.

முன்னொரு நாளில் தன் காலைப் பற்றிய கஜேந்திரனை முதலையிடமிருந்து காக்க விரைந்து சென்ற திருமாலின் மருகனே, வலிய முப்புரங்களை எரித்தவனும், பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவனுமாகிய சிவ பெருமானின் மகனே, மூல காரணனாகிய சிவபெருமானின் சந்நிதிகளில் தேவாரத்தைச் (சம்பந்தராக வந்து) ஓதிய குமரனே, தயாளனே, காசியில் புகழுடன் வீற்றிருப்பவனே , தீய நெறியில் வாழும் என்னை அடியார்களோடு சேர்த்து ஞான உபதேசம் செய்து அருள வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

 பூரணச் சிவஞான காவியம் ஓது...  
 தேவார திருவாசக நூல்களைக் குறிக்கும்.

ஒப்புக

1. வாரணத்தினை யேக ராவுமு...
   
திவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட               ...திருப்புகழ்,பகர்தற்கரி
ஆனைமடு வாயிலன்று மூலமென வோல மென்ற                 ..... திருப்புகழ்,சாலநெடு
கடகரி அஞ்சி நடுங்கி.................................         திருப்புகழ்,  சருவியிகழ்ந்து
  
வரலாறு பாடல் 225 விள்க்கத்தில் பார்க்கவும்      

2, வாழுமுப்புர வீற தானது...
    
அரிய திரிபுர மெரிய விழித்தவன்…………………………....                  திருப்புகழ், குருவியெனப்பல.

” tag:

217.மதியால்

217
கருவூர்

             தனதானத் தனதான தனதானத் தனதான

மதியால்வித் தகனாகி மனதாலுத்                தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்                தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற்  பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற்              பெருமாளே

பதம் பிரித்து உரை

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகி சிவ ஞான பர யோகத்து அருள்வாயே

மதியால் = என் புத்தியைக் கொண்டு வித்தகனாகி = (நான்) ஒரு பேரறிவாளா னாகாகி மனதால் = எம் மனம் நன்னெறி யையே பற்ற உத்தமனாகி = நான் ஒரு உத்தம குணம் படைத்த மேலோனாகி.

சிவ ஞான பதிவாகி = சிவ ஞானத்தில் என் மனம் ஊன்றுவதாகி பர யோகத்து = மேலான வாழ்க்கையை. அருள்வாயே = நான் பற்றும்படி அருள் புரிவாயாக.

நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய்
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே.

நிதியே = என் செல்வமே நித்தியமே = அழிவில்லாப் பொருளே என் நினைவே = என் தியானப் பொருளே நல் பொருள் ஆயோய் = சிறந்த பேரின்பப் பொருள் ஆனவனே.

கதியே = என் புகலிடமே சொல் = எல்லோராலும் புகழப்படும் பர வேளே = மேலான செவ்வேளே கருவூரில் பெருமாளே = கருவூர்த் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளி ஆகி, நான் நன்னெறியையே பற்றி மேலோனாகி, சிவ ஞானம் என் மனதில் ஊன்றுவதாகி, யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக.
என் செல்வமே. அழிவில்லாத பொருளே, என் தியானப் பொருளே. நன்மை தரும் கடவுளே, என் புகலிடமே, யாவராலும் புகழப்படும் மேலான செவ்வேளே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்குப் பர யோகம் தந்து அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்

நிதியே...

நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே..                       .             திருநாவுக்கரசர் தேவாரதம்.
  
நிதியினைப் பவளத் தூணை
நெறியினால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டமாளும்)..................                        திருமங்கை ஆழ்வார்,திருகுறுத்தாண்டகம்

கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..........                        .கந்தர் அநுபூதி .

216.நித்தப் பிணிகொடு

216
கருவூர்

             தத்தத் தனதன தானன தானன  
             தத்தத் தனதன தானன தானன 
             தத்தத் தனதன தானன தானன      தனதான

நித்தப் பிணிகொடு மேவிய காயமி
   தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
   நிற்பொற் ககனமொ டாமிவை பூதக                லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
   டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
   நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு           மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
   வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
   டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி         லுழல்வேனை 
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
   முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
   திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற             இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
   தித்தித் திமிதிமி தீதக தோதக
   டத்தக் குடகுகு தாகுட தீகுட                        வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
   திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
   சர்பப்ச் சதமுடி நாணிட வேலதை                 யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
   சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
   வெற்புப் புரமது நீறெழ காணிய                     ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
   சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
   வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய              பெருமாளே.
-    216 கருவூர்
பதம் பிரித்து உரை

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது
அப்பு பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்)  
நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத கலவை மேவி

நித்தம் = நாள்தோறும் பிணி கொடு = நோய்களுடன் மேவிய = கூடித காயம் இது = இவ்வுடலாகும் அப்பு, பிருதி, வாயுவு(ம்) =
(இது) நீர், மண், காற்றுடன் தேயுவு(ம்) = நெருப்பும் நில் = உள்ளதான பொன் = பொலிவுள்ள ககனமோடு ஆம் இவை =
ஆகாயம் எனப்படும் பூத கலவை மேவி = ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகி

நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் 
இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்) 
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை

நிற்கப்படும் = தோன்றி நிற்பதாகும் உலகு ஆளவும் = உலகத்தை எல்லாம் ஆள வேண்டும் மாகர் இடத்தை = விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொளவுமே = கொள்ள வேண்டும் என்று நாடிடும் = ஆசை கொண்டு ஓடிடு(ம்) = அதற்காக அங்கும் இங்கும் ஓடி அலையும் நெட்டு = செருக்குடன் பணி = அணி கலன்களையும். கலை = ஆடைகளையும் பூணிடு = அணிந்து நான் எனும் = நான் என்கின்ற மட ஆணைமை  =  முட்டாள்  தனமான அகங்காரத்துடன்

எத்தி திரியும் இது ஏது பொய்யாது என
உற்றது தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சை பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை

எத்தித் திரியும் = வஞ்சித்துத் திரியும் இது ஏது = இது என்ன பொய்யானது என = பொய்யாகாது நிலைத்திருக்கும் என்று உற்று
= திடமாக நினைத்து தெளிவு உணராது = தெளிவான உண்மையை உணராமல் மெய் ஞானமோடு = மெய்ஞ்ஞானத்தை இச்சைப் பட அறியாது = விரும்ப அறியாமல் பொய் மாயையில் = பொய்யான உலக மாயைகளில் உழல்வேனை = அலைச்சல் உறுகின்ற என்னை

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும்
உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டு திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய்

எத்தில் கொடு = தந்திரமாக ஆட்கொண்டு நினது அடியாரோடும் =உன் அடியார்களுடன்  உய்த்திட்டு = என்னைக் கொண்டு சேர்ப்பித்து உனது அருளால் = உன் திருவருளால் உயர் ஞான அமுது இட்டு = சிறந்த ஞானஅமுதத்தைத் தந்து திருவடியாம் உயர் வாழ்வு உற = திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிது ஆள்வாய் = இனிதே ஆண்டருள்க.

தத்தத்........என பேரி

தத்தத்.......என பேரி = இவ்வாறு ஒலிக்கும் முரசுகளின்

சத்தத்து ஒலி திகை தாவிட வானவர்
திக்கு கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே

சத்தத்து ஒலி = பேரொலி திகை தாவிட = திசைகளைக் கடந்து தாவிச் செல்ல வானவர் = தேவர்கள் திக்குக் கெட = (வாழும்)திசைகள் கலங்கிக் கெட வரு = வந்த சூரர்கள் தூள்பட = அசுரர்கள் தூளாகி பொடிபட சர்ப்பச் சத முடி = (ஆதிசேடனாகிய)
பாம்பின் நூறு பணா முடிகள் நாணிட = அச்சம் கொள்ள வேல் அதை எறிவோனே = வேலைச் செலுத்தியவனே

வெற்றி பொடி அணி மேனியர் கோகுல
சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா

வெற்றிப் பொடி அணி = வெற்றியைத் தரும் திரு நீற்றை அணிந்த மேனியர் = திருமேனியர் கோகுல சத்திக்கு = ஆயர் பாடியில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு இடம் அது அருள் = தமது இடதுபாகத்தைத் தந்தருளிய தாதகி வேணியர் = ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருள் பாலா = அருளிய குழந்தையே.

வெற்பு தட முலையாள் வ(ள்)ளி நாயகி
சித்தத்து அமர் குமரா எமை ஆள் கொள
வெற்றி புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே.

வெற்புத் தட முலை = மலை போன்ற பெரிய கொங்கைகளை உடைய வ(ள்)ளி நாயகி = வள்ளி நாயகி சித்தத்து அமர் = உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரா = குமரனே எமை ஆள்கொள = என் உள்ளத்தில் இருக்கப்பெற்ற வெற்றிப் புகழ் = வெற்றிப் புகழ் விளங்கும் கருவூர் தனில் மேவிய பெருமாளே = கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

நோய்கள் கூடிய, ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆகிய இவ்வுடல்
நிலையானது அல்ல. இருப்பினும், இந்த உலகமெல்லாம் ஆள வேண்டும், விண்ணுலகத்தையும் வெல்ல வேண்டும் என்று ஆசை பூண்டு, அதன் பொருட்டு அங்குமிங்கும் ஓடியும், ஆடியும், செருக்குடன் ஆடை அணி கலன்களை அணிந்தும், நான் என்னும் அகங்காரத்துடன் வஞ்சித்துத் திரியும் நான், இது பொய்யானதல்ல என்னும் உண்மையைத் திடமாக உணராமல், மெய்ஞ்ஞானத்தை விரும்பாமல், பொய்யான மாயையிலேயே அலைச்சல் உறுகின்றேன். என்னைத் தந்திரமாக ஆட்கொண்டு, உன்னுடைய அடியார்களோடு சேர்த்து, திருவருள் ஞான அமுதைத் தந்து, உன் திருவடியாகிய மேலான நிலையைத் தந்து அருளுக.   

பேரொலி முழங்க, முரசுகள் ஒலிக்க, தேவர் உலகம் கலங்கிட, சூரர்கள் தூள் ஆகஆதிசேடனின் பணா முடிகள் நடுங்க, வேலைச் செலுத்தியவனே,  திருநீற்றை அணிந்தவரும், திருமாலுக்குத் தன் இட பாகத்தைத் தந்தவரும், திரிபுரங்களைச் சிரித்து அழித்தவரும் ஆகிய சிவபெருமான்  அருளிய குழந்தையே, பெரிய கொங்கைகளை உடைய குறப் பெண்ணின் உள்ளத்தில் உறையும் குமரனே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்கு உயர் வாழ்வு தந்து அருள வேண்டும்.

ஒப்புக

1. அப்பு பிருதிவி வாயு...

ஐம்பெருமா பூதங்களா ஒருவீர் வேண்டிற்று
ஒருவீர் வேண்டீர் ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்.................                திருநாவுக்கரசர் தேவாரம்

2. நான் எனும் மட ஆண்மை....
  
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய்
நல்வினை தீ வினை எனவே நடுவே காட்டி...............           தாயுமானவர் பன்மாலை
   
முக்குணம் அது கெட நானா என வரு
முத்திரை அழிதர…………………………………….…..         திருப்புகழ்,எட்டுடனொரு

3. அடியாரோடும் உய்த்திட்டு உனது...

பார்ப்பாயலையோ அடியாரோடு
சேர்ப்பாயலையோ……………………………………….…….        திருப்புகழ்,கார்ச்சார்

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரோடு கூட்டு கண்டாய்…………………………...       தாயுமானவர்,சுகவாரி  

ஆடியாமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு……………… …...            பெரியாழ்வார்,திருப்பல்லாண்டு காப்பு.
  
அப்பன் ஆண்டு கொண்டு அடியாரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே......................................                 திருவாசகம், அதிசயப் பத்து

கெடுதல் இல்லாத் தொண்டரில் கூட்டியவா…………..........           கந்தர் அலங்காரம்