274
திருவீழிமிழலை
பூந்தோட்டத்திலிருந்து 6 கி.மீ
தொலைவில்
அசுரசேனைகளை அழிக்க முருகப் பெருமானுக்கு பல்வேறு ஆயுதங்கள்
தேவைப்பட்டன. எனவே சிவபெருமான் முருகனை அழைத்து 12 ஆயுதங்களை உனக்கு தருகிறேன் என்று
கூறி தனது உதவி அம்சமாக விளங்கும் மகாதேவன், அரன், ருத்திரன், சங்கரன், நீலலோகிதன்,
ஈசானன், விஜயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சவுமியன் என்ற ஏகாதச ருத்திரர்களையும்
அருகில் அழைத்து அவர்களை தோமரம், த்வஜம், அஸி (வாள்) வஜ்ராயுதம், தனுசு பாணம், அங்குசம்,
கண்டாயுதம், கமலாயுதம், கோதண்டம், ஈட்டி, பரசு எனும் பதினோரு வகை ஆயுதங்களாக்கி முருகப்
பெருமானுக்கு தந்தார். 
இவற்றோடு சக்தியின் அம்சமான சக்தி ஆயுதத்தையும் (வேலாயுதம்)
தரச் செய்தார். இவ்வாறாக முருகப் பெருமானின் 12 கைகளுக்கும் 12 வகை விசேஷ ஆயுதங்கள்
சிவசக்தியரால் தரப்பட்டன. முருகன் பூலோகத்திற்கு வந்து 12 தலங்களில் லிங்கம் அமைத்து,
சிவசக்தியர்களை வணங்கி அந்த 12 ஆயுதங்களையும் பெற்றார். 
பிறகு சூரனையும் அவன் சகோதரர்களையும்  போரிட்டு வென்றார். இவற்றில் சிக்கலில் சக்தியை
வணங்கி சக்தி வேலை முருகன் பெற்றார். மற்ற 11 தலங்கள் திருப்பரங்குன்றம், பெருவேளூர்,
புள்ளிருக்கு வேளூர், திருவீழிமிழலை, கீழ்வேளூர், திருசேய்ஞலூர், கூந்தலூர், திருச்செங்காடு,
திருப்பந்துறை, திருமுருகன்பூண்டி, திருமயிலாடி எனும் தலங்களாகும்.  
       தனனா தனனா தனனா
தனனா 
          தனனா தனனா                      தனதான 
           எருவாய் கருவாய் தனிலே யுருவா
                      யிதுவே
பயிராய்                 விளைவாகி 
                 இவர்போ
யவரா யவர்போ யிவரா 
                      யிதுவே
தொடர்பாய்            வெறிபோல 
                 ஒருதா
யிருதாய் பலகோ டியதா 
                      யுடனே
யவமா                      யழியாதே 
                 ஒருகால்
முருகா பரமா குமரா 
                      உயிர்கா
வெனவோ            தருள்தாராய் 
                 முருகா
வெனவோர் தரமோ தடியார் 
                      முடிமே
லிணைதா            னருள்வோனே 
                 முநிவோ
ரமரோர் முறையோ வெனவே 
                      முதுசூ
ருரமேல்                 விடும்வேலா 
                 திருமால்
பிரமா வறியா தவர்சீர் 
                      சிறுவா
திருமால்                     மருகனே 
                 செழுமா
மதில்சே ரழகார் பொழில்சூழ் 
                      திருவீ
ழியில்வாழ்               பெருமாளே. 
பதம் பிரித்து உரை 
எருவாய் கருவாய் தனிலே உருவாய் 
இதுவே பயிராய் விளைவாகி 
எருவாய் - உற்பத்திக்கு வேண்டிய உரமாக. கருவாய் - கருப்பையிலுள்ள கருவாய்.  தனிலே - அதினில்
நின்றும். உருவாய் - உருவம் ஏற்பட்டு. இதுவே - இவ்வுருவே. பயிராய் - பயிர்
வளர்வது போல். விளைவாகி - விளை பொருளாகி.
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் 
இதுவே தொடர்பாய் வெறி போல 
இவர் போய் அவர் ஆய் - இவர் இவர் என்று இன்று இருப்பவராய் (பின்பு இறந்துபட்டு). அவர் போய் இவர் ஆய் - அவர் அவர் என்று சொல்லப்பட்டவர்கள் (பிறந்த பின்) இவர் இவர் என்று சொல்லும்படியாகி. 
இதுவே தொடர்பாய் - இங்ஙனமே
ஒரு தொடர்ச்சியாய்   வெறி போல - வெறி
பிடித்தது போல
ஒரு தாய் இரு தாய் பல கொடிய 
தாயுடனே அவமாய் அழியாதே 
ஒரு தாய் இரு தாய் பல கோடிய
தாயுடனே - ஒரு தாயார், இரண்டு தாயார்கள், பல கோடிக்கணக்கான தாய்மார்களை அடைந்தவனாய்.   அவமே - வீணாக.  அழியாதே - (நான்) அழிந்து போகாமல்.
ஓரு கால் முருகா பரமா குமரா 
உயிர் கா என ஓத அருள்வாய் 
ஒரு கால் முருகா - ஒரு முறையேனும் முருகா. பரமா - பரமா. குமரா - குமரனே. உயிர் கா - எனது உயிரைக் காத்தருள் என. ஓத - ஓதுமாறு. அருள் தாராய் - அருளைத்
தந்தருளுக. (ஏனெனில்).
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் 
முடி மேல் இணை தாள் அருள்வோனே 
முருகா என ஓர் தரம் ஓதும்
அடியார் - ஒரே ஒரு முறை முருகா என்று ஓதுகின்ற அடியார்க்கு. முடி மேல் - அவர்களது தலையில். இணை தாள் அருள்வோனே - உன் இரண்டு திருவடிகளை அருள்பவனே.
முநிவோர் அமரோர் முறையோ எனவே 
முது சூர் உரம் மேல் விடும் வேலா 
முநிவோர் அமரோர் - முனிவர்களும் தேவர்களும். 
முறையோ எனவே - முறையோ முறையோ என உன் முன் ஓலமிட. முது சூர் உரம் மேல் - பழைய சூரனது மார்பின் மேல். விடும் வேலா - வேலாயுதத்தைச் செலுதிய வேலனே.
திருமால் பிரமா அறியாதவர் சீர் 
சிறுவா திருமால் மருகோனே 
திருமால் பிரமா - திருமாலும் பிரமனும். அறியாதவர் - அறியாதவர்களாகிய சிவபெருமானுடைய. சீர் - மேன்மை பொருந்திய. சிறுவா - சிறுவனே. திருமால் மருகோனே - திருமாலின் மருகனே.
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ்
திருவீழியில் வாழ் பெருமாளே. 
செழு - செழிப்புள்ள. மா மதில் சேர் - அழகிய
மதில் சூழ்ந்த. அழகு ஆர் - அழகு நிறைந்த. பொழில் சூழ் - சோலைகள்
சூழ்ந்த. திருவீழியில் வாழ் பெருமாளே
- திருவீழி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
சுருக்க உரை 
கருப்பத்தில் கருவாய்த்
தோன்றி, உருவம் ஏற்பட்டு மாறி மாறித் தோன்றும், இவர் என்று சொல்லபட்டவர், இறந்த பின்,
அவர் என்றுசொல்லும்படியாக, பல கோடி தாய்மார்களை அடைந்தவனாய், வீணாகநான் அழியக் கூடாதவாறு அருளுக.
ஓரு முறை முருகா என்று ஓதுவார்
தலைமேல் உன் திருவடிகள்
இரண்டையும் வைத்து அருள்
பாலிப்பவனே. முனிவர்களும் அமரரும் முறையிட சூரன் மேல் வேல் எய்தியவனே. திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத சிவபெருமான் புதல்வனே. திருமால்
மருகனே. முருகா, குமரா, என் உயிரைக் காப்பாயாக.
முருகா வெனவோர்...  
(முருகன் குமரன் குகனென்று
மொழிந் 
துருகுஞ் செயல்தந் துணர்வென்
றருள்வாய்)--- கந்தர்
அனுபூதி .

No comments:
Post a Comment
Your comments needs approval before being published