F

படிப்போர்

Showing posts with label உபதேசம். Show all posts
Showing posts with label உபதேசம். Show all posts

Thursday, 29 December 2016

293.சயிலாங்கனைக்கு

“
293
மதுராந்தகம்

                    தனதாந்த தத்த தனதனத்தத்
                      தந்தனத் தனந்த                  தனதானா

சயிலாங்க னைக்கு ருகியிடப்பக்
      கங்கொடுத் தகம்பர்                     வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையிடத்துக்
      கங்கைவைத் தநம்பர்                 உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழநித்தத்
      த்வம்பெறப் பகர்ந்த                    வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
       றுங்குருத் துவங்கு                 றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததியிற்கொக்
      கன்றனைப் பிளந்து                       சுரர்வாழ
அகலாண்ட முற்று நொடியினிற்சுற்
      றுந்திறற்ப் ரசண்ட                         முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகுலப்பொற்
      குன்றிடித் தசங்க்ர                      மவிநோதா
மதுராந்த கத்து வடதிருச்சிற்
      றம்பலத் தமர்ந்த                       பெருமாளே

பதம் பிரித்து உரை

சயில அங்கனைக்கு உருகி இட பக்கம்
கொடுத்த கம்பர் வெகு சாரி
சயில அங்கனைக்கு - மலை மகளாகிய பார்வதிக்கு உருகி - (அவள் பக்திக்கு) மனம் உருகி இடப் பக்கம் கொடுத்த - தமது இடப் பாகத்தைத் தந்து அருளிய கம்பர் - சிவபெருமான் வெகு - பலவிதமான சாரி - வட்டமாய் ஓடுதல் முதலான கூத்துக்களையும்

சதி தாண்டவ அத்தர் சடை இடத்து
கங்கை வைத்த நம்பர் உரை மாள

சதி தாண்டவ அத்தர் - தாள ஒத்துக்களையும் கொண்ட ஆடலை உடையவர் சடை இடத்து - சடையில் கங்கை வைத்த நம்பர் - கங்கை வைத்துள்ள பெருமான் உரை மாள - (இத்தகைய சிவனுக்கு) வாக்கு அழியவும்
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த
த்வம் பெற பகர்ந்த உபதேசம்

செயல் மாண்டு - செயல் அழியவும் சித்தம் அவிழ - மனம் ஒடுங்கவும் நித்தத்வம் பெற - நிலையான தன்மையைப் பெற பகர்ந்த உபதேசம் -  (நீ) செய்த உபதேசத்தை
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும்
குருத்துவம் குறையுமோ தான்

சிறியேன் தனக்கும் - சிறியவனாகிய எனக்கும் 
உரை செயில் - நீ 
சொல்லிஅருளினால் சற்றும் - கொஞ்சமேனும் 
குருத்வம் குறையுமோதான் - உனது குரு மூர்த்தியாகி பதவி குறைந்து விடுமோ?
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்
தனை பிளந்து சுரர் வாழ
அயில் வாங்கி - வேலாயுதத்தை எடுத்து எற்றி - செலுத்தி உததியில் - கடலிலிருந்த கொக்கன் தனை - மாமர வடிவமாக நின்ற சூரனை 
பிளந்து - பிளந்து சுரர் வாழ - தேவர்கள் வாழும்படி

அகில அண்டம் முற்றும் நொடியினில் சுற்றும்
திறல் ப்ரசண்ட முழு நீல

அகில அண்டம் முற்றும் - சகல அண்டங்களையும்  
நொடியினில் - ஒரு நொடிப் பொழுதில் சுற்றும் - சுற்றிய திறல் - வலிமை வாய்ந்த ப்ரசண்ட - கடுமையான முழு நீல - முழுநீலம் கொண்ட
மயில் தாண்ட விட்டு குது குல பொன்
குன்று இடித்த சங்க்ரம விநோத

மயில் தாண்ட விட்டு - மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும் முது - பழைய குல - சிறந்த பொன் குன்று - பொன் மயமான மேரு மலையை இடித்த - செண்டால் இடித்துத் தள்ளியவனுமாகிய சங்க்ரம - போர் விநோதா - விளையாடல் உடையவனே
மதுராந்தகத்து வட திரு
சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மதுராந்தகத்து வட - மதுராந்தகத்துக்கு வட திசையில் உள்ள திருச் சிற்றம்பலத்து - திருச் சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு மனம் உருகி, அவளுக்குத்
தன் இடப் பாகத்தைத் தந்து அருளிய சிவனார், பல கூத்துக்களையும், தாள ஒத்துக்களையும் ஆடலை உடையவர். சடையிலே கங்கையைத் தரித்தவர். அந்த அத்தருக்கு, வாக்கு, செயல் அழியவும், மனம் ஒடுங்கவும் நிலையான வழிகளை உபதேசித்த நீ, சிறியவனாகிய எனக்கும் கொஞ்சமேனும் அந்த உபதேசத்தைச் சொன்னால் உனது குருத்வம் குறைந்து போகுமோ?

கடலில் மாமரமாக நின்ற சூரனை வேலைச் செலுத்தி அழித்துய் தேவர்களை வாழச் செய்தவனே எல்லா உலகங்களையும் மயிலின் மேல் ஏறி ஒரு நொடிப் பொழுதில் சுற்றி வந்தவனே மேரு மலையை இடித்து அழித்துத் திருவிளையாடல் புரிந்தவனே மதுராந்தகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்கும் உபதேசம் செய்தால் நீ குறைந்து போவாயோ?
விளக்கக் குறிப்புகள்

செண்டு - பிரம்பு போன்ற ஒரு ஆயுதம்; ஆனால் இரண்டு வளைந்த நுனியிருக்கும் ஐயனார்க்கும் இந்த ஆயுதம் உண்டு இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது. { கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே –திருப்புகழ் மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கையில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம் }

1இடப் பக்கம் கொடுத்த கம்பர்
   வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
   வித்த கத்தர் பெற்ற கொற்ற   மயில்வீரா               -திருப்புகழ்,பொற்பதத்தி
   இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா              -திருப்புகழ், கடல்பரவ

2குருத்வம் குறையுமோதான்
  இங்ஙனம் வினவுதல் முருகனோடு அசதியாடுதலாகும் (பரிகசித்தல்)

அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும்
    உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்
       நயமாகக் கேட்டது -
                நாதா குமரா நமஎன் றரனார்
                ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான்                    --- கந்தர் அனுபூதி 
              
               நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ  -                                                                                                    திருப்புகழ்,அகரமுதல்         
          
           ஏமாற்றும் வகையில் கேட்டது -
                வேண்டாமை யொன்றைய டைந்துள
                மீண்டாறி நின்சர ணங்களில்
                வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
                                                            --திருப்புகழ்,மாண்டாரெலும்               
          ஏசும் வகையில் கேட்டது -
                செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
                த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
                சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
                றையுமோதான்                                     - திருப்புகழ்,  இப்பாடல்

3அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றுந் திறல்
  முருகன் சூரனைச் அழித்த பின் மயில் மீது அகில அண்டங்களைச் சுற்றினார்
  திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
  கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
  திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா,
                                                                  திருப்புகழ், தொடத்துளக்கி

” tag:

Wednesday, 14 December 2016

288.ஈளை சுரங்குளிர்

“
288
பாகை
சென்னை – அரக்கோணம் மார்க்கம்
மாயூரத்துக்குப் பக்கம் உள்ள பாகசாலையாக இருக்க கூடும் என்பது செங்கவராயபிள்ளை அவர்களின் கருத்து

              தான தனந்தன தான தனந்தன
              தான தனந்தன                              தனதான

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
      நோய்கள் வளைந்தற                   இளையாதே
 ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
      காடு பயின்றுயி                             ரிழவாதே
 மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
     வேறு படுந்தழல்                           முழுகாதே
  மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
     வாழ்வு பெறும்படி                      மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
     சேல்கள் மறிந்திட                          வலைபீறா
வாகை துதைந்தணி கேத கைமங்கிட
     மோதி வெகுண்டிள                      மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
     சாடி நெடுங்கடல்                          கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
      தோகை விரும்பிய                       பெருமாளே.

பதம் பிரித்து உரை

ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல
நோய்கள் வளைந்து அற இளையாதே

ஈளை.... சுரம் - கோழை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் என்னும்படியான பல வியாதிகள் வளைந்து - சூழ்ந்து. அற - மிக்க இளையாதே - (நான்) இளைப்பு அடையாமல்.

ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடு
காடு பயின்று உயிர் இழவாதே

ஈடுபடும் - வலிமையை இழந்துத் துன்புறும் சிறு - சிறிய. கூடு புகுந்து - கூடாகிய இந்த உடலில் புகுந்து இடு காடு -  சுடுகாடு பயின்று - சேரும்படி. உயிர் இழவாதே - உயிரை இழக்காமல்.

மூளை எலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படும் தழல் முழுகாதே

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் - மூளை.....நரம்புகள். வேறு படும் - வேறுபட்டு ஒழிய தழல் - தீயில் முழுகாதே - முழுகி வேகாமல்

மூலம் எனும் சிவ யோக பதம் தனில்
வாழ்வு பெறும்படி மொழிவாயே

மூலம் எனனும் – முலப்பொருளான சிவ யோக பதம் தன்னில் –சிவயோக பதவியில் (நான்) வாழ்வு பெறும்படி - வாழ்வு பெறும்படி மொழிவாயே – உபதேசிப்பாயே

வாளை நெருங்கிய வாவியிலும் கயல்
சேல்கள் மறிந்திட வலை பீறா

வாளை - வாளை மீன்கள். நெருங்கிய வாவியில் - தனக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல்கள் - கயல், சேல் மீன் (இவைகள்) மறிந்திட - முதுகிட்டு ஓட வலை பீறா - வலைகளைக் கிழித்துத் தாவி.

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டு இள மதி தோயும்

வாகை துதைந்து - வெற்றியே மிகுந்து அணி - வரிசையாயிருந்த கேதகை - தாழைகள் மங்கிட - உருக்குலைய மோதி வெகுண்டு - அந்தத் தாழகைள் மேல் மோதிக் கோபித்து. இள மதி தோயும் - பிறைச் சந்திரன் படியும்.

பாளை நறும் கமழ் பூக வனம் தலை
சாடி நெடும் கடல் கழி பாயும்

பாளை - பாளைகளைக் கொண்ட நறும் கமழ் - நறு மணம் வீசும் பூகம் - கமுகு மரம் வனம் தலை - காட்டில். சாடி - அம்மரங்களின் உச்சியில் பாய்ந்து ஒடித்து. கடல் கழி பாயும் - கடலின் கழியில் பாய்கின்ற.

பாகை வளம் பதி மேவி வளம் செறி
தோகை விரும்பிய பெருமாளே.

பாகை - பாகை என்னும் வளம் பதி மேவி - செழும் பதியில் பொருந்தியிருந்து வளம் செறி தோகை - வளப்பம் நிறைந்த மயிலை (அல்லது மயில் போன்ற வள்ளியம்மையை) விரும்பிய பெருமாளே - விரும்பிய பெருமாளே.

சுருக்க உரை

ஈளை, வாதம் முதலிய நோய்கள் மிக்க இந்த உடலில் புகுந்து, இறுதியில் சுடுகாட்டில் சேர்ந்து உயிரை இழக்காமல், மூலப் பொருளாகிய சிவ யோக பதவியில் நான் வாழ்வு பெறும்படி உபதேசித்து அருளுக.

வாளை மீன்கள் மிக உயரமாகத் தாவி, கமுகு மரங்களின் உச்சியில் பாய்ந்து, கடலின் கழியில் பாயும் பாகை நகரில் வாழும் மயிலை விரும்பிய பெருமாளே, நான் உடல் எடுத்து பிணியால் இளைத்து மடியாமல் உன் திருவடியில் வாழ்வு பெறும்படி உபதேசிப்பாயாக.

விளக்கக் குறிப்புகள்

வாளை நெருங்கிய... 

5 - 7 அடிகள் வாளையின் வலிமையைக் குறிப்பிடுகின்றன. இதே கற்பனை, உடலினூடு என்று தொடங்கும் திருத்தணிகை திருப்புகழிலும் காணப்படுகின்றது.
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு  மலர் வாவி           ---திருப்புகழ் (உடலினூடு). 