இருமலு ரோக
முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத
தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை
எரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு
மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி
யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால
வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி
லுறைமுகி லுர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி
னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே
-
117 திருத்தணிகை
பதம்
பிரித்து உரை
இருமல்
உரோகம் முயலகன் வாதம்
எரி
குண நாசி விடமே நீர்
இருமல் = இருமல்
எனப்படும் உரோகம் = நோய் முயலகன் = முயலகன் எனப்படும் வலிப்பு நோய் வாதம் = வாயு சம்பந்தமான நோய் எரி குணம் நாசி = எரியும் குணம் கொண்ட மூக்கு
நோய் விடமே = விடத்தால்
உண்டாகும் நோய்கள்.
இழிவு
விடாத தலைவலி சோகை
எழு
களம் மாலை இவையோடே
நீர் இழிவு = நீர்
நிரம்பப் போகும் நோய்.
விடாத தலை வலி = நீங்காத தலை வலி. சோகை = (இரத்தக்
குறைவால்) முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்.
எழு = கிளைத்துப் புறப்படும். களம் மாலை
= கழுத்தைச் சுற்றி உண்டாகும் கட்டி.
இவையோடே = இவைகளும், பின்னும்.
பெரு
வயிறு ஈளை எரி குலை சூலை
பெரு
வலி வேறும் உள நோய்கள்
பெரு வயிறு = வயிறு
பெரிதாகும் மகோதரம் என்னும் நோய் ஈளை = கோழை. எரி குலை = எரிகின்ற குலை நோய். சூலை = வயிற்று உளைவு நோய் பெரு வலி = குமர
கண்ட வலி முதலிய பெரிய வலி கொடுக்கும் நோய்கள் வேறும்
உள நோய்கள் = மேலும் உள்ள பல விதமான நோய்கள்.
பிறவிகள்
தோறும் எனை நலியாத படி
உன(து)
தாள்கள் அருள்வாயே
பிறவிகள் தோறும் = ஒவ்வெரு
பிறவியிலும் எனை = என்னை. நலியாதபடி = பிடித்து வருத்தாமல் உன(து) தாள்கள்) = உனது திருவடிகளை அருள்வாயே = அருள் புரிவாயாக.
வரும்
ஓரு கோடி அசுரர் பதாதி
மடிய
அநேக இசை பாடி
வரும் ஒரு கோடி = வந்த
கோடிக் கணக்கான அசுரர் பதாதி = அசுரர்களின் காலாட் படை மடிய = இறந்து படவும் அநேக இசை பாட = வீரத்தை எழுப்பும் பாடல்களைப்
பாடிக் கொண்டு
வரும்
ஒரு கால வயிரவர் ஆடி
சூடி
சுடர் வேலை விடுவோனே
வரும் ஒரு = வந்த ஒப்பற்ற கால வயிரவர் ஆட= கால
பயிரவர் (போர்க்களத்தில்)
நடிக்கவும் வடி = கூரிய சுடர் வேலை விடுவேனோ = ஒளி வீசும் வேலைச் செலுத்திய
தரு
நீழல் மீதில் உறை முகில் ஊர்தி
தரு
திரு மாதின் மணவாளா
தரு நிழல் மீதில் = கற்பகத்
தருவின் நிழலில் உறை = உறைகின்ற முகில் ஊர்தி = மேக வாகனனாகிய இந்திரன் தரு திரு மாதின் = பெற்ற அழகிய மாதாகிய
தேவசேனையின் மணவாளா = கணவனே.
சலம்
இடை பூவின் நடுவினில் வீறு
தணி
மலை மேவும் பெருமாளே.
சலம் இடை = கடலால்
சூழப்பட்ட. பூவின் நடுவினில் = (இந்தப்)
பூமியின் மத்தியில் வீறு = சிறப்புற்று
ஓங்கும் தணி மலை மேவு = திருத்தணி
மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே = பெருமாளே.
சுருக்க
உரை
பல கொடிய நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும்
என்னை வருத்தாத படி உன்னுடைய திருத்தாள்களை உதவி அருள்க. கோடிக் கணக்கான அசுரர் படை
இறந்து பட வேலை விடுபவனே. இந்திரனுடைய மகளான தேவசேனையின் மணவாளனே, பூமியின் நடுவில் சிறப்பாக விளங்கும்
தணிகை மலையில் வீற்றிருப்பவனே, நோய்கள் நலியாதபாடி
உன் தாள்களை அருள்வாய்.
நோய் தீர்க்கும் திருமந்திரம் இந்த திருப்புகழ்

No comments:
Post a Comment
Your comments needs approval before being published