F

படிப்போர்

Monday, 21 April 2014

260.ஆங்கு டல்வளைந்து

260
திருமாந்துறை
 திருச்சி- லால்குடி மார்க்கம்

முற்காலத்தில் முனிவர் ஒருவர் இங்கு தவம் இயற்றூம்போது சிவாபச்சாரம் புரிந்ததால் மானாகப் பிறக்கும் சாபம் பெற்றார். குட்டிமானை விட்டுவிட்டு தாயம், தந்தையும் இரைதேடச் சென்றுவிட்டன. வேடன் வடிவ வேடம் கொண்ட சிவன் அவற்றை அம்பால் வீழ்த்தி முக்தியளித்தார். இங்கு குட்டிமான் பசியில் அலறியது. குட்டிக்குப் பார்வதி பால்புகட்டினாள். சிவன் மானை ஆற்றுப்படுத்தினார். மானின் முன்வினைகள் தீர்ந்து மீண்டும் முனிவரானது. முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு சிவன் கோவில் கொண்டார்.

               தாந்த தனதந்த தாந்த தனதந்த
                     தாந்த தனதந்த               தனதான

    ஆங்கு டல்வளைந்து நீங்கு பல்நெகிழ்ந்து
         ஆய்ஞ்சு தளர்சிந்தை                     தடுமாறி
    ஆர்ந்து ளகடன்கள் வாங்க வுமறிந்து
         ஆண்டு பலசென்று                  கிடையோடே
    ஊங்கி ருமல்வந்து வீங்கு குடல்நொந்து
         ஓய்ந்து ணர்வழிந்து              உயிர்போமுன்
    ஓங்கு மயில்வந்து சேண்பெ றஇசைந்து
         ஊன்றி யபதங்கள்                    தருவாயே
    வேங்கை யுமுயர்ந்த தீம்பு னமிருந்த
         வேந்தி ழையினின்ப                மணவாளா
    வேண்டு மவர்தங்கள் பூண்ட பதமிஞ்ச
         வேண்டி யபதங்கள்                 புரிவோனே
    மாங்க னியுடைந்து தேங்க வயல்வந்து
         மாண்பு நெல்விளைந்த               வளநாடா
    மாந்தர் தவரும்பர் கோன்ப ரவிநின்ற
         மாந்து றையமர்ந்த                  பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
ஆங்கு உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி

ஆங்க = அங்ஙனே உடல் வளைந்து = உடல் வளைவுற்றுக் கூனி நீங்கு பல் = விழ வேண்டிய பற்கள் நெகிழ்ந்து = தளர்ச்சி உற்று ஆய்ஞ்சு = ஆராய்ந்து தளர் சிந்தை = ஓய்வுறும் மனம் தடுமாறி = தடுமாற்றம் அடைந்து.

ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து
ஆண்டு பல சென்று கிடையோடே

ஆர்ந்து உள = நிறைய இருந்த கடன்கள் வாங்கவும் அறிந்து = கடன்கள் வேண்டுவனவற்றை அறிந்து வாங்கி
ஆண்டு பல சென்று = இப்படிப் பல ஆண்டுகள் செல்ல
கிடையோடே = (படுக்கையில்) கிடந்து.

ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து
ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன்

ஊங்கி = மேம்பட்டு இருமல் வந்து = நிரம்ப இருமல் நோய் ஏற்பட்டு வீங்கு குடல் நொந்து = வீங்கும் குடலும் சோர்வு அடைந்து ஓய்ந்து உணர்வு அழிந்து = சோர்ந்து உணர்ச்சியும் அடங்கி உயிர் போ முன் = உயிர் போவதற்கு முன்பு.

ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே

ஓங்கு மயில் வந்து = விளங்கி நிற்கும் மயிலின் மீது வந்தருள சேண் பெற = விண்ணுலகை அடைய இசைந்து = நீ மனம் உவந்து ஒப்பி ஊன்றிய பதங்கள் தருவாயே = நிலை பெற்ற உன் திருவடியைத் தருவாயாக.

வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த
வேந்து இழையின் இன்ப மணவாளா

வேங்கையும் = வேங்கை மரங்களும். உயர்ந்த தீம் புனம் = உயர்ந்து ஓங்கி உள்ள இனிய தினைப் புனம். வேந்து இழையின் இன்ப = தலைவியாகிய வள்ளியின் இன்பத்துக்கு உரிய நாயகனே.
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச
வேண்டிய பதங்கள் புரிவோனே

வேண்டுமவர் தங்கள் = வேண்டிக் கொள்ளும் அடியார்கள் பூண்ட = கொண்டுள்ள பதம் மிஞ்ச = பதவி மேfமபட்டு விளங்க வேண்டிய பதங்கள் புரிவாயே = அவர்கள் விரும்பிய திருவடியை அருள் புரிவோனே.

மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து
மாண்பு நெல் விளைந்த வள நாடா

மாங்கனி உடைந்து = மாம்பழம் உடைந்து வயல் தேங்க வந்து = வயலில் நிறைந்து தங்கும்படி சேர்ந்து மாண்பு நெல் விளைந்த வளநாடா = (அதனால்) நல்ல அழகிய நெல் விளையும் வளப்பம் உள்ள சோழ நாடனே.

மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற
மாந்துறை அமர்ந்த பெருமாளே.

மாந்தர் = மனிதர்களும் தவர் = தவசிகளும் உம்பர் கோன் = இந்திரனும் நின்ற = போற்ற நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே = திருமாந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.
 
சுருக்க உரை
உடல் கூனி, பற்கள் தளர்ச்சி உற்று, மனம் தடுமாறி, கடன்கள் வாங்கி, பல ஆண்டுகள் நோய் வாய்ப்பட்டு, என் உயிர் போவதற்கு முன், நீ மயில் மேல் வந்து உனது நிலையான திருவடியைத் தர வேண்டும்.

வேங்கை மரங்கள் நிறைந்த இனிய தினைப் புனத்தில் இருந்த வள்ளி நாயகியின் கணவனே, அடியார்களுடைய விருப்பங்களை அருள்பவனே, வளப்பமான வயல்கள் சூழ்ந்த திருமாந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிலையான திருவடியைத் தர வேண்டுகின்றேன்.

” tag:

Saturday, 19 April 2014

259.திரை வார் கடல் சூழ்

259
மயிலை

திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு

   திரிவே னுடையோ துதல்                    திகழாமே

தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ

   சுதனே திரிதேவர்கள்                    தலைவாமால்

வரைமா துமையாள்தரு மணியே குகனேயென

   அறையா வடியேனுமு                      னடியாராய்

வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு

  மகநா ளுளதோசொல்                     அருள்வாயே

இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு

  மிழிவா கிமுனேயிய                            லிலராகி

இருளா மனதேயுற அசுரே சர்களேமிக

   இடரே செயவேயவ                             ரிடர்தீர   

மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ              

  மதமா மிகுசூரனை                              மடிவாக

வதையே செயுமாவலி யுடையா யழகாகிய

   மயிலா புரிமேவிய                         பெருமாளே

பதம் பிரித்து உரை  

திரை வார் கடல் சூழ் புவி தனிலே உலகோரோடு

திரிவேன் உனை ஓதுதல் திகழாமே 

திரை வார் = அலைகள் கொண்ட கடல் சூழ் = கடலால் சூழப்பட்ட புவி தனிலே = பூமியில  உலகோரோடு = உலகத்தாரோடு  உனையே ஓதுதல் = உன்னையே ஓதி திகழாமே = புகழ்தல் இல்லாமல்  திரிவேன் = திரிகின்றவன்.

தின(ம்) நாளும் மு(ன்)னே துதி மனது ஆர பி(ன்)னே சிவ

சுதனே திரி தேவர்கள் தலைவா மால்

தின நாளும் = நாள்தோறும் முன்னே துதி = முன்னதாகத் துதிக்கும் மனது ஆர = மன நிலை நிரம்பப் பெற்று பின்னே = அதற்குப் பின் சிவ சுதனே = சிவ குமரனே திரி தேவர்கள் தலைவா = மும்மூர்த்திகளின் தலைவனே மால் = பெரிய.

வரை மாது உமையாள் தரு மணியே குகனே என

அறையா அடியேனும் உன் அடியராய்

வரை மாது = (இமய) மலை மாதாகிய உமையாள் தரு = பார்வதி தேவி ஈன்றருளிய மணியே = மணியே குக = குகனே என = என்று அறையா = ஓதி அடியேனும் உன் அடியராய் = அடியேனாகிய நானும் உன் அடியாராய்.

வழி பாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு  

மகா நாள் உளதோ சொ(ல்)ல அருள்வாயே

வழி பாடு உறுவாரோடு = வழிபாடு செய்பவர்களோடு அருளாதாரமாய் இடு = அருளன்பு கூடியவராகின்ற  மக நாள் உளதோ = விசேட நாள் ஒன்று உண்டோ? சொல்ல அருள்வாய் = சொல்லருள் புரிவாயாக.

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும்

இழிவாகி மு(ன்)னே ஏய் இயல் இலராகி

இறை = தலைமை பூண்ட  வாரண தேவனும் = ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு உரிய தேவனாகிய இந்திரனும் இமையோரவர் ஏவரும் = பிற தேவர்கள் யாவரும் இழிவாகி = இழிவான நிலையை அடைந்து முன் = முன்பு  ஏய் இயல் இலராகி = தமது தகுதியை இழந்தவர்களாகி.

இருளோ மனதே உற அசுரேசர்களே மிக

இடரே செ(ய்)யவே அவர் இடர் தீர

இருளோ மனதே உற = மயக்க இருள் கொண்ட மனம் கொண்டவராக அசுரேசர்களே = அசுரத் தலைவர்கள் மிக = நிரம்ப இடரே செய்யவே = துன்பச் செயல்களைச் செய்து வர அவர் இடர் தீர = அந்தத் தேவர்களின் துன்பம் நீங்க.

மற மா அயிலே கொ(ண்)டு உடலே இரு கூறு எழ

மத மா மிகு சூரனை மடிவாக

மற மா அயிலே கொண்டு = வீரம் வாய்ந்த சிறந்த வேலாயுதத்தைக் கொண்டு உடலே இரு கூறு எழ = உடல் இரண்டு கூறுபட மத மா மிகு = ஆணவம் மிகுந்த சூரனை மடிவாக = சூரனை அழிவுற.

வதையே செ(ய்)யு மா வலி உடையாய் அழகாகிய 

மயிலாபுரி மேவிய பெருமாளே.

வதையே செயயு = வதை செய்த மா வலி உடையாய் = பெரிய வலிமையைக் கொண்டவனே அழகாகிய = அழகான மயிலா புரி மேவிய பெருமாளே = மயிலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கடலால் சூழப்பட்ட உலகில் உன்னை ஓதிப் புகழாமல் வீணாகத் திரிகின்றவன் நான். நாள்தோறும் உன்னைத் துதிக்கும் மன நிலையைப் பெற்று, பின்னர், சிவ குமாரனே, மும்மூர்த்திகளுக்கும் தலைவனே. உமா தேவி பெற்ற மணியே. குகனே என்று ஓதி, உன்னுடைய அடியார்களுள் ஒருவனாக சேரும் சிறப்பான நாள் ஒன்று உண்டோ? சொல்ல அருளுக.

ஐராவதத்தின் தலைவனான இந்திரனும், மற்ற தேவர்களும்,

இழிவான நிலையை அடைந்து நிற்க, மயக்க இருள் கொண்ட அசுரத் தலைவர்கள் அவர்களுக்கு மிக்க துன்பத்தைச் செய்து வர, வீரம் வாய்ந்த வேலாயுதத்தைச் செலுத்தி, அசுரர்களின் உடல்களைப் பிளந்தவனே, சூரனை அழித்த வலிமையைக் கொண்டவனே, மயிலையில் வீற்றிருப்பவனே. நான் உன் அடியார்களுடன் சேரும் நாள் கிட்டுமோ?     

விளக்கக் குறிப்புகள்

 . திரி மூர்த்திகள் = மும் மூர்த்திகள்.

ஒப்புக
மதமா மிகு சூரனை மடிவாக...
    
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருது குரிசில் எனப்பல...திருமுருகாற்றுப்படை

குகனே – அணோரணியான் மஹதோ மஹியானாத்மா குஹாயாம் –     தைத்திரீய உபநிஷத்