F

படிப்போர்

Tuesday 28 August 2012

17. இயலிசை

இயலிசையி லுசித வஞ்சிக்              கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித்             துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்             கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத்     தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத்             தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித்           தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற்          பதிவாழ்வே
     கரிமுகவ னிளைய கந்தப்             பெருமாளே.

பதம் பிரித்து உரை

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே

உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குற மகளை வந்தித்து அணைவோனே

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே.

-திருச்செந்தூர்
பத உரை

இயல் இசையில் = இயற்றமிழுடன் கூடிய இசை ஞானத்தில். உசித =  தகுதி கொண்ட. வஞ்சிக்கு = மாதர்களுக்கு. அயர்வாகி = தளர்வு அடைந்து. இரவு பகல் = இரவும் பகலும். மனம் சிந்தித்து = அவர்களையே நினைத்து. உழலாதே = நான் அலையாமல்.

உயர் கருணை புரியும் = (உனது) உயர்ந்த கருணையால் வரும். இன்பக் கடல் மூழ்கி = இன்பக் கடலில் முழுகி. உனை = உன்னை. எனது உள = என்னுடைய மனத்தில். அறியும் = தெரிந்து கொள்ளும். அன்பைத் தருவாயே = அன்பைத் தந்து அருள்வாயாக.

மயில் தகர் கல் இடையர் = மயிலும், ஆடும் நிறைந்திருக்கும் மலையில் வசிக்கும் வேடுவர்களுடைய. அந்தத் தினை காவல் = அந்தத் தினைப் புனத்தில் காவல் பூண்டிருந்த. வனச = இலக்குமி போன்ற. குற மகளை = குறப் பெண்ணாகிய வள்ளியை. வந்தித்து = வணங்கி. அணைவோனே = அணைந்தவனே.
  
கயிலை மலை அனைய = திருக்கயிலை மலை போலப் (புனிதமான). செந்திற் பதி வாழ்வே = திருச்செந்தூரில் வாழ்பவனே. கரி முகவன் = யானை முக கணபதிக்கு. இளைய கந்தப் பெருமாளே = கணபதியாருக்குத் தம்பியாகிய பெருமாளே.

சுருக்க உரை

இயற்றமிழுடன் கூடிய இசை ஞானத்தில் தகுதி கொண்ட விலை
மாதர்களால் தளர்வு அடைந்து, அவர்களையே சிந்தனை செய்து நான் அலையாமல், உனது உயர்ந்த கருணையால் உன்னை என் உள்ளத்தில் அறியும் அன்பைத் தந்தருள்வாய். 

மயிலும், ஆடும் நிறைந்திருக்கும் மலையில் வாழ்கின்ற வேடுவர் மகளான
வள்ளியை வணங்கி அணைந்தவனே, திருக் கயிலை போல் புனிதமான திருச்செந்தூர்ப் பதியில் வாழ்பவனே, கணபதிக்கு இளையவனே, உன்னை எனதுள் அறியும் அன்பைத் தருவாய்

ஜீவான்மாகிய வள்ளி ஐம்புலங்களாகிய வேடுவர் குலத்தில் தோன்றி, நெஞ்சமாகிய புனத்தில், ஞானப்பயிராகிய தினையை, மாயாமலமாகிய பறவைகள் அழிக்காவண்ணம் காத்துக் கொண்டிருக்க, அடியார்க்கு எளியவராகிய கந்த பெருமான் விரைந்து வந்து, 'உன்னை நான் கும்பிடுகிறேன் என்னை மணந்து கொள்' என்று இதமாக வசனங்கூறி ஆட்கொண்டார் என்பது கருத்து

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published