258
திருமயிலை
தரிசனம் தந்து ஆட்கொள்வீர் என விண்ணப்பம்
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி நெறிபேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானொடு
பதிக தாக வேலேவு மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே
- 258 மயிலை
பதம் பிரித்து உரை
கடிய வேகம் மாறாத இரத சூதர் ஆபாதர்
கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்
கடிய வேகம் மாறாத = கடுமையான கோபம் சற்றும் குறையாத இரத சூதர் = நயவஞ்சனை உடைய தீயவர்கள் ஆபாதர் = கீழானோர் கலகமே செய் பாழ் மூடர் = கலகத்தைச் செய்யும் பாழான அறிவிலிகள் வினைவேடர் = தீ வினையே விரும்புவோர்.
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு
கன விகாரமே பேசி நெறி பேணா
கபட ஈனர் = வஞ்சனை கொண்ட இழிந்தோர் ஆகாத இயல்பு நாடியே = இத்தன்மையருடைய நலமற்ற முறைகளை விரும்பி நீடு கன = பெரிய வலிமையுள்ள விகாரமே பேசி= அவ லட்சணங் களையே பேசி நெறி = நல்ல நெறிகளை பேணா = போற்றாத.
கொடியன் ஏதுமே ஓராது விரக சாலமே மூடு
குடிலின் மேவியே நாளும் மடியாதே
கொடியன் = கொடியவன் ஏதும் ஓராது = எதையும் ஆராய்ந்து அறியாமல் விரக சாலமே மூடு = காம ஆசைக் கூட்டங்களே மூடியுள்ள குடிலின் மேவியே = குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே நாளும் மடியாமல் = தினமும் அழிந்து போகாமல்
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு
குவளை வாகும் நேர் காண வருவாயே
குலவு = விளங்கும் தோகை மீது = மயில் மீது. ஆறு முகமும் வேலும்
= ஆறுமுகமும் வேலும். ஈராறு = பன்னிரண்டு. குவளை வாகும் = குவளை மலர் அணிந்த தோள்களும். நேர் காண வருவாயே = என் எதிரே காணும்படி வருவாயாக.
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட
பணமும் ஆடவே நீடு வரை சாடி
படியினோடு = பூமியோடு மா மேரு = பெரிய மேரு மலையும் அதிர = அதிரும்படி வீசியே = செலுத்தி சேட பணமும் ஆடவே = ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் அசைவுற நீடு வரை சாடி = பெரிய மலைகளை மோதி.
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு
பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா
பரவை ஆழி நீர் = பரப்பையுடைய கடல் நீர் மோத = மோதவும். நிருதர் = அசுரர்கள். மாள = மாண்டு போக வான் நாடு பதி அது ஆக
= தேவர்கள் பொன்னுலகம் செழிப்புள்ள நகரமாக வேல் ஏவும் மயில் வீரா
= வேலைச் செலுத்தும் மயில் வீரனே.
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை
வனச வாவி பூ ஓடை வயலோடே
வடிவு உலாவி = அழகுடன் வளர்ந்து ஆகாசம் மிளிர் = ஆகாசம் வரை வளர்ந்து விளங்கும் பலாவின் இருள் சோலை
= பலா மரங்களின் பெரிய சோலைகளும் வனச வாவி = தாமரைக் குளமும் பூ ஓடை = பூக்கள் உள்ள ஓடைகளும் வயலோடே = வயல்களும்.
மணி செய் மாட மா மோடை சிகரமோடு வாகு ஆன
மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே.
மணி செய் மாட = அழகுள்ள மாடங்களும் மா மேடை = சிறந்த மாடங்களின் சிகரமோடு = சிகரங்களும் ஒன்று கூடி. வாகு ஆன = அழகு விளங்கும் மயிலை மேவி = மயிலையில் வாழ் தேவர் பெருமாளே
= வீற்றிருந்து வாழ்கின்ற
தேவர்கள் பெருமாளே.
இரத சூதர் – விரத சூதர்
எனவும் பிரிக்கலாம். கோபத்தையே விரதமாக கொண்டவர் என பொருள்படும்
சுருக்க உரை
கடும் சினம் கொண்ட வஞ்சகர்கள், கீழோர், தீ வினையை விரும்புவோர் முதலியவர்களின் ஆகாத முறைகளையே விரும்பி, நன்னெறிகளைப் போற்றாமலும், கொடியவனான நான், எதையும் ஆராய்ந்து பாராமலும், காம ஆசைகளால் மூடப் பட்டு, இந்த உடம்பாகிய குடிலில் இருந்து கொண்டு அழியாமல் போக, என் எதிரே உன் ஆறு முகமும், பன்னிரு தோள்களும் நான் காணும்படி மயில் மீது வருவாயாக.
பூமி, மேரு ஆகியவை அதிரும்படியும், ஆதிசேடனுடைய மகுடங்கள் அசையவும், பெரிய மலைகளை மோதி, கடல் நீர் மோதவும், தேவர்கள் பொன்னுலகம் செழிக்கவும் வேலைச் செலுத்தியவனே, அழகுள்ள மாடங்கள் விளங்கும் மயிலையில் வீற்றிருந்து வாழ்கின்ற தேவர்கள் பெருமாளே, நான் உன்னை நேரில் காண வருவாயே.
விளக்கக் குறிப்புகள்
விகாரமே பேசி நெறி போணா...
விகாரம் = துர்க்குணங்கள். (காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசுயை).
ஆபாதர் – ஆபாதனன் என்பதின் மரூஉ. ஆபாதனன் -= தீயவன்

No comments:
Post a Comment
Your comments needs approval before being published