F

படிப்போர்

Thursday, 15 November 2012

148.பத்தியால்

பத்தியால் யானுனைப்         பலகாலும்
   பற்றியே மாதிருப்             புகழ்பாடி    
முத்தனா மாறெனைப்    பெருவாழ்வின்    
   முத்தியே சேர்வதற்        கருள்வாயே     
உத்தமா தானசற்              குணர்நேயா    
   ஒப்பிலா மாமணிக்            கிரிவாசா    
வித்தகா ஞானசத்                 திநிபாதா    
   வெற்றிவே லாயுதப்        பெருமாளே
-148இரத்தினகிரி
(குழித்தலைக்கு அருகில் உள்ளது)
ஐயர்மலை, சிவாயமலை, சிவைதைப்பதி, அரதனாசலம், இரத்தினவெற்பு, சிவாயம், வாட்போக்கி, மணிக்கிரி, மாணிக்கமலை என்றும் அழைக்கபடுகிறது

பதம் பிரித்தல்

பத்தியால் யான் உனை பல காலும்     
பற்றியே மா திரு புகழ் பாடி

பத்தியால் = பக்தி பூண்டு   யான் உனை = நான் உன்னை பல காலும் = நீண்ட நாட்களாக  பற்றியே =
உன்னைப் பற்றுக் கோடாக (உள்ளத்தில் தியானித்து) மா = சிறந்த  திருப்புகழ் பாடி = உனது திருப்புகழ்களைப் பாடி.

முத்தன் ஆமாறு எனை பெரு வாழ்வின்    
முத்தியே சேர்வதற்கு அருள்fவாயே

முத்தன் ஆமாறு = ஞான நிலை பெற்றவனாக ஆகும்படி. எனை பெரு வாழ்வின் = என்னை சிறந்த வாழ்வாகிய
முத்தியே சேர்வதற்கு =  முத்தி நிலையை அடைய.
அருள்வாயே = அருள் புரிவாயாக.

உத்தமா தான சற் குணர் நேயா    
ஒப்பிலா மா மணி கிரி வாசா

உத்தமா = உத்தமனே தான சற் குணர் நேயா = ஈகைக் குணம் உள்ள நல்ல குணம் உடையவர்களுக்கு நண்பரே.
அல்லது
உத்தம அதான சற்குணர் நேயா என பிரித்து உத்தம குணத்தைப் பற்றிக்கொண்டுள்ள நல்லியல்பு உடைய நண்பரே! எனவும் பொருள் கொள்ளலாம்

ஒப்பிலா = நிகரில்லாத. சமானமில்லாத மா மணிக்கிரி வாசா = சிறந்த இரத்தினகிரியில் வீற்றிருப்பவனே

வித்தகா ஞான சத்திநி பாதா    
வெற்றி வேலாயுத பெருமாளே.

வித்தகா = ஞானியே சத்திநி பாதா = ஞான பக்குவம் அடைந்தவர்களுக்கு அருள் புரியும்  சத்தியாகப் பதிகின்றவனே வெற்றி வேலாயுதப் பெருமாளே = வெற்றி வேலாயுதத்தைக் கையில் ஏந்தும் பெருமாளே.

சுருக்க உரை

நான் உன்னைப் பல காலமாக உள்ளத்தில் தியானித்து உனது திருப்புகழைப் பாடி, ஞான நிலை பெற்றவனாகும்படியான முத்தி நிலையை அடைய அருள் புரிவாயாக.
உத்தமனே, ஈகைக் குணம் உடைய நல்ல குணம் படைத்தவர்களுக்கு நேசனே, ஒப்பில்லாத இரத்தின கிரியில் வாழ்பவனே, ஞானியே, ஞான பக்குவம் அடைந்தவர்களுக்கு அருள் சத்தியாக இருப்பவனே, வெற்றி வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, நான் முத்தியை அடைய அருள் புரிய வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

சத்திநி பாதா.... {இதுகாறும் மறைந்திருந்த இறைவனின் சக்தி அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் இறைவதே சத்தி நிபாதாம் ஆகும் அது ஆன்மாவின் தகுதிக்கேறப நான்கு வகைகளில் (பிரகாரமாக) நிகழுமென சைவ சித்தாந்தம் கூறுகிறது}       

முதல் பிரகாரம்... வாழைத் தண்டில் நெருப்பு பற்றினால் போல இருக்கும் (மந்தம்) (நமக்குப் பேறாயுள்ளது ஒரு கர்த்தா என்று உணர்வது).         
இரண்டாவது பிரகாரம் ...பச்சை விறகில் நெருப்பு பற்றினால் போல இருக்கும் (மந்த தரம்). (அந்தக் கர்த்தாவைப் பெறுகைக்கு வழி என்ன என்று ஆராய்வது).
மூன்றாம் பிரகாரம்... உலர்ந்த விறகில் நெருப்பைப் போன்றது (தீவிரம்). (கர்த்தாவைப் பெற உலகில் நாடுவது) நான்காம் பிரகாரம்... கரியில் நெருப்புப்
போன்றது (தீவிர தரம்). (உலகை முற்றும் துறந்து கர்த்தாவே பொருள் என்று கொண்டு தான் அற நின்று வழிபடுதல்).- (வ.சு.செங்கல்வராய பிள்ளை).    

சத்தி நிபாதா....  சக்தி அருள், நி மிகுதி, பாதம்- பதிதல். திருவருள் ஞானத்தை ஆன்மாக்களுக்கு பதிய வைப்பவர்  - வாரியார் ஸ்வாமிகள்    

www.thiruppugazhamirutham.shutterfly.com

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published