273
திருவிடைக்கழி
முருகப்பெருமானும், சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி.
தனத்த தானன தனதன தனதானா
மருக்கு லாவிய மலரணை கொதியாதே
வளர்த்த தாய்தமர் வகையது மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை யினிவர விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
சமர்த்த நேமணி மரகத மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே
பதம் பிரித்து உரை
மரு குலாவிய மலர் அணை கொதியாதே
வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே
மருக் குலாவிய = நறு மணம் கமழும்
மலர் அணை = மலர்ப் படுக்கை
கொதியாதே = கொதித்துச் சூடு ஆகாமலும்
வளர்த்த = வளர்த்த
தாய் தமர் = தாயும், சுற்றத்தார்களும்
வசை அது மொழியாதே = வசைகளைப் பேசாமலும்
கரு குலாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை இனி வர விடவேணும்
கரு = கருவைக் காரணமாகக் கொண்டு
குலாவிய = நட்பாடிய
அயலவர் = அயலார்கள் (வேற்று மனிதர்கள்)
பழியாதே = பழிச் சொல் கூறாமலும்
கடப்ப மாலையை = கடப்ப மலர் மாலையை
இனி வர விட வேணும் = இனி நீ அனுப்பி வைக்க
வேண்டும்
தரு குலாவிய கொடி இடை மணவாளா
சமர்த்தனே மணி மரகத மயில் வீரா
தருக் குலாவிய = கற்பக மரத்தின்
கொடி இடை = கொடி போன்ற இடையை உடைய தேவசேனையின்
மணவாளா = கணவனே
சமர்த்தனே = திறமை கொண்டவனே
மணி = அழகிய
மரகத = பச்சை நிறம் கொண்ட
மயில் வீரா = மயில் வீரனே
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே
திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே
திருக் குரா அடி நிழல் தனில் = திருக் குரா மரத்தின்
அடிநிழலில்
உறைவோனே = வீற்றிருப்பவனே
திருக் கை = திருக்கையில்
வேல் = வேலை ஏந்திய
வடிவழகிய பெருமாளே = அழகிய திரு உருவம் அழகுள்ள
பெருமாளே
சுருக்க உரை
நறு மணம் கமழும் படுக்கை கொதித்துச் சூடி
தராமலும், தாயும்சுற்றத்தாரும்
வசை மொழிகளைப் பேசாமலும், கருவை நோக்கம் வைத்துக் குலாவிய அயலார்கள் பழி கூறாமலும் சுற்றாத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், நீ உன் கடப்ப மலர் மாலையைத் தர வேண்டும்
கற்பக மரத்தின் கீழ் விளங்கிய கொடி போன்ற
தேவசேனையின் கணவனே அழகிய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே திருக்குரா மரத்தின் அடி நிழலில்
வீற்றிருப்பவனே கையில் வேல் ஏந்திய அழகனே இந்தப் பெண்ணுக்குக் கடப்ப மாலையைத் தர வேணும்
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது
குராவடிக் குமரன்
"கொந்துவார் குரவடியினும், அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட, வேத நன் முடியினு மருவிய குருநாதா" என்று
திருத்தணி திருப்புகழில் பாடிகிறார்
முருகனுக்கு உகந்த மூன்று இடங்கள்,
அதில் முதலாவதாக அவர் குறிப்பிடுவது குராமரத்தடியைத்தான்.
அருணகிரிநாதர் பல பாடல்களில்
முருகனது குராப் புனையும் தண்டையந்தாளையும் தொழுகிறார்.
"திருக்குராவடி நிழல்தனிலுலவிய
பெருமாளே"
"முக்தி வீட்டணுக முத்தராக்க,
சுருதிக்
குராக்கொள் இரு கழல் தாராய்"
"குராவின் நிழல் மேவும்
குமாரனென நாளுங்
குலாவி இனிதோது அன்பினர் வாழ்வே"
"செழுமலர்ப் பொழில் குரவம்
உற்ற
பொற்றிருவிடைக்கழி பெருமாளே"
சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம்
செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவண பொய்கையில் நீராடி,
இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து,
குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் மரத்தடியில் இன்றும்
இருக்கின்றது
இத்திருத்தலத்தில் தெய்வயானை
தென் திசை நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார். அன்னை சுப்பிரமணிய ஸ்வாமியை நோக்கி முகத்தை சற்றே வலப்புறம் திருப்பிய தவகோலத்தில்
இருக்கும் அழகை பார்த்ததுக்கொண்டே இருக்கலாம்.
'முருகன் எப்போது சிவபூஜை முடித்து தன்னை கரம் பிடிப்பார்' என்று அவர் நினைக்கும் மனநிலையை
இது தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சொல்வர்
இத்தலத்தில் பிரதோஷநாயகர், நடராஜர்,
சந்திரசேகர், சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்திகள் வலது திருக்கரத்தில் (சுட்டுவிரலுக்கும்,
நடுவிரலுக்கும் நடுவே) வஜ்ர வேலைக் கொண்டிருக்கின்றனர். பிற கோவில்களில் திரிசூலமே
அஸ்திர தேவராக அமைந்திருக்கும் இத்தலத்தில் வஜ்ரவேல் தான் அஸ்திரதேவராக விளங்குகிறது.
நடராஜப்பெருமான் வலதுத் திருக்கரத்தில்
வஜ்ரவேலும், இடது திருக்கரத்தில் வில்லும் ஏந்திக் கொண்டு இரண்யாசூரசம்ஹார மூர்த்தியாகவும்,
சபாநாயகராகவும் இருக்கிறார். இத்தலத்தில் மூலவர் முருகனுக்கு முன், யானை வாகனம் உள்ளது.
மயில் வாகனம் அல்ல. ஸ்வாமிமலை போல்.
இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும்
கிடையாது. இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம்,
நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம்
ஏற்படும் என்பது ஐதீகம்.