F

படிப்போர்

Thursday 28 March 2013

204.இறவாமற்

204
அவிநாசி
                     
         தனதானத் தனதான தனதானத் தனதான 

    இறவாமற் பிறவாமல் எனையாள்சற்       குருவாகிப்
   பிறவாகித் திரமான பெருவாழ்வைத்         தருவாயே
   குறமாதைப் புணர்வோனே குகனேசொற்    குமரேசா
   அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்     பெருமாளே

பதம் பிரித்து உரை

இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற் குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே

இறவாமல் = நான் இறவாமல் வரம் தந்தும்    
பிறவாமல் = மீண்டும் பிறவமால் வரம் தந்தும்
எனைஆள் = என்னை ஆண்டருளும். சற் குரு நாதா = நல்ல குருவாகியும்.

பிற ஆகி = வேறு துணையாகியும். திரமான =
நிலையான. பெரு வாழ்வை = வீட்டுப் பேற்றை.
தருவாயே = தந்தருளுவாயாக.

குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரோசா
அற(ம்) நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே.

குறமாதை = குறப் பெண்ணாகிய வள்ளி  நாயகியை. புணர்வோனே = சேர்பவனே குகனே = குகனே சொல் = எல்லோராலும் புகழப்படும் குமரேசா = குமரேசனே.

அறம் நாலை = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வாழ்க்கைக் குறிக்கோள்களையும்
புரு ஷார்த்தங்களையும்) புகல்வோனே =
உபதேசிப்பவனே அவிநாசிப் பெருமாளே =
அவநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

இறத்தல், பிறத்தல் இரண்டையும் தவிர்ப்பவனும், என்னை  ஆண்டருளும்   வேறு  துணையாகியும், நிலையான வீட்டுப்   பேற்றைத் தருபவனும்,   வள்ளி  நாயகியைச்   சேர்பவனும்,   எல்லோராலும்  புகழப்படுபவனும்   ஆகிய குமரேசனே, அறம்,   பொருள்,   இன்பம், வீடு என்னும்  நான்கு  வாழ்க்கைக்   குறிக்கோள்களை  உபதேசிப்பவனே,  பெரு வாழ்வாகிய   
முத்தியைத் தருவாயே.

ஒப்புக

பிறவாகி ....
எனக்கு இனிய பிற பொருள்களும் ஆகி. 
நேரே தீர வூரே பேரே பிறவேயென்                -------- திருப்புகழ்,மைச்சரோருக.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published