F

படிப்போர்

Tuesday, 18 September 2012

80.திமிரவுததி

திமிர வுததி யனைய நரக
        செனன மதனில்                          விடுவாயேல் 
செவிடு குருடு வடிவு குறைவு
        சிறிது மிடியு                                    மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
        மறிவு நிறையும்                              வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
        டடிமை கொளவும்                       வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது 
        தலைக ளுருள                                மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
        தகர அயிலை                              விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
        விழிகள் நளினன்                          மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
        விரவு மமரர்                                  பெருமாளே
-       80 பழநி

பதம் பிரித்து உரை

திமிர உததி அனைய நரக
செனனம் அதனில் விடுவாயேல்

திமிர உததி = இருண்ட கடல் அனைய = போன்றதும் நரக = நரகத்து ஒப்பானதும் ஆகிய செனனம் அதனில் = பிறப்பு என்பதில் விடுவாயேல் = (என்னை) விழும்படி செய்தால்.

செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே

செவிடு குருடு = செவிடு, குருடு வடிவு குறைவு = உறுப்புக் குறைவு சிறிது = சிறிதேனும், மிடியும் = வறுமை (என்பன) அணுகாதே = (என்னை) அணுகாதபடியும்.

அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு(ம்) நிறையும் வரவே நின்
  
அமரர் வடிவும் = தேவர்களுக்கு ஒப்பான உருவமும் அதிக குலமும் = மேன்மையான குடிப் பிறப்பும் அறிவு = அறிவும் நிறையும் = நீதி ஒழுக்கமும் வரவே = (எனக்கு) வருமாறு நின் = உனது.

அருள் அது அருளி எனையும் மனதோடு     
அடிமை கொளவும் வர வேணும்

அருள் அது அருளி = திருவருளைப் பாலித்து எனையும் = அடி
யேனையும் மனதோடு = திருவுள்ளம் கொண்டு அடிமை கொளவும் வர வேணும் = அடிமை கொள்ள வந்தருள வேண்டும்.

சமர முக வெல் அசுரர் தமது
தலைகள் உருள மிகவே நீள்

சமர முக வெல் = போர் முகத்தில் வெல்லப்பட்ட அசுரர் தமது = அசுரர்களுடைய தலைகள் உருள = தலைகள் உருளவும் மிகவே நீள் = மிகவும் பெரிய.

சலதி அலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே

சலதி அலற = கடல் ஓலமிட்டு முறையிடவும் நெடிய பதலை = நீண்ட கிரௌஞ்ச மலை தகர = பொடியாகும்படியும் அயிலை = வேலை விடுவோனே = செலுத்தியவனே.

வெம் அரவு அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே

வெம் = கொடிய அரவு அணையில் = பாம்பு படுக்கையில் இனிது துயிலும் = இனிமையாக துயில் கொள்ளும் விழிகள் நளினன் = தாமரை போன்ற கண்களை உடைய திருமாலின் மருகோனே = மருகனே.

மிடறு கரியர் குமர பழனி
விரவு அமரர் பெருமாளே.

மிடறு கரியர் = கண்டம் கறுத்த சிவபெருமானின் குமர = குமரனே. பழநி = பழனி மலையில் விரவும் = வந்து பரவும் அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

இருண்ட கடல் போன்றதும், நரகத்துக்கு ஒப்பானதுமான பிறப்பு என்பதில் என்னை விழும்படி செய்தால், உறுப்புக் குறைகள் இல்லாமலும், அறிவும் தேவர்கள் போன்ற அழகும் உயர் குடிப் பிறப்பும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு திருவருள் புரிய வேண்டும்.

போரில் வெல்லப்பட்ட அசுரர்கள் தலைகள் உருள, கடல் ஓலமிட, கிரௌஞ்ச மலை பொடியாக, வேலைச் செலுத்தியவனே. கொடிய பாம்பின் மேல் துயிலும் திருமாலின் மருகனே, கறுத்த கண்டமுள்ள சிவபெருமானின் மகனே, பழனியில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.

ஒப்புக

அடிமை கொளவும் வரவேணும்... 
 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே
 வழுவாதிருக்க வரம் தர வேண்டும்)...........................        .திருநாவுக்கரசர் தேவாரம்.

Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,  
                                       Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
  Compilation and Editorial additions by  Shantha and Sundararajan

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published