F

படிப்போர்

Saturday 4 August 2012

3. உம்பர்தரு

உம்பர்தரு தேனுமணிக்                     கசிவாகி

   ஒண்கடலில் தேனமுதத்             துணர்வூறி

இன்பரசத்தே பருகி                         பலகாலும்

   என்றனுயிர்க் காதரவுற்            றருள்வாயே

தம்பி தனக்காக வனத்           தணைவோனே

   தந்தை வலத்தா லருள்கை       கனியோனே

அன்பர் தமக்கான நிலைப்      பொருளோனே

   ஐந்து கரத் தானை முகப்          பெருமாளே.

    உம்பர் தரு தேனு மணி கசிவாகி

   ஒண்கடலில் தேன் அமுது உணர்வு ஊறி

உம்பர் தரு - விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம்

தேனுமணி - காமதேனு, சிந்தாமணி
கசிவாகி - (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து

ஒண்கடலிற் தேனமுது -  ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய   இனிய அமுதம்போன்ற

உணர்வூறி - உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி

    இன்ப ரசத்தே பருகி பலகாலும்

    எந்தனன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே

இன்பரசத்தே - இன்பச் சாற்றினை

பருகிப் பலகாலும் - நான் உண்ணும்படி பலமுறை

எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே - என்னுயிரின் மீது    ஆதரவு வைத்து அருள்வாயாக

    தம்பி தனக்காக வனத்(து) அணைவோனே

    தந்தை வலத்தால் அருள் கை கனியோனே

தம்பிதனக்காக - தம்பியின் (முருகனின்) பொருட்டாக
வனத்(து) அணைவோனே - தினைப் புனத்திற்கு   வந்தடை வோனே
தந்தை வலத்தால் - தந்தை சிவனை வலம் செய்ததால்
அருள்கைக் கனியோனே - கையிலே  அருளப் பெற்ற  பழத்தை  உடையவனே

    அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே

    ஐந்துகரத்து ஆனை முகப்  பெருமாளே

அன்பர்தமக் கான - அன்பர்களுக்கு வேண்டிய

நிலைப் பொருளோனே - நிலைத்து  நிற்கும்  பொருளாக  விளங்குபவனே
ஐந்து கரத்து - ஐந்து கரங்களையும்

ஆனைமுகப் பெருமாளே. –யானை முகத்தையும்  உடைய  பெருமானே

சுருக்கவுரை

தம்பி முருகனின் பொருட்டு தினைப்புனத்திற்கு வந்தடைவோனே, தந்தை

சிவனை வலம் செய்ததால் கையிலே  பழத்தை உடையவனே,

அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே,

ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே, 
விண்ணவர் உலகிலுள்ள  கற்பக மரம்  காமதேனு,  சிந்தாமணி  போன்று  கொடுத்துதவர் என்  உள்ளம் நெகிழ்ந்து,ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய  அமுதம் போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான்

உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக

விளக்க குறிப்புகள்:

உம்பர் தரு  வேண்டியயதை கொடுக்க வலல தேவலோக மரங்கள். 
சந்தானம், அரி  சந்தானம் மத்தாரம், பாரிஜாதம், கற்பகம்,  என  ஐந்து வகை
தேனு- காமதேனு எனப்படும் தெய்வப் பசு. பாற்கடலை கடைந்த 
பொழுது அமிர்தத்துடன் தோன்றியது.
மணி  சிந்தாமணி என்ப்படும் தெய்வ ரத்னம். சிந்தித்ததைத் தரக்
கூடியது
தம்பி தனக்காக வனத்(து) அணைவோனே  வள்ளிபிராட்டியை அருள்புரியும்
 நோக்குடன் வள்ளிமலைக்கு முருகன் சென்ற பொழுது ஓங்கார வடிவெடுத்து வள்ளி   முருகனுடன் சேர அருள் புரிந்தார்
ஐந்து கரம்  கணபதியின் ஐந்து கரங்கள் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல்,    அருளள் என்ற ஐம்பெருந் தொழில்களை புரிகின்றார்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published