F

படிப்போர்

Monday, 12 September 2016

282.ஆறு மாறு மஞ்சு மஞ்சும்

282
தேவனூர்

செஞ்சி- சேத்துப்பட்டு வழி.

இந்தத் திருப்புகழ் பரம்பொருளை உணரக் கூடிய மார்க்கத்தை அழகாகக் கூறுகிறது.

           தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
           தான தான தந்த தந்த                   தனதான
 
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
    ஆறு மாறு மஞ்சு மஞ்சும்                           அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
   ஆர ணாக மங்க டந்த                                 கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
   யேது வேறி யம்ப லின்றி                        யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
   யான வாவ டங்க என்று                          பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வந்த
   வாரி மேல்வெ குண்ட சண்ட                         விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
    வால சோம னஞ்சு பொங்கு                            பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
    தேசி காக டம்ப லங்கல்                         புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
    தேவ னூர்வி ளங்க வந்த                          பெருமாளே.

பதம் பிரித்து உரை
 
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறு(ம்) நாலும்

ஆறும் ஆறும் (6+ 6- 12) அஞ்சும் அஞ்சும் (5+5-10) ஆறும் ஆறும் (6+ 6 - 12) அஞ்சும் அஞ்சும் ஆய (5+5-10) ஆறும் ஆறும் (6+ 6- 12) அஞ்சும் அஞ்சும் (5+5-10) அறு நாலும் ( 6X4 - 24)
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற
ஆரணம் ஆகமம் கடந்த கலையான
ஆறும்(6)  ஆய - 12 +10 + 12 +10 +12 + 10 + 24 + 6 ) தொண்ணூற்று ஆறு ஆன சஞ்சலங்கள் - (துன்பத்துக்குக் காரணமான) தத்துவங்களுக்கும். வேறு அதா விளங்குகின்ற - வேறாக விளங்குகின்றதும் ஆரணம ஆகமம் கடந்த - வேதம் ஆகமம் இவைகளைக் கடந்த கலையான - உபதேச கலையாகிய.

ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி
ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய்

ஈறு - சித்தாந்தம். கூற அரும் சொல்லுதற்கு அருமையான. பெரும் - பெரிய சுவாமியாய் இருந்த - தெய்வ நிலையாய் இருந்ததுமான நன்றி - நன்மைப் பொருளை ஏது வேறு இயம்பலன்றி - மூலகாரணம் வேறு சொல்லுவதற்கு இல்லாமல் ஒரு - ஒப்பற்ற. தானாய் - தனிப் பொருளாய்.

யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி
யான் அவா அடங்க என்று பெறுவேனோ

யாவுமாய் - எல்லாமாய் விளங்கி. மனம் கடந்த - மனதுக்கு அப்பாற்பட்ட. மோன வீடு அடைந்து - மோன இன்ப வீட்டை அடைந்து. ஒருங்கி - மனம் ஒருமைப்பட்டு ஒடுங்கி. அவா - ஆசை எல்லாம். அடங்க - அடங்கும் படியான நிலையை என்று பெறுவேனோ - எப்பொழுது பெறுவேனோ?

மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த
வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை

மாறு கூறி வந்து - பகைமையைச் சொல்லி வந்து. எதிர்ந்த சூரர் - எதிர்த்து வந்த அசுரர்களின் சேனை - படை மங்க வந்த - மங்கி அழிய வாரி மேல் வெகுண்ட தோணிகள் மிதக்கும் கடலைக் கோபித்தும். சண்டவித - விரைவு, கோபம் இவை வாய்ந்ததும். தாரை - கூர்மையானதும் ஆகிய

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூ விளம் கொழுந்து
வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய

வாகை வேல வெற்றி கொண்ட வேலை ஈந்தியவனே கொன்றை தும்பை மாலை - கொன்றை, தும்பை இவற்றாலான மாலைகள். கூவிளம் - வில்வக் கொழுந்து வால சோம - இளம் பிறைச் சந்திரன் பகு வாய் - பிளப்பு வயையுடைய

சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே

சீறும் மாசுணம் - சீறிக் கோபிக்கும் பாம்பு(பயையும்) கரந்தை - திரு நீற்றுப் பச்சை. ஆறு - கங்கை ஆறு. வேணி - சடை. கொண்ட நம்பர் - இவற்றைக் கொண்ட சிவ பெருமானுக்கு. தேசிகா- குரு மூர்த்தியே கடம்பு அலங்கல் - கடம்ப மாலையை. புனைவோனே - அணிபவனே

தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த பெருமாளே.

தேவர் யாரும் திரண்டு - தேவர்கள் யாவரும் ஒன்று கூடி. பாரின் மீது - பூமியில். வந்து இறைஞ்சும் - வந்து வணங்கும். தேவனூர் விளங்க வந்த பெருமாளே - தேவனூர் விளங்க வந்த பெருமாளே.

சுருக்க உரை

தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் வேறாக விளங்குவதும், வேதம் ஆகமம் இவைகளுக்கு அப்பாற் பட்டதும், சொல்லுதற்கு அரிதாக உண்மையான மூல காரணம் வேறு இல்லாமல் ஒப்பற்ற தனியாக நின்று, எல்லாமாய் விளங்குவதுமான, மனம் கடந்த மோன இன்ப வீட்டை அடைந்து, மனம் ஒடுங்கி, என்ஆசைகள் எல்லாம் அடங்கும்படியான நிலையை நான் என்று பெறுவேனோ?

பகைவர்களாகிய அசுரர்கள் சேனைகள் மடிந்து அழிய கூர்மையான வேலை எய்தியவனே, கொன்றை, தும்பை மாலைகளையும், பாம்பு, கங்கை ஆகியவற்றையும் சடையில் தரித்த சிவபெருமானுக்குக் குரு மூர்த்தியே, தேவர்கள் வணங்கும் பெருமாளே. என் ஆசைகள் அடங்குவது எப்போது?   

விளக்கக் குறிப்புகள்

கலையான ஈறு கூற அரும்....
கலையான ஈறு ..... உபதேச கலையாகிய சித்தாந்தம்.
தொண்ணூற்று ஆறு தத்துவங்கள்.....
மூலப் பொருள்கள் - 36. (அசுத்த தத்துவம் 24. சுத்தா சுத்த தத்துவம் 7.
சுத்த தத்துவம் 5.)
புற நிலைக் கருவி - 60 ( பருதிவியின் கூறு 5, அப்புவின் கூறு 5, தேயுவின்கூறு 5, வாயுவின் கூறு 5, ஆகாயத்தின் கூறு 5, வாயு 10, நாடி 10, வசனாதி 5, வாக்கு 4, குணம் 3, அகங்காரத் திரயம் 3).

அவா அடங்க.....
அஞ்ஞானமும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அது பற்றி எனக்கிது வேண்டும் என்னும் அவாவும், அது பற்றி அப் பொருட்கட் செல்லும் ஆசையும், அது பற்றி அதன் மறு தலைகட் செல்லும் கோபமும் வட நூலார் குற்றம் ஐந்தென்றார் - வ.சு.செங்கல்வராயப்பிளை.

முதலில் ஜடப்பொருளான இவ்வுடலின் தோற்றத்திற்கான தத்துவங்களை விளக்குகிறது. அவை எண்ணிக்கையில் தொண்ணூற்றாறாக உள்ளன.
அவைகளில் ஐந்து கர்மேந்த்ரியங்களும், ஐந்து ஞானேந்த்ரியங்களும், மனம், புத்தி, சித்தம் மற்றும் அந்தக்கரணம் இவற்றில் மிக முக்கியமானவை.
இவைகளிலும் மிகவும் முக்கியமானது மனமாகும். அதனுடைய ஆளுமையால் மனிதன் எவ்வளவு பாவ புண்ணியங்களுக்கு உள்ளாகிறான். பாவபுண்ணியங்களுக்கு இட்டுச் செல்லும் ஆசைகளினின்றும் விடு படுவது தான் ஒரு சாதகனின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அவனுடைய அவா அடங்க்க வேண்டும். அதுவே விவேக வைராக்யம் என்பது. மனம் அடங்கினால் மோனம் அல்லது மௌனம் மனத்தை வியாபிக்கும். பின்னர் முக்தி என்னும் நிலை சித்திக்கும்.  இதையே  மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி
யான் அவா அடங்க என்று பெறுவேனோ எங்கிறார் அருணகிரிநாதர்.

பாடலை கேட்க இங்கே தட்டவும்

” tag:

Saturday, 3 September 2016

281. இறையத்தனையோ

281
திலதைப் பதி
(பூந்தோட்டம அருகில். இத்தலம் மருவி செதலைப்பதி என தற்சமயம் வழங்கப்படுகிறது. கந்தன் குடி, அம்பர் திருமாகாளம், திருவீழிமிழலை, கூந்தலூர் அருகில் உள்ள ஸ்தலங்கள்)
                   
                       தனனத் தனனா          தனதான 

     இறையத் தனையோ        அதுதானும்
இலையிட் டுணலேய்     தருகாலம்
அறையிற் பெரிதா             மலமாயை
அலையப் படுமா      றினியாமோ
மறையத் தனைமா         சிறைசாலை
வழியுய்த் துயர்வா      னுறுதேவர்சிறையைத் தவிரா          விடும்வேலா
திலதைப் பதிவாழ்     பெருமாளே.

பதம் பிரித்து உரை

இறை அத்தனையோ அது தானும் 
இ(ல்)லை இட்டு உணல் ஏய் தரு காலம்

இட்டு உணல் - ஒருவருக்கு இட்ட பின் உண்ணுதல் என்னும் அற நெறி இறை அத்தனையோ - அணுவை ஒத்த(கொஞ்சமேனும்) அது தானும் - அவ்வளவு கூட
இ(ல்)லை - என்னிடத்தில் இல்லை ஏய் தரு காலம் - இங்ஙனம் பொருந்திய வீணாகச் சென்ற காலம்.

அறையில் பெரிதாம் மல மாயை
அலைய படும் ஆறு இனி ஆமோ

அறையில் - சொல்லப் போனால். பெரிதாம் - எவ்வளவோ நீண்டது மல மாயை - மலத்தினும் மாயையினும் அலையப் படுமோ - அலைச்சல் உறும் இத் தீ நெறி. ஆமோ - இனிக் கூடாது.

மறை அத்தனை மா சிறை சாலை
வழி உய்த்து உயர் வான் உறு தேவர்

மறை அத்தனை - வேதங்களுக்குத் தலைவனான பிரமனை. மா - பெரிய. சிறைச் சாலை - சிறைச் சாலைக்கு. வழி உய்த்து - போகும் வழியில் விட்டுப் போகும்படி வைத்து. வான் உறு தேவர் - வானத்தில் உள்ள தேவர்களின்.

சிறையை தவிரா விடும் வேலா
திலதை பதி வாழ் பெருமாளே.

சிறையைத் தவிரா விடு - சிறையை நீக்கி விட்ட.  வேலா - வேலனே. திலதைப் பதி வாழ் பெருமாளே - திலதைப் பதி என்னும் தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.

சுருக்க உரை

ஒருவருக்கு இட்டு உண்ணும் அற நெறி என்னிடம் சிறிதேனும் இல்லை. இத் தீ நெறி பொருந்திய வீணாகச் சென்ற காலம் மிக நீண்டது. மல மாயையில் அலைச்சல் உறுதல் இனிமேல் கூடாது. வேதத் தலைவனான பிரமனைச் சிறையினின்று நீக்கிவிட்ட வேலனே, மாயையில் அலையப்படாமல் அடியேன் இனித் தவிர்வேனோ ( கூடாது எனப் பொருள்).

விளக்கக் குறிப்புகள்

இட்டு உணல்.... 
நித்தம் இருபிடி சோறு கொண் டிட்டுண்டிரு---               கந்தர் அலங்காரம்

நாம் போம் அளவும் எமக்கென்னென்
றிட்டுண் டிரும்                                             —ஒளவையார்  (நல்வழி)

யாவர்க்குமாம் இறைவர்க் கொருபச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாய்அறுகு
யாவர்க்குமாம் உண்ணும்போ தொருகைப்பிடி.....            --- திரு மந்திரம் 

மறையத்தனை மா சிறை....
பிரமனைமு னிந்து காவலிட்

டொருநொடியில்..                )               ---திருப்புகழ் -கறைபடுமுடம்பி 