F

படிப்போர்

Saturday 1 September 2012

26.குடர்நிண

குடர்நிண மென்பு சலமல மண்டு
        குருதிந ரம்பு                                    சீயூன்பொதிதோல்
குலவுகு ரம்பை முருடுசு மந்து
        குனகிம கிழ்ந்து                               நாயேன்தளரா
அடர்மத னம்பை யனையசு ருங்க
        ணரிவையர் தங்கள்                        தோடோய்ந்தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
        அடியிணை                                      யாண்டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
        தருகுற மங்கை                                வாழ்வாம்புயனே
சரவண கந்த முருகக டம்ப
        தனிமயில் கொண்டு                        பார்சூழ்ந்தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
        தொழவொரு செங்கை                    வேல்வாங்கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
        சொரிகடல் நின்ற                            சூராந்தகனே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு
குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல்

குடர் = குடல் நிணம் = கொழுப்பு என்பு = எலும்பு சலம் மலம் அண்டும் = நீர், மலம் ஆகியவை நிரம்பியுள்ள குருதி = இரத்தம். நரம்பு = நரம்பு சீ = சீழ் ஊன் = மாமிசம் பொதி தோல் = மூடும் தோல் (இவையுடன்).

குலவு குரம்பை முருடு சுமந்து
குனகி மகிழ்ந்து நாயேன் தளரா

குலவு = விளங்குகின்ற குரம்பை முருடு = கூடாகிய மரக் கட்டையை சுமந்து= சுமந்து குனகி= கொஞ்சிப்பேசியும் மகிழ்ந்து=
மகிழ்ந்தும் நாயேன் = நாயேனாகிய அடியேன் தளரா = தளர்ந்தும்

அடர் மதன் அம்பை அனைய சுரும் கண்
அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா

அடர் = நெருங்கி வரும் மதன் அம்பை அனைய = மன்மதனின் அம்பு போன்ற சுரும் கண் = கரிய கண்களை உடைய அரிவையர் தங்கள் =
விலை மாதர்களுடைய தோள் தோய்ந்து = தோள்களில் தோய்ந்தும் அயரா = சோர்ந்தும்.

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன்
அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய்

அறிவு அழிகின்ற = அறிவு அழிந்து போகின்ற குணம் அற = கெட்ட குணம் தொலைய உன்றன் = உன்னுடைய அடியிணை
= இரண்டு திருவடிகளை தந்து = அருளி நீ ஆண்டு அருள்வாய்
= நீ என்னை ஆண்டருள்வாயாக

தடவு இயல் செந்தில் இறையவ நண்பு
தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே

தடவு இயல் = பெருமை பொருந்திய செந்தில் இறைவ = திருச்செந்தூர் இறைவனே  நண்பு தரு = அன்பு விளங்கிய குற மங்கை = குறப் பெண்ணான வள்ளிக்கு வாழ்வு ஆம்= வாழ்வாகின்ற புயனே = திருப்புயங்களை உடையவனே.

சரவண கந்த முருக கடம்ப
தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே

சரவண கந்த முருக கடம்ப = சரவணனே, கந்தனே, முருகனே, கடம்பனே தனி = ஒப்பற்ற மயில் கொண்டு = மயிலின் மீதேறி
பார் சூழ்ந்தவனே = உலகை வலம் வந்தவனே

சுடர் படர் குன்று தொளை பட அண்டர்
தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா

சுடர் படர் = ஒளி பரந்த குன்று = கிரவுஞ்ச மலை தொளை பட = தொளை படவும் அண்டர் தொழ = தேவர்கள் தொழவும் ஒரு செம் கை வேல் = ஒப்பற்ற திருக் கரத்தினின்றும் வேலாயுதத்தை வாங்கியவா = செலுத்தியவனே.

துரித பதங்க இரத ப்ரசண்ட
சொரி கடல் நின்ற சூர அந்தகனே.

துரித = வேகமாகச் செல்லும் பதங்க(மம்) = பறவையாகிய மயிலை இரத = இரதமாகக் கொண்ட ப்ரசண்ட = பெரிய வீரனேசொரி கடல் = அலை
 வீசுகின்ற கடலில் நின்ற சூர = நின்ற சூரனுக்கு அந்தகனே = காலனாக இருந்தவனே.

சுருக்க உரை

குடல், கொழுப்பு, மலம் இவை நிரம்பி, இரத்தம், நரம்பு, மாமிசம், தோல் ஆகியவற்றால் மூடப்பட்ட இவ்வுடலைச் சுமந்தும், கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும் நாயேன் அம்பு போன்ற கண்களை உடைய விலைமாதர்களின் தோளில் தோய்ந்து அயர்ந்து, அறிவு அழிந்து போகும் கெட்ட குணம் தொலைய, உன் திருவடிகளை எனக்குத் தந்து அருள வேண்டும்.

திருச்செந்தூர் இறைவனே. குறப் பெண் வள்ளிக்கு வாழ்வாய் விளங்கியவனே, சரவணனே, கந்தனே, மயிலேறி உலகை வலம் வந்தவனே, கிரவுஞ்ச மலை தொளை படவும் தேவர்கள் தொழவும் வேலை ஏந்தியவனே, வேகமாகச் செல்லும் மயிலை இரதமாகக் கொண்ட வீரனே, சூரனுக்குக் காலனாக இருந்தவனே, அடியேனை நீ ஆண்டு அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. இப்பாடல் மயிலின் பெருமையைக் கூறுவது.
ஆ. துரித பதங்க இரத ப்ரசண்ட....  வேகத்தோடு செல்லும் மயிலாகிய இரதத்தை உடைய பிரசண்டனே.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published